ஒரு தனிநபரின் மரணத்திற்குப் பிறகு, தனிநபரின் உடைமைகள் மற்றும் சொத்துக்களின் வாரிசுரிமையை அவர்களது அவரது சட்டப்பூர்வ வாரிசு (கள்) கொண்டிருப்பார்கள் . ஒரு சட்டபூர்வவாரிசு சான்றிதழ் என்பது இறந்த நபருக்கும் சட்டப்பூர்வ வாரிசு(கள்)க்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான மிக முக்கியமான ஆவணமாகும். வழக்கமாக, அவ்வாறான சான்றிதழைப் பெற உயிரோடிருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாநகராட்சி அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது வரிசுரிமை சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கட்டுரையில், வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம் மற்றும் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ரெவ்-114 (rev-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறை பற்றி நாம் விவாதிப்போம்.
மேலும் காண்க : TNREGINET வலைத்தளம் குறித்த அனைத்தும் குறித்து அறிய .
சட்டபூர்வ வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம்
ஒரு சொத்தின் பதிவுபெற்ற உரிமையாளர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, அந்த இறந்த நபரின் உடைமைகள் அல்லது சொத்துக்களின் உரிமைஉடைமையைக் கோருவதற்கு ஒரு குடும்ப உறுப்பினர் (மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) அவர்/அவள் அவரின் முறையான வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும். நடைமுறையில் சொத்துக்கள் மீது பொய்யாக உரிமை கோரும் வழக்குகள் ஏற்கனவே உள்ளன. ஆகவே , வாரிசு சான்றிதழைப் பெறுவது இன்றியமையாததாகிறது. தகுதியான வாரிசு(கள்) குறித்த முறையான விசாரணைக்குப் பிறகு அரசு அதிகாரிகளால் அந்த ஆவணம் வழங்கப்படுகிறது.
பல்வேறு நோக்கங்களுக்காக வரிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அவற்றில் அடங்குபவை:
- இறந்தவரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை மாற்றம்
- ஒருவரின் மரணத்திற்குப் பிறகு சட்டப்பூர்வ உரிமையாளர்களை அடையாளம் காணுதல்
- சட்டப்பூர்வ உரிமை உடைமைக்கான சான்றாக வரிசு சான்றிதழைக் சமர்ப்பித்து வழக்கு வழக்குகளைத் தவிர்ப்பது
- காப்பீட்டுக் திட்டம்,வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைத் தொகை ஆகியவற்றின் பலன்களைப் பெறுதல்
- குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான இசைவாணை பெற
- இறந்தவர் சொத்தை உரிமை மாற்றம் செய்தல் அல்லது மூதாதையர் சொத்துக்களை வாங்குவது போன்றவற்றுக்கு
- சம்பள நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கு (மாநில/மத்திய அரசு ஊழியர்களுக்கு)
- கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற
- வைப்பு நிதி அல்லது முதலீடுகளின் உரிமை மாற்றம் செய்ய
- பயன்படுகள் பொருட்களின் உரிமை மாற்றத்திற்கு
மேலும் காண்க : ஒரு உயில் மெய்ப்பித்தல் l: உயில் மெய்ப்பித்தல் என்பதன் அர்த்தம் என்ன, அதன் பயன்கள் மற்றும் அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்தும் பற்றி அறிய
வாரிசு சான்றிதழ் என்பதன் அர்த்தம்
வாரிசு சான்றிதழ் என்பது, மறைந்த குடும்ப உறுப்பினரின் சொத்துக்கள் அல்லது நிலுவைத் தொகைகள் மீதான உரிமையை நிலைநாட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் ஒரு சட்டப்பூர்வமான ஆவணமாகும். வாரிசு சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ சான்றிதழில் (ஆங்கிலத்தில்- லீகல் ஹேர்) இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு(களின்) பெயர்(கள்) மற்றும் இறந்தவருடனான அவர்களது உறவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் . எனவே, இது முறையான வாரிசைத் அடையாளம் காண உதவுகிறது. வாரிசு சர்டிஃபிகேட் என்பதை , தமிழில் வாரிசு சான்றிதழ் என்றும் அழைப்பார்கள்.
பிணைய வழி வாரிசு சான்றிதழ்: தமிழ்நாட்டில் பிணைய வழி சட்டபூர்வ வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஒரு சட்டப்பூர்வ வாரிசுதாரர் பிணயத்துக்கு வெளியே நேரடியாக சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெற அந்த சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி அலுவலகம்/தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும், தமிழகத்தில் வாரிசு சான்றிதழுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் பிணைய வழியில் விண்ணப்பிக்கலாம்., பொதுமக்களின் நலன்களை மையப்படுத்திய சேவைகளை பொது சேவை மையங்கள் (CSCs) மூலம் ஆன்லைனில் அணுக தமிழ்நாடு அரசு இ-சேவை (e-Sevai )த்தின் வசதியை வழங்குகிறது
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவும் மற்றும் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கும் படிப்படியான நடைமுறைகளின் வழிகாட்டி இங்கே உள்ளது.
படிநிலை 1: அதிகாரப்பூர்வ தமிழ்நாடு இ-சேவை போர்டல் (TN e-Sevai) போர்ட்டலுக்குச் உங்கள் அறிமுக ஆவணங்களோடு சென்று புகுபதிகை செய்யுங்கள் .
முதல் முறை பயனர்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் ‘புதிய பயனரா? இங்கே பதிவு செய்யவும்‘ என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யுங்கள்.
படிநிலை 2: அதற்கு அடுத்த பக்கத்தில் முழுப்பெயர், தாலுக்கா, மாவட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை வழங்கவும். கேப்ட்சாவை உள்ளிட்டு ‘இணை‘ என்பதில் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTP ஐ (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடவும்.
படி 4: வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, ‘புகுபதிகை‘ என்பதில் கிளிக் செய்து, உங்கள் புகுபதிகை அறிமுக ஆவணங்களை உள்ளிடவும். பதிவு செய்யப்பட்ட தங்களின் மொபைல் எண்ணைக் கொண்டும் பயனர்கள் புகுபதிகை செய்யலாம் .
படி 5: இடது புற பலகத்தில் உள்ள ‘சேவை வாரியாக’ என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும். பட்டியலில் இருக்கக்கூடிய ஆவணங்களில், ரெவ் 114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் மீது கிளிக் செய்யவும்.
படிநிலை 6: கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒரு புதிய விண்டோ தோன்றும். அந்தப் பக்கத்தின் கீழே சென்று, ‘தொடரவும்‘ என்பதில் கிளிக் செய்யவும்.
படி 7: பெயர், CAN எண், தந்தையின் பெயர், மின்னஞ்சல் ஐடி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற சம்பந்தப்பட்ட விவரங்களைச் அடுத்த பக்கத்தில், சமர்ப்பிக்கவும். ‘தேடு‘ என்பதில் கிளிக் செய்யவும். CAN எண் இல்லாத பயனர்கள் ‘CAN பதிவு செய்ய’ என்ற இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
படி 8: இப்போது நீங்கள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் படிவத்தை பிணையத்தில் பார்க்கலாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, பிணையம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்துங்கள். .
கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக நிறைவேறியவுடன் வரிசு சான்றிதழ் விண்ணப்பத்திற்கான ஒரு ஒப்புகை ரசீதை நீங்கள் பெறுவீர்கள். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கலாம். வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் முன்னேற்றத்தை சரிபார்க்கப் பயன்படுத்துவதற்கான விண்ணப்ப எண் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ்: தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு அதிகாரபூர்வ இ-சேவை (eSevai)போர்ட்டலில் இருந்து பிணையம் மூலமாக ஒருவர் விண்ணப்பிக்கலாம் மற்றும் அதே இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர் பிணையத்தில் விண்ணப்பத்தின் முன்னேற்ற நிலையை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட உடன் , வருவாய்த்துறை பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையிலான வரிசு சான்றிதழை வழங்கும்.
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான தகுதிகள்
தமிழ்நாட்டில் வரிசு சான்றிதழைப் பெற இந்தியச் சட்டத்தில் வழங்கப்பட்டவைகளின் படி பின்வரும் நபர்கள் உரிமையுடையவர்கள்:
- இறந்தவரின் துணைவர் (மனைவி/கணவன்).
- இறந்தவரின் குழந்தைகள் (மகன்/மகள்).
- இறந்தவரின் பெற்றோர் (தாய்/தந்தை).
- இறந்தவரின் உடன்பிறப்புக்கள் (சகோதரன்/சகோதரி).
வாரிசு சான்றிதழ்: தமிழ்நாட்டில் தேவைப்படும் ஆவணங்கள்
சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் இரண்டு வகைப்படும்: அதில் ஒன்று இறந்தவருடைய சட்டபூர்வமான வாரிசுகளுக்கு அந்த சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தாசில்தார் வழங்கும் ஆவணம். மற்றொன்று நீதிமன்றங்கள் வழங்கும் சான்றிதழ்
தமிழ்நாட்டில் ரெவ்-114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் போது ஒருவருக்குத் தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு சுய பிரமாணப்பத்திரம்
- விண்ணப்பதாரரின் செல்லத்தக்க அடையாளச் சான்று ஆவணம் (ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டை)
- விண்ணப்பதாரரின் செல்லத்தக்க முகவரிச் சான்று ஆவணம் (செல்லத்தக்க அடையாளச் சான்று ஆவணங்கள், தொலைபேசி/மொபைல் கட்டண சீட்டு, சமையல் எரிவாயு கட்டண சீட்டு , சட்டப்பூர்வ வாரிசின் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய வங்கிக்கணக்குப் புத்தகம் )
- இறந்தவரின் இறப்பு சான்றிதழ்
- சட்டப்பூர்வ வாரிசு(கள்) பிறந்த தேதி சான்று (பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பள்ளி மாற்றம்/விட்டு விலகிய சான்றிதழ், பாஸ்போர்ட்)
- இறந்தவரின் முகவரி சான்று
சட்டபூர்வான வாரிசு சான்றிதழ் வேண்டி ஒரு குழந்தை விண்ணப்பிக்கவேண்டும் என்றால் தேவைப்படும் ஆவணங்கள்
- பெற்றோர் இறப்பு பதிவேடு
- விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழ்,கடவுச்சீட்டு, UID மற்றும் TC ஆகியவற்றை இணைத்து ஒரு விண்ணப்பம்.
சட்டபூர்வான வாரிசு சான்றிதழ் வேண்டி துணைவர் ஒருவர் விண்ணப்பிக்கவேண்டும் என்றால் தேவைப்படும் ஆவணங்கள்
- மனைவி சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் இறந்த நபரின் இறந்த மனைவி உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளையும் குறிப்பிட்டு துணைவரின் சுய அறிவிப்பு
- ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை
- திருமணப் பதிவுச் சான்றிதழ்
- குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்/ இடமாற்றச் சான்றிதழ்(TC)
பெற்றோர் இறந்த நிலையில் விண்ணப்பதாரர் ஒரு மைனர் குழந்தையாக இருந்தால் தேவைப்படும் ஆவணங்கள்:
பெற்றோரின் இறப்பு பதிவேடுகள்
- பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் TC மற்றும் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் ஆதார் அட்டைகள் போன்ற சான்றுகள்
- பாதுகாவலருடனான வாரிசுகளின் உறவை நிலைநாட்டும் வகையிலான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு
மேலும் காண்க : தமிழ்நாட்டில் முத்திரைக் கட்டணம் மற்றும் நிலப் பதிவுக் கட்டணம்
பிணைய வழி வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலை
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் வரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலையை சில எளிய படிநிலைகளைப் பின்பற்றி காணலாம். TN இ-மாவட்டத்துறை புகுபதிகை பக்கம் சென்று வலது புறமூலையில் உள்ள பெட்டியில் விண்ணப்பம்/ஒப்புகை சீட்டின் எண்ணை உள்ளிடவும்.
மாற்றுவழியாக, பயனர்கள் இ-சேவை போர்ட்டலில் புகுபதிகை செய்து சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பதில் கிளிக் செய்யலாம். புதிய பக்கத்திற்குத் மாற்றி அனுப்பப்பட்ட உடன் , வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் நிலையை அறிய, ‘நிலையைச் சரிபார்க்கவும்’ என்ற விருப்பத்தேர்வின் மீது கிளிக் செய்யவும்.
விண்ணப்பம் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு டிஜிட்டல் கையொப்பமிட்டவுடன், போர்ட்டலில் உள்ள பிணையவழி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் காண்க : தமிழ்நாட்டில் பட்டாவை பிணையவழியில் எவ்வாறு பெறுவது?
வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் வடிவம்
சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் விண்ணப்ப படிவம்
விண்ணப்பதாரரின் பெயர்:
தந்தை/கணவன் பெயர்:
பாலினம் (ஆ/பெ):
குடியிருப்பு முகவரி :
இறந்தவரின் பெயர்:
இறப்புச் சான்றிதழ் எண்:
(அசல் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகள்:
வரிசை எண் | பெயர் | வயது | உறவு முறை | திருமண நிலை |
(1) | (2) | (3) | (4) | (5) |
- விண்ணப்பதாரர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றால், இஸ்லாமிய விதிகளின்படி இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்கள் கொடுக்கப்படவேண்டும் .
- எந்த நோக்கத்திற்காக சான்றிதழ் தேவைப்படுகிறது (அத்தியாவசியமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்)
- இறந்தவருக்கு ஒரு மனைவி/இரண்டு மனைவிகள் (முதல் மனைவி / இரண்டாவது மனைவியின் குழந்தைகளின் விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்)
- விவரங்கள்
ரேஷன் கார்டு எண்.
இறந்தவருடன் விண்ணப்பதாரரின் உறவுமுறை
விண்ணப்ப தேதி:
விண்ணப்பதாரரின் கையொப்பம்
வாரிசு சான்றிதழ் வடிவம்
தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் சட்டப்பூர்வ வாரிசுகளை உறுதிப்படுத்தும் அறிவிப்பு இருக்க வேண்டும். ஆவணத்தில் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு துறை செலுத்த வேண்டிய தொகை (நிலுவை), குறிப்பிடப்பட்டு தேதி மற்றும் துறைத் தலைவரின் கையொப்பம் ஆகியவை இருக்கவேண்டும் . அதில் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் இறந்த நபருடனான அவர்களின் உறவைக் குறிப்பிடும் ஒரு சிறிய கட்டம் விடப்பட்டு இருக்க வேண்டும்.
பிணையத்துக்கு வெளியே நேரடியாக சட்டபூர்வ வாரிசு சான்றியதழைப் பெறுவது எப்படி?
பிணையத்துக்கு வெளியே சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப்பெற தாலுகா/தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
- சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கான விண்ணப்ப படிவத்தை ரூ.60 விலைக்கு வாங்கலாம் அல்லது அதை ஆன்லைனிலும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
- பொருத்தமான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு தேவையான ஆவணங்களை இணைத்துபடிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு சில நாட்களுக்குள் கிராம நிர்வாக அதிகாரி / வருவாய் ஆய்வாளர்( VAO/RI ) ஆகியோருடனான சந்திப்பிற்காக இரண்டு டோக்கன்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தின் பின்புறத்தில், விண்ணப்பதாரர் பின் வரும் விவரங்களை வழங்க வேண்டும்:
- முதல் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் குறித்த தகவல்கள்
- இரண்டாவது விண்ணப்பப் படிவத்தில் மொத்தம் பத்து பரிந்துரை கடிதங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
கிராம நிர்வாக அதிகாரி (VAO ) விண்ணப்பத்தில் கையொப்பமிடும்போது, சட்டப்பூர்வ வாரிசுகள் உடன் இருக்க வேண்டும், மற்றும் விண்ணப்பதாரரின் கையொப்பங்களும் தேவைப்படும். சட்டப்பூர்வ வாரிசுகளின் சரிபார்ப்பு முடிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி (VAO ) ஆவணத்தில் கையொப்பமிட்டு முத்திரை வைப்பார்..
அடுத்த படிநிலையில் ஆவணங்கள் வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தில் கிராம நிர்வாக அதிகாரி (VAO ) கையொப்பமிட்டிருப்பதை சரிபார்க்க வருவாய் ஆய்வாளர் விண்ணப்பதாரரின் வீட்டிற்குச் செல்வார்.
இறுதி படிநிலையாக தாசில்தார் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். டோக்கன் எண்ணைப் பெற, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (RI and VAO) படிவங்களை விண்ணப்பதாரர் தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
டோக்கன் எண் கொடுக்கப்பட்டவுடன் விண்ணப்பம் சமர்ப்பிகிக்கப்பட்ட 16 நாட்களுக்குள் வரிசு சான்றிதழை தாசில்தார் வழங்குவார்.
சட்டப்பூர்வ வாரிசுதாரர் ஒருவர் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்காக ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது வாழும் குடும்ப உறுபினர் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை மாவட்ட குற்றவியல் நடுவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, அதற்கான சரிபார்க்கும் நடவடிக்கைகளின் நோக்கத்திற்காகவும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும் மாவட்ட குற்றவியல் நடுவர் அலுவலகத்துக்கு செல்லவேண்டும்.
மேலும் காண்க :தமிழ்நாடு 2021 மதிப்பீடு வழிகாட்டுதல் : குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
வழங்கப்பட்ட சட்டபூர்வ வாரிசு சான்றிதழை பெறுவது எப்படி?
விண்ணப்பத்தை சமர்ப்பித்த அதிகாரியிடமிருந்து சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் ஒருவர் பெறலாம். போர்ட்டலில் இருந்து பிணைய வழியில் பதிவிறக்கம் செய்வது சான்றிதழைப் பெறுவதற்கான மற்றொரு எளிய வழியாகும். அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் வாரிசு சான்றிதழை டிராக் செய்வது எப்படி?
- அதிகாரபூர்வ இ-சேவை வழங்கும் வலைதளத்துக்குச் செல்லுங்கள்.
- ‘Services’ என்பதை தேர்ந்தெடுத்து இடது பக்கம் உள்ள ‘Legal heir’ என்பதன் மீது செய்யுங்கள்.
- ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் ‘Check Status’ என்பதன் மீது க்ளிக் செய்து உங்கள் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழின் தற்போதைய நிலையை பார்க்கலாம்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கும் உயிர்வாழும் சான்றிதழுக்கும் உள்ள வேறுபாடு
இறந்தவரின் குடும்பத்தில் உயிருடன் இருக்கும் ஒரு உறுப்பினருக்கு உயிர் வாழும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த ஆவணத்தின் நோக்கம், இறந்தவருக்குப் பிறகு குடும்பத்தில் உயிருடன் இருக்கும் நபர்களைப் பற்றிய ஒரு அறிவிப்பைப் சட்ட அதிகாரிகளிடமிருந்து பெருவதாகும். அதற்கு மாறாக இறந்தவரின் சொத்துக்களுக்கான உரிமைகோரல்களை வைத்திருக்கும் ஒரு நபருக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தில் இருந்து வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஒருவர் சொத்தின் உரிமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஒருவர் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை நீதிமன்றத்திலிருந்து பெறலாம். உயிர்வாழும் குடும்ப உறுப்பினர் சான்றிதழை DM அலுவலகத்திலிருந்து பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப் பெற இந்தியாவில் என்ன செலவாகும்?
இந்தியாவில் சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கு முத்திரைத் தாள் கட்டணம் ரூ. 20 மற்றும் முத்திரை கட்டணம் ரூ. 2 ஆகும்.
சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப் பெற எவ்வளவு காலம் ஆகும்?
சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப் பெற சுமார் 30 நாட்கள் ஆகலாம்.
யார் சட்டபூர்வ வாரிசாக இருக்கமுடியும்?
மரணமடைந்த நபரின் துணைவர், குழந்தைகள், பெற்றோர், மற்றும் உடன்பிறந்தோர் ஆகியோர் சட்டப்படியான நேரடியான வாரிசுகள் ஆவார்கள்.
சட்டப்பூர்வ வாரிசு மற்றும் குடும்ப உறுப்பினர் சான்றிதழ் இரண்டும் ஒன்றா?
குடும்ப உறுப்பினர் சான்றிதழ் என்பது குடும்ப உறுப்பினர்களின் தகுதியை உறுதிப்படுத்த கிராம அதிகாரியால் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆவணமாகும். சட்டப்பூர்வ விஷயங்களைத் தீர்ப்பதற்கும், பாகப்பிரிவினைப் பத்திரம் போன்ற பலவற்றை நிறைவேற்றுவதற்கும், இந்த ஆவணம் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால் இது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் போன்று சட்ட அங்கீகாரத்தை கொண்டிருக்கவில்லை.
நியமிக்கப்பட்ட ஒருவர்(நாமினி) சட்டப்பூர்வ வாரிசாக முடியுமா?
நியமிக்கப்பட்ட ஒருவருக்கு (நாமினி) உடைமை உரிமைகள் வழங்கப்படாது. நியமிக்கப்பட்ட ஒருவர் (நாமினி) என்பவர் சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பாக இறந்தவரின் சொத்தின் அறங்காவலர் அல்லது ராமரிப்பாளராக செயல்படுபவர்.
உங்களுக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் வரவில்லை என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்களிடம் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால், நீங்கள் அடுத்தகட்ட நடைமுறைக்காக வருவாய் பிரிவு அலுவலர் (ஆர்டிஓ) அல்லது சப்-கலெக்டரை அணுகலாம்.