படிக்கட்டுகள் வாஸ்து சாஸ்திரம்: படிக்கட்டுகளுக்கான திசை, இடம் மற்றும் படிகளின் எண்ணிக்கைஆகியவற்றுக்கான விளக்கம்

உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி, செங்கோணமாக வளைந்திருக்கும் சதுர மற்றும் செவ்வக படிக்கட்டுகள், சிறந்தது.

பண்டைய இந்து கட்டிடக்கலை கோட்பாடு படிக்கட்டுகளை கட்டுவதில் பல விதிகளைப் பரிந்துரைக்கிறது. படிக்கட்டு கட்டுமானத்தில் வாஸ்துவைப் பயன்படுத்துவது எளிதான இயக்கத்திற்கும், குறிப்பாக வீட்டில் நேர்மறை ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. இது பெரிய அல்லது சிறிய விபத்துக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. இந்த வழிகாட்டி உங்கள் இல்லத்தில் படிக்கட்டுகளை கட்டும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாத அனைத்துயும் தெரிந்துகொள்ள உதவும்.

Table of Contents

 

படிக்கட்டுகள் வாஸ்து என்றால் என்ன?

பண்டைய இந்து கட்டிடக்கலை வாஸ்து கோட்பாடு படிக்கட்டுகளைக் கட்டுவதில் பல விதிகளைப் பரிந்துரைக்கிறது. கட்டுமானத்தின்போது  படிக்கட்டு வாஸ்துவைப் பயன்படுத்துவது பொதுவாக எளிதான  நடமாட்டத்திற்கும், குறிப்பாக வீட்டில் நேர்மறையான ஆற்றல் பாய்வதற்கும் வழிவகுக்கிறது. இது பெரிய அல்லது சிறிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

மேலும் காண்கவாடகை வீட்டிற்கான வாஸ்து


வாஸ்து விதிகளின் படி ஒரு படிக்கட்டு அமைப்பில் இருக்கவேண்டிய  படிகளின் எண்ணிக்கை

Vastu Shastra tips for staircase design

 

எப்போதும் ஒற்றைப்படை எண்களையே தேர்ந்தெடுக்கவும்: படிக்கட்டு அமைப்பில் உள்ள படிகளின் எண்ணிக்கை எப்போதும் ஒற்றைப்படையாக இருக்க வேண்டும் (15, 17, 19, அல்லது 21). எண்ணிக்கை  ஒருபோதும் ‘0’ வில் முடிவடையக் கூடாது. ஏன் அப்படி? ஒரு சராசரி மனிதர் படிக்கட்டுகளில் ஏறும்போது முதலில் தனது வலது காலை  வைக்க முனைகிறார். படிக்கட்டுகளின் இறுதியில் அவர் தனது வலது காலைக் கீழே வைப்பதில் முடிவடைய வேண்டும்  இது படிக்கட்டுகளில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான படிகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தியாவில் சிறந்த தண்ணீர்த் தொட்டியை  வாங்குவது குறித்து மேலும் வாசியுங்கள்

 

வாஸ்துவின்படி படிக்கட்டு அமைப்பின் திசை

வீட்டில் படிக்கட்டுகளை அமைக்கச் சிறந்த இடம் எது? வாஸ்துவின் படி, படிக்கட்டுகள் அமைக்கத் தென்மேற்கு திசை சிறந்தது.

 

Vastu Shastra tips for staircase design

 

வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுக்கான வாஸ்து

வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, அந்த இடத்தின் தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் நம்புகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடுத்த இரண்டாவது சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த  விஷயத்தில், படிக்கட்டு வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு ஒரு மாற்றாக, கிழக்கிலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் செல்லலாம். உள்ளக படிக்கட்டுக்கள் இடத்தின் மையத்தில் இருக்கக் கூடாது.

 

வீட்டின் வெளிப்புறத்தில்  அமைக்கப்படும் படிக்கட்டுக்கான வாஸ்து

வெளிப்புற படிக்கட்டுகள்  அமைப்பதைப் பொறுத்தவரை  வாஸ்துவின் படி வெளிப்புற படிக்கட்டுகளுக்கான சிறந்த திசைகள் பின்வருமாறு:

  • தென்கிழக்கு, கிழக்கு நோக்கி.
  • தென்மேற்கு, மேற்கு நோக்கி.
  • தென்மேற்கு, தெற்கு நோக்கி.
  • வடமேற்கு, வடக்கு நோக்கி.

 

Vastu Shastra tips for staircase design

 

வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ எதுவானாலும் வடகிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கக் கூடாது. மேலும், நுழைவாயிலுக்கு முன் அதன் அருகில் ஒட்டி அமைக்கப்படும்  படிக்கட்டுகள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றன.

மேலும் கிழக்கு நோக்கிய வீட்டின் வாஸ்து  பற்றிய அனைத்தையும் வாசியுங்கள்

 

படிக்கட்டுகள் வாஸ்துவை  பாதிக்கக்கூடிய  மற்ற காரணிகள்

படிக்கட்டுகள் வாஸ்து நெறிமுறைகளைச் செயல்படுத்தும்போது, இந்த இதர காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்:

வாஸ்துவிற்கு இணக்கமாக இருக்கக்கூடிய படிக்கட்டு அமைவிடம்: மேல் தளத்தைக் குத்தகைதாரருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு  கீழ் தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், பிரதான நுழைவாயில்  முன்பாகப் படிக்கட்டுகள் இல்லாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் நிதி இழப்பு ஏற்படும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

படிக்கட்டு தொடங்கும் இடம்: வீட்டிற்குள் இருக்கும் படிக்கட்டுகள் சமையலறை, ஸ்டோர் ரூம் அல்லது பூஜை அறையிலிருந்து தொடங்கவோ அல்லது முடியாவோ கூடாது. அடித்தளம் அல்லது நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டுகள்மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்களின்  தொடர்ச்சியாக இருக்கக் கூடாது.

வாஸ்துவிற்கு இணக்கமான படிக்கட்டுகளின் பார்வைத் தெளிவு: உங்கள் விருந்தினர்களின் நேரடியான பார்வைக்கு புலப்படாத வகையில் உள்ளக படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும். படிக்கட்டுகளின் தொடக்கத்திலும் முடிவிலும் கதவுகளை அமைப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது. .

மேலும் காண்க:வாஸ்துப்படி  பிரதான வாயிற்கதவு வண்ணங்களின் கலவை

 

Staircase Vastu Shastra

 

படிக்கட்டு வாஸ்துவின் படி படிகளின் திசையமைவு

Vastu Shastra tips for staircase design

 

உங்கள் படிக்கட்டு அமைப்பில்  உள்ள படிகள் செல்லும் திசை  உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆகையால் படிக்கட்டுகளின் திசையமைவு என்று வரும்போது படிக்கட்டு வாஸ்து விதிகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

படிக்கட்டு வாஸ்து விதிகளின்படி, நாம் படிக்கட்டுகள் வழியாக மேலேறிச்செல்லும்போது அது எப்போதும்  கடிகாரஇயக்கத் திசையில் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படிக்கட்டுகளைப் பயன்படுத்துபவர் வடக்கிலிருந்து தெற்கே அல்லது கிழக்கிலிருந்து மேற்காகச் செல்ல வேண்டும். வாஸ்து நிபுணர்களின் கருத்து என்னவென்றால், கடிகார திசைக்கு எதிராகப் படிக்கட்டுகளை அமைப்பது  தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்.

 

வாஸ்துவின் படி படிக்கட்டு வடிவம் 

Vastu Shastra tips for staircase design

 

வாஸ்து படி உள்ளக அல்லது வெளிப்புற படிக்கட்டுகளுக்குச் செங்கோண வளைவுடன் கூடிய  சதுர மற்றும் செவ்வக படிக்கட்டுகள் மிகச்சிறந்தது. மிகவும் செங்குத்தான அல்லது மிக உயரமான படிக்கட்டுகள், ஒவ்வொரு முறை அதைப் பயன்படுத்தும்போதும்,  ஒருவர் மிகவும் களைப்பாக உணருவார். அதன் காரணமாகவே சுழல் படிக்கட்டுகளைத் தவிர்க்குமாறு வீட்டு உரிமையாளர்களை நிபுணர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

 

வாஸ்து படி படிக்கட்டுகளுக்கான  வண்ணங்கள் 

நாளின் எந்த நேரத்திலும் ஏறுவதும் இறங்குவதும் ஒரு பிரச்சனையாக இல்லாமலிருக்க உங்கள் படிக்கட்டுகள்  நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும்,. உங்கள் படிக்கட்டுகளுக்கான  வண்ணம் அல்லது அலங்காரத்துக்காக இருண்ட அடர்த்தியான வண்ணச்சாயல்களை நீங்கள் தேர்ந்தெடுத்த்தால், அது இயற்கையாகவே அது அளிக்கும் ஒரு இருண்ட தோற்றத்தை நீங்களே விரும்பமாட்டீர்கள். அதனால்தான் படிக்கட்டுகள் அல்லது கைப்பிடிகளுக்கு வண்ணம் பூசுகையில் எப்போதும் வெளிர் வண்ணச்சாயல்களை தேர்ந்தெடுங்கள். படிக்கட்டுகளில் அடர்த்தியான வண்ணங்களைத் தவிர்க்கவும், குறிப்பாகச் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள், ஏனெனில் இந்த வண்ணங்கள் எதிர்மறை ஆற்றலைக் உருவாக்கும். படிக்கட்டுகளை ஒட்டிய சுவர்களை நீங்கள் விரும்பும் சுவர் படத்தாள்களைக் கொண்டு   அலங்கரிக்கலாம், அவை மிகவும் அடர்த்தியான இருண்ட வண்ணத்தில் இல்லாமலிருப்பது விரும்பத்தக்கது.

 

Vastu Shastra tips for staircase design

மேலும் காண்கஉங்கள் வீட்டின் பளிங்குக்கல் படிக்கட்டு வடிவங்களுக்கான ஆலோசனைகள்

 

படிக்கட்டுகளின் கீழேயுள்ள  இடத்தைப் பயன்படுத்துதல்

Vastu Shastra tips for staircase design

 

சிறிய வீடுகளில்  படிக்கட்டுக்குக் கீழே இருக்கும் இடத்தில்  சிறிய சமையலறை, குளியலறை அல்லது பூஜை அறை கட்ட அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், படிக்கட்டுகளின் கீழ் உள்ள அந்தப் பகுதியை உகந்த வகையில்  பயன்படுத்த ஒரு சிறிய வேலையிடம் உருவாக்கப்படுகிறது, இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். படிக்கட்டுக்குக் கீழே இருக்கும் இடத்தைச் சாதாரண வீட்டுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பணம் அல்லது நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட அலமாரிகளை இந்த இடத்தில் வைக்கக் கூடாது. வேண்டாத தூக்கி எறியப்பட்ட பொருட்களையோ அல்லது தேய்ந்து போன காலணிகளையோ  வைக்க இந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் காண்கவாஸ்துவின் படியான குளியலறை திசை

 

படிக்கட்டு அலங்காரத்திற்கான வாஸ்து விதிகள்

வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுச் சுவர்களைக் குடும்ப புகைப்படங்களால் அலங்கரிக்கக் கூடாது, ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். படிக்கட்டுகளின் சுவரை மலர்ந்த பூக்கள், செழிப்பான பசுமை நிற இயற்கை காட்சிகள், மலைகள் அல்லது அருவமான  கலைவடிவங்கள்  போன்றவற்றால் அலங்கரிக்கவும். படிக்கட்டுக்குக் கீழேயுள்ள பகுதியில்  செடிகளுக்கான செராமிக் பானைகளை வைக்கவும். வாஸ்து படி, கண்ணாடியைப் படிக்கட்டுகளுக்கு முன்பாக அல்லது அதற்கு அடியில் தொங்கவிடுவது சாதகமற்றது, ஏனெனில் அது வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை ஈர்க்கும். ஒரு நீரூற்று அல்லது மீன்தொட்டியை படிக்கட்டுக்கு அடியில் வைக்க வேண்டாம். படிக்கட்டு பகுதி நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும்.

 

படிக்கட்டு கைப்பிடிக்கான வாஸ்து விதிகள்

படிகளைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை படிக்கட்டு கைப்பிடிகிராதி அல்லது கைப்பிடிகள் உறுதி செய்கின்றன. இது நவநாகரீக வடிவத்தில் இருக்கலாம் ஆனால் மிக முக்கியமாக, மேலே ஏற  அல்லது கீழே இறங்கும்போது வசதியளிக்கும் வகையில் இருக்க வேண்டும். வாஸ்துவின் படி, தென்மேற்கு திசை படிக்கட்டுகளுக்குப் பளிங்கு அல்லது கற்களால் ஆன கைப்பிடிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. மேற்கில் உள்ள  படிக்கட்டுகளுக்கு, உலோகத் கைப்பிடிகளை தேர்ந்தெடுக்கவும் , கிழக்கு மற்றும் தெற்கு திசை படிக்கட்டுகளுக்கு மரத்தாலான  கைப்பிடிகளைப்  பயன்படுத்தவும்.

பார்வைக்கு அழகாகத் தோற்றமளித்தாலும், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற கைப்பிடி இல்லாத படிக்கட்டு அமைப்புக்கள் மிகவும் ஆபத்தானது.

 

Vastu Shastra tips for staircase design

 

படிக்கட்டுகளை ஒட்டிய  இடத்தைப் பயன்படுத்துவதற்கான வாஸ்து விதிகள்

வாஸ்து வல்லுநர்கள், படிக்கட்டுக்களை ஒட்டி உள்ள சுவர் பகுதியில் தெய்வங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் படங்களைக் காட்சிப்படுத்த வேண்டாம்  என்று அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், சிறந்த கலைப்படைப்பைக் காட்சிப்படுத்த படிக்கட்டுகளை ஒட்டிய சுவர் பகுதிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாஸ்து விதிகள், தடைவிதிக்கவில்லை. நீங்கள் இந்த இடத்தை வால்பேப்பர்களால் அலங்கரிக்க விரும்பினால், எந்த ஒரு வண்ணமானாலும் அதன்  வெளிர் நிறத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் படிக்கட்டு பிரகாசமாகவும், நன்கு வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். வெளிர் வண்ணச் சுவர் காகிதங்கள் எல்லா நேரங்களிலும் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்யும். .

கீழே உள்ள புகைப்படம் ஒரு மன எழுச்சியை அளிக்கும் வகையில்செயல்படலாம்.

 

Vastu Shastra tips for staircase design

 

தீவிர படிக்கட்டுக் குறைபாடுகள்

வடகிழக்கு பகுதியில் படிக்கட்டு

சுழல் படிக்கட்டுகள்

கட்டிடத்தைச் சுற்றி வரும் படிக்கட்டுகள்

வட்ட மற்றும் சுற்றுப் படிகிக்கட்டுகள்

உடைந்த படிகள்

இருண்ட அடர்த்தியான வண்ணம் கொண்ட படிக்கட்டு

கட்டுக் குலைந்த அல்லது கிரீச் ஒலி எழுப்பும் படிக்கட்டு

படிக்கட்டு வாஸ்து தோஷம்

படிக்கட்டுகளில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் உறுப்பினர்கள் உடல், மன மற்றும் நிதி போன்ற இன்னும் பலவிதமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் உதாரணமாக, வடகிழக்கு மூலையில் அல்லது ‘ஈஷன் கோனா’ வில் உள்ள படிக்கட்டு, ஒரு மிகப்பெரிய வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த மூலையில் படிக்கட்டு அமைப்பைக் கொண்ட  குடியிருப்பாளர்களுக்கு  மூளை, சிறுநீரகம் அல்லது இதயம் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்ப்படுத்தும்.

 

படிக்கட்டு வடிவமைப்பு பற்றிய முக்கியமான  உண்மைகள்

படிக்கட்டில் ஏற்றம் என்றால் என்ன?

ஒரு படிக்கட்டில், ஏற்றம் என்பது ஒரு மிதிக்கும் இடத்தின் மேலிருந்து அடுத்த மிதிக்கும் இடத்திற்கான செங்குத்து தூரத்தைக் குறிக்கிறது. சர்வதேச குடியிருப்பு குறியீடு அதிகபட்சமாக 7 ¾ அங்குல உயர்வை பரிந்துரைக்கிறது.

படிக்கட்டில் ரன் என்றால் என்ன?

ரன் என்பது ஒரு ஏறுபடியின் முகப்பிலிருந்து அடுத்த ஏறுபடியின் முகப்புக்கான கிடைமட்ட தூரம். இதை மிதிக்கும் இடத்தின் (ரைசர் )அளவுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. சர்வதேச குடியிருப்பு குறியீடு குறைந்தபட்சம் 10 அங்குல ரன்னைப் பரிந்துரைக்கிறது.

படிக்கட்டுக்கான வாஸ்து படி பரிந்துரைக்கப்பட்ட ஏற்றம் மற்றும் ரன் உயரம் என்ன?

பயன்படுத்துவோரின்  அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்த , ஏற்றம் மற்றும் ரன் அளவு  சரிசமமாக 18 அங்குலங்கள் இருக்க வேண்டும்.

 

படிக்கட்டு வாஸ்து: நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

  • ஒரு படிக்கட்டின் ஏற்றம் 4 அங்குலம் முதல்75 அங்குலம்வரை இருக்க வேண்டும், அதே சமயம் படியின் பாதை அகலம்  10 முதல் 11.25 அங்குலம்வரை இருக்க வேண்டும்.
  • வீட்டிற்குள், படிக்கட்டுகளின் அகலம் மிக அதிகளவு இருக்கும்பச்சத்தில் கைப்பிடிகள் இல்லாத படிக்கட்டுகளை நீங்கள் அமைக்கலாம்., வீட்டிற்கு  வெளியே கட்டப்படும்  படிக்கட்டுகளுக்கு அவை ஐந்து படிகளுக்கு மேல் இருந்தால் கைப்பிடிகள் அமைப்பது  கட்டாயமாகும்.
  • ஒரு சிலர் முற்றிலும் உடன்படவில்லை என்றாலும் ஒரு தற்காலிக பயன்பாட்டுப் படிக்கட்டுகளை வைத்திருப்பது நல்ல யோசனையாக இருக்காது. அவை கவனத்தை சிதறடிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

 

வாஸ்து படி மோசமான படிக்கட்டு வடிவமைப்பு

படிக்கட்டுகள் நம்மை மேலும் கீழும் நடக்க உதவும் ஒரு கருவி மட்டுமே என்ற  கருத்தாக்கத்தின் தொடக்க காலம் தொட்டே அது பல்வேறு  மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இன்று, படிக்கட்டுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நவீன வீடுகளின் ஒரு சிறப்பான பாணியாகஅமைந்து வீட்டின் வடிவமைப்பின் பெருமை சாற்றும் ஒன்றாக விளங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில், உரிமையாளர்கள் பார்வையாளரைக் கவரும் நோக்கத்தோடு  பெரும் திட்டமிடல்களுக்கிடையே விரிவான படிக்கட்டு வடிவமைப்புகளை உருவாக்கி, மேலே ஏற மற்றும் இறங்க என்ற அதன் அடிப்படை பயன்பாட்டு விதிகளையே புறந்தள்ளி சில சமயங்களில் அதை ஒரு வேதனையான அல்லது சிக்கலான அல்லது அவை இரண்டுமே கலந்த ஒரு நடவடிக்கையாக மாற்றிவிடுகிறார்கள். கீழே உள்ள படிக்கட்டு அதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

 

Vastu rules for the staircase in your house

 

ஒரு மோசமான கருதுகோளுடனான  படிக்கட்டு வடிவமைப்பு வாஸ்து கொள்கைகளைப் பயன்படுத்தி வீட்டின் மற்ற பகுதிகளில் உருவாக்கிய அனைத்து நேர்மறையான விளைவுகளையும் அகற்ற வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வீட்டின்  மையத்தில் படிக்கட்டு அமைப்பது கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

 

படிக்கட்டுகளின் மீதான வாஸ்து குறைபாட்டின் தாக்கம்

உங்கள் வீட்டில் படிக்கட்டுகளைக் கட்டும்போது வாஸ்து கொள்கைகளைப் புறக்கணிப்பது நல்லதல்ல, ஒட்டுமொத்த கட்டுமானதிட்டத்தில்  மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக இது இருந்த போதிலும் வீடு வடிவமைக்கப்படும்போது பெரும்பாலும் இது  அதிகம்  கவனம் செலுத்தப்படாத ஒரு  பகுதியாகவே இருக்கிறது. ,.

ஒரு வீட்டிற்குள் வசிக்கும் மக்களின் நடமாட்டத்துடன் தொடர்புடைய எதுவும், அந்த வீட்டினுள் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அன்றாட நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கலாம். எனவே, ஒரு குடும்பத்தின் செயல்திறனில் படிக்கட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. படிக்கட்டு தொடர்பான கட்டமைப்பு அல்லது பிற குறைபாடுகள் பெரிய அல்லது சிறிய விபத்துகளை விளைவிக்கக்கூடும். வடிவமைப்புக் குறைபாடுகள் வீட்டில் வசிப்பவர்களின் நடமாட்டத்தை மிகவும் சிரமமுள்ளதாக்கி  இடையூறாகவும் விளங்கலாம்.

“நீங்கள் வாஸ்துவின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராக இல்லாவிட்டாலும் கூடப் படிக்கட்டுகள் அமைப்பதை கவனமாகத் திட்டமிடாவிட்டால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்ற உண்மையை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தவறாகத் திட்டமிடப்பட்ட படிக்கட்டுகள் உங்கள் இயக்கத்துக்கு  இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல் விபத்துக்களுக்கும் வழிவகுக்கும்,” என்று டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான ரஜத் காத்ரி குறிப்பிடுகிறார்.

மிக முக்கியமான பகுதிகளாக நமக்குத் தோற்றமளிக்கும்  வீட்டின் இதர பகுதிகளுடன் சேர்த்து , படிக்கட்டுகள் வாஸ்து விதிகளின் மீதும் உரிய கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்வது படிக்கட்டு உட்பட வீட்டின் பல்வேறு பகுதிகளின் கூட்டியக்கத்தைப் பொறுத்தது.

 

சிறந்த மாடிப் படிக்கட்டுத் தரைத்தள உபகரணங்கள்

படிக்கட்டுகளுக்கான தரைவிரிப்புகள்

carpet flooring

கார்பெட் ரன்னர்ஸ்

carpet runners

படிக்கட்டுகளுக்கான வினைல் பிளாங்க் தளம்

படிக்கட்டுகளுக்கான ஹார்ட்வுட் தரைத்தளம்

படிகளுக்கான மார்பிள் தரைத்தளம்

பிசின் பூச்சுப் படிகள்

ஸ்டீல் படிகள்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சுழல் படிக்கட்டுகள் நல்லதா?

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, சுழல் படிக்கட்டுகள் தீய அமங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

படிக்கட்டுக்கு அடியில் பூஜை அறை ஒன்றை நான் அமைக்கலாமா?

படிக்கட்டுக்கு அடியில் பூஜை அறைகள் அமைக்கப்படக் கூடாது என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

பிரதான வாயிற் கதவை நோக்கிப் படிக்கட்டை அமைப்பது நல்லதா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பிரதான வாயிற் கதவுக்கு முன்பாகப் படிக்கட்டு இருப்பது நல்லதல்ல, அது வீட்டில் வசிப்பவர்கள் வாழ்கையில் வெற்றியடைவதையும் மற்றும் செழிப்பாக விளங்குவதையும் எதிர்மறையாகப் பாதிக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தில் படிக்கட்டுகளின் முக்கியத்துவம் என்ன?

வாஸ்து படி பல்வேறு தளங்களின் ஆற்றல்களுக்கு இடையே ஒரு இணைப்பாகப் படிக்கட்டு செயல்படுவதால் இது மிக முக்கியமானது. வலுவான ஆற்றலை உருவாக்குவதால் படிக்கட்டு என்பது வீட்டின் முக்கியமான பகுதியாகும் மற்றும் இது சரியாக அமைக்கப்படும்போது குடும்பத்தில் நல்ல ஆரோக்கியத்திற்கும் செழிப்பிற்கும் பங்காற்றும் .

(பூர்ணிமா கோஸ்வாமி ஷர்மாவின் கூடுதல் உள்ளீடுகளுடன்)

 

Was this article useful?
  • ? (4)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?