பட்ஜெட் 2023-24: பழைய வருமான வரி முறை Vs புதிய வருமான வரி முறை – எது சிறந்தது?

இந்தியாவில் வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு வருமான வரி விதிப்பு முறைகள் குறித்து இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக விவாதிப்போம்.

வருமான வரி என்றால் என்ன?

இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆண்டுக்கு ஒமுறை தங்கள் வருவாய்க்கு உரிய வரியை செலுத்தியாக வேண்டும். ஆனால், ஒவ்வொரு பிரிவுக்குமான வருமான வரி அடுக்குகள் (income tax slabs) வேறு வேறானவை. ஒரு பிரிவிலும் கூட சில காரணிகளை முன்னிட்டு ஒரு பிரிவின் கீழ் விதிக்கப்படும் வரிக்கும், இன்னொரு பிரிவுக்கு விதிக்கப்படும் வரிக்கும் வேறுபாடு உண்டு. இந்தக் கட்டுரையில், இந்தியாவில் வருமான வரி செலுத்தும் தனி நபர்களுக்கு பொருந்தும் பல்வேறு வருமான வரி அடுக்குகளைப் பற்றி விவாதிப்போம்.

Table of Contents

இதையும் வாசிக்க: கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி வரிவிதிப்பு குறித்து மேலும் அறிக

 

வருமான வரி அடுக்கு என்பது என்ன?

இந்தியாவில் ஒரு தனிநபரின் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் விகிதம் வருமான வரி அடுக்கு என்று அழைக்கப்படுகிறது. வரி செலுத்தும் தனி நபர்களைப் பொறுத்தவரையில், வருமான வரி அடுக்குகள் இரண்டு காரணிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன:

வருமானம்: வருமானம் அதிகம் என்றால் வரியும் அதிகம்

வயது: வயது அதிகமாக இருக்கும்போது, வரி அடுக்கு குறைவாக இருக்கும் (பழைய வருமான வரி முறையின் கீழ் மட்டுமே இது பொருந்தும்).

இதையும் வாசிக்க: வீட்டு மனை சொத்து விற்பனை மீது மூலதன வரியை மிச்சப்படுத்துவது எப்படி?

 

புதிய வருமான வரி முறை: வருமான வரிச் சட்டப் பிரிவு 115பிஏசி

ஏப்ரல் 1, 2020 (நிதியாண்டு 2020-21)-ல் மத்திய அரசு புதிய வருமான வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்தது. இதை அமலுக்குக் கொண்டு வர, வருமான வரிச் சட்டம், 1961-ல், 115BAC பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தப் புதிய வருமான வரி விதிப்பு முறை 2023-24 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் இயல்பு நிலை வரி விதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய வருமான வரி விதிப்பு முறையையே வேண்டுமானால் வருமான வரி செலுத்துவோர் பயன்படுத்திப் பயனடையலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், 2023-24 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, புதிய வருமான வரி முறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

 

பட்ஜெட் 2023-24: புதிய வருமான வரிவிதிப்பு அடுக்கு

வருமானம் புதிய வரிவிதிப்பு அடுக்கு
ரூ.3 லட்சம் வரை வரி இல்லை
ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5%
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10%
ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15%
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%
ரூ.15 லட்சத்துக்கு மேல் 30%
ஆதாரம்: மத்திய பட்ஜெட் 2023-24

 

பட்ஜெட் 2023-24-க்கு முன்பு புதிய வருமான வரிவிதிப்பு அடுக்கு 

வருமானம் புதிய வரிவிதிப்பு அடுக்கு
ரூ.2.50 லட்சம் வரை  வரி இல்லை 
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை  5% 
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை  10% 
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை  15% 
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை  20% 
ரூ.12.50 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல் 30%

 

உங்கள் மொத்த வரி பொறுப்பின் மீது மருத்துவ மற்றும் கல்வி கூடுதல் செஸ் வரி 4% விதிக்கப்படும். இது தவிர தனிநபர் வருமான வரி செலுத்துவோரின் வருவாய் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் கூடுதல் வரிக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

புதிய வரிவிதிப்பின் கீழ் கூடுதல் வரிக்கட்டண விவரம்

மொத்த வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரியில் 10% கூடுதல் வரிக்கட்டணம் விதிக்கப்படும்.

மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் வருமான வரியில் 15% கூடுதல் வரிக்கட்டணம் விதிக்கப்படும்.

மொத்த வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் வருமான வரியில் 25% கூடுதல் வரிக்கட்டணம் விதிக்கப்படும்.

மொத்த வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் இருந்தால் வருமான வரியில் 37% கூடுதல் வரிக்கட்டணம் விதிக்கப்படும்.

 

2023-24 மத்திய பட்ஜெட்டில் அதிகப்பட்ச கூடுதல் வரிக்கட்டண விகிதம் 37%-ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதம் 39% ஆக குறைக்கப்படுகிறது.

 

புதிய வரிவிதிப்பு முறை: முக்கிய அம்சங்கள்:

புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ் வரிவிதிப்பு அடுக்குகள்

நான்கு வரி அடுக்குகள் மட்டுமே கொண்ட பழைய முறைக்கு மாறாக, புதிய வரிவிதிப்பில் 7 வரி அடுக்குகள் இருந்தன. 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இது 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையில் கைவிடப்படும் வருமான வரி செலுத்துவோருக்கான விலக்குகள் / பிடித்தங்கள்:

வருமான வரிக் கணக்கிடுதலை எளிமைப்படுத்த புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுக்கும்போது வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் மொத்தம் 70 பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை (exemptions/deductions) வரி செலுத்துவோர் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிட வேண்டிய பிடித்தங்கள்/விலக்குகளில் உள்ளடக்கியவை:

  1. வருமான வரி செலுத்தும் சம்பளதாரருக்கு தற்போது கிடைக்கும் வழக்கமான பிடித்தம் ரூ.50,000.
  1. அத்தியாயம் VI-A இன் கீழ் குறிப்பிடப்பட்ட முதலீடுகள் அல்லது செலவுகளுக்கான விலக்கு (பிரிவு 80C, 80CCC, 80CD, 80DD, 80DDB, 80E, பிரிவு 80EE, பிரிவு 80EEA, 80EEB, 80G, பிரிவு 80GG, 80GGA, 80GGC, 80IA, 80-IAB, 80-IAB, 80-IAB, 80-IAB போன்றவை). பிரிவு 80C விலக்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முதலீடுகளான வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள், ஆயுள் காப்பீட்டு பிரீமியம், ELSS, NPS, PPF, குழந்தைகளுக்கான பள்ளிக் கல்விக் கட்டணம் போன்றவை அடங்கும்).
  1. நான்கு ஆண்டுகளில் இருமுறை கிடைக்கும் விடுப்புப் பயண உதவித்தொகை (LTA).
  1. வீட்டு வாடகை உதவித்தொகை (HRA)
  1. வீட்டுக் கடன் மீதான வட்டி
  1. குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகை
  1. சட்டப்பிரிவு 57-ன் கீழ் ஷரத்து iia-ன் படி குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.15,000 பிடித்தம்
  1. தொழில்முறை வரிக்கான பிடித்தம்.

 

புதிய வருமான வரி முறையின் கீழ் பிரிவு 87A இன் படி கிடைக்கும் தள்ளுபடி விவரம்

புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் பல வரி விலக்குகளை கைவிட வேண்டியிருந்தாலும், அவர்களுக்கு பிரிவு 87A இன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. எப்படி என்பதை கீழே பார்க்கலாம்:

மொத்த வருமானம்: ரூ.5 லட்சம் என்றால்

வருமான வரி பொறுப்பு என்பது ரூ.2.50 லட்சம் வரை – இல்லை

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை: 5% = ரூ.12,500

பிரிவு 87ஏ இன் கீழ் வழங்கப்படும் விலக்கு: ரூ.12,500

மொத்த வரி பொறுப்பு: இல்லை

ஆனால், மேற்கண்ட பயன் இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கு மட்டுமேயன்றி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது அல்ல.

புதிய வருமான வரி முறை என்பது விருப்பத் தேர்வே

புதிய வருமான வரி முறை (New tax regime) என்பது இயல்பு நிலை வரி விதிப்பு முறை என்றாலும், வருமான வரி செலுத்தும் தனிநபர் விரும்பினால் பழைய வருமான வரி முறையின் அடிப்படையில் தனது வருமான வரியை தொடர்ந்து செலுத்த சுதந்திரம் உள்ளது. (இதைப் பற்றி இந்த கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்). 2020-21 நிதியாண்டு முதல்தான் தனிநபர் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது பழைய வருமான வரி முறை மற்றும் புதிய வருமான வரி முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை விருப்பத் தேர்வு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.

நீங்கள் ஒரு முறை மாறினாலும், புதிய வருமான வரி முறையை பின்பற்றுவது கட்டாயமில்லை.

ஒருவர் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் புதிய வருமான வரி முறைக்கு மாறலாம்.

புதிய வருமான வரி முறையின் கீழ் மூத்த குடிமக்கள், அதி மூத்த குடிமக்கள் என சலுகைகளில் வேறுபாடு இல்லை

புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் வரி அடுக்குகள் ஒரு நபரின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை, அவர்களின் வயதைக் கருத்தில் கொள்வதல்ல என்பது கவனத்திற்குரியது. ஆகவே, நீங்கள் 60 வயதைக் கடந்தவராக இருந்தாலும் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கும் மேல் உங்கள் வருவாய் உள்ளது என்றால், நீங்கள் கட்டாயம் 30% வருமான வரி செலுத்தியாக வேண்டும். 80 வயது அல்லது அதி மூத்த வயதினருக்கும் இதே வரி விதிப்பு முறைதான் பொருந்தும். இவர்களுக்கும் 20-30 வயதினருக்கும் வரி விதிப்பு முறையில் வேறுபட்ட சலுகை முறைகள் இல்லை.

அடிப்படை விலக்கு வரம்பு விஷயத்திலும் மேற்கூறிய அதே தர்க்கம் பொருந்தும் – புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.2.50 லட்சம் எனும் வருமான வரி விலக்கு வரம்பு அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் அடிப்படை விலக்கு வரம்பாக உள்ளது.

 

பழைய வருமான வரி முறை அடுக்கு

புதிய வருமான வரி விதிப்பு முறையுடனேயே தொடரும் பழைய வருமான வரி விதிப்பு முறை, ஒரு தனிநபரின் வருமானத்திற்கு வரி விதிப்பதில் 4 அடுக்குகளை மட்டுமே வழங்குகிறது. புதிய வரி முறையைப் போல் அல்லாமல், பழைய வருமான வரி முறை, வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்பில் விலக்குகள் மற்றும் பிடித்தங்கள் போன்ற சலுகைகளை அனுபவிக்கலாம்.

 

60 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்திற்கான பழைய வருமான வரி முறை அடுக்குகள் 

வருமானம் பழைய வருமான வரி முறை அடுக்குகள்
ரூ.2.50 லட்சம் வரை  இல்லை 
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை  5% 
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை  20% 
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை  20%
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை 30%
ரூ.12.50 முதல் ரூ.15 லட்சம் வரை 30%
ரூ.15 லட்சத்துக்கு மேல் 30%

 

60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கான பழைய வருமான வரி முறை அடுக்குகள்

வருமானம் பழைய வருமான வரி முறை அடுக்குகள்
ரூ.3 லட்சம் வரை இல்லை
ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5%
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%
ரூ.10 லட்சத்துக்கு மேல் 30%

 

80 வயதுக்கு மேற்பட்டோருக்கான பழைய வருமான வரி முறை அடுக்குகள்

வருமானம் பழைய வருமான வரி முறை அடுக்குகள்
ரூ.5 லட்சம் வரை இல்லை
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%
ரூ.10 லட்சத்துக்கு மேல் 30%

 

பழைய வருமான வரி முறை Vs புதிய வருமான வரி முறை

வருமானம் பழைய வருமான வரி முறை புதிய வருமான வரி முறை

 

  60 வயது வரை 60 – 80 வயதினர்

 

80 வயதுக்கு மேல் அனைத்து வயதினருக்கும்
ரூ.2.50 லட்சம் வரை இல்லை இல்லை இல்லை இல்லை
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை 5%

 

இல்லை

 

இல்லை

 

5%
ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5%

 

5%

 

இல்லை

 

5%

 

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை 20%

 

20%

 

20%

 

10%

 

ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%

 

20%

 

20%

 

15%

 

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை 30%

 

30%

 

30%

 

20%

 

ரூ.12.50 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 30%

 

30%

 

30%

 

25%

 

ரூ.15 லட்சத்திற்கும் மேல் 30%

 

30%

 

30%

 

30%

 

 

முதல் பார்வைக்கு ஒரு வருமான வரி முறையை விட இன்னொன்று சிறந்தது என்று தோன்றினாலும், பழைய வருமான வரி முறையில் இருந்து புதிய வருமான வரி முறை அல்லது புதிய வருமான வரி முறையில் இருந்து பழைய வருமான வரி முறைக்கு மாறுவதில் அனைத்து விதிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்பது இல்லை என்பதை கருத்தில் கொள்வது நலம். ஒரு வருமான வரி செலுத்துபவர் தனது தனிப்பட்ட கணக்கு வழக்குத் தன்மைக்கேற்ப பொறுத்து முடிவு எடுப்பதே சிறந்தது. ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், மருத்துவக் காப்பீடு, பிபிஎஃப், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற பல வரி சேமிப்பு விருப்பங்களில் முதலீடு செய்த ஒருவராக நீங்கள் இருந்தால், வீட்டு வாடகை உதவித்தொகை மற்றும் விடுப்புப் பயண உதவித் தொகை ஆகியவை உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக இருந்தால், பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.

மேற்கண்ட முதலீடுகள் செய்ய வசதியாக இல்லாதவர்கள் அல்லது அதை வேண்டாம் என்று இருப்பவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை உள்ளவர்கள், குறைந்த வரி விகிதத்திற்காக புதிய வருமான வரி முறையை (New tax regime) தேர்வு செய்யலாம்.

இவற்றை உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 

பழைய வருமான வரி விதிப்பு முறை Vs புதிய வருமான வரி விதிப்பு முறைஎது சிறந்தது?

எடுத்துக்காட்டு 1

குணால் முன்ஷியின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் ஆகும். மேலும், அவர் வருமான வரிச் சட்டம், பிரிவு 80சி, பிரிவு 24 போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விலக்குகளைக் கோருகிறார்.

பழைய வருமான வரி முறை புதிய வருமான வரி முறை
ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் ரூ.15 லட்சம்
வழக்கமான பிடித்தம் ரூ.50,000
பிரிவு 80C-யின் கீழ் பிடித்தம்

 

ரூ.1.50 லட்சம் (வீட்டுக் கடன் அசல் கட்டணம், பிபிஎஃப் மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பங்களிப்புக்காக)

 

பிரிவு 24-ன் கீழ் பிடித்தம்

 

ரூ.2 லட்சம் (வீட்டுக் கடன் வட்டி மீதான கழிவு)
வரிக் கணக்கீட்டுக்கான மொத்த வருவாய் ரூ.11 லட்சம்

 

ரூ.15 லட்சம்

 

 

வருமான வரி அடுக்கு

 

பழைய விகிதம்

 

புதிய விகிதம்

 

பழைய விகிதத்தில் ரூபாயில் வரி புதிய விகிதத்தில் ரூபாயில் வரி
ரூ.2.50 லட்சம் வரை 0%

 

0%

 

இல்லை

 

இல்லை

 

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5%

 

5%

 

ரூ.12,500

 

ரூ.12,500

 

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை 20%

 

10%

 

ரூ.50,000

 

ரூ.25,000

 

ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%

 

15%

 

ரூ.50,000

 

ரூ.37,500

 

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் 30%

 

20%

 

ரூ.30,000

 

ரூ.50,000

 

ரூ.12.50 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 30%

 

25%

 

இல்லை ரூ.62,500

 

வரிக்கான மொத்த வருமானம் ரூ.1,52,500

 

ரூ.1,87,500

 

 

இந்த எடுத்துக்காட்டின்படி குணால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் வரி செலுத்துவதுதான் சிறந்தது.

 

எடுத்துக்காட்டு 2

விமல் குமார் தனது ஆண்டு வருமானமாக ரூ.8 லட்சம் சம்பாதிக்கிறார். அத்துடன், ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியமாக ரூ.50,000 மற்றும் பிபிஎஃப்-க்கு ரூ.1 லட்சம் செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

பழைய வருமான வரி முறை புதிய வருமான வரி முறை
மொத்த ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்

 

ரூ.8 லட்சம்

 

வழக்கமான பிடித்தம் ரூ.50,000
வரிக்குரிய மொத்த வருமானம் ரூ.7.50 லட்சம் ரூ.8 லட்சம்

 

மொத்த வரி பொறுப்பு (Total tax liability)

வருமான வரி அடுக்கு பழைய விகிதம்  புதிய விகிதம்  பழைய விகிதத்தில் ரூபாயில் வரி புதிய விகிதத்தில் ரூபாயில் வரி
ரூ.2.50 லட்சம் வரை 0% 0% இல்லை இல்லை
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் 5%

 

5%

 

ரூ.12,500

 

ரூ.12,500

 

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை 20%

 

10%

 

ரூ.50,000

 

ரூ.25,000

 

ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%

 

15%

 

 

ரூ.7,500

 

மொத்த வரித் தொகை ரூ.72,500

 

ரூ.45,000

 

 

இதன் எடுத்துக்காட்டின்படி இந்த சம்பள அடுக்கில் உள்ளவர்கள் புதிய வருமான வரி விகிதத்தைத் தேர்வு செய்யலாம்.

இதையும் வாசிக்க: இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்துகளில் மனைவியின் பங்கு குறித்து முழுவதும் அறிக

 

வருமான வரி குறித்த சமீபத்திய தகவல்கள்

 

பட்ஜெட் 2022: வருமான வரி அடுக்கு முறையில் மாற்றம் இல்லை

மத்திய பட்ஜெட் 2022 பொதுவாக ரியல் எஸ்டேட் துறையையும், குறிப்பாக வீடு வாங்குபவர்களையும் மிகவும் ஏமாற்றமடையச் செய்தது. இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு உறுதுணைபுரியும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்பார்த்தனர்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் மலிவு வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டதைத் தவிர, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில், கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பொருளாதார முடக்கத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த மீட்புக்கும் முக்கியமானதாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தொழில் துறைக்கு புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பட்ஜெட் 2022-இல் வருமான வரி விதிப்பு அடுக்கு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது பட்ஜெட்டுக்கு முந்தைய விருப்பப் பட்டியலில் ஆய்வாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால், எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், அடிப்படை விலக்கு வரம்பு தற்போதைய ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று வீடு வாங்குபவர்கள் எதிர்பார்த்தனர்.

 

வருமான வரி அடுக்கு: 2020-21 நிதியாண்டின் விகிதங்கள்

புதிய வருமான வரி முறையின் கீழ்

 வருமான வரி அடுக்கு  வரி விகிதம்
0 முதல் ரூ.2.50 லட்சம் வரை எதுவும் இல்லை
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை*

5% (87A இன் கீழ் தள்ளுபடி பொருந்தும்)

 

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை  10% 
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15%
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை 20%
ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல் 30%

*மூத்த குடிமக்களுக்கானது.

 

2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி அடுக்கு விகிதங்கள்

தனிநபர் (60 வயதிற்குட்பட்டவர்கள்) மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு

வருமான அடுக்கு வரி விகிதம்
ரூ.2.50 லட்சம் வரை இல்லை
ரூ.2.50 முதல் ரூ.5 லட்சம் வரை 5%
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%
ரூ.10 லட்சத்துக்கு மேல் 30%

 

2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அடுக்கு விகிதங்கள் 

தனிநபர் (60 வயதிற்குட்பட்டவர்கள்) மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கு

வருமான அடுக்கு வருமான வரி விகிதம்
ரூ.2.50 லட்சம் வரை இல்லை
ரூ.2.50 முதல் ரூ.5 லட்சம் வரை 5%
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%
ரூ.10 லட்சத்துக்கு மேல் 30%

 

2017-18 நிதியாண்டிற்கான வருமான வரி அடுக்கு விகிதங்கள்

தனிநபர் (60 வயதிற்குட்பட்டவர்கள்) மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கு

வருமான அடுக்கு வருமான வரி விகிதம்
ரூ.2.50 லட்சம் வரை இல்லை
ரூ.2.50 முதல் ரூ.5 லட்சம் வரை 5%
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%
ரூ.10 லட்சத்துக்கு மேல் 30%

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இந்தியாவில் எந்த வருமானம் வரை வரி இல்லை?

தனிநபர்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் ரூ.2.5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு உண்டு.

இந்தியாவில் வருமான வரி கணக்கீட்டுக்கு ஓர் ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும் காலக்கட்டம் எவ்வளவு?

தனிநபரின் ஆண்டு வருவாயைப் பொறுத்து வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்றது. இதற்காக நிதியாண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதாவது, ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான நிதியாண்டு வருமான வரி கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பது கட்டாயமா?

இல்லை. புதிய வருமான வரி விதிப்பு முறை விருப்பத் தேர்வு கொண்டது. ஒருவர் அதைத் தேர்வு செய்யலாம் அல்லது பழைய வருமான வரி முறையைக் கடைப்பிடிக்கலாம்.

தனிநபர் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

தனிநபர் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான மதிப்பீட்டு ஆண்டின் கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.

வருமான வரி பொறுப்பில் வயது வரம்பின் தாக்கம் என்ன?

இந்தியாவில் வருமான வரிச் சட்டங்களின் கீழ், வயது அடிப்படையிலான மூன்று வரிவிதிப்புப் படிமுறைகள் உள்ளன.

1. வரி செலுத்துவோரில் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு

2.மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் 60 முதல் 80 வயதிற்குட்பட்டவர்களுக்கு

3.சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் என்று அழைக்கப்படும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு. கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி.க்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான வரி அமைப்பு வேறுபட்டது என்பதை நினைவில் கொள்க.

தனிநபர் வரி செலுத்துவோர் பிரிவில் எத்தனை வகைகள் உள்ளன?

இந்திய வருமான வரிச் சட்டங்களின் கீழ், தனிப்பட்ட வரி செலுத்துவோரை அவர்களின் வயதின் அடிப்படையில் பின்வரும் மூன்று வகைகளில் பிரிக்கப்படுகிறார்கள்: குடியிருப்பாளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் அல்லாத 60 வயதுக்குட்பட்ட தனி நபர்கள், குடியிருப்பாளர் மூத்த குடிமக்கள் (60-80 வயது),குடியிருப்பாளர் சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் (80 வயது கடந்தோர்).

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • மலிவு விலை வீட்டுத் திட்டத்தின் கீழ் 6,500 வழங்கும்
  • செஞ்சுரி ரியல் எஸ்டேட் FY24 இல் 121% விற்பனையை பதிவு செய்துள்ளது
  • FY24 இல் புரவங்கரா 5,914 கோடி ரூபாய் விற்பனையை பதிவு செய்துள்ளது
  • புனேயில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான இரண்டு உள்கட்டமைப்பு திட்டங்களை ஆர்எஸ்ஐஐஎல் பாதுகாத்துள்ளது
  • NHAI இன் சொத்து பணமாக்குதல் FY25 இல் ரூ. 60,000 கோடி வரை கிடைக்கும்: அறிக்கை
  • கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் FY24 இல் வீட்டுத் திட்டங்களைக் கட்டுவதற்காக 10 நிலப் பார்சல்களைக் கையகப்படுத்துகிறது