ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் (ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு ஸ்கீம்: அதன் நன்மைகள் என்ன?

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் (NNORC-ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு ஸ்கீம்) நாட்டில் அமைந்துள்ள எந்த ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் இருந்து வேண்டுமானாலும் மானியப் பொருட்களை வாகிக்கிள்ளும் வசதியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.

COVID-19 தொற்றுநோய் தாக்கத்தின் விளைவுகளைக்  கருத்தில் கொண்டு  , நாட்டின் வறுமைக் கோட்டிலுள்ள அல்லது வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்கும் நோக்கத்தோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் ஓரே நாடு ஒரே குடும்ப அட்டை (ONORC) என்ற இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள்   அல்லது பயனாளிகள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் மானிய விலையில் உணவுப் பொருட்களை  வாங்கலாம். இந்த குடும்ப அட்டை நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.

 

ஓஎன்ஓஆர்சி (ONORC )ஐ செயல்படுத்துவதற்கான காரணம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் மானிய விலையில் உணவு மற்றும் தானியங்களைப் பெறுவதற்கான  உரிமையுடைய 80 கோடிப் பயனாளிகளை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டில் ஒதுக்கப்பட்ட PDS (பொது விநியோக அமைப்புகள்) மூலம் மானிய விலையில் உணவு மற்றும் தானியங்களை வாங்கும் வசதியைப் பெற அவர்களில் 23 கோடி பேருக்கு மட்டுமே குடும்ப அட்டை  வழங்கப்பட்டுள்ளன. இது குறிப்பாக வேலையின் பொருட்டு  பிற நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. ONORC குடும்ப அட்டை மூலம், ஒரு நபர் எந்த வட்டாரத்திலும் எந்த நகரத்திலும் உள்ள எந்த FPS (நியாய விலைக் கடை) கடையிலிருந்தும் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கலாம்.

மேலும் காண்க: இந்தியாவில் உள்ள பல்வேறு குடும்ப அட்டை வகைகள் என்ன?

 

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை: பலன்கள்

ஓஎன்ஓஆர்சி (ONORC)  திட்டமானது,  ஏப்ரல் 2018 முதல்,  தற்போது வழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை ஓரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் கொண்டுவர ஏற்பாடு  செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இது செயல்முறைப்படுத்தப்பட்டுவிடு. ஒடிசா, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் ‘ஓரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்துள்ளதாக உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். தற்போதுவரை இத் திட்டத்தில் இணைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 20.ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டையின் முக்கிய பலன்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன:

  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பயனாளிகள், குடும்ப அட்டை வழங்கப்பட்ட மற்ற இதர மாநிலங்களிலும் அதே நியாய விலைக் கடைகளில் குடிமப் பொருட்களைப் பெறலாம்.
  • ஒரு பயனாளிக்கு வேறு ஒரு FPSக்கு மாற்றிக்கொள்ளும்
    விருப்பத்தேர்வு உள்ளது
  • சமூக அடையாளம் பொது விநியோக அமைப்பின் (PDS) அணுகலை
    எளிதாக்குவதால் , இத்திட்டம் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில்
    பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த மக்களுக்குப் மிகவும் பயனளிக்கிறது.
  • குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் ( உலகளாவிய உணவின்மை
    குறியீடு) இன் படி மொத்தம் 117 நாடுகளின் மத்தியில் இந்தியா
    102வது இடத்தில் உள்ளது. நிலையான வளர்ச்சி இலக்கு 2 – 2030க்குள்
    உணவின்றி பசியில் வாடுவதை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை
    எட்டி 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றி முடிப்பதை இந்தத் திட்டம்
    நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

வழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளை, ஓஎன்ஓஆர்சி திட்ட குடும்ப அட்டையாக மாற்றும் செயல்பாடுகள்

ஓரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் பல்வேறு வகையான குடும்ப அட்டைகளை ஒரே ஓஎன்ஓஆர்சி(ONORC) குடும்ப அட்டைகளாக மாற்றுகிறது. வழக்கத்திலுள்ள ஒரு குடும்ப அட்டையின் பெயர்வுத்திறன் (போர்டபிலிட்டி) செயல்முறையானது, இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பல்வேறு போர்டல் முகப்புகள் மூலம், மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அளவில் மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைகளின் மாநிலங்களுக்கு இடையேயான பெயர்வுத்திறனுக்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் பொது விநியோக ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பின் (IMPDS). வழியாக பெயர்வுத்திறன் ஆன்லைன் மூலமாக நிறைவேற்றப்படும். இதற்கான இணையத்தளமாக அன்னவித்ரன் போர்ட்டல் இருக்கும், E-POS அமைப்பு மூலம் உணவு விநியோகம் தொடர்பானதகவல்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பெயர்வுத்திறன் வசதி நாடு முழுவதும் உள்ள எந்த எஃப்.பி.எஸ்ஸிலும் (FPS) உணவு தானியங்களை வாங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும்.

குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் ஆகஸ்ட் 1, 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 65 கோடி பயனாளிகளை உள்ளடக்கி 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்திருக்கிறது.  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் ஏற்கனவே 86% பயனாளிகளை சென்றடைந்து விட்டதாக . நிதியமைச்சர்  தெரிவித்தார்

மேலும் காண்க : இஷரம் போர்டல் மற்றும் இ ஷரம் அட்டை என்பது என்ன?

 

ஓஎன்ஓஆர்சி (ONORC)  செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியல்

மாநிலம் ஓஎன்ஓஆர்சி (ONORC) அமல்படுத்தப்பட்ட நாள் மாநிலம் ஓஎன்ஓஆர்சி (ONORC) அமல்படுத்தப்பட்ட நாள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் டிசம்பர்  2020 ஹிமாச்சலப் பிரதேசம் h மே  2020
ஆந்திரப்பிரதேசம் ஆகஸ்ட்  2019 ஜம்மு காஷ்மீர் ஆகஸ்ட் 2020
அருணாசலப் பிரதேசம் அக்டோபர் 2020 ஜார்கண்ட் ஜனவரி 2020
அஸ்ஸாம் அக்டோபர் 2020 கர்நாடகா அக்டோபர் 2019
பீஹார் மே 2020 கேரளா அக்டோபர் 2019
சண்டிகர் நவம்பர்  2020 லடாக் செப்டம்பர்  2020
சட்டீஸ்கர் பெப்ருவரி  2020 லட்சத் தீவுகள் செப்டம்பர்  2020
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மே 2020 மத்தியப் பிரதேசம் ஜனவரி  2020
டெல்லி ஜூலை  2021 மகாராஷ்ட்ரா ஆகஸ்ட் 2019
கோவா ஜனவரி 2020 மணிப்பூர் ஆகஸ்ட்  2020
குஜராத் ஆகஸ்ட் 2019 மேகாலயா டிசம்பர் r 2020
ஹரியானா அக்டோபர் 2019 மிசோரம் ஜூன்  2020

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • தானே, கோல்ஷெட்டில் ரெடி ரெக்கனர் ரேட் என்ன?
  • தானே, மன்பாடாவில் ரெடி ரெக்கனர் ரேட் என்ன?
  • கூரை சொத்து கொண்ட பில்டர் தளம் பற்றிய அனைத்தும்
  • உங்கள் வீட்டை குழந்தை ஆதாரம் செய்வது எப்படி?
  • லென்ஸ்கார்ட்டின் பெயூஷ் பன்சால், தனுகா குடும்ப உறுப்பினர்கள் குர்கானில் பிளாட் வாங்குகிறார்கள்
  • மே 2024 இல் மும்பையில் 11,800 சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை