Bathroom Vastu: வாஸ்து முறைப்படி பாத்ரூம், கழிவறை திசை மற்றும் குளியலறை, கழிவறை வாஸ்து குறிப்புகள்

வீட்டின் குளியலறையை மறுவடிவமைத்து அல்லது புதிதாக கட்டும்போது, வீட்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்தமாக நேர்மறையான சூழலை உருவாக்கத் தேவையான சில வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதல்கள் இங்க கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்மறை ஆற்றலை நீக்கும் வகையில் கழிவறைக்கு ஏற்ற சரியான திசையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கலாம்.

பெரும்பாலான குடும்பத்தினர் தாங்கள் வாழும் இடத்தை வடிவமைத்து டிசைன் செய்யவும், மறுவடிவமைக்கவும் தங்களது முழு முயற்சியையும் ஆற்றலையும் செலவிடுகின்றனர். இதன் பின்னணி காரணம் என்னவென்றால், ஹால் மற்றும் டிராயிங் ரூம் தான் உங்களது விருந்தாளிகள் பார்க்கும் பிரதான பகுதியாக உள்ளது. எனவே அது அழகாகவும் வரவேற்கதக்கதாகவும் இருக்க வேண்டும். எனினும், வீட்டின் உரிமையாளர் ஒவ்வொரு அறைக்குமான முக்கியத்துவத்தை உணர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு அறையையும் நேர்மறை ஆற்றலை வெளிவிட கூடிய வகையில் நாம் அமைக்க முடியும். ஆனால், குளியலறை (Bathroom) மற்றும் கழிவறை (Toilet) ஆகியவை சரியாக வடிவமைப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. வாஸ்து சாஸ்திர கூற்றுப்படி, குளியலறை மற்றும் கழிவறையை சரியான திசையில் அமைக்கவில்லை எனில், அது எதிர்மறை ஆற்றல்களின் இருப்பிடமாகத் திகழும். அடிக்கடிப் பயன்படுத்தும் இடத்தை கவனிக்காமல் விட்டு விடுவது விவேகம் அற்றதாகும். எனவே, வீட்டை வடிவமைத்து கட்டும் பொழுதே, வாஸ்துபடி குளியலறை மற்றும் கழிவறைக்கான சரியான திசையை கருத்தில் கொண்டு கட்ட வேண்டும். வீட்டின் மையப் பகுதியில் குளியலறையை கட்டுவதை தவிர்க்க வேண்டும். நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் குளியலறைக்கான வாஸ்து விதிமுறைகளை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

Table of Contents

குளியலறை மற்றும் கழிவறைகளை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அமைக்கவில்லை எனில், அதன் மூலம் பணப் பிரச்சனைகள் அல்லது வீட்டின் செல்வ நிலையில் பின்னடைவு அல்லது உடல் நலப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம் மேலும், மன அழுத்தம் அல்லது சின்ன விபத்துகளை ஏற்படவும் வழி வகுக்கிறது. சிலர் படுக்கையறை மற்றும் அட்டாச்டு பாத்ரூம்களை எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும் விதமாக வடிவமைக்கிறார்கள். எனினும், வாஸ்து நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இவ்வித பிரச்சனைகளை சரி செய்யலாம். நீங்கள் உங்கள் குளியலறையை புதிதாக கட்டவோ அல்லது பாத்ரூமை மறுவடிவமைக்கவோ அல்லது குளியலறையில் சில வாஸ்து திருத்தங்களை மேற்கொள்ளவோ விரும்பினால், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் இங்கே:

 

Bathroom and toilet direction as per Vastu

 

வாஸ்து முறைப்படி பாத்ரூம் மற்றும் கழிவறை திசைகள்

வாஸ்து சாஸ்திர முறைப்படி பாத்ரூம் மற்றும் கழிவறையானது வீட்டின் வடக்கு திசை அல்லது வடமேற்கு திசையில்தான் அமைக்கப்பட வேண்டும். வாஸ்துவில் கூறியுள்ளது போல், வீட்டின் தெற்கு திசை அல்லது தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசைகளில் குளியல் பகுதியை அமைப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின்படி கழிவறை தரைமட்டத்தை விட ஒன்று முதல் இரண்டு அடி உயரத்தில்தான் கட்டப்பட வேண்டும்.

இதையும் வாசிக்க: புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும்போது கவனிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள்

 

பாத்ரூம் வாஸ்து: குளியலறை ஏன் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட வேண்டும்?

பெரும்பாலான இந்திய வீடுககளை அதன் உரிமையாளர்கள் வாஸ்துவிற்கு இணக்கமாகவே கட்ட விரும்புகின்றனர். ஏனெனில், அது நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கும் என்பதை நம்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிகளை அதிகம் பின்பற்றாத மக்கள் கூட, ஒரு வீடு வாஸ்துப்படி கட்டப்பட்டும், தோஷங்கள் இல்லாமலும் இருந்தால் செகண்டரி மார்க்கெட்களில் அதனை எளிதாக விற்க முடியும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். உங்களது வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகள் உள்ளது. ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வாஸ்து திசை, அதற்கு பயன்படுத்தக்கூடிய வண்ணங்கள் மற்றும் அங்குள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வழிகள், இன்னும் பல. இந்தக் கட்டுரையில் குளியல் மற்றும் சுத்தபடுத்தும் இடம் ஆகியவற்றை எவ்வாறு வாஸ்துவிற்கு இணக்கமாக அமைப்பது என்பது பற்றியும், வாஸ்து விதிப்படி பாத்ரூம் மற்றும் கழிவறைக்கான வாஸ்து திசை ஆகியவை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: இந்தியாவில் சிறந்த தண்ணீர் தொட்டிகளை எங்கு வாங்குவது?

 

வடகிழக்கு திசை கழிவறைகள்: வாஸ்து பரிகாரங்கள்

வீட்டில் வடக்கு திசையிலோ அல்லது வடகிழக்கு பகுதிகளிலோ கழிவறையை வடிவமைப்பது வாஸ்து விதிமுறைகளுக்கு ஏற்றதல்ல. அத்துடன், இது எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கு வழிவகுக்கிறது. வடகிழக்கு யந்த்ரா (North-east yantra) ஒன்றை வீட்டின் வடகிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். அதேபோல் வடக்கு பகுதியில் அமைக்கபட்ட கழிவறையினால் ஈரக்கப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்ற கழிவறைக்குள் கற்பூரம் அல்லது வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றலாம். கழிவறையின் கதவுகள் எப்பொழுதும் மூடியபடி இருக்க வேண்டும். வீட்டிற்குள் மணி பிளான்ட் அல்லது ஸ்பைடர் பிளான்ட் போன்ற செடிகளை வளர்த்து வருவது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அகற்ற உதவும். கடல் உப்பும் எதிர்மறை ஆற்றல்களை போக்கக்கூடிய தன்மை கொண்டது. அதை ஒரு கிண்ணத்தில் சேகரித்து கழிவறையில் வைத்து ஒவ்வொரு வாரமும் அந்த உப்பு மாற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக, வடகிழக்கில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

வடக்கு திசை கழிவறைக்கான வாஸ்து பரிகாரங்கள்

வடக்கு திசையில் கட்டப்படும் கழிவறைகளைப் பயன்படுத்துவதால், அது வீட்டில உள்ளவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தி எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும். அத்தகைய வடிவமைப்புகளுக்கு வாஸ்து தீர்வாக, வடமேற்கு திசையில் ஒரு சிறிய பள்ளம் அல்லது குழி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்தக் கழிவறை சுவர்களுக்கு கருப்பு வண்ணம் பூச வேண்டும். வெள்ளை நிறப் பூக்களை மெட்டல் பூ ஜாடியில் வைத்து, அதை வடக்கு திசையில் வைப்பது எதிர்மறை தாக்கங்களை அகற்ற உதவும். வடக்கு பார்த்த வீட்டின் பாத்ரூமுக்கான வாஸ்து விதிகளின்படி தென்மேற்கின் தெற்கு அல்லது வடமேற்கின் வடக்கு பகுதியில் பாத்ரூம்கள் அமைப்பதற்கு ஏற்றவை ஆகும். உடல் மற்றும் மன ரீதியிலான எதிர்மறை ஆற்றல்களைக் களைவதற்கு தென்மேற்கின் கிழக்கு திசை உதவுகிறது.

இதையும் வாசிக்க: வடக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து பிளான்

 

தெற்கு திசை கழிவறைக்கான வாஸ்து பரிகாரங்கள்

வாஸ்து சாஸ்திரப்படி, கழிவறை அமைக்கப்படும் இடமானது சரியாக தெற்கு திசையில் இருக்கும் பட்சத்தில், அது வீட்டில் உள்ளவர்களின் மதிப்பைக் குறைக்கும் விதமான இழப்புகளை ஏற்படுத்தும். இந்த வகையான வாஸ்து தோஷங்களுக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளுக்கு நடுவில் கழிவறையை மாற்றுவது வாஸ்துப்படி, சிறந்த பரிகாரம் ஆகும்.

வாஸ்து முறைப்படி பாத்ரூம் மற்றும் கழிவறைக்கு ஏற்ற சரியான வண்ணங்களை திட்டமிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தெற்கு திசையில் உள்ள குளியலறை அமைப்பு சமநிலையில் இருந்தால், அதற்கு வெளிர் நிறக் கலவைகளில் சிவப்பு, இளஞ்சவப்பு, ஆரஞ்சு, ஊதா ஆகிய வண்ணங்களில் பெயின்ட் செய்யலாம். குளியலறை அமைப்பு தெற்கு திசையில் இருந்து மேலும் நீட்டிக்கப்பட்டிருந்தால் நடுநிலை வண்ணங்களில் பெயின்ட் செய்யலாம்.

 

தென்மேற்கு கழிவறை வாஸ்து பரிகாரங்கள்

தென்மேற்கு திசையில் கழிவறை அமைக்க நேர்ந்தால் பின்பற்ற வேண்டிய வாஸ்து பரிகாரங்கள் பின்வறுமாறு:

  • தென்மேற்கு உள்ள கழிவறைச் சுவரின் வெளிப்புறத்தில் வாஸ்து பிரமிட் வைப்பது நல்லது.
  • எப்பொழுதும் கழிவறையின் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
  • தென்மேற்கு திசை உள்ள கழிவறையில் எந்த ஓர் உலோகப் பொருட்களும் இல்லாது இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைக்க வேண்டும்.
  • கழிவறையின் வெளிப்புறச் சுவரில் மூன்று அல்லது ஒன்பது லெட் ஹெலிஸ்கள் வைக்கவும். மேலும், மர பிரமிட் தனித்தனியாக உள்ள மூன்று பிரமிட்களை பாத்ரூம் கதவு நிலைக்கு வெளியே வைக்கலாம்.
  • மாற்றாக, வெண்கல கிண்ணத்தில் வாஸ்து உப்பை வைக்கலாம். ஒவ்வொரு வாரமும் கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்ற வேண்டும்.
  • இந்த திசையில் உள்ள பாத்ரூம் மற்றும் கழிவுறைக்கு வாஸ்து முறைப்படி, அறையில் வெளிச்சம் உள்ளது போன்ற சாயல்கள் ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களைக் கொண்டு பெயின்ட் அடிக்கலாம்.

 

தென்கிழக்கு திசை பார்த்த கழிவறைக்கான வாஸ்து பரிகாரங்கள்

நெருப்பின் திசையான தெற்கு திசை நோக்கி அமைக்கபடும் கழிவறை, வாஸ்து முறைப்படி எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். அத்தகைய திசையில் அமைக்கப்பட்ட கழிவறைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்ததாகும். இந்த திசையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை அகற்ற பாத்ரூம் அல்லது கழிவறையின் தெற்கு அல்லது கிழக்கு திசையின் வெளிபுறச் சுவர் மீது வாஸ்து பிரமிட்கள் வைப்பது சிறந்தது. மேலும், வாஸ்து உப்பை செம்புக் கிண்ணத்தில் வைத்து, அதை ஒவ்வொரு வாரமும் மாற்றி வைப்பதும் சிறந்த தீர்வாகும்.

கழிவறை தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டு அது நீடிக்கப்பட்டிருந்தால், அவற்றிக்கு மஞ்சள், கிரீம் அல்லது பொதுவாக நடுநிலைத் தன்மை கொண்ட நிறங்களில் பெயின்ட் அடிக்கலாம்.

 

கிழக்கு திசை கழிவறைகளுக்கான வாஸ்து பரிகாரங்கள்

வீட்டில் கழிவறை / பாத்ரூம் கிழக்கு திசையில் அமைக்கப்படாமல் இருப்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வடிவமைக்கப்பட்டு கட்டப்படும் கழிவறை / பாத்ரூமை பயன்படுத்துவதால் குடும்பத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அக்குடும்பத்தின் முதல் குழந்தையை அதிகம் பாதிக்கும். எனவே, கழிவறை அமைக்க ஏற்ற திசையை வாஸ்து முறைப்படி தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். ஆனால், இவ்வாறு கட்டுவதை தவிர்க்க முடியவில்லையெனில் கழிவறையின் கூரை / ரூஃப் மீது மூங்கிலைக் கொண்டு வடிவமைக்கலாம். ஏனெனில், இது எதிர் விளைவுகளை குறைக்க பெருமளவில் துணைபுரிகிறது.

கிழக்கு திசையில் கழிவறைக் கட்டுவதை தவிர்ப்பது எப்போதுமே சிறந்ததாகும். இருப்பினும் வீட்டின் கழிவறை மற்றும் பாத்ரூம் கிழக்கு திசையில் அமைக்கமாறு நேர்ந்தால், அதற்கான வாஸ்து பரிகாரங்களின்படி  அந்த அறைக்குப் பயன்படுத்தப்படும் நிறங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பூமியின் நிறத்தை ஒத்த சாயல்கள் கொண்ட ஒளி சிந்தும் நிறங்களான பழுப்பு மற்றும் பச்சை நிறங்களை பயன்படுத்தலாம்.

 

வாஸ்து முறைப்படி கழிவறை இருக்கை திசைகள்

கழிவறையின் இருக்கையை ஒரு நபர் பயன்படுத்தும்பொழுது அவர் வடக்கு அல்லது தெற்கு திசையை எதிர்கொள்ளுமாறு வடிவமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்குகிறது. வாஸ்து முறைப்படி, ஒருவர் கழிவறை இருக்கையில் அமர்ந்திருக்கும்பொழுது அவர் கட்டாயமாக தெற்கு அல்லது வடக்கு திசையை எதிர்கொள்ளுமாறு இருக்கை அமைக்கப்பட வேண்டும். எப்பொழுது கழிவறை அமைக்கப்படும் நிலையை வாஸ்து முறைப்படி தீர்மானிக்கிறோமோ, அப்போது சரியான ஆற்றல் ஓட்டத்தை உறுதி செய்யும் வகையில் ஜன்னல்களையும் அதனுடன் இணைத்து அமைக்க வேண்டும்.

 

பாத்ரூம் மற்றும் கழிவறைப் பயன்பாடுகள், சாதனங்களுக்கான வாஸ்து விதிகள்

  • வாஸ்து முறைப்படி கண்ணாடிகளை பாத்ரூமின் வடக்கு அல்லது கிழக்கு பக்க சுவரில் வைக்க வேண்டும். சதுர மற்றும் செவ்வக வடிவத்தில் உள்ள கண்ணாடிகளை தேர்ந்தெடுக்கலாம். அவற்றை தரையிலிருந்து குறைந்தது நான்கு அல்லது ஐந்து அடிக்கு மேல் உள்ளவாறு மாட்ட வேண்டும்.
  • பாத்ரூமில் கண்ணாடியை சற்று உயரத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும். அப்போதுதான் அது கழிவறையின் இருக்கையை பிரதிபலிக்கா வண்ணம் இருக்கும்.
  • ஹேர் டிரையர் மற்றும் கீசர் போன்ற மின் சாதன பொருட்களை தென்கிழக்கு பகுதியில் தான் வைக்க வேண்டும்.
  • எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது காற்றோட்டத்திற்கான ஜன்னல் அமைப்பு இருந்தால் அதனை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை எதிர்கொள்ளுமாறு அமைக்க வேண்டும்.
  • பாத்ரூம் வாஷ்பேஷின்கள் கிழக்கு வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் தான் இருக்க வேண்டும்.
  • பாத்ரூம் சமநிலையான ஒரு சிறப்பான தோற்றத்தில் இருக்க, மரத்தாலான குளியலறை ஃபர்னிச்சர்கள், குளியலறையில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு கூடைகள் மற்றும் உலோக விளக்குகள் போன்ற சாதனங்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
  • பாத்ரூமில் ஷவர் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில்தான் அமைந்திருக்க வேண்டும்.
  • வாஷிங் மெஷின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் தான் வைக்கப்பட வேண்டும்.

 

Vastu Shastra tips and guidelines for designing bathrooms and toilets

இதையும் வாசிக்க: வாஸ்து முறைப்படி கண்ணாடி திசை

 

குளியல் தொட்டிக்கான பாத்ரூம் வாஸ்து

வாஸ்து முறைப்படி, ஜக்கூஸி (Jacuzzi) / குளியல் தொட்டி (bath tub) வட்டம் அல்லது சதுர வடித்தில்தான் அமைக்க வேண்டும். கூர்மையான விளிம்புகளுடன் மற்றும் கோணங்களாலான வடிவங்களில் குளியல் தொட்டியை வடிவமைக்கக் கூடாது. பொதுவாக வடக்கு, கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் ஜக்கூஸி வைப்பது நல்லது. குளியலறை விரிப்புகள் வெள்ளை அல்லது நீல நிறமாக இருக்கலாம். அத்துடன், அவை குளியல் தொட்டிக்கு அருகில் தான் வைக்கப்பட வேண்டும். அதில் கருப்பு அல்லது சிவப்பு போன்ற அடிர் நிறங்களில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். பாத் டப் தலையணைகள் ஜக்கூஸியின் தெற்கு பகுதியில் தான் வைக்கப்பட வேண்டும். வாசனை மெழுகுவர்த்திகளுடன் கூடிய ஸ்பா போன்ற சூழலை உருவாக்க வேண்டுமெனில், குளியலறையின் வடகிழக்கு பகுதியில் எப்பொழுதும் அவற்றை வைக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: இந்தியாவில் பாத் டப் விலைகள்: பாத் டப்கள் மற்றும் நவீன குளியல் இடங்களை ஆடம்பரமாக வடிவமைத்தல்

 

பாத்ரூம் கதவுகளுக்கான வாஸ்து குறிப்புகள்

  • பாத்ரூம் கதவுகளை வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும்.
  • பாத்ரூமில் உலோக கதவுகளை தவிர்த்து மர கதவுகளையே பயன்படுத்த வேண்டும். அதுபோலவே பாத்ரூம் கதவுகளில் நன்கு அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகளை அதில் வடிவமைப்பதை தவிர்த்து வேண்டும்.
  • பாத்ரூமின் கதவுகள் எப்பொழுதும் மூடியபடிதான் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதனை திறந்த நிலையில் வைத்திருப்பது தனிப்பட்ட உறவுகளில் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் பரவக்கூடும் என கூறப்படுகிறது.

 

Vastu Shastra tips and guidelines for designing bathrooms and toilets

 

ஜன்னல்களுக்கான பாத்ரூம் வாஸ்து

வாஸ்து முறைப்படி சரியான திசையில் பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அனைத்து குளியலறையிலும் ஜன்னல் அல்லது சரியான வெண்டிலேஷன் / காற்றோட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி அறைக்குள் சூரிய ஒளி நுழைவதற்கு உதவுகிறது. குளியலறையின் ஜன்னல்கள் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கி திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். மேலும், ஜன்னல்கள் வெளிப்புறமாக திறக்ககக்குமாறு அமைப்பது அவசியம்

 

பாத்ரூம்களுக்கான வாஸ்து நிறங்கள்

பெயிஜ் மற்றும் கிரீம் போன்ற லேசான நிறங்களை குளியலறையில் பெயின்ட் செய்ய தேர்வு செய்யலாம். கருப்பு மற்றும் அடர் நீலம் அல்லது சிவப்பு நிறத்தை பாத்ரூமுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பாத்ரூமுக்கு ஏற்ற வேறு பொருத்தமான நிறங்கள் பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் ஆகும். பலர் அவர்களது குளியல் இடங்களுக்கு டார்க் நிற டைல்ஸ் அல்லது டார்க் நிற பெயின்ட்களை  தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், வாஸ்து அதை ஒருபோதும் பரிந்துரைப்பதில்லை. தூய்மையாக இருக்க வேண்டும் எனும் கண்ணோட்டத்தின்படி, வெளிர் நிறங்கள் தரையில் ஏற்படும் அழுக்குகளை உடனே கண்டறிய உதவுவதோடு, அதனை உடனடியாக சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும், பூமியின் நிறத்தை ஒத்த சாயல்கள் கொண்ட வண்ணங்களைப்  பயன்படுத்தும்போது அது வீட்டில் அமைதியான சூழ்நிலைகளை பராமரிக்க பெருமளவு துணை புரிகிறது. அடர் நிறங்கள் வீட்டினுள் எதிர்மறையை ஆற்றல்களை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்நிறங்களை பாத்ரூமுக்கு பயன்படுத்தும்போது குளியலறை சிறியதாகவும், சுருங்கியது போன்றும் தோற்றம் தரக்கூடியது.

 

Vastu Shastra for toilets

 

அட்டாச்டு பாத்ரூம் மற்றும் தனி குளியலறைக்கான வாஸ்து

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி பாத்ரூம் மற்றும் கழிவறைகளை இணைந்தபடி அமைக்கக் கூடாது. எனினும் பெரும்பாலான நகர்ப்புற வீடுகளில் இட நெருக்கடி உள்ளபடியால் அவ்வாறு தனித்தனியாக அமைக்க முடியாது. எனவே, இதன் காரணமாக அட்டாச்டு  குளியலறைகள் புகழ்பெற்று, பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அட்டாச்டு கழிவறைகளை அமைக்க வடமேற்கு திசையில் உள்ள அறை பொருத்தமானதாகும். அட்டாச்டு குளியலறைகக்குள் உள்ள கழிவறையின் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு பார்த்த சுவற்றில் சிறிய ஜன்னல்கள் இருக்குமாறு கட்டமைக்க வேண்டும். கழிவறை இருக்கையை வாஸ்து முறைப்படி எந்த திசையில் அமைக்க வேண்டும், எந்த வடிவத்தில் அமைக்க வேண்டும் ஆகிய விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், நவீன வீடுகளில் அட்டாச்டு பாத்ரூம் கட்டும்பொழுது பாத்ரூம் மற்றும் கழிவறைக்கான இடம், அறையின் தரைமட்டத்தை விட உயரமாக இருக்காமாறு கட்டப்பட வேண்டும். வாஸ்து முறைப்படி அட்டாச்டு பாத்ரூம் அறையின் தரை மட்டத்திற்கு இணையாக இருக்கக் கூடாது.

 

Vastu Shastra tips and guidelines for designing bathrooms and toilets

 

குளியலறையுடன் கூடிய வால்ஷேரிங்

பாத்ரூம் வாஸ்து விதிகளின்படி படுக்கைகளை பாத்ரூமை ஒட்டியோ அல்லது கழிப்பறையை ஒட்டியோ இருக்குமாறு அமைக்கக் கூடாது. மேலும் குளியலறையின் சுவர் வீட்டின் படுக்கையறை அல்லது சமையலறை அல்லது புனிதமாக கருதக்கூடிய பூஜை அறை சுவருடன் இணைத்து ப்கிர்ந்து கட்டப்படக் கூடாது.

இருப்பினும் சிறிய வீட்டில் சுவர் பகிர்வை தவிர்க்க முடியாத பட்சத்தில் பாத்ரூம் சுவருக்கு எதிர்புறமாக படுக்கையை மாற்றி இருக்குமாறு அமைக்கலாம். எதிர்மறை ஆற்றல்கள் பரவாமல் தவிர்ப்பதில் இவ்வாறு அமைப்பது, அவற்றுக்கு ஒரு சிறந்த சவாலாக இருக்கும்.

 

Vastu for toilets

 

பாத்ரூம் வடிகாலுக்கான வாஸ்து

பாத்ரூமில் நீர் வடிகால் மற்றும் கழிவு நீர் வடிகால் ஆகியவை வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும். அத்துடன், குளியலறையில் நீர் வடிந்து செல்ல ஏதுவாக தரை கால இன்ச் அளவு சாய்வாக அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் சாய்வும் மேற்கூறிய திசைகளை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.

 

Vastu Shastra tips and guidelines for designing bathrooms and toilets

 

பாத்ரூம் தரைக்கான வாஸ்து

குளியலறையின் தரை என்பது படுக்கை அறை மற்றும் பிற அறைகளின் தரை மட்டத்திற்கு இணையாக இருக்கக் கூடாது என்று பாத்ரூம் வாஸ்து கூறுகிறது. பாத்ரூம் ஃபுளோர் எப்பொழுதும் தரை மட்டத்திலிருந்து குறைந்தது ஓர் அடி உயரத்தில் இருக்க வேண்டும். குளியலறை தரைக்கு மார்பிள் கல் பயன்படுத்துவது வாஸ்துவில் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், அதற்கு பதிலாக டைல்ஸ் பயன்படுத்தலாம். ஆனால் அதில் கருப்பு அல்லது சிவப்பு நிற டைல்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

வாஸ்து முறைப்படி பாத்ரூம் மற்றும் கழிவறைகளுக்கு சரியான தரை வண்ணங்கள் நீளம், வெள்ளை அல்லது வெளிர் வண்ணங்கள் போன்ற அமைதியான நிறங்களை பயன்படுத்துவோம். வாஸ்து முறைப்படி, மனதிற்கு அமைதியை தரக் கூடிய நிறங்களான நீலம், வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் பாத்ரூம் மற்றும் கழிவறைகளுக்கு ஃபுளோரிங் அமைப்பது சிறந்தது.

 

பாத்ரூம் மேல்நிலை நீர் தொட்டிக்கான வாஸ்து

நகர்ப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் பெரும்பாலான வீடுகளின் மாடிகளில் மேல்நிலை தண்ணீர் தொட்டியை அமைக்கிறார்கள். வாஸ்து முறைப்படி தென்மேற்கு மூலையில் கனமான பொருள்களை வைக்க வேண்டும். அதனால் மேல்நிலைத் தொட்டியை தென்மேற்கு மூலையில் வைப்பது சிறந்தது. தென்மேற்கின் தெற்கு அல்லது மேற்கு திசையை லேசாக நோக்கியபடி தண்ணீர் தொட்டியை நிலைநிறுத்தலாம். இது நிதிப் பிரச்சனைகளை குறைத்து நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். வடகிழக்கு மூலை அல்லது தென்கிழக்கு மூலையில் தண்ணீர் தொட்டியை வைப்பது உகந்ததல்ல என்று வாஸ்து கூறுகிறது.

 

ங்கள் வீட்டில் பாத்ரூம் மற்றும் கழிவறை அமைக்க சிறந்த இடம்

Bathroom and toilet direction as per Vastu

இதையும் வாசிக்க: சிறிய மற்றும் பெரிய வீடுகளுக்கான பாத்ரூம் டிசைன்கள்

 

வாஸ்து விதிமுறைகள்: பாத்ரூமின் எந்த இடத்தில் கழிவறையை அமைக்க வேண்டும்?

கம்மோடு அல்லது வாட்டர் குளோஸ்ட் வைக்கும் இடம்

இதனை பூஜை அறைக்கு மேலோ அல்லது கீழோ அல்லது அக்னியின் இருப்பிடம் அல்லது படுக்கை வைக்கபட்டிருக்கும் இடம் ஆகியவற்றிற்கு அருகில் அமைக்கக் கூடாது. இது வடக்கு – தெற்கு அச்சில் இருக்குமாறு அமைக்கபட வேண்டும். கம்மோட் மேற்கு, தெற்கு அல்லது வடமேற்கு பகுதியில்தான் வைக்கப்பட வேண்டும்.

அமைவிடம்: வடகிழக்கு மூலையில் பாத்ரூம் கட்டலாமா?

வீட்டின் வடகிழக்கு அல்லது வீட்டின் நடு மையம் அல்லது தென்மேற்கு மூலை ஆகிய இடங்களில் கழிவறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி வடகிழக்கு என்பது அத்திசையின் மீது தெய்வீக வழிபாட்டின் ஆதிக்கமுள்ள மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. பாத்ரூமூடன் கூடிய அட்டாச்டு டாய்லெட் அமைப்பை நச்சுத்தன்மைக்கு இணையாக ஒப்பிடலாம். எனவே, இந்த இடத்தில் அவ்வாறு கட்டுவது சிறந்ததல்ல. மேலும், சமையலயறைப் பகுதி அல்லது பூஜை அறைக்கு அருகிலும் கட்டக் கூடாது.

கழிவறை அமைவிடம்: கழிவறையை வடக்கு திசையில் அமைக்கலாமா?

வீட்டின் வடக்கு திசை பகுதியில் எப்போதும் கழிவறையைக் கட்டக் கூடாது. ஏனெனில், இது குபேரனின் திசை என்பதால், வாஸ்து சாஸ்திரத்தின் படி கழிவறையை வடக்கு திசையில் கட்டினால், அது அவ்வீடு முழுவதையும் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

செப்டிக் டேங்க் அமைவிடம்

கழிவறையின் தெற்குப் பகுதியில் செப்டிக் டேங்க் கட்டக் கூடாது. வீட்டின் மேற்கு பகுதி அல்லது வடமேற்கு பகுதியே செப்டிக் டேங்க் அமைப்பதற்கு சிறந்த இடம். அதேபோல் செப்டிக் டேங்க் கட்டிடத்தின் தரைமட்டத்தை விட சற்று உயரமாக இருக்க வேண்டும்.

அட்டாச்டு டாய்லெட் அமைவிடம்

அட்டாச்டு டாய்லெட் தென்கிழக்கு அல்லது தென்மேற்கு பகுதியில் அமைக்கக் கூடாது. தெற்கு பகுதியில் அட்டாச்டு டாய்லெட் கட்டுவது நல்லது.

குழாய்கள் மற்றும் தண்ணீர் தொட்டி அமைவிடம்

தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் தண்ணீர்க் குழாய்களை அமைக்கக் கூடாது. மேலும், இந்த திசையில் தண்ணீரை சேமிக்கும்படியான எந்த ஓர் அமைப்பையும் வைக்கக் கூடாது. கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் தண்ணீர்க் குழாய்கள் வைப்பதற்கும், தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பதற்கும் ஏற்ற திசைகள் ஆகும்.

இதையும் வாசிக்க: உங்கள் பாத்ரூமை ஸ்பா சாங்ட்சுவரி ஆக மாற்றுதல்

வீட்டினுள் பாத்ரூம் மற்றும் கழிப்பறையை வாஸ்து விதிகளின் அடிப்படையில் கட்டும்போது, வாஸ்து சாஸ்திரமானது வீட்டினுள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதோடு மட்டும் அல்லாமல் அவற்றை பின்பற்றி கட்டிடம் கட்டுவது நமது இடத்தை எப்போதும் சுத்தமாகவும் பயனுள்ளதாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது

வாஸ்துவும் கழிவறைகளை படிப்படியாக கட்டுதலும்

ஒரு கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கும்போது வாஸ்துக் கூறுகளையும் கருத்தில் கொண்டு கட்டுவது சிறந்தது. ஆனால், ஒருவேளை வீடு முழுமையாக கட்டமைக்கப்பட்டு, அதாவது பைப் லைன்கள், அலமாரி ஸ்லாப்புகள் முறையாக அமைக்கப்பட்டு, வாஷ்பேஷன்கள், பாத்ரூம்கள் ஏற்கெனவே ஒரு திசையில் அமைக்கப்பட்டு முழுமையாக பயன்பாட்டுக்கு தயாரான பிறகு வாஸ்து விதிகளையும் இணைத்து மாற்றி அமைப்பது என்பது கடினம். இவ்வாறு அமைத்த பின், அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

 

Vastu Shastra tips and guidelines for designing bathrooms and toilets

 

கழிப்பறைகள் மேற்குத் திசையை நோக்கி இருக்கலாமா?

ஒரு கழிப்பறையை  வடமேற்கு திசையில்,  மேற்குப் புறமாக  அல்லது தெற்குபுறமாக அல்லது தென்மேற்குபுறமாக  அல்லது தென்கிழக்குத் திசையில்  கிழக்குப் புறமாக அமைக்கலாம்   இருப்பினும், கழிப்பறை இருக்கைகள்  மேற்கு திசை  நோக்கி இருக்குமாறு வடிவமைக்கக்கூடாது, ஏனெனில் அது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வாஸ்து படி, மேற்கு நோக்கிய வீட்டின் கழிப்பறைகள் வடமேற்கு திசைநோக்கியிருக்குமாறு  வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒரு கழிப்பறையானது மனிதக் கழிவுகளை அகற்றப் பயன்படுத்தப்படுகிறது. இலாபத்தை நோக்கமாகக் கொண்ட அல்லது வணிகத்தை விரிவாக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்ட வணிகர்கள் கழிப்பறையை வீட்டின் மேற்குப்புறமாக அமைப்பதை தவிர்க்க வேண்டும்

 

தவறான இடத்தில் பாத்ரூம்கள், கழிப்பறைகளை அமைப்பதால் ஏற்படும் தாக்கம்

திசை தாக்கம்
வடக்கு செல்வம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும். வரவிருக்கும் வாய்ப்புகளை தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
வடகிழக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக் குறைபாடுகள் வரலாம்.
கிழக்கு செரிமானம் மற்றும் கல்லீரலை பாதித்து உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குடியிருப்பவர்கள் தனது குடியிருப்பு பகுதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்வார்கள்.
தென்கிழக்கு பணப் பிரச்சனைகளோ அல்லது திருமணத்தில் பிரச்சனைகளோ அல்லது பிரசவத்திலோ பிரச்சனைகள் வரலாம்.
தெற்கு சட்ட சிக்கல்கள் அல்லது வியாபாரத்தில் நற்பெயரை இழக்க நேரிடும்.
தென்மேற்கு உறவுகள், உடல்நலம் அல்லது தொழில் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
மேற்கு சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். கனவுகள் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம்
வடமேற்கு சொத்துகளை விற்பதில் சிக்கல்  ஏற்படலாம். ஒருவருக்கு தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்தே ஆதரவு கிடைக்காமல் போகலாம்.

இதையும் வாசிக்க: வீட்டின் கட்டமைப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வாஸ்துவை மேம்படுத்துவது எப்படி?

 

வாஸ்து தோஷ பரிகாரங்கள்: பாத்ரூமில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்குவது எப்படி?

  • வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடி மற்றும் உப்பு ஆகிய இரண்டும் ராகுக்கான காரணிகள் ஆகும். பாத்ரூம் மற்றும் கழிவறை இடத்தில் உப்பு நிறைக்கப்பட்ட கண்ணாடி கப்பை வைக்கவும். ஏனெனில், இது வாஸ்து குறைபாடுகளை அகற்றும் எனக் கூறப்படுகிறது.
  • உங்கள் பாத்ரூமை சுய அக்கறை மற்றும் புத்துணர்ச்சி கொண்ட சொர்க்கமாக மாற்றுங்கள். கழிவறைக் கிண்ணத்தில் சில துளிகள் எலுமிச்சை எண்ணெயை சேர்ப்பதன் மூலம் நறுமணமிக்க புத்துணர்ச்சியான குளியலறையாக பயன்படுத்தலாம். மூலிகை எண்ணெய் அல்லது லாவண்டர் ரோஸ்மேரி அல்லது ஸ்டேஜ் போன்ற மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் ஓய்வு தரக்கூடிய நறுமணங்களை பாத்ரூமில் பரவச் செய்யலாம். குளியலறை இடத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்.
  • பாத்ரூமில் வைக்கப்படும் பொருட்கள் ஒருவரின் நல்வாழ்வு மற்றும் உடல் நலத்தில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்மறை ஆற்றலை தவிர்க்க குளியலறையில் வைக்கப்படும் பொருட்களான அழகு சாதனப் பொருட்கள் கழிவறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். காலாவதியான பொருட்கள் அல்லது பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கக் கூடிய பொருட்கள் இருந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பழைய டூத் பிரஷ்கள் மற்றும் காலியான லோஷன் மற்றும் பெர்ஃப்யூம் பாட்டில்கள் ஆகியவற்றை பாத்ரூமில் வைக்கக் கூடாது. குளியலறையை ஒழுங்கான முறையில் சுத்தமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • உடைந்த சோப்புகள், டாய்லெட் ரோல் ஹோல்டர் ஆகியவற்றை உடனுக்குடன் மாற்றி வைக்க வேண்டும். துடைக்கும் துண்டுகள் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும். கிழிந்து போன துண்டுகளை உடனே மாற்ற வேண்டும்.
  • குளியலறைக் கதவின் வெளிப்புறத்தில் கண்ணாடியை வைப்பது வாஸ்து குறைகளை போக்குவதற்கான சிறந்த வழி ஆகும். எனினும், அது படுக்கையறை அல்லது நுழைவாயில் கதவை கண்ணாடியில் பிரதிபலிக்கும் வண்ணம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • குளியலறைக்கான ஃபிட்டிங்குகளை எளிமையாக வடிவமைக்க வேண்டும். வெள்ளி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் பீங்கான் போன்றவற்றில் அமைப்பது நன்று, தங்கத்தில் ஃபிட்டிங்குகள் அமைக்க கூடாது, ஏனெனில், இது குளியல் அறை அமைப்பிற்கு பொருந்தாது.
  • கழிவறை நீர்த் தொட்டியும் குளிக்கும் பகுதியும் பிரிக்கும் வண்ணம் இடையில் பொதுவாக ஒரு கதவு வைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாவில்லை எனில் தொட்டியின் மூடியை கீழே வைத்து எப்போதும் இந்தக் கதவு மூடிபடியே இருக்குமாறு அமைக்கலாம். அல்லது பாத்ரூம் மற்றும் கழிவறை பகுதியை பிரிப்பதற்கு திரைச்சீலையை பயன்படுத்தலாம்.
  • குளியலறைக் கதவில் அலங்கார சிலைகள் மற்றும் மதச் சின்னங்கள் மற்றும் சிலைகளை வைக்கக் கூடாது.
  • ஒத்திசைவான ஆற்றல் ஓட்டத்திற்கு குளியலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், ஒழுங்கீனம் இல்லாததாகவும், கரை, ஈரப்பதம் அல்லது பூஞ்சை இல்லாததாகவும் பராமரிக்க வேண்டும்.
  • இசை என்பது ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக குளிக்கும்போது இது ஒருவருக்கு ஓய்வெடுக்கும் மனநிலையை உருவாக்குகிறது. எனவே குளியலறையின் தென்கிழக்கு மூலையில் நீங்கள் ஓர் இசை சாதன அமைப்பை அமைத்துக் கொள்வது சிறந்தது. வாஸ்து முறைப்படி இந்தப் பகுதி மின் சாதனங்களுக்கு ஏற்ற திசையாக உள்ளது.

 

வாஸ்து சாஸ்திரமும் பாத்ரூம் தண்ணீர்க் கசிவும்

வாஸ்து சாஸ்திரப்படி தண்ணீர்க் குழாய், ஜெட் அல்லது ஷவர் போன்றவற்றில் இருந்து தண்ணீர் சொட்டுவதும், அவற்றை மூடிய பிறகும் தண்ணீர் வடிந்துகொண்டே இருப்பது, இவை போன்ற பிரச்சனைகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு தண்ணீரை வீணாக்குவது நல்லதல்ல. இவற்றால் தேவையற்ற செலவும் பண நஷ்டமும் ஏற்படும் என்பதால் தண்ணீர் ஒழுகும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

 

வீட்டு அலுவலக பாத்ரூமுக்கான வாஸ்து

வாஸ்து சாஸ்திரப்படி அலுவலகத்தில் சரியான பாத்ரூம் அமைக்க ஏற்ற அமைவிடம் எது என்பது பற்றிய பற்றிய வழிகாட்டுதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் கழிவறை அமைக்க வடமேற்கு அல்லது மேற்கு திசையே சிறந்த இடம் என்று வாஸ்துவில் கூறப்படுகிறது. அலுவலகத்தின் பிரம்ம ஸ்தானமான நடு மையத்தில் அல்லது கட்டிடத்தின் வடக்கு கிழக்கு திசையில் கழிவறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளில் கழிவறைக் கட்டுவதை கட்டாயமாக தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அலுவலக கேபினுடன் கழிவறை இணைக்கப்பட்டிருந்தால், அது அந்த கேபினின் வடகிழக்கு திசையில் அமைக்கக் கூடாது. பாத்ரூமில் கம்மோட் என்பது அறையின் மேற்கு அல்லது வடமேற்கு திசையில்தான் இருக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் ஒருவர் அதனை பயன்படுத்தும்போது வடக்கு அல்லது தெற்கு திசையை நோக்கியவாறு அமருவார். கழிவறைகளை எப்பொழுதும் சுத்தமாகவும் துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருப்பது நல்லது. தினமும் உப்பு கலந்த தண்ணீர் கொண்டு தரையை துடைத்து வருவதன் மூலம் எதிர்மறை ஆற்றலை தடுக்கலாம். அத்துடன், அலுவலகத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும் பெரிதும் இது உதவுகிறது.

 

பாத்ரூம் விளக்குகளுக்கான வாஸ்து

வாஸ்து முறைப்படி பாத்ரூமில் அமைக்கப்படும் விளக்குகள் எப்பொழுதும் அமைதியான சூழலை உருவாக்கும் விதமாக இருக்க வேண்டும். குளியலறை இருட்டாகவும் மங்கலாகவும் இருக்கக் கூடாது. போதுமான அளவுக்கு வெளிச்சம் எப்பொழுதும் இருக்குமாறு அமைக்க வேண்டும். குளியலறையில் ஜன்னல்கள் அமைக்கப்படவில்லை என்றால், இயற்கையான சூரிய ஒளியை உள்வாங்கும் விதமாகவும் ஆரோக்கியமான சூழல் மற்றும் நல்ல ஆற்றலை அதிகரிக்கும் விதமாகவும் மேலே விளக்கு மாட்டும் சாதனத்தில் பல்புகளை பயன்படுத்தலாம். சிறிய குளியலறையில் பொதுவாகவே விளக்குகள் அமைப்பது மிகவும் அவசியமானதாகும். இந்த மாதிரியான பாத்ரூம் சூழ்நிலைகளுக்கு அதன் சீலிங்கின் நடு மையத்தில் அமைக்கப்படும் விளக்கு போதுமானது. பாத்ரூம் மற்றும் கழிவறைகளுக்கு என தனித்தனிப் பிரிவுகளைக் கொண்ட பெரிய குளியலறைகளுக்கு அனைத்து முலைகளிலும் போதுமான அளவு வெளிச்சத்தை ஏற்படுத்த அந்தந்த மூலைகளின் மேலே விளக்கு சாதனங்களை பொருத்தலாம். ஒரு குளியலறையில் விளக்கு அமைப்பு முக்கியமாக கண்ணாடியைச் சுற்றி அமைப்பது மிகவும் அவசியம் ஆகும். இந்தப் பகுதியில் வெளிச்சம் போதுமான அளவு இருக்க வேண்டும் மற்றும் கண் கூச்சம் அல்லது நிழல் விழாமல் இருப்பது போன்று அமைக்க வேண்டும். குளியலறையின் நேர்மறை ஆற்றலை கூட்டும் விதமாக ஒரு சிறிய இரவு விளக்கு ஒன்றை சுவர் ஸ்கோன் மூலம் பொருத்தி அதனை ஒளிரச் செய்யலாம்.

இதையும் வாசிக்க: பாத்ரூம் ஃபால்ஸ் சீலிங் டிசைன்களுக்கான யோசனைகள்

 

பாத்ரூமில் செடிகள் வளர்ப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

குளியலறையில் செடிகளை வைத்து வளர்ப்பதால் ஏற்படும் பசுமை சூழ்நிலை அங்கு உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி விடும். மேலும். பசுமையான செடிகள் ஒருவரின் மனநிலையை உற்சாகப்படுத்தும். குளியலறையானது சுய அக்கறை மற்றும் புத்துணர்ச்சிக்கான இடமாக இருப்பதால் அங்கு செடிகளை வளர்ப்பது மனதிற்கு ஓய்வை தரக் கூடிய சூழலை உருவாக்க பெரிதும் துணைபுரிகிறது. குளியலறையில் கூடுதலாக இடம் இருந்தால் அங்கு நல்ல அதிர்வுகளை தரகக் கூடிய, பசுமைச் சூழலை உருவாக்கும் பல அலங்கார செடிகளை வைத்து வளர்ப்பது சிறந்தது. பாத்ரூமில் நிலவும் சூடான மற்றும் ஈரப்பதமான நிலையைத் தாங்க கூடிய வகையில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பது சிறந்த வழியாகவும். பாம்பு செடி, ZZ செடி, கற்றாழை மற்றும் சிலந்தி செடி போன்றவற்றையும் குளியலறையில் வளர்க்கலாம். அதிக ஈர்ப்பதத்திலும் செழித்து வளர்க்கக் கூடியதும், அங்கு நிலவும் காற்றின் அதிக ஈரப்பதத்தை பொறுத்துக் கொள்ளக்கூடிய செடிகளாக தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறந்தது. குளியலறையில் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில் ஜன்னல்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது அல்லது வாரத்தில் சில முறையாவது சூரிய ஒளி படும் வகையில் செடிகளை குளியலறைக்கு உள்ளேயும் வெளியையும் மாற்றி வைப்பது நல்லது.

 

பாத்ரூம் அலங்காரங்களுக்கான வாஸ்து குறிப்புகள்

குளியலறையில் குடும்பப் புகைப்படமோ அல்லது புத்தர், ஆமை அல்லது யானை உருவங்களையோ வைப்பதை தவிர்க்கலாம். பூக்கள், மரங்கள் புல்வெளிகள் ஆகியவைப் பற்றிய புகைப்படங்களை குளியலறையில் மாட்டிக் கொள்ளலாம். அருவிகள், ஆறுகள் அல்லது மீன்கள் பற்றிய புகைப்படங்களை மாட்டுவதை தவிர்க்க வேண்டும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் வண்ணம் வரையப்பட்ட ஓவியங்களை கழிவறையின் சுவற்றில் மாட்டுவதை தவிர்க்கலாம். அக்னியை குறிக்கும் பொருளான மெழுகுவர்த்தியை குளியலறையில் வைப்பதை தவிர்த்துக் வேண்டும். ஏனெனில், குளியலறையானது அக்னியின் எதிர்த் தன்மையான நீரைக் கொண்டது. குளியல் அறையில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் அலங்காரப் பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாம். கடல் ஓடு அல்லது சிப்பிகளை அலங்காரப் பொருளாக குளியலறையில் வைத்துக் கொள்ளலாம். அலங்கார விளக்குகளை பாத்ரூமில் வைக்கும்பொழுது, கண்ணாடியை சுற்றி உள்ள விளக்குகள் கண்ணாடியில் பட்டு கண்ணைக் கூசும் அளவுக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வாஸ்து முறைப்படி இயற்கை சூழ்நிலையை மனதில் நிலைநிறுத்தும் விதமாக பச்சை வண்ணங்களில் பொருள்களை தேர்ந்தெடுத்துக் அலங்கரிக்கலாம். எடுத்துக்காட்டாக பச்சை நிற நாப்கின்கள், துண்டுகள், மேட்கள் மற்றும் திரைச்சீலைகள் போன்றவை ஆகும்.

 

வாஸ்து முறைப்படி பாத்ரூமை மாடிப்படிக்கட்டுகளுக்கு கீழ் கட்டலாமா?

வாஸ்து முறைப்படி, மாடிப்படிக்கட்டுகளுக்குக் கீழ் உள்ள இடத்தை பொருள்களை சேமித்து வைக்கும் ஸ்டோரேஜ் இடங்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், கட்டுமானத்தின்போது குளியலறையை மாடிப் படிக்கட்டுகளுக்குக் கீழ் எப்பொழுதும் அமைக்கக் கூடாது. மேற்கூறியவை அனைத்தும் குளியலறை கட்டும்போது வீட்டின் உரிமையாளர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகள் ஆகும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வாஸ்து முறைப்படி எந்த இடத்தில் பாத்ரூம் இருக்க வேண்டும்?

வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் பாத்ரூம் இருக்க வேண்டும்.

வாஸ்து முறைப்படி பாத்ரூமுக்கான வண்ணங்கள் யாவை?

அடர் நிறங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி பெயிஜ் மற்றும் கிரீம் போன்ற வெளிர் நிறங்களை குளியலறையில் பயன்படுத்தலாம்.

வாஸ்து முறைப்படி பாத்ரூமில் பயன்படுத்தபடும் பக்கெட் எந்த நிறத்தில் இருக்க வேண்டும்?

வாஸ்து முறைப்படி நீல நிற பக்கெட்டை பாத்ரூமில் பயன்படுத்துவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். மேலும், வாளியில் எப்போதும் தண்ணீர் நிரம்பியுள்ளபடி இருக்க வேண்டும்.

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (1)
  • 😔 (1)

Recent Podcasts

  • கோடைகாலத்திற்கான உட்புற தாவரங்கள்
  • பிரியங்கா சோப்ராவின் குடும்பம் புனேவில் உள்ள பங்களாவை இணை வாழும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது
  • HDFC கேப்பிட்டலில் இருந்து பிராவிடன்ட் ஹவுசிங் ரூ.1,150 கோடி முதலீட்டைப் பெறுகிறது
  • ஒதுக்கீடு கடிதம், விற்பனை ஒப்பந்தம் பார்க்கிங் விவரங்கள் இருக்க வேண்டும்: மஹாரேரா
  • சுமதுரா குழுமம் பெங்களூருவில் 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துகிறது
  • Casagrand சென்னையில் பிரெஞ்சு கருப்பொருள் குடியிருப்பு சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது