சமையல் அறை வாஸ்து வழிகாட்டுதல்கள்: வாஸ்து முறைப்படி சரியான சமையலறை திசையை அறிக

வாஸ்து முறைப்படி சமையல் அறையே வீட்டில் வசிப்பவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை சமைத்து வழங்கக்கூடிய முக்கிய இடமாகும். வீட்டின் இன்றியமையாத இடமாகிய சமையல் அறையில், வாஸ்து சாஸ்திரத்தின்படி செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.

இன்றைய நவீன வீட்டில் சமையல் அறையே அனைத்து செயல்பாட்டின் மையப் புள்ளியாக உள்ளது. லேட்டஸ்ட் கேட்ஜெட்டுகள் உடனான இன்றைய சமையலறைகள்தான் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கவும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நன்கு பழகவும் உகந்த இடமாக நன்கு வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

Table of Contents

அக்னி தேவன் அல்லது நெருப்புக் கடவுளின் இருப்பிடமான தென்கிழக்கு மூலையே வாஸ்து முறைப்படி, வீட்டின் சமையல் அறைக்கு உகந்த திசையாகும். எனவே, வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி, மேலே சொல்லப்பட்டுள்ள திசையில் சமையல் அறை அமைப்பது சிறந்ததாகும்.

 

சமையலறை வாஸ்து திசை

பிரபஞ்சத்தின் இயற்கை விதிகளுக்கு ஒத்திசைவாக, கட்டுமானம் மற்றும் அதன் வடிவமைப்பை பரிந்துரைக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் திறந்த மற்றும் மூடிய சமையல் அறைக்கான சில வழிகாட்டுதல்கள் உள்ளன. இவை வீட்டிற்கு சரியான வகையில் நேர்மறை ஆற்றல்களை அளிக்கும் விதமாக இருக்கும். குடியிருப்போரின் ஆரோக்கியம் மற்றும் பல நன்மைகளுக்கு சமையல் அறையின் சுற்றுப்புறம் மிகவும் முக்கியமானது என வாஸ்து சாஸ்திரம் சொல்வதாக ஜோதிட நிபுணர் ஜெயஸ்ரீ தமனி விவரிக்கிறார்.

“வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆரோக்கியமே செல்வம் என்பதற்கு இணங்க சமையல் அறையில் சரியான நிலையில், சரியான இடத்தில், சரியான திசையில் பொருட்களை வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. அக்னியின் இருப்பிடமான சமையலறையில் வீட்டில் நிலவும் எவ்வித ஆற்றலும் தூய்மையாக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு அமைந்திருக்கும் சமையலறையில் சமைக்கப்படும் உணவானது நமது உடலுக்கு ஊட்டமளிப்பதாகவும், எரிபொருளாகவும் செயல்படுகிறது. எனவே, இந்த அக்னி இருப்பிடம் சரியான திசையில் வைக்கப்பட வேண்டும். சமையல் அறைகள் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருக்கக் கூடாது” என்று ஜெயஸ்ரீ தமனி விளக்குகிறார்.

வாஸ்து முறைப்படி சமையல் அறைக்கு ஏற்ற சிறந்த இடத்தை தேர்வு செய்யும்போது அதன் அளவு மிகவும் முக்கியம். அது மிகவும் சிறியதாக இருக்கக் கூடாது. சமைல் அறைக்கான இடம் 80 சதுர அடி அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். சமையலறை மிகவும் சிறியதாக இருந்தால், அது வீட்டில் வசிக்கும் பெண்களின் மீது ஒருவித எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

வாஸ்து முறைப்படி கிழக்கு நோக்கிய வீட்டிற்கு தென் கிழக்கு திசையே சமையலறைக்கு ஏற்ற திசையாகும். ஒருவேளை சமையல் அறைக்கு இந்த திசையில் கட்டுமானம் அமைக்க முடியவில்லை எனில், நாம் வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கலாம். ஆனால் வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் சமையல் அறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கு பார்த்த வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் அமைக்கலாம்.

இதையும் வாசிக்க: வாடகை வீட்டிற்கு மாறும்போது கருத்தில் கொள்ளவேண்டிய வாஸ்து குறிப்புகள்

 

சமையலறை வாஸ்துவின் முக்கியத்துவம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டின் கட்டமைப்பும், அதன் வடிவமைப்பும் வீட்டில் நிலவும் ஆற்றல்களின் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் நிலவும் ஆற்றலின் மீது உயிரினங்கள் முதல் உயிரற்ற அனைத்து பொருட்களும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால், வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி ஆற்றலின் நேர்மறை தன்மையை உறுதிப்படுத்தவும், எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் நாம் வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியமாகிறது.

ஒரு வீட்டின் சமையல் அறையே நமக்கு ஆற்றலை கொடுக்கும் முக்கிய இடமாக உள்ளது. இங்குதான் வீட்டில் வசிப்போருக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கக் கூடிய உணவும் சமைக்கப்படுகிறது. தவறான திசையில் சமையல் அறையை வடிவமைப்பது வீட்டில் நிலவும் ஆற்றலின் மீது ஒருவித ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். இது வீட்டில் வசிப்போரின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வாஸ்து முறைப்படி சமையல் அறைக்கு சரியான திசையை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.

இதையும் வாசிக்க: இந்தியாவில் சிறந்த தண்ணீர்த் தொட்டியை எங்கு வாங்குவது?

 

வாஸ்து முறைப்படி சமையலறை திசை

Kitchen Vastu guidelines: Know the right kitchen direction as per Vastu

வாஸ்து முறைப்படி பஞ்சபூதங்களான நிலம், ஆகாயம், காற்று, நீர் மற்றும் நெருப்பு ஆகியவை ஒரு வீட்டில் சமநிலையில் இருக்க வேண்டும். “ஆற்றலையும் வலிமையையும் குறிக்கக் கூடிய நெருப்பு அல்லது அக்னி தேவன் ஆனது சூரியனுடன் தொடர்புடையது. வாஸ்து முறைப்படி அக்னிக்கான மூலங்களை தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது. எனவே, சமையல் அறை என்பது வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். மேலும், கிழக்கு திசை நோக்கியவாறு சமைக்க வேண்டும். வாஸ்து முறைப்படி கிழக்கு திசைக்கு மாற்றாக நடுநிலை திசையான மேற்கு திசையை நோக்கியவாறும் சமைக்கலாம். சமையலறையின் வடமேற்கு திசையில் சிங்க் தொட்டி வைப்பது சிறந்ததாகும். தண்ணீர் பானைகள் மற்றும் வாட்டர் ப்யூரிஃபையர் கருவிகளை வடகிழக்கு திசையில் வைப்பது சிறந்தது” என மும்பையைச் சேர்ந்த வாஸ்து பிளஸ் நிறுவனர் நிதின் பர்மர் கூறுகிறார்.

சுத்தமான, விசாலமான மற்றும் ஒழுங்காக அடுக்கப்பட்ட சமையலறை நல்ல ஆரோக்கியத்திற்கும் செல்வ செழிப்புக்கு மிகவும் அவசியமாகும். சமையலறையில் கண்டிப்பாக ஜன்னல்கள் இருக்க வேண்டும். அத்துடன், நல்ல காற்றோட்டமும் நல்ல வெளிச்சமும் போதுமான அளவு இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். சமைக்கும்போது பொருள்கள் சிதறுவதை தவிர்க்குமாறும், அதிகபட்ச இட வசதியுடன் இருக்குமாறும் சமையலறையின் வடிவமைப்பு எளிமையான மற்றும் தெளிவான வரையறைகளுடன் வடிவமைக்கப்பட வேண்டும். சமையலறை பொருட்களை வைக்கும் சேமிப்பு இடமானது சமையலறையின் மேற்கு மற்றும் தெற்கு சுவர்களின் மீது அமைக்க வேண்டும்.

“தண்ணீர் பைப் அல்லது சமையலறையில் உள்ள ஏதேனும் பைப்பில் நீர்க்கசிவு ஏற்படுவது ஒருவர் வாழ்வில் இருந்து செல்வம் குறைவதற்கான அறிகுறியைக் காட்டுகிறது. ஆகையால், இத்தண்ணீர் கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும். வீட்டின் செல்வ வளத்திற்காக அரிசி ஜாடி எப்பொழுதும் பாதிக்கு மேல் நிரம்பியதாக இருக்க வேண்டும். பழைய செய்தித்தாள்கள் மீது ஸ்டோரேஜ் ஜாடிகளை வைப்பதைத் தவிர்க்கலாம், சமையலறையின் வடகிழக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டாம். தலைக்கு மேலே பீம் வைத்து கட்டப்பட்ட சமையலறையில் சமைக்க வேண்டாம்” என்கிறார் பர்மர்.

இதையும் வாசிக்க: புதிய அடுக்குமாடி குடியிருப்பை தேர்ந்தெடுப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

 

சமையல் அறை காற்றோட்டம் மற்றும் ஜன்னல்களுக்கான வாஸ்து

சமையல் அறையில் சரியான விதத்தில் காற்றோட்ட வசதி அமைக்கப்படாமல் இருந்தால், அது வீட்டில் வசிக்கும் பெண்கள் அல்லது சமையல் அறையில் பெரும்பாலும் சமைப்பவருக்கு பல உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வாஸ்து முறைப்படி சமையல் அறையில் சரியான நிலையில் ஜன்னல்களை வைப்பது சமையல் அறையின் நேர்மறைச் சூழ்நிலை நிலவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான நிலையில் அமைக்கப்பட்ட ஜன்னல் அல்லது காற்றை வெளியேற்றக் கூடிய எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது நவீன புகைப் போக்கிகள் போன்றவை சமையலறையில் சமைக்கும்போது ஏற்படும் புகைகள் மற்றும் காற்றை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு மிகவும் முக்கியமான கருவிகளாக உள்ளன. நல்ல காற்றோட்டம் மற்றும் நல்ல வெளிச்சம் ஆகியவை உணவை நல்ல முறையில் சமைப்பதற்கு மிகவும் உதவுகிறது.

வாஸ்து முறைப்படி சமையலறையில் ஜன்னல்கள் வைப்பதற்கு சிறந்த திசை கிழக்காகும். எக்ஸாஸ்ட் ஃபேனும் கிழக்கில் இருக்கும்படி அமைக்கலாம்.

இதையும் வாசிக்க: கிழக்கு பார்த்த வீட்டுக்கான சமையலறை வாஸ்து

 

சமையல் அறைக்கான வாஸ்து: திறந்த நிலை சமையல் அறைக்கான குறிப்புகள்

பல இந்திய குடும்பங்கள், குறிப்பாக பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து இந்தியாவிற்கு திரும்பிய குடும்பங்கள் பெரும்பாலும் ஓபன் கிச்சன் அமைப்புகளையே விரும்புகிறார்கள். வாஸ்து முறைப்படி சமையலறைக்கான இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ஓபன் கிச்சன் வடிவமைப்புக்கான வாஸ்துக் குறிப்புகளை கருத்தில் கொள்வது நல்லது:

  • திறந்த நிலை சமையலறைக்கான சிறந்த திசையாக தென்கிழக்கு திசை உள்ளது. ஏனெனில் இந்த இரு திசைகளிலும் (தெற்கு/ கிழக்கு) அக்னி தேவனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
  • வடக்கு திசையில் திறந்தநிலை சமையலறை அமைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில், இது தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் செல்வ வளத்தை பாதிக்கும்.
  • மேற்கு திசையும் திறந்தநிலை சமையலறை அமைப்பதற்கு ஏதுவான திசையாக உள்ளது. வாஸ்து முறைப்படி மேற்கு திசையில் திறந்த நிலை சமையலறை அமைப்பது நல்ல செல்வ வளத்தையும் உடல் நலத்தையும் ஈட்டித் தரும்.

இதையும் வாசிக்க: வாஸ்து முறைப்படி சமையலறைக்கு சரியான நிறத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

 

வாஸ்து முறைப்படி சமையலறை பொருட்கள் மற்றும் அவற்றின் திசைகள்

வகை ஏதுவான திசை
சமையலறை நுழைவாயில் வடக்கு, கிழக்கு, அல்லது மேற்கு
கேஸ் சிலிண்டர் தென்கிழக்கு
சமையல் எரிவாயு தென்கிழக்கு மூலை
குளிர்சாதன பெட்டி தென்கிழக்கு, தெற்கு, வடக்கு அல்லது மேற்கு
கருவிகள் (எ.கா. ஹீட்டர்கள், கன்வென்ஷனல் அடுப்புகள், மைக்ரோவேவ் ஓவன்) தென்கிழக்கு அல்லது தெற்கு
ஸ்டோரேஜ் அடுக்குகள் மேற்கு அல்லது தெற்கு உள்ள சுவர்
சிங்க் தொட்டி வடகிழக்கு மூலை
குடிக்கும் தண்ணீர் வடகிழக்கு
ஜன்னல்கள் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் கிழக்கு திசை
கடிகாரம் தெற்கு அல்லது தென்மேற்கு சுவர்

 

வாஸ்து முறைப்படி சமையல் அறை நிறங்கள்

வாஸ்து முறைப்படி சமையலறை சுவருக்கு ஏற்ற நிறங்கள் சிறப்பியல்புகள்
வெள்ளை சுத்தம் மற்றும் தூய்மை
மஞ்சள் மகிழ்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றல்
வெளிர் நிறங்கள் அன்பு மற்றும் அரவணைப்பு
இளம் பழுப்பு நிறம் நிலைத்தன்மை
சமையலறையில் அமைக்கப்படும் அலமாரிகள், தளங்கள் மற்றும் அடுக்குகளுக்கான நிறங்கள்
எலுமிச்சை மஞ்சள், ஆரஞ்சு அல்லது பச்சை நிற அலமாரிகள் புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம்
செராமிக் டைல்ஸ், மொசைக் அல்லது மார்பில் தளங்கள் நேர்மறை ஆற்றல்
குவாட்ஸ் அல்லது கிரானைட் மேடைகள் அல்லது அடுக்குகள்/ஸ்லாப்கள் சமநிலையான சுற்றுப்புறம்

 

சமையலறை என்பது தூய்மையைக் குறிப்பதாகும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையல் அறைக்கு வெள்ளை நிறம் ஏற்றது. ஆனால், அதனை அதிக அளவில் அடர்த்தியாகப் பயன்படுத்தக் கூடாது. சமையலறைக்கு சிவப்பு நிறத்தை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அது சமநிலையற்ற ஆற்றலை உருவாக்கக் கூடியது. அதேபோல், அடர் நிறங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இது மன அழுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும். மற்ற நிறங்களான பச்சை, எலுமிச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் சமையலறைக்கு உகந்த வண்ணங்கள் ஆகும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கும் விதமாகவும், அக்னி தேவனாகிய நெருப்பின் வண்ணத்தையும் கொண்டுள்ளது. சமையலறையில் சமநிலையான சுற்றுப்புறத்தை ஏற்படுத்த சமையலறையின் சீலிங்கில் வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாம். கருப்பு, சாம்பல் மற்றும் நீல நிற வண்ணங்களை சமையலறையில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். “ஒருவேளை வீட்டில் தனியாக பூஜை அறை இல்லையென்றால், வீட்டில் வசிப்போர் சைவ உணவை மட்டுமே சமைக்கும் பட்சத்தில் சமையலறையின் வடக்கு அல்லது கிழக்கு மூலையில் குட்டி கோயில் போன்று ஒன்றை அமைக்கலாம். ஒருவேளை சமையலறையில் அசைவ உணவு சமைப்பவராக இருந்தால் அங்கு குட்டி கோயில் அமைக்காமல் இருப்பது நல்லது” என்று தாமணி கூறுகிறார்.

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி சமையல் அடுப்புக்கு இடது அல்லது வலது பக்கம் குட்டி கோயில் வைக்கலாம். கோயிலுக்கு எதிரே சமையல் அடுப்பு வைப்பதை தவிர்க்கலாம். மேலும், வாஸ்து முறைப்படி சமையலறையின் சிங்க் மற்றும் ஸ்டவ் ஆகியவை கோயிலுக்கு கீழேயோ அல்லது பக்கத்திலோ இருக்கக் கூடாது. கருப்பு வண்ணத்தை சமையலறையில் பயன்படுத்தக் கூடாது. வெளிர் நிற வண்ணங்களை பயன்படுத்துவது சிறந்தது.

இதையும் வாசிக்க: டைனிங் மற்றும் லிவிங் அறைகளுக்கான வாஸ்து சாஸ்திர குறிப்புகள்:

 

சமையலறை ஸ்லாப்புக்கான வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை ஸ்லாப்பை (slab) கிரானைட்க்கு பதிலாக கல் அல்லது மார்பில் கொண்டு, குறிப்பாக கருப்பு நிறத்தில் பயன்படுத்தலாம் சமையலறையில் அமைக்கப்படும் ஸ்லாபின்நிறம் அந்த சமையலறை எந்த திசையில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.ஒருவேளை சமையலறை கிழக்கு திசை நோக்கி இருந்தால் பச்சை அல்லது பழுப்பு நிற ஸ்லாப்புகளை பயன்படுத்துவது சிறந்தது. வடகிழக்கில் அமைந்துள்ள சமையலறைக்கு மஞ்சள் நிற ஸ்லாப் சிறந்தது. வாஸ்து விதிகளின்படி தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ள சமையலறைக்கு பழுப்பு, மெரூன் அல்லது பச்சை நிற ஸ்லாப்புகள் மிகவும் சிறந்தது.மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ள சமையலறைக்கு சாம்பல் அல்லது மஞ்சள் வண்ண ஸ்லாப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது. வடக்கு திசையில் அமைந்துள்ள சமையலறைக்கு பச்சை நிற ஸ்லாப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது இருப்பினும் வட திசையில் சமையலறை அமைப்பதை தவிர்க்கலாம்.

 

சமையல் அறை வாஸ்து: செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்

சமையலறை வாஸ்து: செய்யக் கூடாதவை

 

  • கழிப்பறைக்கு கீழோ அல்லது மேலோ நேரடியாக சமையலறையை அமைக்கக் கூடாது.
  • வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி சமையலறையானது வீட்டின் பிரதான நுழைவாயிலை பார்த்தபடி அமைக்கக் கூடாது.
  • சமையல் அறையில் மருந்துகளை வைக்கக் கூடாது.
  • பழைய செய்தித்தாள்கள், கிழிந்த துணிகள் மற்றும் தேவையற்ற பொருட்களை சமையல் அறையில் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • வாஸ்து முறைப்படி உப்பை ஸ்டீல் அல்லது இரும்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கக் கூடாது.
  • வாஷ்பேசின் மற்றும் சமைக்கும் இடம் இரண்டும் ஒரே மேடையில் அல்லது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கக் கூடாது. பஞ்சபூதங்களில் நெருப்பும் நீரும் எதிரெதிர் தன்மை கொண்டவை. எனவே இவை தம்பதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் மற்றும் பிரிவினைகளை உருவாக்கலாம்.
  • வாஸ்து சாஸ்திரப்படி ஷூ ரேக்குகளை சமையல் அறைக்குப் பக்கத்தில் வைக்கக் கூடாது. சமையல் அறையில் ஷூக்கள் அணிவதை தவிர்க்கலாம். காலணிகள் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கு தனியாக ஒரு ஜோடி வைத்துக் கொள்ளலாம்.
  • வாஸ்து முறைப்படி சமையலறைக்கு மேல் தண்ணீர் தொட்டி இருந்தால், அது வடக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கக் கூடாது. வாஸ்துவில் கூறியுள்ளது போல் சமையலறை தாண்டி மேற்கு திசையை நோக்கியவாறு தண்ணீர் தொட்டியை வைக்கலாம்.

 

சமையலறை வாஸ்து: செய்யக் கூடியவை

  • சமையலறையை தவறாமல் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். சமையலறை தரையை நன்கு துடைத்து தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். துண்டாக்கப்பட்ட அல்லது உடைந்த கோப்பைகள், பாத்திரங்கள் அல்லது வாணலிகளை வைத்திருக்கக் கூடாது. தினமும் இரவு உறங்கப் போவதற்கு முன்பு எப்போதும் சமையலறையை சுத்தம் செய்து பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும்.
  • குப்பைத் தொட்டி எப்போதும் மூடி இருக்க வேண்டும் மற்றும் அது அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • சமையலறையின் ஜன்னல் பகுதியில் துளசி, புதினா, மூங்கில் அல்லது மற்ற ஏதேனும் மூலிகை செடிகளை வைக்கலாம். முட்கள் நிறைந்த செடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அச்சூழ்நிலைக்கு தேவையற்ற மன அழுத்தத்தை கொடுக்கும்.
  • அரிசி ஜாடியில் அன்னபூர்ணா தேவியின் சிறிய சிலை ஒன்றை வைக்கலாம். மேலும், அன்னபூர்ணா தேவியின் படம் அல்லது பழங்கள் போட்ட படங்களை சமையலறையில் அதிக அளவில் இருக்குமாறும் வைக்கலாம்.
  • பழங்கள் நிறைந்த கூடையை சமையலறையின் வட திசையில் வைப்பது நிறைவைக் குறிக்கிறது.
  • சமையலறையில் எப்போதும் உப்பு, மஞ்சள், அரிசி மற்றும் மாவு இருக்க வேண்டும். மேலும், இவை தீரும் முன்பே நிரப்பப்பட வேண்டும் என்பது வாஸ்துவில் முக்கியமாக கூறப்பட்டுள்ளது. உப்பைக் கண்ணாடி ஜாடி அல்லது பானையில் வைக்கலாம். இது வீட்டில் அமைதியை நிலைநாட்டவும் நிதி பிரச்சனைகளை தீர்க்கவும் உதவியாக உள்ளது.
  • சமையலறையில் நேர்மறை ஆற்றல் நிலவ வேண்டுமெனில், அந்த அறை முழுவதும் நல்ல மணம் நிரம்பியதாக இருக்க வேண்டும். செயற்கை அல்லாத இயற்கை ஏர் ஃபிரஷ்னராக எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் அல்லது பட்டை ஆகியவற்றை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம்.
  • சமையலறை கேஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும். ஏனெனில் இது பணப்புழக்கத்தை அதிகப்படுத்த உதவும்.
  • சமையலறையில் ஜன்னல் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற ஏதுவாக இருக்கும். மேலும், எக்ஸாஸ்ட் ஃபேன் ஜன்னலுக்கு மேலே கிழக்கு திசையை நோக்கியவாறு வைப்பது எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவும்.
  • வாஸ்து முறைப்படி சமையலறையின் நுழைவாயில் அல்லது கதவு கண்டிப்பாக கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
  • வாஸ்து முறைப்படி சமையல் அறையை வடிவமைக்கும்போது சமையலறைக் கதவு கடிகார திசையில் திறப்பது போன்று அமைக்க வேண்டும்.
  • நெருப்பை குறிக்கக் கூடிய கேஸ் அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், டோஸ்டர்கள் போன்ற சமையலறை உபயோகப் பொருட்கள் அனைத்தும் தென்கிழக்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும்.
  • நீங்கள் குளிர்சாதன பெட்டியை சமையல் அறையில் வைக்க விரும்பினால் வாஸ்து முறைப்படி, அதை தென்மேற்கு திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும், இது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளைக் கடந்து வர உதவியாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் நிறைய பொருட்களை அடைத்து வைக்காமல், நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு சுத்தமாக இருக்குமாறு வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டிக்குள் தண்ணீர் பாட்டில் வைக்கும் பழக்கம் இருப்பின், தினமும் புது தண்ணீரை பாட்டிலில் நிரப்ப வேண்டும்.
  • தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தானியங்களை சேமித்து வைக்கும் சம்படங்களை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். வாஸ்து முறைப்படி இவ்வாறு அமைப்பது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை அளிக்கும். காலியான சம்படங்களை அகற்ற வேண்டும் அல்லது அதில் ஏதேனும் தானியங்களை நிரப்ப வேண்டும். காலி பாத்திர ஜாடிகளை கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில்தான் வைக்க வேண்டும்.
  • சமையலறையில் தொடர்ந்து நேர்மறை ஆற்றல் நிலவ வேண்டும் எனில், சமையலறை அலமாரிகள், ட்ராயர்கள் மற்றும் மற்ற ஸ்டோரேஜ் பகுதிகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பழைய உணவு பாக்கெட்டுகள், பழைய பொருட்கள், உடைந்த தட்டுகள் அல்லது வேலை செய்யாத சமையல் கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
  • தென்கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு நடுவில் நெய் மற்றும் சமையல் எண்ணெயை பாத்திரத்தை வைப்பது என்பது சமையலறையில் எப்போதும் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
  • வாஸ்து முறைப்படி கத்திகள் மற்றும் கத்தரிக்கோல்கள் தனியாக கவரில் வைக்கப்பட வேண்டும் அல்லது செல்பில் வைக்க வேண்டும். அதனை வெளியில் வைப்பதால் குடும்பம் மற்றும் நண்பர்களிடையே கசப்பான உறவு நிலைக்கு வழி வகுக்கும். ஊறுகாயை எப்போதும் மூடிய நிலையில் உள்ள இடத்திலே வைக்க வேண்டும். இது கசப்பான உறவு நிலையை தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
  • சமையலறையில் தண்ணீர் மற்றும் நெருப்பை சமநிலையில் இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். வாஷ்பேஷன்கள், தண்ணீர் பைப்புகள், வாஷிங் மெஷின் மற்றும் சமையலறை வடிகால் ஆகியவை அனைத்தும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: வீட்டின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் வீட்டின் வாஸ்துவை மேம்படுத்துவது எப்படி?

 

 

வாஸ்து முறைப்படி சமையலறை அலமாரிகள் மற்றும் அவற்றின் திசைகள்

எந்த சமையல் அறை என்றாலும் சமையலறை அலமாரிகளானது வாஸ்து முறைப்படி வீட்டின் ஆற்றல் ஓட்டத்தில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். சமையல் அறையின் தெற்கு மற்றும் மேற்கு திசையை நோக்கிய சுவர்களில் அதிகபட்ச அலமாரிகளை அமைக்கலாம். சமையலறை அலமாரிக்கு மேலே உள்ள இடத்தை திறந்தவெளியாக விடுவது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியதாக அமையும். அலமாரிகள் சீலிங் வரை உயர்த்தப்படாமல் இருந்தால், அவற்றுக்கு மேலே செடிகள் அல்லது அழகான பொருட்களை வைக்கலாம்.

கிழக்கு திசையில் அமைக்கப்படும் சமையலறை அலமாரிகளுக்கு ஏற்ற வண்ணம் பச்சை மற்றும் பழுப்பு நிறம்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் அமைக்கப்படும் அலமாரிகளுக்கு சிவப்பு, மெரூன், பிங்க், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறங்கள் சிறந்தது.

மேற்கு திசையில் அமைக்கப்படும் அலமாரிகளுக்கு சில்வர் மற்றும் வெள்ளை நிறம் ஏதுவானதாக இருக்கும்.

வடக்கில் அமைக்கப்படும் சமையலறைக்கு நீலம், பச்சை மற்றும் பழுப்பு நிறம் ஏதுவானது.

 

சமையல் அறை வடிவமைப்பு மற்றும் அலங்கரிப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

  • சமையல் அறையை முழுவதும் வெள்ளை நிறத்தில் அமைக்க கூடாது. ஏனெனில், இது சுற்றுப்புறத்தை மந்தமாகவும் குளிராகவும் உணர வைக்கும். சமையலறை எப்போதும் மற்றவரை வரவேற்கத்தக்க விதத்தில் இருக்க வேண்டும்.
  • அடர் நிறங்களில் அதிக அளவு அலமாரிகளை அமைக்க வேண்டாம். அது ஒருவித தனிமை பயத்தை ஏற்படுத்தி ஆதிக்கத்தை செலுத்துவதாக இருக்கும்.
  • வாஸ்து விதிகளின்படி சமையலறை மேடைகளை அமைக்க வேண்டும். சமையலறை வாஸ்து முறைப்படி மேடைகளை சமையலறையின் வடக்கு திசையில் உள்ள சுவருடன் இணைக்காமல், அதனை தெற்கு திசையில் உள்ள சுவரை நோக்கி நீட்டிக்கலாம்.
  • சமையல் அறையில் பரண் தேவையெனில், அதனை வடக்கு அல்லது தெற்கு திசையில் உள்ள சுவரின் மீது அமைக்கலாம். தவிர, கிழக்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரின் மீது அமைக்கக் கூடாது.
  • வாஸ்து முறைப்படி தண்ணீர் நிரம்பிய பானையை சமையலறையில் வைப்பது பணப் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். பெரிய மண்பானை இல்லை எனினும் சிறிய பானை ஒன்றை பயன்படுத்தலாம். அப்பானையில் தண்ணீர் நிரப்பி சமையலறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
  • நீங்கள் காலத்திற்கு ஏற்றவாறு சமையலறையை வடிவமைக்க விரும்பவில்லை எனில், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏனெனில், அது விரைவில் பழைய டிரெண்டாக மாற வாய்ப்புள்ளது.
  • சிறிய சமையலறையில் அடர் வண்ணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அது சமையலறையை மேலும் சிறியதாக்கிக் காட்டும்.
  • உயரமான அலமாரிகள் மற்றும் உயரம் குறைந்த சீலிங் ஆகியவை இரண்டும் பொருத்தமாகாது. ஏனெனில், இது ஒன்றை மற்றொன்று அளவில் சிறியதாக்கி காட்டும்.
  • வாஸ்து முறைப்படி சமையலறை அடுப்பு சரியான திசையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அடுப்பு மற்றும் சிங்க் இரண்டும் அருகருகே இருந்தால் அவற்றின் நடுவே போன் சைனா குவளையை வாஸ்து பரிகாரமாக வைக்கலாம்.
  • இயற்கையான வெளிச்சத்திற்கு ஜன்னல் கதவுகள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி திறக்குமாறு ஜன்னல்களை அமைக்க வேண்டும்.
  • சமையலறை தரையை மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், சாக்லேட் அல்லது சிவப்பு நிறத்தில் அமைக்கலாம்.
  • வாஸ்து முறைப்படி கேஸ் பர்னர் சமையலறையின் பிரதானக் கதவை நோக்கியபடி இல்லாதவாறு சமையலறையை வடிவமைக்க வேண்டும்.
  • சமையலறையில் துடைப்பத்தை வைப்பதை தவிர்க்கவும். அத்துடன், அதனை நிமிர்த்து வைக்காமல் தரையில் இருக்குமாறு வைக்க வேண்டும்.

 

வாஸ்து முறைப்படி எந்த திசையை நோக்கியபடி சமைப்பது சிறந்தது?

சமைக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு சமைக்க வேண்டும். ஆகையால், சமையலறை பொருட்களான கேஸ் ஸ்டவ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சமைக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக மேற்கு திசையை நோக்கியவாரும் சமைக்கலாம். ஒருவேளை சமையல் அடுப்பிற்கு அருகிலேயே சிங்க்கும் அமைக்கப்பட்டு இருந்தால் அவற்றிற்கு இடையே போன் சைனா குவளையை வாஸ்து பரிகாரமாக வைக்கலாம்.

 

வீட்டில் வாஸ்து தோஷங்களை நீக்க சமையலறை வாஸ்து பரிகாரங்கள்

சமையலறை வாஸ்து தோஷத்திற்கான சில எளிய வாஸ்து பரிகார முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போதும் அதனை செய்வதற்கு முன் வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

  • வாஸ்து முறைப்படி சமையலறையானது வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்தால், அடுப்பின் மீது ஜூபிடர் கிரிஸ்டல் பிரமீடை வைப்பதன் மூலம் அந்த அறையில் நிலவும் எதிர்மறை ஆற்றல்களை குறைத்து வாஸ்து தோஷத்தை நீக்கலாம்.
  • ஒருவேளை வாஸ்து சாஸ்திரத்தின்படி அடுப்பானது சரியான இடத்தில் அமைக்கப்படவில்லை எனில், அடுப்பிற்கு எதிர்ப்புறம் உள்ள சுவரில் மூன்று சிங்க பிரமிடுகளை ஒட்டலாம்.
  • ஒருவேளை சமையலறை மேடை கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டு, அதனை மாற்ற முடியாத பட்சத்தில், வாஸ்து முறைப்படி அடுப்பிற்கு அடியில் வெள்ளை நிற டைல்ஸ்களை ஒட்டலாம்.
  • வீட்டின் பிரதான கதவை நோக்கியவாறு சமையலறை அமைக்கப்படும்பொழுது வாஸ்து குறைபாடு ஏற்படும் என்பதால் பிரதான கதவுக்கும் சமையலறை கதவுக்கும் இடையில் 50 மில்லி மீட்டர் அளவுள்ள கிறிஸ்டல் ஒன்றை சீலிங்கில் தொங்கவிடலாம்.
  • தண்ணீர் தொட்டியை தவறான திசையில் வைப்பதால் ஏற்படும் வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு 50 மில்லி மீட்டர் அளவுள்ள கிறிஸ்டல் ஒன்றை சமையலறை சீலிங்கின் நான்கு முனைகளிலும் தொங்கவிடலாம்.
  • ஒருவேளை சமையலறையில் தென்கிழக்கு திசையைத் தவிர மற்ற திசைகளில் எலக்ட்ரிக்கல் பொருட்களை வைத்திருந்தால் வாஸ்து முறைப்படி மார்ஸ் கிரிஸ்டல் பிரமிட் ஒன்றை அப்பொருட்களின் அருகில் ஒட்டலாம்.
  • ஒருவேளை சமையலறையானது வாஸ்துவிற்கு எதிராக வடகிழக்கு திசையில் அமைக்கப்பட்டு இருந்தால், சமையலறை முழுவதும் மஞ்சள் நிற பெயின்ட் அடிப்பதன் மூலம் வாஸ்து தோஷங்களை குறைக்கலாம்.
  • சமையலறை மற்றும் கழிப்பறைக்கு இடையே பொதுவாக சுவர் அமைக்கப்பட்டிருந்தால், அச்சுவரின் இருபுறங்களிலும் ஜிங்க் உலோகத்தால் ஆன நயன் பிரமிடை ஒட்டுவதன் மூலம் வாஸ்து தோஷத்தால் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை குறைக்கலாம்.
  • ஓர் எளிய வாஸ்து பரிகாரமாக, சமையலறை சிங்கின் மீது குட்டி கோயில் அல்லது பூஜை அறை வைக்கப்பட்டிருந்தால், அதில் கிரிஸ்டல் மற்றும் மஞ்சள் நிற பல்பை மாட்டி வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யலாம்.
  • வாஸ்து தோஷத்தை சரிசெய்ய சிறிதளவு கல் உப்பை கிண்ணங்களில் வைக்கலாம். இது அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் உறிஞ்சும் தன்மைக் கொண்டது. உப்பை தவறாமல் அடிக்கடி மாற்ற வேண்டும்.
  • சமையலறை கதவு சமையல் செய்பவரின் பின்புறம் இருக்குமாறு அமைக்க கூடாது. சமையலறைக் கதவு கடிகார திசையில் திறக்குமாறு அல்லது கிழக்கு, வடக்கு, அல்லது வடகிழக்கு திசையை நோக்கி திறக்குமாறு அமைக்கலாம். ஒருவேளை இவ்வாறு வடிவமைக்க முடியவில்லை எனில், மூன்று ஜிங்க் ஜூபிடர் கிரிஸ்டல் பிரமிடுகளை அடுப்பின் எதிர்ப்புறம் உள்ள சுவற்றில் பொருத்தி வாஸ்து பரிகாரத்தை நிறைவேற்றலாம்.

 

சமையல் அறை வாஸ்து: அதிகமாக கேட்கப்படும் கேள்விகள்

சமையல் அறையில் கேஸ் அடுப்பை எங்கு வைக்க வேண்டும்?

வாஸ்து முறைப்படி, சமையலறையில் கேஸ் அடுப்பை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசை அக்னி தேவனாகிய நெருப்பைக் குறிக்கிறது.

சமையல் அறையில் சிங்க்கை எங்கு அமைக்க வேண்டும்?

வாஸ்து முறைப்படி சமையலறையில் சிங்க் வைப்பதற்கான சிறந்த திசை வடக்கு அல்லது வடகிழக்கு.

சமையல் அறைக்கு ஏற்ற சிறந்த திசை எது?

வாஸ்து முறைப்படி சமையல் அறைக்கு தென்கிழக்கு திசை ஏற்றது.

எனது சமையல் அறையில் குப்பைத் தொட்டியை எங்கு வைக்க வேண்டும்?

வாஸ்து முறைப்படி தென்மேற்கு, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் குப்பைத் தொட்டிகளை வைப்பது சிறந்தது.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வாஸ்து முறைப்படி சமையல் அறை ஸ்லாப்புகளுக்கு ஏற்ற வண்ணம் எது?

மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகியவை சமையலறை மேடைகளுக்கு ஏற்ற சிறந்த வண்ணங்கள் ஆகும்.

எந்த திசை சமையல் அறை அமைக்க உகந்தது அல்ல?

வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் சமையல் அறை அமைப்பது உகந்தது அல்ல. இது அங்கு வசிப்போரின் தொழில் வளர்ச்சியிலும் செல்வ நிலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல தென்மேற்கு திசையும் சமையலறை அமைப்பதற்கு ஏற்றதல்ல. இது கணவன், மனைவி உறவுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனது சமையல் அறையில் குப்பைத் தொட்டியை எங்கு வைக்கலாம்?

தென்மேற்கு மேற்கு அல்லது வடமேற்கு திசையில் குப்பைத் தொட்டியை வைக்கலாம்.

எனது சமையலறையில் அதிர்ஷ்டத்தை தரும் மூங்கில் செடியை வளர்க்கலாமா?

சமையலறையானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்தால் வளர்க்கலாம். மேலும், நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்புக்கு மூன்று, ஐந்து அல்லது ஏழு தண்டுகள் கொண்ட மூங்கில் செடியை வளர்க்கலாம்.

தெற்கு திசையை நோக்கியவாறு சமைப்பது சிறந்ததா?

வாஸ்து முறைப்படி தெற்கு திசையை நோக்கி சமைப்பது நிதிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கிழக்கு நோக்கியவாறு சமைப்பது சிறந்ததாகும்.

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • ரியல் எஸ்டேட் பிரிவில் 2024 அக்ஷய திரிதியாவின் தாக்கம்
  • நிதியாண்டில் அஜ்மீரா ரியாலிட்டியின் வருவாய் 61% அதிகரித்து ரூ.708 கோடியாக உள்ளது.
  • கிரேட்டர் நொய்டா ஆணையம், வீடு வாங்குபவர்களுக்கான பதிவேடு பற்றி பில்டர்கள் விவாதிக்கின்றனர்
  • TCG ரியல் எஸ்டேட் அதன் குர்கான் திட்டத்திற்காக எஸ்பிஐ யிலிருந்து ரூ 714 கோடி நிதியைப் பெறுகிறது
  • கேரளா, சத்தீஸ்கரில் NBCC 450 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுகிறது
  • Rustomjee குழுமம் மும்பையின் பாந்த்ராவில் சொகுசு குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது