TN PDS குடும்ப அட்டை குறித்த தகவல்கள்

குடும்ப அட்டைகளை டிஜிட்டல் மயமாக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்முயற்சியின் விளைவாக TN PDS குடும்ப அட்டை 2022 திட்டம் 2021-இல் அறிவிக்கப்பட்டது.

மின்னணு குடும்ப அட்டை என்றால் என்ன?

அரசாங்கத்தால் வழங்கப்படும் குடும்ப அட்டைகளைக் கொண்டிருப்போர் குறிப்பிட்ட நியாய விலைக் கடை  களில் இருந்து மானிய விலையில் பொருட்கள் வாங்கமுடியும். இந்த குடும்ப அட்டையின் டிஜிட்டல் பதிப்பு மின்னணு குடும்ப அட்டை என அழைக்கப்படுகிறது. மின்னணு குடும்ப அட்டை கொண்டிருப்போர், நியாயவிலைக் கடைகளில் இருந்து பொருள்களைப்பெற கார்டை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Table of Contents

 

தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகளின் வகைகள்

தமிகழத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • வெளிர் பச்சை நிற அட்டைகள் கொண்டிருந்தால் அரிசி மற்றும் பிற பொருட்கள் வாங்கலாம்.
  • வெள்ளை நிற அட்டை மூலம் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக 3 கிலோ சர்க்கரை பெறலாம்.
  • நியாய விலைக் கடையில் பொருட்களைப் பெறும் தகுதி அளவுகோலில் வராதோர் மற்றும் பொருட்கள் தேவையில்லை என்போர் பொருள்களில்லா அட்டை  பெறுவர்.
  • காவல் ஆய்வாளர் வரையிலான பதவியில் உள்ள காவலர்களுக்கு காக்கி நிற அட்டைகள்.

 

TN PDS குடும்ப அட்டை 2022: சிறப்பம்சங்கள்

திட்டத்தின் பெயர் தமிழ்நாடு குடும்ப அட்டை
பயனாளிகள் தமிழ்நாட்டில் வசிப்போர்
திட்டத்தை வழங்குவோர் தமிழ்நாடு PDS
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndps.gov.in
குறிக்கோள் ரேஷன் விநியோகம்

 

தமிழ்நாடு குடும்ப அட்டை வழங்குதலின் நோக்கங்கள்

  • குடும்ப அட்டை வழங்குதலில் நடக்கும் முறைகேடுகளை குறைத்தல்
  • டிஜிட்டல்மயக்கப்பட்ட கார்டுகள் காகிதச் செலவுகளைக் குறைக்கின்றன.
  • அனைவரும் அணுகத்தக்க முழுமையான தகவல்.
  • குடும்ப அட்டை வழங்குவதற்கான கால அவகாசத்தைக் குறைத்தல்.
  • இப்போது தமிழ்நாடு குடும்ப அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அட்டை பெறுவதற்கான முறையில் சிரமத்தைக் குறைக்கிறது..
  • குடியிருப்பாளர்களுக்கு அதிகரித்த வெளிப்படைத்தன்மை.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: தகுதி

  • இந்திய குடிமகனாகவும் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • அரசுப் பணி செய்வோர், வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது ஓய்வு பெற்றிருந்தாலும் குடும்ப அட்டை பெற தகுதியற்றவர் ஆவர்.
  • குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் இருப்பின் மின்னணு குடும்ப அட்டைக்கு தகுதியற்றவர் ஆவர். ஆனால், நான்கு சக்கர வாகனம் வருமான நோக்கத்திற்காக எனில், நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசிடம் பதிவுசெய்யப்பட்ட வணிகம் மேற்கொள்வோர், TNPDS மின்னணு குடும்ப அட்டைக்கு தகுதி பெறமாட்டார்கள்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் (TNDPS) கீழ் தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க சில ஆவணங்களை விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் அடங்குபவை:

  • ஆதார் நகல் அட்டை
  • மின் கட்டணத்தின் நகல்
  • பான் கார்டு நகல்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • வருமானச் சான்றிதழ்
  • வங்கிக் கணக்குப் புத்தகம்
  • வகை அல்லது சாதிச் சான்றிதழ்

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: ஆஃப்லைன் விண்ணப்ப நடைமுறை

இம்முறையில் விண்ணப்பிக்க TNPDS நியாவிலைக் கடையை அணுகவேண்டும்:

  • உங்கள் பகுதி நியாய விலையைக் கடையை அணுகவும்.
  • குடும்ப அட்டை விண்ணப்பப் படிவத்தை சேகரிக்கவும் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • சம்பந்தப்பட்ட துறைக்கு படிவத்தை சமர்ப்பிக்கவும்
  • குறிப்பு எண் உருவாக்கப்பட்டு வழக்கப்படும். எதிர்கால
  • பயன்பாட்டிற்காக இந்த எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைக்கு  ஆன்லைனில் விண்ணப்பித்தல்

சென்னையில் உள்ளோர் குடும்ப அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

 

 

  • விண்ணப்பிக்க முகப்புப் பக்கத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்ய விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

 

 

  • குடும்ப உறுப்பினர் விவரங்களைச் சேர்த்து, அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து சமப்பித்தவுடன், ஒரு குறிப்பு எண் உருவாக்கப்படும். எதிர்கால
  • பயன்பாட்டிற்காக இந்த எண்ணை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 

TNPDS குடும்ப அட்டை: TNPDS குடும்ப அட்டை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபார்த்தல்

TNPDS போர்டலில் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்ப நிலையைச் சரிபார்க்க முடியும். ஆன்லைனில் மின்னணு குடும்ப அட்டை நிலையைச் சரிபார்க்க குறிப்பு எண்ணை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

 

  • முகப்புப் பக்கத்தில், ‘மின்னணு அட்டை  சேவைகள்’ என்பதிலிருந்து ‘மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

  • அடுத்த பக்கத்தில் குறிப்பு எண்ணை உள்ளிட்டு
  • ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்தால், மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் தற்போதைய நிலை உங்களுக்குக் காட்டப்படும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: மின்னணு அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான நடைமுறை

 

 

  • ‘ரிப்ரிண்ட் ஸ்மார்ட் கார்டு’ பிரிவில் இருந்து ‘ரீபிரிண்ட் ஸ்மார்ட் கார்டு பட்டனை கிளிக் செய்யவும்.

 

 

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP  ஒன்றைப் பெறுவீர்கள்.
  • OTP-ஐ உள்ளிட்டு.
  • ‘ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: துறை உள்நுழைவு

இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், துறை உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

 

  • உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

  • இப்போது, TNPDS-இல் உள்நுழைந்து உங்கள் துறையில் உள்நுழைவு செய்யுங்கள்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: மின்னணு குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல்

 

 

  • ‘பயனாளர் நுழைவு’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • OTP பெற உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் கேப்ட்சாவையும் அடுத்த பக்கத்தில் உள்ளிடவும்.

 

 

  • OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பித்ததும். ‘மின்னணு குடும்ப அட்டை விவரங்கள்’ பக்கம் தோன்றும்.
  • அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • ‘ஒப்புதல்’ பொத்தானைக் கிளிக் செய்து, ‘மாற்றங்களைச் சேமி’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: புதிய குடும்ப உறுப்பினரைச் சேர்த்தல்

 

 

  • ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ மெனுவிலிருந்து ‘உறுப்பினரை  சேர்க்க’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • OTP பெற உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் கேப்ட்சாவையும் அடுத்த பக்கத்தில், உள்ளிடவும்.
  • OTP-ஐ உள்ளிட்டதும். விண்ணப்பப் படிவப் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

 

 

  • தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • கேப்ட்சா குறியீட்டைச் சரிபார்த்து, ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: முகவரியை மாற்றுதல்

 

 

  • ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ மெனுவிலிருந்து ‘முகவரி மாற்றம் செய்ய’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைக.

 

 

  • தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: குடும்பத் தலைவர் மாற்றுதல்

 

 

  • ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ மெனுவிலிருந்து ‘குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

 

  • உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைக.
  • தேவையான விவரங்களை நிரப்பவும், ஆவணங்களை பதிவேற்றவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: குடும்ப உறுப்பினரை நீக்குதல்

  • இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ மெனுவிலிருந்து ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

 

 

  • உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

 

 

  • தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: TNPDS புதிய குடும்ப அட்டை நிலையை நகலெடுத்தல்

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், நகல் மிண்ணனு குடும்ப அட்டை பிரிவில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

  • அடுத்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

 

 

  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உங்கள் குடும்ப அட்டை நிலையைப் பார்க்கவும்.
  • நிலை இணைப்பு தோன்றும், பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: அட்டை தொடர்பான சேவை கோரிக்கை நிலை அறிதல்

 

 

  • இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்’ பிரிவிலிருந்து ‘அட்டை தொடர்பான சேவை நிலை அறிய’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் குறிப்பு எண்ணை உள்ளிடவும்.

 

 

  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நிலை காட்சிப்படுத்தப்படும்

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: நகல் குடும்ப மின்னணு அட்டைக்கு விண்ணப்பித்தல்

 

 

  • நகல் மிண்ணனு குடும்ப அட்டை பகுதியில் ‘நகல் மிண்ணனு குடும்ப அட்டை விண்ணப்பிக்க’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை இணைத்து
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: அங்கீகாரப் படிவத்தைப் பதிவிறக்குதல்

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

 

 

  • முகப்புப் பக்கம் திறக்கும்.
  • அங்கீகார சான்று பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்யவும்.

 

 

  • தொடர்புடைய தகவலை உள்ளிடவும்.
  • விவரங்கள் திரையில் காட்டப்படும்.
  • பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: மின்னணு குடும்ப அட்டையில் பொது விநியோகம் குறித்த திட்ட அறிக்கையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

 

 

  • ‘பொது விநியோக திட்ட அறிக்கைகள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

  • ‘பொது விநியோக திட்ட அறிக்கை பக்கத்திற்கு’ அனுப்பப்படுவீர்கள்.
  • தரவு அட்டவணையில் குறிப்பிடப்படும்.
  • உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும், தாலுகா விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும்.
  • கிடைக்கும் பொருட்கள் மற்றும் கிடைக்கும் அளவுகளின் விவரங்களைப் பார்க்க, ‘பொருட்கள் விவரங்கள்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: NFSA அறிக்கையைப் பார்வையிடுதல்

 

 

  • முகப்புப் பக்கத்தில் NFSA அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்

 

 

  • உங்கள் மாவட்டம், நியாய விலைக் கடை குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் மின்னணு குடும்ப அட்டை எண்ணை உள்ளிடவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: NFSA விற்பனை பரிவர்த்தனை அறிக்கையைப் பார்வையிடுதல்

 

 

  • முகப்புப் பக்கத்தில்  ‘NFSA விற்பனை பரிவர்த்தனை அறிக்கைகள்’ என்பதை கிளிக் செய்யவும்.

 

 

  • இப்போது, மாதம், ஆண்டு மற்றும் NFSA அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேடலை கிளிக் செய்யவும்.
  • தேவையான தகவல்கள் திரையில் காட்டப்படும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: அட்டை வகையை மாற்றுதல்

 

 

  • உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

  • படிவத்தில் தொடர்புடைய விவரங்களை நிரப்பவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: பயனாளர் நுழைவு

 

 

  • அடுத்த பக்கத்தில், உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • OTP ஐ உள்ளிடவும்.

 

 

  • சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் இப்போது பயனராக உள்ளீடு செய்யலாம்.

 

 

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: கருத்து வழங்குதல்

 

 

  • மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
  • திவுபெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் கருத்தை உள்ளிடவும்.

 

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: புகார் பதிவு செய்தல்

 

 

  • ‘புகாரைப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்’ என்ற  பேனரைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்த பக்கத்தில், ‘புகார் பதிவு செய்ய’ தாவலில் ஒரு விண்ணப்பப் படிவத்தைக் காண்பீர்கள்.

 

 

  • புகாருடன் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • ‘சமர்ப்பி’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: புகார் நிலையைப் பார்த்தல்

 

 

  • ‘புகாரைப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்’ என்ற  பேனரைத் தேர்ந்தெடுக்கவும்.

 

 

  • அடுத்த பக்கத்தில் ‘புகார் நிலவரம்’ தாவலை கிளிக் செய்யவும்.
  • புகார் பதிவு எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புகார் நிலை காட்டப்படும்.

 

TNPDS மின்னணு குடும்ப அட்டை: இலவச உதவி மைய எண்கள்

        • உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1967 அல்லது 18004255901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
        • ஏதேனும் விவரங்களுக்கு, 9773904050 என்ற எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.

மேலும் உதவிக்கு மின்னஞ்சல் ஐடி support@tndps.com .

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • நகர்ப்புற வளர்ச்சிக்காக 6,000 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த யெய்டா
  • முயற்சி செய்ய 30 ஆக்கப்பூர்வமான மற்றும் எளிமையான பாட்டில் ஓவியம் யோசனைகள்
  • அபர்ணா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் எஸ்டேட்ஸ் சில்லறை-பொழுதுபோக்கிற்கு முன்னேறுகிறது
  • 5 தடித்த வண்ண குளியலறை அலங்கார யோசனைகள்
  • ஆற்றல் சார்ந்த பயன்பாடுகளின் எதிர்காலம் என்ன?
  • குளியலறை வெர்சஸ் ஷவர் க்யூபிகல்