வாரிசு என்பவர் யார்? வாரிசுரிமை என்பது என்ன?

இந்து வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் மகள்கள், மருமகள்கள், கைவிடப்பட்ட முதல் மனைவி, இரண்டாவது மனைவி, மதம் மாறியவர்கள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், விதவைகள், தாய்மார்கள் போன்றவர்களின் சொத்து உரிமைகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்.

வாரிசுரிமைச் சட்டங்கள் மிகவும் சிக்கலானவை  மற்றும் சட்டப்படியாக தங்களுக்குச்சேர வேண்டிய சொத்து என்று தாங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் சொத்துக்கள் மீதான உரிமை கோரல்களை எழுப்பும் முன் பயனாளிகளுக்கு அது குறித்த  தெளிவான புரிதல் தேவை, இந்தியாவில்  வாரிசுரிமை தொடர்பான சில சிக்கலான கேள்விகளுக்கு இந்த வழிகாட்டி பதிலளிக்கும்.

Table of Contents

 

பூர்வீக மூதாதையர் சொத்து என்றால் என்ன?

இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1956 மற்றும் பிற சட்டங்கள் மூதாதையர் சொத்து என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுக்கவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனது பல உத்தரவுகளில், ஒரு ஆண் இந்துவுக்கு அவரது தந்தை, தந்தைவழி தாத்தா அல்லது தந்தைவழி தாத்தாவின் தந்தையிடமிருந்து பெற்ற சொத்து, மூதாதையர் சொத்து என்று கூறியுள்ளது.

மேலும் காண்க மூதாதையர் சொத்து  பற்றிய அனைத்தும்

 

மேலும் காண்க  :HUF சூழலில்  கோபார்சனர்– பங்காளிகள்என்றால் என்ன 

 

மூதாதையர் சொத்து மற்றும் சுய சம்பாத்தியச்சொத்து ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் 

ஒரு சொத்தின் உரிமையாளர் தனது சொந்த மூலாதாரங்களை  பயன்படுத்தி வாங்கிய சொத்து அவரது சுயமாக வாங்கிய சொத்து என்றாலும், அவரது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அவர் பெற்ற சொத்து என்பது மூதாதையர் சொத்து ஆகும் .

இரண்டு வகையான சொத்துக்களுக்கு இடையிலான எல்லைக்கோட்டை  நிர்ணயிப்பது சிக்கலானது, சுயமாக வாங்கிய சொத்து ஒரு கட்டத்திற்குப் பிறகு மூதாதையர் சொத்தாக மாறுகிறது. இதன் நேர்மாறான நிலையும் கூட உண்மைதான்  – ஒரு மூதாதையர் சொத்து சுயமாக வாங்கிய சொத்தாக மாறலாம். ஒரு மூதாதையர் சொத்தை ஒரு கூட்டு இந்துக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்குப் பங்கிடும்போது, அது ஒரு குடும்ப உறுப்பினரின் வசம் சுயமாக வாங்கிய சொத்தாக மாறும். அதேபோல், ஒரு நபரின் சுயமாக வாங்கிய சொத்தும் பிரிக்கப்படாத முப்பாட்டனார்  சொத்தும் இறுதியில் மூதாதையர் சொத்தாக மாறும்.

மேலும் காண்க நில உரிமை உடைமை வகைகள்  

 

ஒரு வாரிசு என்பவர் யார்?

உலகளவில் பெரும்பாலான சட்டங்கள் ஒரு வாரிசு என்பதன் கருத்தாக்கத்தை அங்கீகரித்துள்ளது போலவே இந்திய சட்டங்களும் அதை அங்கீகரித்துள்ளது.. வாரிசுகள் எனப்படுபவர்கள் அவர்களின் மூதாதையரிடமிருந்து சொத்துக்களை சட்டப்பூர்வமாக பெறுவதற்கான வாரிசுரிமை பெற்ற நபர்களாவார்கள். இந்தியாவிலுள்ள பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் ஒரு மூதாதையரின் சொத்து அந்த சொத்தின் உரிமையாளரின் சட்டபூர்வமான வாரிசுகளிடையே பகிர்ந்துகொள்ளப்படும்  இந்தக் கட்டுரை இந்தியாவில் வாரிசுரிமை, வரிசு என்பதான் கருத்தாக்கம் மற்றும் சொத்து உரிமைகள் குறித்த புரிதலை உங்களுக்கு வழங்கும்

மேலும் காண்க  :HUF சூழலில்  கோபார்சனர்- பங்காளிகள்என்றால் என்ன

 

மூதாதையர் சொத்தின் சட்டப்பூர்வ வாரிசுகள் யார்?

ஒரு வாரிசு என்பவர், ஒரு உயிலை விட்டுச் செல்லாமல் இறந்த தனது மூதாதையர்களின் சொத்தை வாரிசாகப் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் பெற்றவர் (இன்டெஸ்டேட்- உயில் எழுதாத நிலை  என அழைக்கப்படுகிறது). அத்தகைய சொத்து உரிமையாளரின் மறைவுக்குப் பிறகு, சொத்துக்கான வாரிசுரிமை  மற்றும் பிற உரிமைகோரல்கள் தொடர்பான விஷயங்களை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காண்க : உயிலை மெய்ப்பித்தல் என்றால் என்ன?

ஒரு வாரிசு என்ற கருத்தாக்கம் மதத்திற்கு மதம்  மாறுபட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் . அதனால்தான் இறந்தவரின் சொத்தில் அவர்களின் வாரிசுகளுக்குள்ள சொத்துரிமைகள்  அவர்கள் சார்ந்த மதத்தைப் பொறுத்து வேறுபடலாம்.

எடுத்துக்காட்டாக, இந்துக்கள் வாரிசு உரிமைச் சட்டம் (HSA) இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் இந்த மதங்களில் ஏதேனும் ஒன்றுக்கு மாறியவர்கள் அல்லது திருமணத்திற்கு வெளியே பிறந்தவர்கள் ஆகியோருக்குப்  பொருந்தும். இந்து வாரிசு உரிமைச் சட்டம் இந்திய முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது, ஏனெனில் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகளால் சொத்து எப்படிப் பெறப்படும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டம் உள்ளது. இந்தக் கட்டுரையில், இந்து வாரிசு உரிமைச் சட்டம் பொருந்தக்கூடியவர்களின் சொத்து உரிமைகள் குறித்து ஆராய்வோம்.

மேலும் காண்க : ஒரு சொத்திற்கு கூட்டு உரிமையாளராவது எப்படி?

 

இந்து வாரிசு உரிமைச் சட்டம் பொருந்துமிடங்கள்

ஒரு இந்து உயில் எழுதாமல் இறக்கும் போது (உயில் இல்லாத நிலை) HSA  செயலுக்கு வருகிறது. அதன்பிறகு, வாரிசு உரிமை  என்பது HSA  இல் குறிப்பிட்டுள்ள  விதிகளின் அடிப்படையில் அமையும் . ஒரு இந்து மதத்தை சேர்ந்த ஒரு நபர் உயில் எழுதாமல் இறக்கும் பட்சத்தில், அவரது சொத்து கீழ்க்கண்டவர்களுக்கு அந்த வரிசைப்படி செல்கிறது. பின்வரும் விளக்கப்படம் HSA இன் படியான  சரியான வாரிசுகளைக் காட்டுகிறது.

மேலும் காண்க : உங்கள் சொத்தை சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்பில் இருந்து எப்படி மீட்பது?

 

இந்து வாரிசு உரிமை  சட்டத்தின்படியான வாரிசுகள்

வகுப்பு -I வாரிசுகள் வகுப்பு -II வாரிசுகள் தாயாதிகள் உடன்பிறப்புகள்
i. மகன்

ii. மகள்

iii. விதவை

iv. அம்மா

v. இறந்து போன மகனின் மகன்

vi. இறந்து போன  மகனின் மகள்

vii. இறந்து போன  மகனின் விதவை மனைவி

viii. இறந்து போன  மகளின் மகன்

ix. இறந்து போன  மகளின் மகள்

x. இறந்து போன  மகனின் இறந்து போன மகனின் மகன் (பேரன்)

xi. இறந்து போன  மகனின் இறந்து போன மகனின் மகள்  (பேத்தி)

xii. இறந்து போன  மகனின் இறந்து போன மகனின் விதவை மனைவி

i. தந்தை ii. (1) மகனின் மகளின் மகன் (2) மகனின் மகளின் மகள், (3சகோதரன், (4) சகோதரி iii. (1) மகளின் மகள் மகன், (2) மகளின் மகன் மகள், (3) மகளின் மகள் மகன், (4) மகளின் மகள் மகள். iv. (1) சகோதரனின் மகன், (2) சகோதரியின் மகன் , (3) சகோதரனின் மகள், (4) சகோதரியின் மகள். v. தந்தையின் தந்தை; தந்தையின் தாய். vi. தந்தையின் விதவை; சகோதரனின் விதவை . vii. தந்தையின் சகோதரன்; தந்தையின் சகோதரி. viii. தாயின் தந்தை; தாயின் தாயார் ix. தாயின் சகோதரன்; தாயின் சகோதரி உதாரணம்: தந்தையின் சகோதரன் மகன் or அல்லது தந்தையின் சகோதரனின் விதவைமனைவியும் கூட. விதி 1: இரண்டு வாரிசுகளில் அந்த வரிசையில் மிக அருகில் இருப்பவர் விரும்பத்தக்கவராவார். விதி  2: வரிசையில் மேலேறும் எண்ணிக்கை அளவின் துல்லியம் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது எதுவுமில்லை என்றால், பொதுவான மூதாதையருடன் நெருக்கமாக இருப்பவருக்கு அந்த வாரிசு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.விதி 3: விதி 1 அல்லது விதி 2 இன் கீழ் எந்த வாரிசுக்கும் ஒருவரை மீறி மற்றொருவருக்கு முன்னுரிமை அளிக்க உரிமை இல்லை என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தை பெறுவார்கள்

.

உதாரணம்: தந்தையின் மக்களின் மகன் அல்லது சகோதரனின் மகளின் மகன் விதி  1: இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையே, வரிசையில் மிக அருகாமையில் இருப்பவர் விரும்பப்படுவார். விதி  2: வரிசையில் மேலேறும் எண்ணிக்கை அளவின் துல்லியம் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது எதுவுமில்லை என்றால், பொதுவான மூதாதையருடன் நெருக்கமாக இருப்பவருக்கு அந்த வாரிசு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விதி 3: விதி 1 அல்லது விதி 2 இன் கீழ் எந்த வாரிசுக்கும் ஒருவரை மீறி மற்றொருவருக்கு முன்னுரிமை அளிக்க உரிமை இல்லை என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தை பெறுவார்கள்

 

குறிப்பு: தாயாதிகள் ஆண்களின் மூலமான உறவுகள் ஆனால் இரத்ததொடர்பு அல்லது தத்தெடுப்பு மூலம் அல்ல. இவை திருமணங்கள் மூலமான  உறவுகளாகவும்  இருக்கலாம். உடன்பிறப்புகள் பெண்களின் மூலமான உறவுகள்.

Property-Rights-In-India-Hindu-Succession-Act

 

வாரிசுரிமை என்பது என்ன?

வாரிசுரிமை என்ற சொல் பிரத்தியேகமாக வாரிசு என்ற சூழலில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபரின் மரணத்திற்குப் பிறகு, அவன் / அவள் சொத்து, உரிமை உடைமை, கடன்கள் மற்றும் கடப்பாடுகள் வாரிசுக்கு மாற்றி வழங்கப்படலாம். வெவ்வேறு சமூகங்கள் வாரிசுரிமையை வெவ்வேறுவிதமாகக் கையாண்டாலும், தெளிவான மற்றும் அசையாச் சொத்துக்கள் பெரும்பாலும் வாரிசுரிமைக்கானவையாகக் கருதப்படுகின்றன. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்  வாரிசுரிமை பற்றி நாம் விரிவாக விவாதிப்போம்.

மேலும் வாசியுங்கள் வாரிசு சான்றிதழ் :   சட்டப்படியான வாரிசு சான்றிதழை  தமிழ் நாட்டில் பிணையம் மூலம் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யுங்கள்

 

மூதாதையர் சொத்துக்களை தானமாக வழங்கலாமா?

பின்வரும் 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மூதாதையர் சொத்தை தானமாக வழங்கலாம்:

  • இது ஒரு சட்டபூர்வமான தேவை
  • குடும்ப சொத்துக்களின் நன்மைகருதி
  • மேற்கொள்ளும் நோக்கங்களுக்காக ஒருவர் சுதந்திரமாக சொத்துக்களை

தானமாக வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்துத். தெரிவித்திருக்கிறது. இருப்பினும், அந்த சொத்துக்களை அன்பின் காரணமாக. தானமாக வழங்கும் செயல்பாடு தர்ம காரியங்களுக்கு வழங்குவது என்பதில். அடங்காது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

 

திருமணத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கு மகள்கள் உரிமை கோரலாமா?

2005 இல் HSA திருத்தப்பட்டது மற்றும் சொத்தின் அடிப்படையில் மகளுக்கு சம உரிமை வழங்கியது. இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் 2005 க்கு முன், இறந்த தந்தையின் சொத்து மீதான  உரிமைகளை மகன்கள்  அனுபவித்த, அதேசமயம் மகள்கள் திருமணமாகாத வரை மட்டுமே அவ்வாறு அனுபவிக்க முடியும். திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண் கணவனின் குடும்பத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறாள், எனவே, மற்றொரு பிரிக்கப்படாத இந்து குடும்பத்தில் (HUF) அவருக்கு  முழுவதுமாக உரிமை உண்டு என்பதாக அது புரிந்து கொள்ளப்பட்டது. இப்போது, திருமணமான மற்றும் திருமணமாகாத மகள்கள் தங்கள் தந்தையின் சொத்தில் தங்கள் சகோதரர்களைப் போல அதே உரிமையைப் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் சகோதரர்களைப் போலவே சமமான கடமைகள் மற்றும் கடப்பாடுகளுக்கு உரிமையுடையவர்கள். தந்தை மற்றும் மகள் இருவரும் 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9, 2005 அன்று உயிருடன் இருக்கும் பட்சத்தில் , மகளுக்கும் அதே  உரிமை உண்டு என்று 2005 ஆம் ஆண்டு வகுத்துரைக்கப்பட்டது. குறிப்பிட்ட  தேதியில் தந்தை உயிருடன் இருந்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு மகள் தனது இறந்த தந்தையின் சொத்தை வாரிசுரிமையாகப் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு கருத்துத் தெரிவித்தது.. இங்கு பெண்களும் கூட்டுப் பங்குரிமையாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அவர்களும் தந்தையின் சொத்தில் பங்கு கோரலாம்.மகள்கள் தங்கள் பெற்றோர்கள் அவர்கள் முழு உரிமையாளராக இருக்கும் சொத்து மற்றும் சுய சம்பாதித்தியத்தில் பெற்ற பிற சொத்துக்களில்  வாரிசுரிமை  பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று2022 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம்,  தீர்ப்பளித்தது, அது மேலும் குறிப்பிட்டதாவது இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இன் குறியீடாக்கத்திற்கு முன்பான காலத்தில் எந்த ஒரு உயிலையும் விட்டுச்செல்லாது மரணமடைந்த பெற்றோர்களின் மகள்கள்  விஷயத்திலும்  இந்த விதி பொருந்தும் என்று கூறியது

 

தந்தையின் சொத்தில் திருமணமான மகள்களின் பங்கு

திருமணமான மகள்கள் தங்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோரக்கூடிய பங்கு அளவு என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தந்தையின் பூர்வீகச் சொத்தில், ஒரு மகளுக்கு தன் சகோதரர்களுக்குள்ள உரிமையில்  சம உரிமை  உண்டு. இருப்பினும், தந்தையின் மறைவுக்குப் பிறகு, சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே சொத்து சமமாகப் பிரிக்கப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. இறந்தவரின் மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் வாரிசுரிமைச் சட்டங்கள் சொத்துரிமைகளை வழங்குவதால், பொருந்தக்கூடிய வாரிசுரிமைச் சட்டங்களின்படி ஒவ்வொரு வாரிசுக்கும் உள்ள பங்கின் அடிப்படையில் சொத்தின் பாகப் பிரிவினை  அமையும். ஒரு திருமணமான மக்களுக்கு தன் தந்தையின் சொத்தில் சம பங்கு உள்ளது என்பதன் அர்த்தம், அவளுடைய சகோதரன் என்னென்ன பங்கைக் கோருகிறாரோ, அவளுக்கும் அதே பங்கு கிடைக்கும். என்பதுதான்.

 

தனியாக உள்ள பெண்களின் வாரிசுரிமை சொத்துக்கு என்னவாகும்?

Inherited property of childless woman dying intestate goes back to source: Supreme Court

குழந்தை இல்லாத பெண் மரபுரிமையாகப் பெற்ற மூதாதையர்  சொத்துக்கள் , அவர் எந்த உயிலையும் விட்டு செல்லாது மரணமடையும் சந்தர்ப்பங்களில் அது மீண்டும் அதன் ஆதார மூதாதையர் சொத்தோடு சேர்ந்துவிடும்: உச்ச நீதிமன்றம்

எந்த குழந்தையையும் வாரிசாக இல்லாத மற்றும் எந்த ஒரு உயிலையும் விட்டுச்செல்லாமல் இறக்கும் ஒரு பெண்ணின் சொத்து அதன் மூலாதாரத்திற்கே திரும்ப சென்றுவிடும். என்று உத்தநீதிமன்றம் தீர்ப்பளித்தது

எஸ் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி, ஜேஜே வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்சநீதிமன்றம் பின்வருமாறு கருத்து தெரிவித்தது, “எந்தப் வாரிசும் இல்லாத  ஒரு இந்து பெண் இறந்துவிட்டால், அவளுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து அவளுக்கு வாரிசுரிமையாக வந்த சொத்து அவளுடைய தந்தையின் வாரிசுகளுக்குச் செல்லும், அதே சமயம் அவளுடைய கணவன் அல்லது மாமனாரால் மரபுவழியில் பெற்ற சொத்து அவரது கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும். கணவர்,”

திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுச்சென்றால், அந்த சந்தர்ப்பத்தில் வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15(1)(a)-ல் வழங்கப்பட்டுள்ளபடி, அவளுடைய பெற்றோரிடமிருந்து அவள் பெற்ற சொத்துக்கள் உட்பட அவளுடைய அனைத்துச் சொத்துக்களும் அவளுடைய கணவன் மற்றும் அவளுடைய பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

 

மகனின் சொத்தில் தாயின் சொத்து உரிமைகள் மற்றும் வாரிசுரிமை

இறந்த மகனின் சொத்துக்கு தாய் ஒரு சட்டப்பூர்வ வாரிசு. எனவே, ஒரு மனிதன் தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுச் சென்றால், அவரது சொத்தில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. உயிலை உருவாக்காமல் தாய் இறந்துவிட்டால், அவரது மகனின் சொத்தில் அவரது பங்கு அவரது மற்ற குழந்தைகள் உட்பட அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

 

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாரிசுரிமை

தத்தெடுக்கப்பட்ட குழந்தையும் வகுப்பு-I  வாரிசாகவே கருதப்படும் மற்றும் ஒரு சொந்தக்  குழந்தைக்கு உள்ள  அனைத்து உரிமைகளையும் அது அனுபவிக்கலாம். இருப்பினும் ஒரு வளர்ப்புத் தந்தை செய்த ஒரு குற்றத்தின் காரணமாக எந்தச் சொத்தையும் பெறுவதற்கு அவர் தகுதியிழக்கும்  சந்தர்ப்பத்தில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை அவரது சொத்துக்களுக்கு உரிமை கோர முடியாது, இந்த வளர்ப்புத் தந்தை வேறு மதத்திற்கு மாறியிருந்து, தத்தெடுக்கப்பட்ட குழந்தை அதே மதத்தை பின்பற்றினால், இந்த சந்தர்ப்பத்திலும் கூட, தத்தெடுக்கப்பட்ட குழந்தை மூதாதையர் சொத்தை ஒரு வாரிசாகப் பெற முடியாது.

 

கைவிடப்பட்ட முதல் மனைவியின் சொத்து உரிமைகள் மற்றும் வாரிசுரிமை

ஒரு இந்து ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்யாமல் கை விட்டுவிட்டு இன்னொருவரை மணந்து கொள்கிறார்  என்று வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தில், அவரது முதல் திருமணம் சட்டப்பூர்வமாக கலைக்கப்படவில்லை மற்றும் முதல் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் சட்டபூர்வமான வாரிசுகள் ஆவார்கள். இருவரும் விவாகரத்து பெற்றிருந்தால், முதல் மனைவி சொத்தில் உரிமை கோர முடியாது, மேலும் அவரது உடைமைகள் அனைத்தும் அவளுக்கு மட்டுமே சேரும். ஒரு சொத்தை வாங்குவதற்கு கணவனும் மனைவியும் பங்களித்திருந்தாலும் கூட, விவாகரத்து ஏற்பட்டால் ஒவ்வொருவரும் தனிப்பட்டு அதற்கு அளித்த பணப் பங்களிப்பின் சதவீதத்திற்கான ஆவணத்தின் ஆதாரம் மிக முக்கியம் . குய்ர்ப்பாக சொத்திலிருந்து  வெளியேற்றுகை  வழக்கை தாக்கல் செய்ய நீங்கள் விரும்பினால் இது மிகவும் முக்கியமானது.

 

இரண்டாவது மனைவியின் வாரிசுரிமை

கணவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டாலோ அல்லது மறுமணம் செய்து கொள்வதற்கு முன்பே கணவன் விவாகரத்து செய்திருந்தாலோ, இரண்டாவது மனைவிக்கு தனது கணவரின் சொத்து மீதான அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் உண்டு. முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளைப் போலவே அவளது  குழந்தைகளுக்கும் தந்தையின் சொத்தின் பங்கில் சம உரிமை உண்டு. இரண்டாவது திருமணம் சட்டத்துக்குப் புறம்பானது என்றால், கணவரின் மூதாதையர் சொத்தில் இரண்டாவது மனைவியோ அல்லது அவரது குழந்தைகளோ சட்டப்பூர்வ வாரிசுகளாக எந்த சலுகையையும் அனுபவிக்க மாட்டார்கள்.

மேலும் காண்கAஇரண்டாவது திருமணத்தில் மனைவி மற்றும் அவரது குழந்தைகளின் சொத்து உரிமை குறித்த அனைத்தையும்

 

வாரிசுரிமை மீது மத மாற்றத்தின் தாக்கம்

வேறொரு மதத்திற்கு மாறிய எவரும் வாரிசுரிமை மூலம் சொத்தை பெறலாம் என்று HSA வழங்குகிறது. இந்தியாவின்   சட்டம் தங்கள் மத நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்த ஒரே காரணத்திற்காக சொத்தின் மீது ஒருவருக்குள்ள மரபுரிமையை  நீக்கம் செய்யாது, தனது மதத்தைத் துறந்த அவன்/அவள் எவரும் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை பெறலாம் என்று சாதி குறைபாடுகளை அகற்றும் சட்டம், கூறுகிறது. என்றாலும், மதம் மாறியவரின் வாரிசுகள் அதே உரிமைகளை அனுபவிக்க முடியாது. ஒரு மதம் மாறியவரின் மகன் அல்லது மகள் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த ஒரு மதத்தையும் பின்பற்றினாலும் , அவர்கள் மூதாதையர் சொத்தின் வாரிசுரிமையைப் பெறுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

 

இறந்த மனைவியின் சொத்தின் மீதா  ஒரு ஆணின் வாரிசுரிமை

மனைவியின் வாழ்நாளிளின் போது, கணவனுக்கு அவளுடைய சொத்து மீது எந்த உரிமையும்  இல்லை. மனைவி இறந்துவிட்டால், அவரது சொத்து அவளது கணவன் மற்றும் குழந்தைகளுக்கும் இடையே ஒரே மாதிரி சமமாகப் பிரிக்கப்படும். கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவஜோதி பர்மன் கூறுகையில், “மனைவி தனது வாழ்நாளின் போது  தனது பங்கைப் பெற்றால், கணவனும் வாரிசாக அதை பெறலாம். மனைவி தன் வாழ்நாளில் அவள் பெற்றோரிடமிருந்தோ அல்லது முன்னோர்களிடமிருந்தோ மரபுரிமை பெறவில்லை என்றால், கணவனால் அதற்கு உரிமை கோர முடியாது.”  ஒருவன் தன் மனைவியின் பெயரில் தன் சொந்தப் பணத்தில் சொத்து வாங்கியிருந்தால், அவள் இறந்த பிறகும் அவன் அந்த உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

 

இந்தியாவில் விதவைகளின் சொத்து உரிமைகள் மற்றும் வாரிசுரிமை

உயிலை விட்டுச் செல்லாமல் இறந்த ஒரு நபரின் சொத்து, அட்டவணையின் வகுப்பு-I இல் குறிப்பிடப்பட்டுள்ள அவரது வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956, நிறுவுகிறது. உயில் எழுதாமல் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய விதவை ஒரு பங்கைப் பெறுகிறார். இறந்தவரின் வகுப்பு-I வாரிசுகளாக அவரது  விதவை, அவரது மகன், அவரது மகள், அவரது தாய், இறந்து  போன மகனின் மகன், இறந்துபோன  மகனின் மகள், இறந்துபோன மகனின் விதவை, இறந்து போன மகளின் மகன் , இறந்து போன மகளின் மகள், இறந்து போன மகனின் இறந்து போன மகனின் மகன் , இறந்து போன மகனின் இறந்து போன மகனின் மகள் , இறந்து போன  மகனின் இறந்து போன மகனின் விதவை

 

குற்றவாளிகள்  வாரிசுரிமை கோர முடியுமா?

கடுமையான குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் வாரிசுரிமை சொத்துக்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று HSA தெரிவிக்கிறது

 

ஒருவழி உறவு(ஹாஃப் பிளட்)  குழந்தைகளின் வாரிசுரிமை

தந்தையின் மற்றொரு மனைவி/துணையுடனான உறவில்  பிறந்த ஒரு குழந்தை ,  மனைவியின் மற்றொரு கணவன்/துணையுடனான உறவில்  பிறந்த இரண்டாவது குழந்தை ஒருவழி உறவு(ஹாஃப் பிளட்)  குழந்தைகளாக கருதப்படுகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால், பொதுவான ஒரு பெற்றோர் இருக்கும்போது (மறுமணம் அல்லது விவாகரத்து ஏற்பட்டால்), எவரிடமிருந்து அவர்/அவள் மரபுரிமையைப் பெறுகிறாரோ அவருக்கு நெருக்கமான குழந்தை அதற்கான உரிமையைப் பெறும்

 

ஏற்கப்படாத குழந்தையின் வாரிசுரிமை 

பிவரும் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் சட்டப்படி ஏற்கப்படாத குழந்தைகளாகக் கருதப்படுவார்கள் 

இல்லாத்திருமணங்களின் மூலமாக பிறந்த குழந்தைகள் 

ரத்து செய்யப்பட / இல்லாநிலையாக்கப்பட்ட திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் 

சட்டவிரோதமான உறவுகளின் மூலம் பிறந்த குழந்தைகள் 

ஆசை நாயகிகளின் உறவு மூலம் பிறந்த குழந்தைகள் 

திருமணம் நடைபெற்றதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாத ஒரு திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை

இந்துத்திருமணச்சட்டம் 1955 இன் பிரிவு 16(3) இன் கீழ் வழங்கப்பட்டபடி இந்துக்களைத் தவிர, சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்குப் பொருந்தும் விதிகள் – ஏற்கப்படாத குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் சொத்துக்களின் மீது  மட்டுமே உரிமை உண்டு, வேறு எந்த ஒரு உறவினர்களின் சொத்தின் மீது உரிமை இல்லை என்று கூறுகிறது. ‘. இருப்பினும், அத்தகைய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் தாங்கள் சுயமாக சம்பாதித்த மற்றும் மூதாதையர் சொத்துக்களின் மீது உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம்  விளக்கியுள்ளது.

மேலும் காண்க: ஏற்க்கப்படாத குழந்தைகளின் சொத்துரிமை

 

உடன் சேர்ந்து வாழும் (லிவ்- இன்) தம்பதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வாரிசுரிமை  மற்றும் சொத்து உரிமைகள்

நீண்ட காலமாக ஒன்றாக கூடி வாழும் (லிவ்- இன்) தம்பதிகள் திருமணமானவர்களாக கருதப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்தியாவில் எந்த மதமும் உடன் சேர்ந்து வாழும் உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சட்டம் சில நிவாரணங்களை வழங்குகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் கீழ், உடன் சேர்ந்து வாழும் (லிவ்- இன்) உறவுகளில் உள்ள பெண்கள் சட்ட உரிமைகள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்குத் தகுதியுடையவர்கள். இந்து திருமணச் சட்டம் பிரிவு 16ன் படி, சேர்ந்து வாழும் உறவுகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோரின் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களுக்களின் மீது  உரிமை உண்டு. அந்த குழந்தைகள்  பராமரிப்புக்கு உரிமை கோரலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு, (“வாக்-இன் மற்றும் வாக்-அவுட்”) தற்காலிக வருகைகளின்  உறவுகளை சேர்ந்து வாழ்ந்த (லைவ்-இன்) உறவுகளாக கருதவில்லை  என்பதை நினைவில் கொள்வது முக்கியம். . சேர்ந்து வாழ்ந்தவர்கள்  நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்து வந்திருந்தால் விதிகள் செல்லுபடியாகும்.

2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, சேர்ந்து வாழும் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ வாரிசுக்கு இருக்கும் அதே வாரிசு உரிமை இருக்கும். இருப்பினும், திருமண பந்தத்தை மேற்கொல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, அவர்களது பெற்றோரின் சொத்துக்களுக்கு மட்டுமே உரிமையுடையவர்கள் ஆவார்கள், வேறு எந்த உறவினருடையதற்கும் அவர்களுக்கு  உரிமை இல்லை.

 

திருமணமாகாத தாய் மற்றும் குழந்தையின் உரிமைகள்

குழந்தை/குழந்தைகளுடன் உள்ள திருமணமாகாத தம்பதிகளுக்கு  அந்த பெற்றோர் (திருமணமாகாத)  இருவருக்குமிடையே  குழந்தைகளின் பாதுகாவலராக யார் இருப்பது என்பது குறித்து சச்சரவு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வகையில்  உரிமை வழங்கப்படும் என்பது குறித்து தெளிவான விதி எதுவும் இல்லை. பெற்றோர் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் கருத்தில் கொல்லப்படும். அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றால், மைனர் குழந்தையின் கருத்து கேட்கப்படும், மேலும் குழந்தைக்கு ஏதேனும் உளவியல் பாதிப்பு உள்ளதா ஆய்வு செய்யப்பட்டு , ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்து தனிநபர் சட்டத்தின்படி, ஒரு குழந்தைக்கு ஐந்து வயது வரை தாய் மட்டுமே இயற்கையான பாதுகாவலர் என்பதை நினைவில் கொள்க. அதற்குப் பிறகு, தந்தை இயற்கையான பாதுகாவலராக மாறுகிறார். தந்தை இறந்தவுடன், தாய் பாதுகாவலராக மாறுகிறார்.

மேலும் வாசியுங்கள்முஸ்லீம் பெண் ஒருவரின் சொத்துரிமை என்ன? 

 

கணவரின் மூதாதையர் சொத்தில் கூட்டுரிமைக்கான பெண்களின் உரிமை

பல இந்திய மாநிலங்களில், அதிக வேலை வாய்ப்புகளைத் தேடி ஆண்கள் நகரங்களுக்கு இடம்பெயரும் போது, தங்கள் குடும்பங்களை தற்காலிகமாக வீட்டிலேயே விட்டுவிட்டுச்செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்படலாம். . வேலைக்குச் செல்லும் ஆண்கள் அதிகம் வசிக்கும் பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் வகையில், கணவரின் பூர்வீகச் சொத்தில் கூட்டுரிமையாளருக்கான  இணைஉரிமை வழங்கும் அரசாணையை உத்தரகாண்ட்டில் அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை உத்தரகாண்டில் உள்ள 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட பெண் , கூட்டுரிமையாளராக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இருப்பினும், விவாகரத்து செய்த கணவரால் அவரது நிதிச் செலவுகளைச் ஏற்க இயலாவிட்டால்  அந்தப் பெண் கூட்டுரிமையாளராக இருப்பார். விவாகரத்து செய்த குழந்தை இல்லாத பெண் அல்லது அவரது கணவர் ஏழு ஆண்டுகளாக காணாமல் போனாலோ / தலைமறைவானாலோ   அவரது தந்தைக்குச் சொந்தமான நிலத்தின் கூட்டுரிமையாளராக ஆவார்.

 

மூத்த குடிமக்களுக்கு சொத்துக்கான பிரத்யேக உரிமை உண்டு; மகன், மருமகள் உரிமம் மட்டுமே பெற்றவர்கள் என கல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஜூலை, 23, 2021 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றம், மூத்த குடிமகன் ஒருவருக்கு  தனது வீட்டில் வசிக்கும் உரிமையை உறுதிசெய்தது மற்றும் அவரது மகனும் மகளும் சொத்தில் வசிக்கும் ‘உரிமம் பெற்றவர்கள்’  மட்டுமே எனவே வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தியது. தனது சொந்த வீட்டில் பிரத்தியேகமாக வசிக்கும் மூத்த குடிமகன் உரிமையை, இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் முப்பட்டக காட்சிக் கோணத்தில் இருந்து இருந்து பார்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

ஒரு பிணைய வழி மெய்நிகர் விசாரணையில் தனது உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்,கூறியது,  “மூத்த குடிமக்களின் வீட்டில் வசிக்கும் அவரது குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களும் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே என்பது இப்போது நன்கு உறுதிசெய்யப்பட்டுவிட்டது. மூத்த குடிமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்வது வசதியாக இல்லை என்ற நிலையில்  அத்தகைய உரிமம் முடிவுக்கு வந்துவிடுகிறது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளுக்கு இணையாக உள்ளது.

மேலும் காண்ககிரைய ஆவணம்   மற்றும் விற்பனை ஒப்பந்தம்  பற்றிய அனைத்தும்  

 

மரபுரிமை மற்றும் எதிரிடை உடைமை

மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து வந்த சொத்துக்களை மரபுரிமை மூலம் பெறுபவர்கள் அந்த சொத்தை அனுபவத்தில் கொண்டுவருவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதுள்ள சட்டங்களின்படி, ஒரு சொத்தில் 12 ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் வசிக்கும் ஒருவர், எதிரிடை உடைமை சட்டத்தின் கீழ் சொத்தில் உரிமையைப் பெறுகிறார்.

 

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள்

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், முன்பு இருந்த பல்வேறு உட்பிரிவுகளில் புதியவைகளை சேர்க்க மற்றும் சிலவற்றை நீக்க  2005 ஆம் ஆண்டு திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டது.. சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பின்வருமாறு:

பிரிவு 4(2) திருத்தம்

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 4(2) இல் விவசாய நிலங்களை அதன் வாரிசுரிமை வாய்ப்பளவுகளில் சேர்க்கவில்லை. 2005ல் இது திரும்பப்பெறப்பட்டு விவசாய நிலங்கள் வாரிசுரிமையை உள்ளிடப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமத்துவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்தச் சட்டம் திருத்தப்பட்டது, இதன் மூல  பெண்கள் தாங்கள் பாடுபட்டு உழைக்கும் நிலங்கள் மீதான  தங்கள் உரிமைகளை செயல்படுத்த  முடியும்.

பிரிவு 6 இன் மறுசீரமைப்பு

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6, உறவினர்கள் அல்லது அந்நியர்களால் பரிசாக வழங்கப்பட்டிருந்தால்  மட்டுமே பெண்கள் சொத்துரிமையை அனுபவிக்க முடியும் என்று கூறியது. இருப்பினும், இரண்டு நிகழ்வுகளிலும், முழுமையான உரிமை அல்லது உடைமை உரிமைகள் உறவினர்கள் அல்லது அந்நியர்களால் தக்கவைக்த்துக்கொள்ளப்பட்டன.. பிரிவு 6 ஐ  மறுசீரமைப்பு செய்து  புதிய உட்பிரிவுகளைச் சேர்த்ததன் மூலம்  பெண்கள் தனது சகோதரர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண் உறுப்பினர்களைப் போலவே சம உரிமைகளை வழங்கி உதவியது.

மேலும் காண்க Cகொடை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?

பிரிவு 3 தவிர்ப்பு

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 3, ஒரு குடும்பத்தினுள் உள்ள ஆண் உறுப்பினர்கள் விரும்பினால் தவிர, சொத்தை பாகம் பிரித்துக்கொள்ளும் உரிமையை  பெண்களுக்கு வழங்கவில்லை. இது பெண்களின் தற்சார்பு தன்னாளுமை  மற்றும் உரிமைகளை குறைத்து, அவளது தனியுரிமைக்கு இடையூறாக இருந்தது. இதன் விளைவாக, இந்தத் திருத்தங்களின் போது  இந்த சட்டத்தின் 3 வது பிரிவு தவிர்க்கப்பட்டது.

மேலும் காண்க : பாகப்பிரிவினை ஆவணத்தின் வடிவமைப்பு  குறித்த அனைத்தும்

 

பழங்குடி இனப் பெண்களுக்கான வாரிசுரிமை

குடும்பச் சொத்தில் பழங்குடியின பெண்களுக்கு சம உரிமை மறுக்கும் சட்டத்தை திருத்த :
அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

பழங்குடியினப் பெண்களுக்கு அவர்களின் தந்தையின் சொத்தில் வாரிசுரிமையை மறுக்கும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் உள்ள விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 9, 2022 அன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது

ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் மூதாதையர் சொத்தில் சரி சமமான பங்குகளை உத்தரவாதம் செய்யும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 2(2) இல் — பட்டியல் பழங்குடியினர் (ST) உறுப்பினர்களுக்குப் அது பொருந்தாது என்றிருப்பதை இங்கே
நினைவுபடுத்தியது .

ஆண் மற்றும் பெண் வாரிசுகளுக்கு சமமான பங்குகளை உத்தரவாதப்படுத்தும் இயற்றுச்சட்டமான இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 2(2)ன் நியதிப்படி, பட்டியல் பழங்குடி சமூகங்களின் உறுப்பினர்களுக்குப் பொருந்தாது.

“பழங்குடியினர் அல்லாத பிரிவைச் சேர்ந்த ஒரு மகளுக்கு தந்தையின் சொத்தில் சம பங்கு கிடைக்கும் போது, அத்தகைய அதே உரிமையை பழங்குடி சமூகத்தைச்சேர்ந்த ஒரு மகளுக்கு மறுக்க எந்த காரணமும் இல்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் ஆண் பழங்குடியினருக்கு இணையாக உயிலற்ற இறங்குரிமையின் (இண்டஸ்டேட் சக்சஷன்) கீழ் அடுத்தடுத்து உரிமை உண்டு” என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. .

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சொத்துரிமை என்பது சட்டப்பூர்வமான உரிமையா?

அரசியலமைப்புச் சட்டம் 1978 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக சொத்து வைத்திருப்பது இனி ஒரு அடிப்படை உரிமையாக இருக்காது. இருப்பினும், இது மிகவும் சட்டபூர்வமான, மனித மற்றும் அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமையாகும்.

திருமணத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கு மகள் உரிமை கோரலாமா?

ஆம், கோரலாம். சட்டத்தின் அடிப்படையில் திருமணமான ஒரு மகளுக்கு தன் தந்தையின் சொத்தில் பங்கு கோருவதற்கு முழு உரிமை உண்டு. அவருடைய சகோதரன் அல்லது திருமணமாகாத தனது சகோதரியைப் போலவே அவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு.

சொத்துரிமையில் அடங்குபவை எவை ?

இந்தியர்கள் அனைவருக்கும் சொத்துக்களை உடைமையாக்கிக் கொள்ளும் உரிமை உள்ளது. அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்தவும், மேலாண்மை செய்யவும், நிர்வகிக்கவும், அனுபவிக்கவும் மற்றும் விற்பனைக்கு உட்படுத்தவும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. இவற்றில் எதுவும் நாட்டின் சட்டத்திற்கு முரணானக இல்லாத நிலையில் அந்த நபரை குற்றவாளியாகக் கருத முடியாது.

தந்தையின் சொத்தில் மகனுக்கு உரிமை உள்ளதா?

ஆம், ஒரு மகன் வகுப்பு I வாரிசாவார் மற்றும் தந்தையின் சொத்தில் உரிமை கொண்டவர்.

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (2)

Recent Podcasts

  • இந்தியாவில் REITகள்: REIT என்றால் என்ன மற்றும் அதன் வகைகள்?
  • Zeassetz, Bramhacorp புனேவின் ஹிஞ்சேவாடி இரண்டாம் கட்டத்தில் இணை-வாழ்க்கை திட்டத்தைத் தொடங்குகின்றன
  • பிஎம்சிக்கு அரசு அமைப்புகள் இன்னும் ரூ.3,000 கோடியை சொத்து வரி செலுத்தவில்லை
  • ஒரு சொத்தை அதன் சந்தை மதிப்புக்கு குறைவாக வாங்க முடியுமா?
  • RERAவில் பதிவு செய்யப்படாத ஒரு சொத்தை வாங்கினால் என்ன நடக்கும்?
  • கோடைகாலத்திற்கான உட்புற தாவரங்கள்