வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டின் பிரதான கதவு குடும்பத்திற்கான நுழைவுப்பாதை மட்டுமல்ல, அது சக்தியின் நுழைவுப்பாதையும் கூட. வாஸ்துவின் படி வீட்டின் பிரதான கதவு நுழைவாயிலை வைப்பதற்கான சிறந்த திசை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசைகள் ஆகும், அவை மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன மற்றும் வீட்டில் நேர்மறையான ஆற்றலின் ஓட்டத்தை அனுமதிக்கின்றன.
“பிரதான வாயில்கதவு ஒரு மாற்றத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட பகுதியாகும், வெளி உலகத்திலிருந்து நாம் இதன் வழியாக வீட்டிற்குள் நுழைகிறோம். மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் வீட்டிற்குள் நுழையும் இடம் இது,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த வாஸ்து ஆலோசகர் நித்தியன் பர்மர். “இதன் விளைவாக, பிரதான நுழைவாயிலுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு ஆற்றல் ஓட்டத்தை அனுமதிக்கிறது அல்லது வெளியேற்றுகிறது. மேலும், பிரதான கதவு ஒரு வீட்டின் முதல் தோற்றத்தை உருவாக்குகிறது, ”என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பிரதான கதவு முன்பு தவிர்க்க வேண்டியவை
- ஒரு சுத்தமான வீடு, குறிப்பாக பிரதான நுழைவாயில் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்ப்பதாகும். காலணி அலமாரிகள், பழைய ஃபர்னிச்சர்கள், குப்பைத் தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது ஸ்டூல்களை பிரதான கதவுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும்.
- பிரதான கதவின் முன் ஒருபோதும் கண்ணாடியை வைக்க வேண்டாம். இது வீட்டிற்குள் நுழையக்கூடிய ஆற்றலை பிரதிபலித்து வெளியேற்றி விடும்.
- கருப்பு நிறங்களைக் கொண்ட எந்த ஓவியம் அல்லது கலைப்படைப்பையும் பிரதான நுழைவாயிலில் வைக்க வேண்டாம்.
- பிரதான நுழைவாயிலுக்கு விளக்குகளை வைக்கும்போது, சிவப்பு வண்ண விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பிரதான கதவின் முன்பு என்ன வைக்க வேண்டும்?
- ஒவ்வொரு வீட்டிலும் பிரதான கதவின் முன்பு ஒரு பெயர் பலகை இருக்க வேண்டும். வடமேற்கு திசை பார்த்த பிரதான நுழைவாயில் உள்ள வீடுகளின் கதவுக்கு உலோகத்தாலான பெயர் பலகை சிறந்தது. மற்றபடி நுழைவு வாயிலுக்கு முன்னால் மரத்திலான பெயர் பலகை வைக்கலாம்.
- பிரதான வாசலை ஓம், ஸ்வஸ்திக், சிலுவை போன்ற தெய்வீக சின்னங்களால் அலங்கரித்து, தரையில் அழகான கோலங்களை இடுங்கள். ஏனெனில், இவை அதிர்ஷ்டம் கொடுக்கும் மங்களகரமான சின்னங்களாகும்.
- விநாயகர் மற்றும் லக்ஷ்மி சிலைகளை வைப்பதன் மூலம் பிரதான நுழைவாயில் பகுதியை அலங்கரிக்கலாம். இது, குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்கும்.
- நீர் மற்றும் மலர் இதழ்கள் நிரப்பப்பட்ட ஒரு உர்லி அல்லது கண்ணாடி பானையை வைத்து வீட்டின் நுழைவாயிலை அழகுபடுத்துங்கள்.
- பிரதான நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி நன்கு வெளிச்சமாக ஜோதிர்மயமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான விளக்குகளை அங்கு பொருத்த வேண்டும் என்பது அவசியம்.
- வீட்டு நுழைவாயிலுக்கான பிரத்யேக வாஸ்து சாஸ்திரத்தின்படி, தீய விஷயங்களை விலக்கி வைக்கவும், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும், நுழைவு வாயிலில் குதிரை குதிகாலின் கருப்பு நிற லாடத்தை மாட்டி வைக்கலாம்.
- வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயிலில் வாசற்படி இருக்க வேண்டும். இது பளிங்கு அல்லது மரத்தாலான படிக்கட்டாக இருக்கலாம். ஏனெனில், இது எதிர்மறை அதிர்வுகளை உறிஞ்சி நேர்மறை ஆற்றலை மட்டுமே வீட்டினுள்ளே செல்ல அனுமதிக்கிறது என்பது வாஸ்து சாஸ்திர ஐதீகம்.
- மேலும், அழுக்கு மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் மிதியடிகளை வைக்கவும். ஏனெனில், வீட்டிற்கு வருபவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் காலணிகளை சுத்தம் செய்ய மிதியடிகளைப் பயன்படுத்துவார்கள்.
- மணி பிளான்ட் அல்லது துளசி செடி போன்ற மங்களகரமான செடிகளை வீட்டின் முன் வாசல் அருகே வைக்கவும்.
பிரதான வாசல் வாஸ்து திசை
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசைகள் மங்களகரமானதாக கருதப்படும் காரணத்தால் பிரதான கதவு எப்போதும் அந்தத் திசையிலேயே இருக்க வேண்டும் . தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு (வடக்கு பக்கம்) அல்லது தென்கிழக்கு (கிழக்கு பக்கம்) திசைகளில் பிரதான கதவு இருப்பதை தவிர்க்கவும்., ஈய உலோக பிரமிடு மற்றும் ஈய ஹெலிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி தெற்கு அல்லது தென்மேற்கில் உள்ள கதவை சரி செய்யலாம். வடமேற்கில் உள்ள ஒரு கதவை பித்தளை பிரமிடு மற்றும் பித்தளை ஹெலிக்ஸ் மூலம் சரிசெய்யலாம், அதே நேரத்தில் தென்கிழக்கு திசையில் உள்ள ஒரு கதவை செப்பு ஹெலிக்ஸ் மூலம் சரிசெய்யலாம், ”என்று பர்மர் பரிந்துரைக்கிறார்.
வீட்டின் பிரதான கதவு வீட்டில் உள்ள மற்ற கதவுகளை விட பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் கடிகாரம் சுழலும் திசையில் திறக்க வேண்டும். பிரதான கதவுக்கு இணையாக ஒரே நெடிய வரிசையில் மூன்று கதவுகளை வைத்திருப்பதைத் தவிர்க்கவும், இது ஒரு தீவிர வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது மற்றும் வீட்டில் மகிழ்ச்சியை பாதிக்கும்.
வீட்டின் வெவ்வேறு அறைகளுக்கு உகந்த பொருத்தமான திசை
வரவேற்பறை: கிழக்கு நோக்கிய அல்லது வடக்கு நோக்கிய வீட்டிற்கு வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். நுழைவு வாயில் மேற்கு நோக்கிய வீட்டின் வடமேற்கு திசையிலும், தெற்கு நோக்கிய வீட்டின் தென்கிழக்கு திசையிலும் இருக்க வேண்டும்.
டைனிங் அறை: வீட்டின் தென்கிழக்கு மூலையில் சமையலறை மற்றும் டைனிங் அறை பகுதியை வடிவமைக்கவும். டைனிங் அறைக்கு தெற்கு திசையை தவிர்க்கவும். வாஸ்துப்படி, டைனிங் அறை மேற்கு மூலையில் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் படுக்கையறை: வீட்டின் மேற்கு, வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு பக்கத்தில் குழந்தைகளுக்கான அறையை வடிவமைக்கவும். இருப்பினும், இந்த திசைகளில் இடமில்லை என்றால், தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில் அமைக்கலாம்.
குளியலறை: வடக்கு அல்லது வடமேற்கு மூலையில் உள்ள இடத்தை குளியலறைக்காக தேர்வு செய்யுங்கள்.
இதையும் வாசிக்க: வடக்கு பார்த்த வீடுக்கான வாஸ்து குறித்த முழு விவரம்
வீட்டு நுழைவு வாயில் வாஸ்து: பிரதான கதவுக்கான சிறந்த நிலைகள்
சிறந்த திசையை நோக்கி உங்கள் பிரதான கதவை வைக்க , மேலே உள்ள படத்தைப் காணவும். 1 என்பது சிறந்த நிலையைக் குறிக்கிறது, மற்றவை படத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. .
சில திசைகள் மற்றவற்றவற்றை விட ஏன் சிறந்தவை என்பது பற்றி இங்கே:
- வடகிழக்கு: படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல, உங்கள் பிரதான கதவை வைக்க, வடகிழக்கு மிகவும் சிறந்த மங்களகரமானது. காலையில் சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படுவதால் அபரிமிதமான ஆற்றலைப் பெறும் திசை இதுவே. இது வீட்டிற்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் மிக்க வலிமையையும் ஆற்றலையும் அளிக்கிறது.
- வடக்கு: இந்த இடம் குடும்பத்திற்கு செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது, எனவே உங்கள் வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயிலை வைக்க இது இரண்டாவது சிறந்த திசையாகும்.
- கிழக்கு: வீட்டின் பிரதான கதவை வைக்க இது மிகவும் உகந்த இடம் இல்லை என்றாலும் கிழக்குத் திசை உங்கள் சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அது கொண்டாட்டத்தை அதிகரிக்கிறது.
கிழக்கு நோக்கிய வீட்டின் பிரதான கதவு வாஸ்து பற்றி மேலும் வாசியுங்கள்
- தென்கிழக்கு: தென்மேற்கு திசையில் ஒரு போதும் நுழைவாயிலை வைக்காதீர்கள். வேறு வழியே இல்லை என்றால், வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்ட தென்கிழக்கு திசை நுழைவாயிலைத்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- வடமேற்கு: வேறு வழியில்லை என்றால், வடக்கு திசையில்தான் நுழைவாயிலை வைக்க வேண்டியதிருந்தால், அது வடமேற்கு திசையில் நுழைவுவாயிலாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாஸ்து படி, மாலை சூரியக்கதிர்களின் பலன்கள் மற்றும் செழிப்பை இந்த வழியில் வரவேற்கும் வகையில் இது அமையும்
மேலும் வாசியுங்கள் : வாஸ்துவின் படியான பிரதான வாயில் கதவின் வண்ணங்களின் கலவை
நுழை வாயில் தெற்குப்பக்கம் நோக்கிய வீட்டு வாஸ்து
பெரும்பாலான மக்கள் கிழக்க்கு நோக்கிய வீட்டையே விரும்புகிறார்கள் ஏனென்றால் அவை மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து வழிகாட்டுதல்களின் படி, தெற்கு நோக்கிய வீட்டை ஒருவர் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் தெற்குத் திசை மரணத்தின் கடவுளான எமனின் ஆட்சியில் இருப்பதாக நம்பப்படுவதால் அது அமங்கலமானது என்று கருதப்படுகிறது
இருப்பினும், சில நிபுணர்கள் ஏதோ ஒரு திசையை மட்டும் நல்லது அல்லது கெட்டது என்று கருதக்கூடாது என்று நம்புகிறார்கள். மேலும் ஒரு வீடு வாஸ்து கொள்கைகளின் படி வடிவமைக்கப்பட்டால் அது நேர்மறையான சக்திகளை ஈர்க்கும் மற்றும் அதில் குடியிருப்பவர்களுக்கு நல்ல அதிருஷ்டத்தை, வளத்தை வழங்கும்.
தெற்கு நோக்கிய வீடுகளுக்கு பயனுள்ள வாஸ்து குறிப்புக்கள் சில இங்கே:
முன் தலைவாசல் குறைபாட்டை சரிசெய்யுங்கள்: வீட்டின் தெற்குப் பகுதியை படம் வரையுங்கள், அதை தென்கிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசை நோக்கி ஒன்பது பாகங்களாக (பாதங்கள்) பிரியுங்கள். அந்த தெற்கு நோக்கிய வீட்டின் தலை வாசல் அதன் நாலாவது பாதத்தில் இருக்கவேண்டும். மற்றும் அது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஒருவர் மொன்றாவது அல்லது இரண்டாவது அல்லது முதல் பாதத்தை முடிவு செய்யலாம். நுழைவு வாயிலுக்கு தென்மேற்கு திசையை தவிருங்கள்
சமயலறை: தெற்கு நோக்கிய வீட்டு வாஸ்து படி, சமயலறையை வீட்டின் வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் அமையுங்கள். இது போதுமான அளவு சூரிய வெளிச்சத்தை உள்ளே கொண்டுவரும். தவிர, தென் கிழக்கு திசைதான் தீ கடவுள் அல்லது அக்னி ஆகும். மற்றும் அது சமையலறை அமைப்பதற்கு உகந்ததாகும் அது போதுமான அளவு காற்றோட்டத்தை உறுதி செய்யும்
படுக்கை அறைகள்: தெற்கு நோக்கிய நுழை வாயிலை கொண்ட ஒரு வீட்டின் தென்மேற்கு மூலையில் மாஸ்டர் படுக்கை அறையை வடிவமையுங்கள். அந்த வீட்டில் பல அடுக்கு மாடிதளங்கள் இருந்தால், அதன் மேல் மாடியில் மாஸ்டர் படுக்கை அறையை வைக்கத் தேர்ந்தெடுங்கள்.
தெற்கு நோக்கிய வீட்டு மனைக்கு வீட்டு வரைபடம் செவ்வக அல்லது சதுர வடிவத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தெற்கு மற்றும் வடக்குப் புற சுவர்கள் வலிமையோடு அடுத்த பக்கங்களின் சுவர்களை விட பெரியதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர் பம்ப்புகள், கார் நிறுத்தும் முகப்பு, செப்டிக் டேங்க், அல்லது தோட்டங்கள் தென் மேற்குத் திசையில் அமைப்பதைத் தவிருங்கள். எதிர்மறை சக்திகளை தடுக்க அதிகளவு மரங்களை நடுங்கள் அல்லது செடிகள் மற்றும் பூச்சாட்டிகளை வடமேற்குப்புறத்தில் வையுங்கள்
தென்கிழக்கு நுழைவாயில் வாஸ்து: தென்கிழக்கு நோக்கிய வீடு நல்லதா கெட்டதா?
வீட்டு நுழைவுவாயில் வாஸ்து வழிகாட்டுதல்களின்படி, தென்கிழக்கு திசையை நோக்கிய பிரதான கதவைத் தவிர்ப்பது நல்லது. தென்கிழக்கு நோக்கிய வீட்டின் நுழைவுவாயில் வாஸ்து தோஷம், இதற்கு எளிய பரிகாரங்கள் உள்ளன.
- தெற்கு அல்லது தென்மேற்கில் கதவு இருந்தால், ஈய உலோக பிரமிடு மற்றும் ஈயச் ஹேலிக்ஸ்சைப் பயன்படுத்தி குறைபாட்டை சரிசெய்யலாம்.
- வாஸ்து குறைபாட்டால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்க, செம்பு அல்லது வெள்ளிப் பொருட்களால் செய்யப்பட்ட ஓம் அல்லது ஸ்வஸ்திக் சின்னங்களை வைக்கவும். இதுவும் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் சக்தி கொண்டவை .
- நீங்கள் மூன்று வாஸ்து பிரமிடுகளையும் வைக்கலாம். அவற்றை ஒழுங்கமைக்க வீட்டின் நுழைவாயிலின் பிரதான கதவின் மேல் ஒரு பிரமிட்டை வையுங்கள் . மற்ற வாஸ்து பிரமிடுகளை கதவின் இருபுறமும் வைக்கவும்.
- வாஸ்து தோஷத்தை நீக்க தென்கிழக்கு நோக்கிய வீட்டின் நுழைவாயிலைச் சுற்றி பழுப்பு அல்லது அடர் சிவப்பு நிற திரைகளை தொங்க விடுங்கள்.
- இந்த வீட்டு நுழைவுவாயில் வாஸ்து தோஷத்திற்கு மற்றொரு வாஸ்து பரிகாரம் தென்கிழக்கு திசையை நோக்கி 9 சிவப்பு மாணிக்க ஆபரணக் கற்களை வைப்பதாகும்.
வாஸ்துப்படி பிரதான கதவின் அளவு
வாஸ்துப்படி பிரதான நுழைவாயில் கதவின் அளவு வீட்டில் மிகப் பெரியதாக இருக்க வேண்டும். இது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானது. ஏனெனில், இது குடும்பத்திற்கு அதிர்ஷ்டம், நன்மை மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வருவதாகும்.
ஒரே பெரிய கதவை விட இரட்டைக் கதவுகளாக இருந்தால் நல்லது. வாசல் நல்ல இடவசதியுடனும் மூலைகளிலிருந்து தூரமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வீட்டுக்கான சின்ன வெளியேறும் வழி: ஒரு வீட்டை வடிவமைக்கும்போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் பிரதான கதவை விட வெளியேறும் வழியானது சிறியதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்க.
வீட்டு நுழைவுவாயில் வாஸ்து: பிரதான கதவுக்கு முன்பாக என்ன வைக்க வேண்டும்?
- ஒவ்வொரு வீட்டிலும் பிரதான கதவுக்கு முன்னால் பெயர்ப்பலகை இருக்க வேண்டும். வடமேற்கு பிரதான நுழைவாயில் கதவுக்கு உலோகப் பெயர்ப்பலகை சிறந்தது, அதே நேரத்தில் நுழைவாயிலின் முன் ஒரு மரப் பெயர்ப் பலகையை வைக்கலாம்.
- ஓம், ஸ்வஸ்திகா, சிலுவை போன்ற தெய்வீக சின்னங்களால் பிரதான வாயில் கதவை அலங்கரித்து, தரையில் ரங்கோலிகளை வைக்கவும், அவை மங்களகரமானதாகக் கருதப்படுவதால் நல்ல அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் .
- விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகளை பிரதான நுழைவாயில் பகுதியில் வைத்து அலங்கரிக்கலாம், இது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை கொடுக்கும் .
- தண்ணீர் மற்றும் பூ இதழ்கள் நிரப்பப்பட்ட ஒரு ஒரு உருளை அல்லது கண்ணாடி பாத்திரத்தை வைத்து வீட்டின் நுழைவாயிலை அழகுபடுத்துங்கள்.
- பிரதான நுழைவாயிலைச் சுற்றியுள்ள பகுதி நன்கு வெளிச்சமாக இருப்பதை உறுதிசெய்யவும். விளக்குகளை முறையாக நிறுவவும்.
- தீயவைகள் வீட்டை அண்டவிடாமல் தடுக்கவும், வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை சக்திகளைத் எதிர்த்துத் தடுக்கவும், வீட்டின் நுழைவுவாயில் வாஸ்து சாஸ்திரத்தின்படி நுழைவு வாசலில் கருப்பு குதிரை லாடத்தைத் தொங்கவிடலாம்.
- வீட்டின் பிரதான கதவுவுக்கு முன் எப்போதும் ஒரு தொடக்க வாசல் இருக்க வேண்டும், (பளிங்கு அல்லது மரம்), அது எதிர்மறை அதிர்வுகளை உள்ளிழுத்துக் கொண்டு நேர்மறையான சக்திகளை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கிறது என்று நம்பப்படுகிறது.
- மேலும், , மக்கள் தங்கள் வீட்டிற்குள் நுழையும் முன் காலணிகளை சுத்தம் செய்வதன் மூலம் , அழுக்கு மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கால் மிதியடிகளை வைக்கவும்.
- மணி பிளாண்ட் அல்லது துளசி செடி போன்ற மங்களகரமான செடிகளை வீட்டின் முன் கதவுக்கு அருகில் வைக்கவும்.
பிரதான வாயில் கதவுக்கு முன் தவிர்க்க வேண்டியவை
- ஒரு சுத்தமான வீடு, குறிப்பாக பிரதான நுழைவாயில் கதவு, நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது. ஷூ ரேக்குகள், பழைய மரச்சாமான்கள், குப்பைத் தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது ஸ்டூல்களை பிரதான வாயில் கதவுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும்.
- பிரதான வாயில் கதவுக்கு முன்பாக கண்ணாடியை வைக்காதீர்கள். இது வீட்டிற்குள் நுழையும் சக்தியை பிரதிபலித்து தடுக்கும். .
- பிரதான கதவில் கருப்பு நிறங்கள் உள்ள எந்த ஒரு ஓவியம் அல்லது கலைப் படைப்புகளையும் வைக்க வேண்டாம்.
- பிரதான நுழைவாயில் கதவு விளக்குகளை நிறுவும் போது, சிவப்பு வண்ண விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
வாஸ்து படி பிரதானவாயில் கதவின் அளவு
வாஸ்து படி வீட்டின் பிரதானவாயில் கதவு அளவு அந்த வீட்டில் இருப்பதிலேயே மிகப்பெரியதாக இருக்க வேண்டும். இது வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று , ஏனெனில் இது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டம், வளம் மற்றும் ஆரோக்கியத்தைத் கொண்டுவரும்
ஒரு பெரிய ஒற்றை கதவாக இல்லாமல் யூனிட்டை விட இரண்டு பகுதிகளாக இருந்தால் நல்லது. கதவு நல்ல இடைவெளியோடு மற்றும் மூலைகளிலிருந்து விலகி இருப்பதை உறுதிசெய்யவும்.
பிரதானவாயில் கதவு வாஸ்து: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
பிரதான நுழைவாயிலில் சூரிய ஒளி மற்றும் போதுமான வெளிச்சம்
காலைபொழுதில் போதுமான அளவு சூரிய ஒளியை அனுமதிக்கும் பிரதான வாயில் கதவு மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் நுழைவு வாயிலுக்கு வடகிழக்கு திசை சிறந்தது. வீட்டின் பிரதான வாசலில் போதுமான சூரிய ஒளி பட வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், சூரிய ஒளியின் நேர்மறை ஆற்றல்களை பிரதிபலிக்கும் மஞ்சள் விளக்குகளை அந்தப் பகுதிகளில் பயன்படுத்தலாம்.
நுழைவாயிலில் எப்போதும் பிரகாசமான விளக்குகளை வையுங்கள் , ஆனால் சிவப்பு நிற விளக்குகள் தவிர்க்கப்படவேண்டும். குடியிருப்புகள் மற்றும் நவீன வீடுகளுக்கான வாஸ்து விதிகளின்படி, மாலை வேளையில் நுழைவாயிலில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்.
செல்வம் மற்றும் செழிப்புக்காக
வாஸ்துவில் கூறியுள்ளபடி, தண்ணீர் மற்றும் பூ இதழ்களால் நிரப்பப்பட்ட கண்ணாடி பாத்திரத்தை பிரதானவாயில் கதவு அல்லது வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைக்கவும். நீர் எதிர்மறை ஆற்றலை கடத்தாது தடுக்கும் என்பதால், அது உங்கள் வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் வீட்டு வாசலில் லட்சுமி பாத ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம். மேலும், இந்த பொருட்கள் வீட்டு நுழைவு வாசலில் அலங்கார பொருட்களாகவும் செயல்படுகின்றன.
பிரதான நுழைவுவாயில் கதவு அலங்காரம்
இடவசதி இருந்தால் நுழைவாயிலை பச்சை செடிகளைக் கொண்டு அலங்கரிக்கவும். டோரன்ஸ்களும் பிரதான வாயில் கதவு அலங்காரத்திற்கு சிறந்தது. விலங்கு சிலைகள், பூக்கள் இல்லாத மரங்கள் மற்றும் பிற உருவங்கள் அல்லது நீரூற்றுகள் மற்றும் நீர் கூறுகள் கூட பிரதான வாயில் கதவுக்கு அருகில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் காண்க : வீட்டின் நுழைவு வாயிலுக்கு எந்த செடி நல்லது
பிரதான வாயில் கதவு சுவர் வடிவமைப்பின் ஒரு பகுதியாக அலங்கார தொங்கும் மணிகள் உங்கள் வீட்டிற்கு நேர்மறையான உணர்வு அதிர்வுகளை உருவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். நுழைவுப்பகுதியில் ரங்கோலி, வடிவமைப்புகள் வீட்டினுள் லட்சுமி தேவி ,மற்றும் விருந்தினர்களை வரவேற்பதோடு மட்டுமல்லாமல், நேர்மறையான அதிர்வுகளையும், மகிழ்ச்சியையும் பரவச்செய்து தீமைகளை விரட்டுகிறது. வண்ணத் தூள், மஞ்சள் தூள், சுண்ணாம்பு தூள், கெரு (பழுப்பு மண் தூள்) மலர் இதழ்கள் அல்லது அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி ரங்கோலியை வடிவமைக்கலாம்.
பிரதான நுழைவாயில் கதவின் அமைவிடம்
வாஸ்து விதிகளின்படி, பிரதான வாயில் கதவு அல்லது வீட்டின் நுழைவு வாயில் எப்போதும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும். பிரதான வாயில் கதவு இடையில் எந்த தடையும் இல்லாமல் 90 டிகிரியில் திறக்க வேண்டும். அது கடிகார திசையில் திறக்கப்படுவதை உறுதி செய்யவும். தவறாமல் கீல்களுக்கு முறையாக எண்ணெய் பூசப்படுவதையும், கதவின் பாகங்கள் மெருகூட்டப்படுவதையும் உறுதிசெய்யுங்கள் நுழைவாயில் கதவில் உடைந்த அல்லது மரப் பிசிறுகள் அல்லது திருகாணிகள் இல்லாத நிலை போன்றவை இருக்கக்கூடாது. கூடுதல் ஆணிகள் அகற்றப்பட வேண்டும்.
வீட்டின் ஒரு மூலையில் பிரதான கதவை வைக்கக் கூடாது. குடியிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்காக வீட்டின் மூலைகளை காலியாக விட வேண்டும்.
பெயர்ப்பலகை மற்றும் வாஸ்து
நவநாகரீக வடிவத்தில் பெயர் பலகைகளை பிரதான வாயிற் கதவின் சிறந்த அலங்கார வடிவமைப்பு யோசனைகளில் வைப்பது ஒன்றாகும். பெயர்பலகை எப்போதும் வைக்கபட்டிருக்க வேண்டும். வடக்கு அல்லது மேற்கு திசையில் கதவு இருந்தால், பெயர்ப் பலகை உலோகத்தில் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. கதவு தெற்கு அல்லது கிழக்கு திசையில் இருந்தால், மரத்தால் ஆன பெயர் பலகையை பயன்படுத்தவும். மற்ற பிரதான கதவின் இடது புறமாக அதை பொறுத்துங்கள் ஏனென்றால் இதர பக்கங்களை விட அது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. ,
மேற்கு நோக்கிய வீடுகள் பற்றிய எங்கள் கட்டுரையில் மேற்கு நுழைவு வாயில் வாஸ்து பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்
பிரதான வாயிலில் அழைப்பு மணி
அழைப்பு மணியை ஐந்து அடி அல்லது அதற்கு மேலான உயரத்தில் வைக்கவும். அதிரும், வெண்கல ஒலி அல்லது அதிக ஒலி எழுப்பும் அழைப்பு மணிகள் தவிர்க்கப்பட வேண்டும். வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, இதமான மற்றும் மென்மையான ஒலியுடன் கூடிய அழைப்பு மணியைத் தேர்ந்தெடுக்கவும்.
பிரதான வாயில் கதவுக்கு பயன்படுத்தப்படும் மரத்தின் தரம்
அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு பிரதான வாயில் கதவு வாஸ்து கொள்கைகளின்படி, நீங்கள் சரியான மூலப் பொருளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உயர்தர மரத்தை மட்டுமே பயன்படுத்தவும், உங்கள் வீட்டில் உள்ள மற்ற கதவுகளை விட இந்த கதவின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஷட்டர்ஸ்டாக்
பிரதான கதவுகள் மற்றும் குளியலறைகள்
பிரதான கதவுக்கு அருகில் குளியலறைகள் வைக்கக் கூடாது. வெளிர் மஞ்சள், பீஜ் அல்லது மரவண்ணம் போன்ற நீளம் சார்ந்த மென்மையான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். சிவப்பு அல்லது ஆரஞ்சு போன்ற பிரகாசமான வண்ணங்களைத் தவிருங்கள். .
உயிர்ப்புடன் கூடிய பிரதான கதவு வண்ணங்களை தேர்வு செய்யவும்
பிரதான கதவுக்கு வாஸ்து திசையின் அடிப்படையிலான வண்ணங்கள் மிகவும் மங்களகரமானதாகவும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருபவையாகவும் விளங்குகின்றன:
- மேற்கு: நீலம் மற்றும் வெள்ளை.
- தெற்கு மற்றும் தென்கிழக்கு: வெள்ளி, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு.
- தென்மேற்கு: மஞ்சள்.
- வடக்கு: பச்சை.
- வடகிழக்கு: கிரீம் மற்றும் மஞ்சள்.
- வடமேற்கு: வெள்ளை மற்றும் கிரீம்.
- கிழக்கு: வெள்ளை, மர வண்ணங்கள் அல்லது வெளிர் நீலம்.
பிரதான கதவுக்கு கருப்பு வண்ணம் பூச வேண்டாம்.
மேலும் காண்க : உங்கள் இல்லத்திற்கு வாஸ்து அடிப்படையிலான சரியான வண்ணங்கள்
பிரதான வாயிலில் கடவுள் உருவச்சிலைகளை வைப்பது
உங்கள் வீட்டு நுழைவாயிலில் கடவுள் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்களை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, நல்ல அதிர்ஷ்டம்,. செல்வம் மற்றும் செழிப்பை வரவேற்கும் வகையில் உங்கள் வீட்டின் நுழைவாயிலில் விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள் மற்றும் புகைப்படங்களை வைக்கலாம். தேங்காயுடன் கலசம் மற்றும் விநாயகப் பெருமானைக் குறிக்கும் ஸ்வஸ்திகா போன்ற மங்களகாரமான சின்னங்களால் உங்கள் இல்லத்தின் பிரதான வாசல் அலங்கரிக்கப்பட வேண்டும்.
படிகள் குறித்து கவனமாக இருங்கள்
உங்கள் நுழைவாயிலில் படிகள் அமைப்பதாக இருந்தால், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான படிகள் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
கதவுகளின் எண்ணிக்கை
உங்கள் வீட்டில் இரட்டைப்படை எண்ணிக்கையில் கதவுகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாஸ்துவின் படி, உங்கள் வீட்டின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை, தெற்கு மற்றும் மேற்கு மூலைகளில் இருப்பதை விட அதிகமாக இருக்கவேண்டும்.
இருப்பினும், கதவுகளின் எண்ணிக்கை பத்து ஆக அல்லது எட்டின் மடங்குகளில் இருக்கக்கூடாது. கதவுகளை எண்ணும் போது விதிகளை அறிந்திருக்க வேண்டும். வீட்டின் பிரதான வாயில் அல்லது அவுட் ஹவுஸ் கதவுகளை வீட்டின் மொத்த கதவுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து கணக்கிடப்படக்கூடாது. மேலும், இருபுறக் கதவுகள் ஒரு கதவு என்று கருதப்படவேண்டும்.
ஒரு வீட்டின் நுழைவாயில் கதவுகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு நுழைவாயில் பகுதி ஒரு மூடப்பட்ட பகுதியாக உருவாக்கப்பட்டு மேல்புறமாக மூடப்பட்டிருந்தால், அத்தகைய பகுதி கதவுகளாக கணக்கிடப்படுகிறது. ஒரு வீட்டின் உள்ளே உள்ள பகுதிகளை பிரிக்க வடிவமைக்கப்பட்ட தடுப்புகளின் கதவுகள் மேற்கூரையை தொடாத பட்சத்தில் மொத்த கதவுகளின் எண்ணிக்கையில் கணக்கிடப்படாது.
சில வீடுகளில் முன்புறமாக ஒன்றுக்கு மேற்பட்ட பிரதான நுழைவு கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஒற்றை நுழைவுவாயிற் கதவை அமைப்பதே அதிக செல்வத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் நுழைவாயிலில் இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டிருப்பது அதில் குடியிருப்பாளர்களுக்கு வசதியான வாழ்க்கையை உறுதி செய்கின்றன, அதே நேரத்தில் மூன்று கதவுகள் அமைப்பது தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன மற்றும் அது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல், பிரதான நுழைவாயிலில் மூன்று கதவுகளுக்கு மேல் இருக்கக்கூடாது, ஏனெனில் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் முக்கியத்துவமும்
இரண்டு கதவுகள் | மங்களகரமானவை |
மூன்று கதவுகள் | பகைமைக்கு வழிவகுக்கும் |
நான்கு கதவுகள் | ஆயுளை நீட்டிக்க உதவும் |
ஐந்து கதவுகள் | நோய்கள் |
ஆறு கதவுகள் | நல்ல குழந்தைப்பேறு கொடுக்கும் |
ஏழு கதவுகள் | மரணம் |
எட்டு கதவுகள் | செல்வ வளர்ச்சி |
ஒன்பது கதவுகள் | நோய் |
பத்து கதவுகள் | கொள்ளை, களவு |
பதினொரு வாசல்கள் | நல்லனவற்றை அழிப்பது |
பன்னிரெண்டு கதவுகள் | வணிக வளர்ச்சி |
பதின்மூன்று கதவுகள் | ஆயுட்காலம் குறையும் |
பதினான்கு கதவுகள் | செல்வத்தைக் கூட்டும் |
பதினைந்து கதவுகள் | நன்மையை அழிக்கும் |
பிரதான கதவுக்கு இணையாக வேறு கதவுகள் இருத்தல் கூடாது
பிரதான கதவுக்கான வாஸ்து வழிகாட்டுதல்களின்படி, வீட்டின் நுழைவாயில் வீட்டின் பிரதான வாயில் போன்ற பிற கதவுகளுடன் இணைந்திருத்தல் கூடாது. வீட்டின் நுழைவாயில் கதவில் நிழல்கள் விழாமல் இருப்பதற்கு இது முக்கியம். மேலும், இது எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தூசிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும்.
ஜன்னல்
வீட்டின் பிரதான கதவின் முன் ஜன்னல் அமைக்கலாம்.
காலணிகள் ரேக்குகள் இருக்கக் கூடாது
நுழைவு கதவின் முன் வைக்கப்படும் அலங்கார பொருட்கள் வீட்டின் அழகை உயர்த்தும் அதே வேளையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வசதிக்காக வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் காலணி ரேக்குகளை வைத்திருப்பார்கள். இது வீட்டிற்கு திரும்பியவுடன் அவர்களின் காலணிகளை அகற்றவும், ஒதுக்கி வைக்கவும் உதவுகிறது. இது ஒரு வசதியாக இருந்தாலும் அதைத் தவிர்க்க வேண்டும். பிரதான கதவுக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் உடைந்த மாரசாமான்களுக்கும் இது பொருந்தும். பிரதான கதவுக்குப் பின்புறம் பொருட்களைத் தொங்கவிடுவதைத் தவிர்க்கவும்.
குப்பைக் கூடைகளை தூரத்தில் வையுங்கள்
குப்பைக் கூடையை வீட்டின் நுழைவாயில் அருகில் வைப்பது வீட்டுக்குள் எதிர்மறையான சக்திகளை கொண்டுவரும். இது குடும்பத்தின் நிதி நிலை மற்றும் வாளத்தின் மீது தாக்கத்தை ஏற்ப்படுத்தும். வீட்டு வாசல் தட்டுமுட்டு சாமான்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் மற்றும் அந்த இடத்துக்கு அருகில் குப்பைக் கூடைகளை வைக்காதீர்கள்.
சொத்தின் அமைவிட அமைப்பு (லேஅவுட்) சரிபார்க்கவும்
பெரிய நகரங்களில், ஒரு சொத்தை நீங்கள் வாங்குவதாக இருந்தால், உங்கள் வீட்டின் அமைவிட அமைப்பின் (லேஅவுட்) மீது உங்களுக்கு அதிகக் கட்டுப்பாடு இருக்காது அல்லது அதை உங்களால் தீர்மானிக்க முடியாது . இருப்பினும், நீங்கள் ஒரு சொத்தை வாங்கும் போது அந்த சொத்தின் , பிரதான கதவு வேறொரு வீட்டின் நுழைவாயிலை எதிரே அமையாமல் இருப்பதை சரிபார்க்கவும். இது பிரச்சனைகளை உருவாக்கலாம். மற்றொரு நபரின் பிரதான கதவு அல்லது ஒரு செடியின் நிழல்கள் கூட உங்கள் வீட்டிற்கு நல்லதல்ல.
கதவுகளின் இயற்கை மற்றும் வகைகள்
உங்கள் வீட்டின் நுழைவாயிலில் அழகாக வடிவமைக்கப்பட்ட கதவுகளை, நீங்கள் பயன்படுத்தினால் அது நுழைவாயிலின் அலங்காரத்தோற்றத்தை மேலும் அதிகளவு மேம்படுத்தும். . இருப்பினும், உங்கள் வீட்டின் நுழைவாயிலில் ஒரு புறமாக நகரும் கதவுகளை (ஸ்லைடிங் டோர்) நீங்கள் தவிர்க்க வேண்டும். வட்ட வடிவ கதவுகளை கூட பயன்படுத்தக்கூடாது. அவர்கள் நாகரீகமாகத் தோன்றலாம் ஆனால் அவை வாஸ்து விதிகளுக்கு எதிரானது. நுழைவாயிலுக்கு எளிமையான, உயர்ந்த தரமான கதவையே தேர்ந்தெடுங்கள். மரம் ஒரு விரும்பத்தக்க தேர்வாகும், மேலும் இது எந்த தோஷத்தையும் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
தொடக்க வாயிலின் முக்கியத்துவம்
பிரதான வாசலில் ஒரு தொடக்க வாசல் பகுதி இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. வீடு தரை மட்டத்தில் இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வெளியில் இருக்கும் எதிர்மறை ஆற்றலுக்கு எதிராக.வீட்டிற்குள் நேர்மறை சூழல் அமைந்திருப்பதைக் குறிக்கிறது, மோசமான எதிர்மறை அதிர்வுகள் நுழைவதற்கு வாசல் ஒரு தடையாக செயல்படுகிறது மற்றும் செல்வ இழப்பையும் தடுக்கிறது. படிக்கட்டுகள் இருந்தால், அவை ஒற்றைப்படை எண்களில் இருக்க வேண்டும்.
வாயிலில் ஒரு மிதியடியை வையுங்கள்
வாசலில் மிதியடி இருப்பது மிக முக்கியமானது. நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் பாதங்களில் தூசியை அகற்றுவது , வீட்டிற்கு வெளியே அனைத்து வகையான எதிர்மறை ஆற்றல்களையும் விட்டுவிடப்படுவதைக் குறிக்கிறது.
நச்சுத் தடை கழிவு நீர்த்தொட்டி
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நச்சுத் தடை கழிவு நீர்த்தொட்டி வீட்டின் பிரதான வாசல் முன் அமைக்கப்படக்கூடாது
வீட்டின் பிரதான வாயிலுக்கு அருகில் விளக்குகள்
உங்கள் பிரகாசமான மனநிலைக்கு உகந்தவகையில் நீங்கள் விரும்பும் விதத்தில், பிரதான நுழைவாயில் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்படுகிறது. நுழைவு வாயில் கதவு அலங்காரத்திற்கு நவநாகரீக ஒளி சாதனங்களை நிறுவுவது ஒரு சிறந்த யோசனை. இதமான வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்தவும், எப்போதும் இருண்ட, மங்கலான நுழைவாயில்களைத் தவிருங்கள். அது விரும்பத்தகாததும் மற்றும் துயரமளிப்பதும் ஆகும் . பிரதான கதவில் விரிசல்கள் அல்லது கீறல்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஏனெனில் இவை எற்ப்புடையவை அல்ல . விரிசல் விழுந்த கதவுகள் மரியாதை குறைவை ஏற்ப்படுத்திவிடும் .
முன்னறை பகுதி
வாஸ்து படி முன்னறை கூட முக்கியமான பகுதியாகும். நமது தத்துவங்களின்படி, நன்கு அலங்கரிக்கப்பட்ட முன்னறைப் பகுதி வீட்டிற்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் அதிசயிக்கத்தக்க பலன்களை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக இடப் பற்றாக்குறை காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள அனைவருக்கும் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய வீடுகளை வாங்குவது சாத்தியமில்லை. இருப்பினும், ஒரு வீட்டின் சிறந்த நிலைப்பாட்டை உங்களால் வாங்க முடிந்தால், ஒரு பரந்த இடத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு குறுகிய பாதை கொண்டதாக இருக்கவேண்டும் – அதுவே உங்களுக்கான சிறந்த வீடு.
பழுது பட்ட கதவுகளை அகற்றுங்கள்
பிரதான வாயிற் கதவில் பிளவு அல்லது கீறல்கள் இருக்கிறதா என்பதை சரிபாருங்கள், இவை இருப்பது நல்லதல்ல. வெடிப்பு விழுந்த கதவுகள் மதிப்பிழப்பை ஏற்ப்படுத்தும். வீட்டு நுழைவாயிற்கதவு பழுதடைந்திருந்தால் அல்லது வெடிப்புக்கள் இருந்தால் உடனடியாக அதை மாற்றி புதிய கதவை பொருத்துங்கள். உடைந்த,வெடிப்பு விழுந்த அல்லது பிசிர் உள்ள கதவுகள் வாஸ்து தோஷம் உள்ளவை என்று கருதப்படுகின்றன அவை குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
வீட்டின் பிரதான கதவின் முன் சாலைகள் சந்தி இருப்பதைத் தவிர்க்கவும்
வீட்டின் முன்னால் சாலைகளின் சந்தி இருப்பது கருத்துகளின் மோதலைக் குறிக்கின்றன. இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டால், ஒரு பிரதான கதவு ஒருபோதும் சந்தி சாலைகளை எதிர்கொள்ளக்கூடாது. ஏனெனில், அத்தகைய இடம் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளை அழைக்கும். மேலும், நுழைவாயில் கதவுகள் தெருவை விட உயர்ந்த மட்டத்தில் அல்லது குறைந்தபட்சம் அதே மட்டத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.
கண்ணாடி
வீட்டு நுழைவுப்பகுதி அலங்காரம் என்று வரும்போது, கண்ணாடிகளைப் பொருத்தி வைப்பது மிகவும் வழக்கமான செயல்பாடு. . இருப்பினும், நுழைவுப்பகுதிகளில் கண்ணாடிகள் அல்லது அது போன்ற சில பொருட்களை பொருத்தும்போது வாஸ்து வழிகாட்டுதல்களை கருத்தில் கொள்வது அவசியம். பிரதான கதவுக்கு எதிரே கண்ணாடியை அமைக்க வேண்டாம்.
மேலும் காண்க: வீட்டு அலங்காரங்களில் கண்ணாடிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
வீட்டு நுழைவுபகுதிக்கான வாஸ்து: பிரதான கதவு மற்றும் அதன் பார்வை
வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூய் ஆகிய இரண்டு கொள்கைகளும் பிரதான வாயில் கதவு முக்கியமாக பார்வையில் படும் படியாகவும் மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. உங்கள் வீட்டின் எண் அல்லது உங்கள் பெயரையும் கூட காட்சிப்படுத்துவது பிரதான கதவு நுழைவாயிலை தனித்து தோன்றச்செய்யும் ஒரு நல்ல வழி. . செதுக்குதல் போன்ற அலங்கார வேலைப்பாடுகளை விட, வாசலில் எளிமையான பெயர்ப்பலகையை வைப்பது சிறப்பாக இருக்கும். .
பெக்ஸெல்ஸ்
பிரதான வாயில் கதவு குறைந்தபட்சம் மூன்று அடி அகலத்துடன் ஏழு அடி உயரத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரிய கதவுகள் வீட்டிற்குள் அதிக ஆற்றலைக் கொண்டுவர உதவுகின்றன. எனவே, குறுகிய உயரம் குறைந்த கதவுகளைத் தவிர்க்கவும். மேலும், வீட்டில் உள்ள மற்ற கதவுகள் அதை விட உயரம் குறைவாக இருக்க வேண்டும். பின் கதவை உரிமையாளர்கள் பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தக்கூடாது. உங்கள் வீட்டு உதவியாளர் அல்லது பிற பணியாளர்கள் அதைப் பயன்படுத்தலாம்.
மேலும் காண்க: இல்ல பூஜை அறை குறித்த வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்
வீட்டு நுழைவுபகுதிக்கான வாஸ்து: பிரதான வாயில் கதவுக்கு வாஸ்துப் படி எந்த மூலப்பொருள் சிறந்தது?
பிரதான கதவுக்கு அது எந்த திசையானாலும் மரத்தாலான கதவு மிகவும் மங்களகரமானதாக இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரதான கதவு தெற்கு திசையில் இருந்தால், கதவு மரம் மற்றும் உலோகமும் கலந்ததாக இருக்க வேண்டும். அதேபோல, கதவு மேற்கில் இருந்தால், அதில் உலோக வேலைப்பாடு இருக்க வேண்டும். வடக்கு திசையில் உள்ள வீட்டின் பிரதான கதவு அதிக வெள்ளி நிறத்துடன் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பிரதான கதவு கிழக்கு நோக்கி இருந்தால், அது மரத்தால் செய்யப்பட்டு குறைந்த அளவிலான உலோக பாகங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
பெக்ஸெல்ஸ்
மர வேலைப்பாடுகள் கொண்ட கதவு
வேலைப்பாடுகளுடன் கூடிய கவர்ச்சிகரமான பாரம்பரிய மரக் கதவைத் தேடுங்கள். உங்கள் வீட்டின் பிரதான கதவை மங்களகரமான சின்னங்களால் அலங்கரிப்பது, தரையில் ரங்கோலி போடுவது, ஒரு நுழைவாயிலை வடிவமைப்பது போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மர வளைவுக் கதவு
உங்கள் வீட்டு நுழைவாயிலுக்கு மர வளைவுக் கதவைத் தேர்வு செய்க. நுழைவாயில் பகுதியை சுத்தமாகவும், குப்பைக் கூளமின்றி வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது நன்கு வெளிச்சமாகவும் ஜோதிமயமாகவும் இருக்க வேண்டும். அலங்கார பூந்தொட்டிகள் மற்றும் சிலைகளை வைப்பதன் மூலம் பிரதான கதவு பகுதியின் தோற்றத்தை மேம்படுத்தவும்.
வீட்டு நுழைவுபகுதி அலங்காரத்திற்கான வாஸ்து: பிரதான கதவைச் சுற்றியுள்ள பகுதியை அலங்கரித்தல்
குறிப்பாக பிரதான நுழைவாயிலைச் சுற்றி, தூய்மையாக வைத்திருப்பது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட உதவுகிறது. குப்பைத் தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது ஸ்டூல்களை பிரதான வாயில் கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம், என்று மும்பையைச் சேர்ந்த முழுமையான நலவாழ்வியலாளரான (ஹோலிஸ்டிக் ஹீலர்) காஜல் ரோஹிரா எச்சரிக்கிறார்.
பிரதான வாயில் கதவைச் சுற்றியுள்ள பகுதியில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். பிரதான நுழைவாயிலுக்கு எதிரே ஒரு கண்ணாடியை வைக்காதீர்கள், அது பிரதான கதவை பிரதிபலிப்பதனால் ஆற்றலை எதிர்த்து பின் நோக்கி செல்லக் காரணமாகிவிடும்.” என்கிறார் ரோஹிரா.
டெல்லியைச் சேர்ந்த தன்யா சின்ஹா என்ற இல்லத்தரசி, கிழக்கு நோக்கிய நுழைவாயிலுடன் கூடிய வீட்டை வாங்குவதற்கு முன், வீட்டின் பிரதான நுழைவாயில் வாஸ்து சாஸ்திரத்தின்படி இல்லாத காரணத்தால், கிட்டத்தட்ட ஒரு டஜன் குடியிருப்புகளை நிராகரித்தார். “எனது வீட்டின் பிரதான கதவு மேட் தங்க வண்ண முலாம் பூசப்பட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் செதுக்கப்பட்ட ஸ்வஸ்திகா வடிவமைப்பு மற்றும் தங்கவண்ணத்தில் பெயர்பலகை ஒன்று உள்ளது. பிரதான நுழைவாயில் அன்பான நல்வரவை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது, மேலும் நுழைவாயிலில் மஞ்சள் ஒளி வீசும் ஒரு அழகான விளக்கையும் வைத்துள்ளேன், ”என்று அவர் விளக்குகிறார்.
பெக்ஸெல்ஸ்
பிரதான கதவு ஒரு முன் வாசலைக் கொண்டிருக்க வேண்டும், (பளிங்கு அல்லது மரம்), அது எதிர்மறை அதிர்வுகளை உள்ளிழுத்துக் கொண்டு நேர்மறையான சக்திகளை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கிறது என்று நம்பப்படுகிறது.. வாஸ்து படி, குல்தேவதைகளின் (குடும்ப தெய்வம்) படத்தை பிரதான வாயில் கதவில் வைப்பது நல்லது. மேலும், பாரம்பரிய காவல் தெய்வங்களின் படங்களையும் செதுக்கி வைக்கலாம். மேலும், சங்கா மற்றும் பத்மநிதி (குபேரன்), காசுகள் கொடுப்பது, யானைகளுடன் ஒரு தாமரை மீது லட்சுமி அமர்ந்திருப்பது, தாத்திரி (குள்ளமான சேவகி), கன்றுடன் பசு, கிளி, மயில்கள் அல்லது அன்னம் போன்ற பறவைகள் உருவங்கள் ஆகியவற்றை கதவுகளில் பயன்படுத்தினால் நன்மை பயக்கும்.
- நேர்மறை ஆற்றலை கவரும் வண்ணம் மங்களகரமான சின்னங்களை வீட்டு நுழைவு அலங்காரபொருட்களாக வைப்பது, மிகச்சிறந்த யோசனையாகும்.
- ஓம், ஸ்வஸ்திகா, சிலுவை போன்ற இன்னும் பல தெய்வீக சின்னங்களால் பிரதான கதவை அலங்கரித்து, தரையில் ரங்கோலிகளை இட்டு வைப்பது மங்களகரமானதாகவும் அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாகவும் நம்பப்படுகிறது.
- ஃபெங் சூய் சாஸ்திரப்படி , 3 பழைய சீன நாணயங்களை கதவு கைப்பிடியில், உள் உரமாக இருந்து, சிவப்பு நாடாவால் கட்டி தொங்க விடுவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். இது வீட்டில் செல்வம் தழைப்பதை குறிக்கிறது.
- வீட்டு நுழைவாயிலில் புத்தர் சிலையை வையுங்கள் அது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டுவரும்
- பிரதான வாசல் பகுதியில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதில் பூ இதழ்களை போட்டு அலங்கரியுங்கள் அது சூழலை மேம்படுத்தும் அத்தோடு வீட்டிற்குள் தூய்மை மற்றும் நேர்மறை உணர்வுகளை வரவழைக்கும்
- நுழைவு வாயிலுக்கு அருகே வாழும் அறையில் மங்களகரமான ஓவியங்களை தொங்கவிடுங்கள். மலர்கள், அழகான இயற்கை காட்சிகள், நீர் வீழ்ச்சி அல்லது சூரிய உதயம் போன்ற ஓவியங்களை நீங்கள் வைக்கலாம்
- காற்றில் ஒலி எழுப்பும் மணிகளை தொங்க விடுங்கள் அவை வீட்டிற்கு நல்ல அதிருஷ்டத்தையும் வளத்தையும் கொண்டுவரும்
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பிரதான நுழை வாயில் கதவு தோஷத்திற்கு வாஸ்து சாஸ்திரம் பரிகாரம்
வாஸ்து படி தென்கிழக்கு நோக்கிய நுழைவு வாசல் மற்றும் தென்மேற்கு நோக்கிய நுழைவு ஆகியவை தவறான வாஸ்து நிலைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இங்கே சில எளிய பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றாலும் ஒரு வாஸ்து நிபுணரை அணுகி பிரதான கதவு வாஸ்து தோஷத்திற்கு ஆலோசனை பெறுவது எப்போதும் நல்லது.
வீட்டின் தென்கிழக்கு நுழைவாயிலை நோக்கி அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிற திரைச்சீலைகளை தொங்க விடுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்கிழக்கு திசை நோக்கிய நுழைவாயிலில் 9 சிவப்பு நிற போலி ரத்தினக் கற்களை வைப்பது தென்கிழக்கு நோக்கிய வீட்டு சொத்தில் உள்ள தோஷத்தை நீக்கி எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. நுழைவாயிலின் பிரதான கதவு மையத்தின் மேல் ஒரு வாஸ்து பிரமிடு வைக்கவும், மற்றும் இரண்டு பிரமிடுகளை கதவின் இருபுறமும் வைக்கவும்.
தென்மேற்கு நோக்கிய நுழைவு வாசல் வீடுகளில் தீய விளைவுகளைக் குறைக்க, பிரதான கதவின் பக்கங்களிலும் மேல்புறத்திலும் ஓம், திரிசூலம், ஸ்வஸ்திகா சின்னங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டவும். அல்லது ஓவியங்களை வரையவும் நேர்மறை ஆற்றலைக்கவர , பிரதான கதவைச் சுற்றி தாவரங்களை வைத்து காற்றில் ஒலி எழுப்பும் சாதனங்களைத் தொங்கவிடுங்கள் . மேலும், பிரதான வாயில் கதவில் ஒருவர் காயத்ரி மந்திரத்தை வரையலாம் அல்லது மந்திரத்தின் சிறிய ஸ்டிக்கரை ஒட்டலாம். இடது கையில் தனது ஆயுதத்தை (கதை)ஏந்தி நிற்கும் பஞ்சமுகி ஹனுமான்ஜி ( நிற்கும் நிலை) உருவத்தை பிரதான வாயில் கதவின் உச்சியில் மையமாக வைக்கவும்.
வீட்டு நுழைவு வாயிலுக்கான வாஸ்து: பிரதான கதவு குறைதீர பரிகாரம்
கதவுகள் வலது புறத்திலிருந்து இடது பக்கமாக திறப்பதாக இல்லாமல், இடது புறத்திலிருந்து வலது புறமாகத் திறப்பதாக அமைப்பது ஒரு வாஸ்து குறைபாடு. குறைபாட்டை சரிசெய்ய நுழைவாயிலில் மூன்று செப்பு பிரமிடு கடிகாரம் சுற்றும் திசை போன்ற அம்பு வைக்கவும்.
இரண்டு வீடுகளின் பிரதான நுழைவாயில் கதவுகள் ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் இருக்கக் கூடாது என்கின்றது வாஸ்து சாஸ்திரம். வீட்டில் இந்த தோஷத்துக்குப் பரிகாரமாக, குங்குமத்தில் ஸ்வஸ்திகா வடிவத்தை வரையலாம்.
வாஸ்துவின் படி, சமையலறை வீட்டின் பிரதான கதவை நோக்கி இருக்கக்கூடாது. வாஸ்து குறைபாட்டைக் குறைக்க பிரதான கதவுக்கும் சமையலறை கதவுக்கும் இடையில் ஒரு சிறிய ஸ்படிக பந்தை தொங்க விடவும்.
பிரதான கதவின் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் கூறுகள்
உங்கள் வீட்டின் பிரதான வாசலில் இருந்து வாஸ்து தோஷத்தை நீக்க உதவும் சில கூறுகள்:
அதிர்ஷ்டத்திற்கான பிரமிட்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பிரமிடுகள் எதிர்மறை சக்திகளை அகற்றுவதன் மூலமும் நேர்மறையான சூழலை உருவாக்குவதன் மூலமும் ஆற்றல்களின் தங்குதடையற்ற போக்குவரத்தை வரவேற்கின்றன.
கிரிஸ்டல் பந்துகள்
நீங்கள் பிரமிடுகளை வைத்திருக்க விரும்பவில்லை என்றால், கிரிஸ்டல் பந்துகளை வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, அவை ஆற்றல்களை அதிகரிக்க உதவுகின்றன. அத்துடன், வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கின்றன. இந்தப் பொருட்களை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாத இடத்திலும் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மீன் தொட்டிகள்
மீன் தொட்டிகள் அல்லது மீன் தொட்டிகள் என்பவை வாஸ்து சாத்திர கோட்பாடுகளின்படி மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. வாஸ்து குறைபாடுகளை நீக்க வரவேற்பறையின் வடகிழக்கு பகுதியில் வைக்கவும்.
குதிரைவாலி
வாஸ்து சாஸ்திரப்படி, அதிர்ஷ்டத்தை வரவழைக்க ஒரு வீட்டில் குதிரை லாடத்தை வைக்கலாம். நேர்மறை ஆற்றல்கள் சீராக பாய அதன் முனைகளை மேல்நோக்கி வைத்து நுழைவாயில் கதவில் தொங்கவிடலாம்.
கடல் உப்பு
சிறிய அளவு கடல் உப்பை வீட்டின் மூலைகளில் வைக்கவும். இது காற்றை சுத்தப்படுத்தவும், எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் உதவுகிறது.
பிரதான வாயில் கதவின் பூட்டுக்கள் மற்றும் சாவிகளுக்கான வாஸ்து
வீட்டு வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் நுழைவாயில் நேர்மறையான ஆற்றல், செல்வம் மற்றும் வளத்தை ஈர்த்து நல்வரவாக்குகிறது. பிரதான கதவின் பூட்டு தடையின்றி சீராக இயங்குவதை உறுதி செய்யுங்கள் .
பிரதான வாயிற் கதவு கிழக்கு நோக்கி இருந்தால் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட (காப்பர்)பூட்டை பயன்படுத்தவும். மேற்கு நோக்கிய பிரதான கதவுக்கு இரும்பு பூட்டுகள் சிறந்தது, ஏனெனில் அந்த பகுதி சனி பகவானை குறிக்கிறது. வடக்கிற்கு பித்தளைப் பூட்டுகளைப் பயன்படுத்துங்கள். பிரதான கதவு தெற்கில் இருந்தால், பஞ்ச தாது என்ற ஐந்து உலோகங்களால் செய்யப்பட்ட பூட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
துருப்பிடித்த அல்லது உடைந்த பூட்டுகள் மற்றும் சாவிகளை பயன்படுத்தக்கூடாது, அவற்றை உடனடியாக தூக்கி எறிந்து விடவேண்டும் . சாவிகள் உலோகத்தால் ஆனதால், ஆற்றலின் தாக்கத்தை சமமாக்க மரத்தாலான சாவிக் கொத்துக்களை பயன்படுத்துங்கள்.. மண்டை ஓடுகள், கைத்துப்பாக்கிகள், கத்திகள், கத்தரிக்கோல் போன்ற வடிவங்களின் கொண்ட சாவிக் கொத்துக்களைத் தவிர்க்கவும் . சூரியன் ஆமை, பூக்கள், யானை சிலைகள் போன்ற மங்களகரமான சின்னங்களைத் தேர்ந்தெடுக்கவும். சாவிக்கோத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும், குறிப்பாக பிரதான படுக்கையறையில் வடக்கு அல்லது கிழக்கு மூலையில் வைக்க வேண்டும் . சாவிகளை எப்போதும் முறையான சாவி ஸ்டாண்டில் வைக்கவும். டைனிங் டேபிளில், ஷூ ரேக்கிற்கு மேலே வைக்கக் கூடாது, ஏனெனில் இது எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும்.
மேலும் காண்க: படுக்கை அறைக்கான வாஸ்து குறிப்புக்கள்
பிரதான வாயில்கதவு: பிரதான வாயிற்கதவை டோரான் கொண்டு அலங்கரிப்பதற்கான குறிப்புக்கள்
வாஸ்து படி, பிரதான வாயிற் கதவில் டோரான் இருப்பது மங்களகரமானது மற்றும் அது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. டோரான் என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘டோரானா’ அதாவது ‘கடந்து செல்வது’ என்பதிலிருந்து பெறப்பட்டது,. பிரதான வாயிற்கதவு டோரான்கள் வீட்டின் ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதிலும் தீய சக்திகளை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
- பிரதான வாயிர்க் கதவுகளுக்கான தொங்கு டோரான் மா இலைகள் மற்றும் சாமந்தி பூக்களால் உருவாக்கப்பட்டது. அது செல்வத்தையும் அமைதியையும் வழங்குகின்றன. . இலைகள் மற்றும் பூக்கள் காய்ந்ததும் அதை மாற்றிவிடவும்.
- 108 பஞ்சமுகி ருத்ராட்ச மணிகளால் வடிவமைக்கப்பட்ட டோரான் ஆன்மீக மற்றும் பொருளாதார வெற்றிக்கு உதவுகிறது.
- அசோக இலைகளால் செய்யப்பட்ட டோரான் தீய சக்தியை விரட்டுகிறது.
- வாஸ்து தோஷத்தை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர, பிரதான வாயிற் கதவை கடல் ஓடுகளால் ஆன டோரான்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் துணி, ரத்தினக் கற்கள், முத்துக்கள், சிறிய மணிகளால் ஆன சுப லாப டோரான்கள் கலாஷ் மற்றும் ஸ்வஸ்திகா வடிவத்தில் அழகு நயமிக்க டோரான்கள் மற்றும் பந்தன்வார்கள் ஒருவருக்கு கிடைக்கின்றன. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை போன்ற மங்களகரமான வண்ண டோரான்களைத் தேர்ந்தெடுக்கவும்.
வாஸ்து படியான பிரதான வாயிற்கதவு வண்ணம்
வளைவான பிரதான வாயிற்கதவு
ஒரு வளைவான கதவு உங்கள் வீட்டிற்கு ஒரு உன்னதமான தோற்றத்தை அளிக்கிறது. நீங்கள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு வளைவான கதவை தேர்ந்தெடுக்கலாம். முன் கதவுப் பகுதியை மங்களகாரமான சின்னங்கள், செடிகள் மற்றும் பொருத்தமான விளக்குகளால் அலங்கரிக்கவும்.
கவர்ச்சிகரமான கைப்பிடிகளோடு கூடிய பிரதான வாயிற்கதவு
இன்றைய நாளில் பலவகையான கதவு கைப்பிடிகள் கிடைக்கின்றன. நீங்கள் சமகால வடிவமைப்பைக் கொண்ட கதவு கைப்பிடிகளை தேர்ந்தெடுக்காம் அல்லது பழமையான வடிவமைப்புக்களுடனான கதவு கைப்பிடிகளை தேர்வு செய்யலாம்.
தெற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின்படி, தெற்கு நோக்கிய பிரதான மரக் கதவுகளுக்கு பித்தளை கைப்பிடிகள் சிறந்த தேர்வாகும். மேற்கு நோக்கிய கதவாக இருந்தால், உலோகக் கதவு கைப்பிடிகளைப் பயன்படுத்தவும். கிழக்கு நோக்கிய வீட்டின் பிரதான வாயிற் கதவுகளுக்கு , மரம் மற்றும் உலோகம் இரண்டும் சேர்ந்த ஒன்றை வாஸ்து பரிந்துரைக்கிறது, வடக்கு நோக்கிய பிரதான வாயிற் கதவுகளுக்கு வெள்ளி கைப்பிடிகள் பரிந்துரைக்கப்படுகிறது.
மரக்கதவு வேலைப்பாடுகள்
மர கதவு வேலைப்பாடுகள் ஒரு பழங்காலத்திய பாரம்பரிய பழக்கமாகும். தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் மரச் சிற்பங்களுடன் உங்கள் பிரதான வாயிற் கதவுக்கு சமகாலத் தோற்றத்தை அளிக்கலாம். ஓம், ஸ்வஸ்திகா மற்றும் சிலுவை போன்ற வடிவமைப்புகளையும் அதோடு நீங்கள் ஒன்றிணைக்கலாம் பிரதான வாயிற் கதவு வாஸ்து படி, வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் இது ஈர்க்கும்.
வீட்டு நுழைவு வாயில் வாஸ்து: உங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது வாஸ்துக்கு இணக்கமாக இருக்கச்செய்ய எளிய வழிகள்
இப்போது, பிரதான வாயிற் கதவின் முக்கியத்துவம் மற்றும் அது வாஸ்து கொள்கைகளுக்கு இணக்கமாக இருக்கவேண்டியவை பற்றி நீங்கள் மிகவும் தெளிவாக அறிந்திருப்பீர்கள். குறைந்த செலவில் உங்கள் வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால், பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்:
- உங்கள் பிரதான நுழைவாயில் கதவு நல்வரவேற்பளிக்கும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்த, வாஸ்து விதிகளுக்கு இணக்கமான வண்ணங்களை மட்டுமே பூசவும் .
- பிரதான கதவு எதிர்மறையான பகுதியில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கதவின் கீல்கள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும். பிரதான வாயிற் கதவு ஒலி எழுப்புவதாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும்.
- பிரதான வாயிற் கதவில் ஒலி எழுப்பும் துருப்பிடித்த பூட்டுகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய பூட்டுகளை மாற்றவும் அல்லது அவற்றிற்கு தொடர்ந்து எண்ணெய் பூசவும்.
- வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய நோக்கம் வீட்டிற்குள் ஆற்றலை அதிகரிப்பதாகும். எனவே, வளைந்த பிரதான வாயிற் கதவைத் தவிர்ப்பது சிறந்தது, ஏனெனில் இது ஆற்றலின் ஓட்ட திசையை மாற்றும்.
- தானாக மூடும் கதவுகளைத் தவிர்க்கவும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் கொண்ட வீடாக இருந்தால், ஒவ்வொரு தளத்திலும் உள்ள கதவுகளை ஒன்றன் மேல் ஒன்றாக நேர் கோட்டில் வைக்கக் கூடாது.
இந்த பிரதான வாயில் வடிவமைப்பு குறித்த யோசனைகளையும் காணுங்கள்
பிரதான வாயிலுக்கான வாஸ்து: வண்ணங்கள்
- பிரதான நுழைவு வாயிலை வண்ணமயமாக உருவாக்குவதன் மூலம் வீட்டு நுழைவாயிலை நல்வரவை வேண்டும் ஒன்றாக தோற்றமளிக்கச்செய்யுங்கள். நேர்மறையான சூழலை அமைக்க நுட்பமான வண்ணங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- இந்த விளைவை ஏற்ப்படுத்த மென்மையான மஞ்சள், மர அல்லது மண் வண்ண சாயல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- சிவப்பு அல்லது ஆரஞ்சு போன்ற பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- கருப்பு வண்ணங்கள் சோகம், ஆணவம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உருவாக்கும் என்பதால், பிரதான வாயிற் கதவுக்கு வண்ணம் தீட்ட கருப்பு நிறத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
- வீட்டின் படுக்கையறை கதவுகளுக்கு வெள்ளை நிறம் ஒரு சிறந்த தேர்வாகும். வெள்ளை நிறம் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
வடக்கு நோக்கிய வீட்டின் பிரதான வாயிற் கதவு வாஸ்து
வடக்கு திசை ஐஸ்வர்யத்தின் கடவுளான குபேரனால் ஆட்சி செய்யப்படுகிறது, வடக்கு நோக்கிய பிரதான வாயிலைக் கொண்ட வீடு அதிகளவிலான மக்களுக்கு மங்களகரமானதாகவும் மற்றும் பலன்களை வழங்குவதாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக வங்கி, நிதி சேவைகள் மற்றும் சொந்த வணிக நபர்களுக்கு சிறந்ததாக அமையும். இருப்பினும் வடக்கு நோக்கிய வீட்டை தேர்ந்தெடுத்தாலோ அல்லது கட்டினாலோ வாஸ்து விதிகளுக்கு இணங்க ஒருவர் நடக்கவேண்டும்
- வாழும் அறை: வாழும் அறைக்கு வடமேற்குத் திசைதான் மிகவும் உகந்தது
- படுக்கை அறை: வடக்கு நோக்கிய வீட்டின் படுக்கை அறை வடக்கு , வடமேற்கு,தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்
- சமையலறை: சமையலறைக்கு சிறந்த திசை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையாகும்
- படிக்கட்டுக்கள்: படிக்கட்டுக்கள் தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு அல்லது வடமேற்கு திசைக்கைல் இருக்கவேண்டும். வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் படிக்கட்டுக்களை அமைப்பதை தவிருங்கள். படிக்கட்டுக்கள் கடிகார திசையில் அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வடகிழக்கு நுழைவாயில் வாஸ்து
வடகிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஒரு வீட்டின் பிரதான நுழை வாயில் இஷான் கார்னர் என்றும் அழைக்கப்படும் மற்றும் குடியிருப்பவர்களுக்கு அது மங்களகரமானதாகவும் நல்ல அதிருஷ்டத்தை கொண்டுவருவதாகவும் அமையும். ஒரு வடகிழக்கு நுழைவாயில் வாஸ்துப்படி , புதிய வாய்ப்புக்களை ஈர்க்கும். வடகிழக்கு நோக்கிய நுழை வாயிலுக்கு பின்பற்றவேண்டிய சில வாஸ்துக் குறிப்புக்கள் இங்கே
- எதிர்மறையான சக்திகளை தடுத்து நிறுத்த, நுழைவாயில் பகுதி நல்ல பிரகாசமாகவும் பரந்த இடத்தை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- வடகிழக்கு மூலையில் படிக்கட்டுக்கள் அல்லது படுக்கை அறை அமைந்திருப்பதை தவிருங்கள்
- தென்மேற்கு மூலையில் மாஸ்டர் படுக்கை அறையை வடிவமையுங்கள். தென்கிழக்கு திசையை நோக்கிய எந்த ஒரு படுக்கை அறையையும் தவிருங்கள்.
- வடகிழக்கு திசையில் சமயலறை அமைந்திருப்பதை தவிருங்கள். தென் கிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில் சமையலறை வடிவமைக்கப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது
தென்மேற்கு வாஸ்து
வாஸ்துவின்படி, தென்மேற்கு திசை கடுமையான கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் ராகு கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த திசை பெரும்பாலும் தீமையின் திசையாக கருதப்படுகிறது. வீட்டின் நுழைவாயிலைக் கருத்தில் கொள்ளும்போது, செல்வத்தின் கடவுளுடன் தொடர்புடைய வடமேற்கு போன்ற ஒரு மங்களகரமான திசையைத் தேர்வு செய்ய வேண்டும். தென்மேற்கு நுழைவாயில் செல்வத்தை ஈர்க்கும், ஆனால் துரதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும்.
வாஸ்து படி பிரதான வாயிற் கதவுக்கு எந்த மரம் சிறந்தது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முன் கதவை வடிவமைக்க மரம் ஒரு நல்ல பொருளாக கருதப்படுகிறது. பிரதான வாயிற் கதவு உயர்தர மரத்தால் செய்யப்பட வேண்டும். தேக்கு மரம் அல்லது ஹொன் மரம் போன்ற வகைகளை ஒருவர் தேர்வு செய்யலாம். தென்னை அல்லது பீப்பல் வகை மரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மேற்கு நோக்கிய பிரதான வாயிற்கதவின் தோஷத்தை எவ்வாறு அகற்றுவது.
வடக்கு அல்லது கிழக்கு நோக்கிய வீடுகளை போல மேற்கு நோக்கிய
வீடுகள் அவ்வளவாக அதிருஷ்டம் இல்லாத வீடுகள் என்று பொதுவாக
மக்கள் கருதுகிறார்கள். உங்களிடம் ஒரு மேற்கு நோக்கிய சொத்து
இருக்குமானால், வாஸ்து தோஷங்கள் சரிசெய்யப்படுவதை உறுதி
செய்து கொள்ளுங்கள். வாஸ்து பரிந்துரைக்கும் பொருட்கள் மற்றும்
வண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள். பிரதான வாயிற்கதவிற்கு நீலம்
அல்லது வெள்ளை வண்ணத்தை தேர்ந்தெடுங்கள்.
வாஸ்துப்படி அலுவலக பிரதான நுழைவாயில் கதவு
அலுவலக பிரதான கதவை வடிவமைக்கும்போது வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றவும். இயற்கையின் பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் விண்வெளி ஆகியவை சமநிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான விதிகளை வாஸ்து பரிந்துரைக்கின்றது.
வாஸ்துப்படி, அலுவலக பிரதான கதவு கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும்.
அலுவலகம், தொழிற்சாலை அல்லது ஏதேனும் வணிக இடத்திற்கான மனைகளைத் தேடும்போது, ஷெர்முகி மனைகள் முன்புறத்தில் அகலமாகவும், இறுதியில் குறுகலாகவும் இருப்பதால் அவற்றைத் தேடுங்கள். பயணங்கள் அதிகம் நிரம்பிய சாலைகளுக்கு அருகில் நிலம் இருக்க வேண்டும். வடக்கு நோக்கிய, வடகிழக்கு நோக்கிய அல்லது வடமேற்கு நோக்கிய திசை கொண்ட அலுவலகம் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும். அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் எந்த பொருளையும் வைக்க வேண்டாம். ஏனெனில், அது ஆற்றல் ஓட்டத்தை தடுக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
வீட்டின் நுழைவு வாயில் எந்த திசையை நோக்கி இருப்பது சிறந்தது?
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசைகள் மங்களகரமானதாக கருதப்படுவதால் பிரதான வாயிற் கதவு / நுழைவாயில் எப்போதும் அந்தத் திசையிலேயே இருக்க வேண்டும் தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு (வடக்கு பக்கம்) அல்லது தென்கிழக்கு (கிழக்கு பக்கம்) திசைகளில் பிரதான வாயிற் கதவை அமைப்பதைத் தவிர்க்கவும்.
சிரிக்கும் புத்தர் உருவத்தை பிரதான வாசலில் வைக்கலாமா?
சிரிக்கும் புத்தரை, மூலைவிட்டத்திற்கு நேரெதிராக அல்லது பிரதான கதவை நோக்கி வகையில் வீட்டின் உட்புறம் பார்த்தவாறு வைக்கவும். பிரதான வாசல் மூலமாக வீட்டிற்குள் கடந்து செல்லும் ஆற்றல் சிரிக்கும் புத்தரால் வரவேற்கப்படுகிறது மற்றும் தீய சக்திகள் சுத்திகரிக்கப்படுகிறது.
எந்த நிறம் முன் கதவு எந்த வண்ணத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும்?
இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளவாறு , பிரதான கதவு வண்ணத்தை வாஸ்துவின்படி அதன் திசையைப் பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிரதான வாயிற் கதவுக்கு முன் சுவர் அமைக்கலாமா?
வாஸ்து சாஸ்திரத்தின்படி பிரதான வாயிற் கதவுக்கு நேர் எதிரே சுவர் இருக்கக் கூடாது. இருப்பினும், ஒரு அறைக்கு செல்வதற்கான மற்றொரு கதவு இருக்கலாம்.
பிரதான வாயிற் கதவுக்கு அருகில் ஒரு மிதியடியை ஏன் வைக்க வேண்டும்?
வாஸ்து படி, பிரதான வாயிற் கதவுக்கு அருகில் உள்ள மிதியடி காலணிகளில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது; வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றலையும் உள்ளிழுத்துக் கொள்ளும். மிதியடி விரிப்புக்கு இயற்கையான இழைகளால் நெய்யப்பட்ட துணியைத் தேர்ந்தெடுத்து, அதை அடிக்கடி சுத்தம் செய்யவும். பிரதான வாயிற் கதவு பயன்பாட்டிற்கு செவ்வக வடிவ மிதியடிகளை பயன்படுத்துங்கள் அவை கதவின் முழு இடத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அமையும்.
தென்கிழக்கு திசையை நோக்கிய வீடு நல்லதா?
தென்கிழக்கு திசையை நோக்கிய வீட்டின் நுழைவு வாசல் வாஸ்து விதிகளுக்கு முரணானது.
வீட்டில் சுப லாப சின்னத்தை எங்கு வைக்க வேண்டும்?
சுப் லாப் (Shubh Labh) என்ற சுப லாப சின்னம் பல வீடுகளில் பிரதான வாசலுக்கு வெளியே நீங்கள் காணும் ஒரு மங்களகரமான சின்னமாகும். சுப் என்றால் நற்குணம், லாப் என்றால் நன்மை என்று பொருள். வாஸ்துவின்படி, வீட்டின் பிரதான நுழைவாயிலின் இருபுறமும் சுப லாப் சின்னம் வைக்கப்பட வேண்டும். இது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கிறது. அத்துடன், எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது.
(ஹரிணி பாலசுப்ரமணியனின் உள்ளீடுகளுடன்)