தமிழ்நாடு அரசு 2017-2018ல் 3 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்: மத்திய வீட்டுவசதித்துறை மந்திரி நாயுடு

2017-18 ஆண்டில் மூன்று லட்சம் வீடுகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது, “அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ் ,ரூபாய் 3,855 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2017-18ஆண்டில் தமிழ்நாடு அரசு மூன்று லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது, மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீட்டு வசதி  ‘ திட்டத்தின் கீழ், “2017-18ஆண்டில் மூன்று லட்சம் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எனக்கு உறுதி அளித்துள்ளது.”, என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நிதி பற்றி தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மொத்த செலவினம்  ரூ.3,855 கோடி, அதில் மாநிலங்களுக்கு 1,433 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்று கூறினார். இந்திய  அரசாங்கத்திடம் இருந்து பொருளாதார உதவி பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.  இதே போக்கினை பயன்படுத்தி, மாநில அரசு வீடுகளின் கட்டுமானத்தையும் துரிதப்படுத்த வேண்டும் “, என்று அவர் கூறினார்.

மேலும், கட்டுமான தொழில்செய்யம் நிறுவனங்கள்   தங்களின் செய்தித்தாள் விளம்பரங்களில் விளம்பரப்படுத்தும் வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேற்றுமாறு நாயுடு அறிவுறுத்தினார். நான், உங்களை விதிகளில் மீறி எதையும் செய்யுமாறு கேட்கவில்லை. நீங்கள் செய்தித்தாள்களில் செய்த வண்ணமயமான விளம்பரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தியவற்றை  நிறைவேற்றுங்கள், நீங்கள் வாக்குறுதியளித்தபடி, கார்பெட் ஏரியாவை காட்டுங்கள், நீங்கள் கட்டுமானத்தை முடித்துத்தருவதாக சொன்ன காலத்திற்குள், அதனை முடித்து ஒப்படையுங்கள்”, என்று அவர்களை எச்சரித்தார் .

மேலும், அடுக்குமாடி கட்டட அமைப்பாளர்கள், விதிகளை  பின்பற்றவில்லை என்றால் அவர்களுக்கு ‘அபராதம்’ விதிக்கப்படும்  எனவும், அல்லது ‘சட்டரீதியாக’ தண்டிக்கப்படுவர் என்றும் அவர்களை எச்சரித்தார்.இந்த துறையில்  ‘அளப்பரிய சேவை’ செய்வதற்காக கட்டுமான நிறுவனங்களை அமைச்சர் பாராட்டினார் . “2022 ஆம் ஆண்டளவில் “அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தை அரசு மட்டுமே அடைய முடியாது. இதில், பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் தனியார் துறைகள் இணைந்து ஒரு மாபெரும் பங்காற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் கூறினார்.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வே பிரிவின் முதல் கட்டம் ஜூன் 2024 க்குள் தயாராக இருக்கும்
  • கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிகர லாபம் 27% அதிகரித்து 725 கோடி ரூபாயாக உள்ளது.
  • சித்தூரில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
  • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பார்க்க வேண்டிய 25 சிறந்த இடங்கள்
  • சிம்லா சொத்து வரிக்கான காலக்கெடு ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • ஒப்பந்தம் கட்டாயப்படுத்தினால், டீம்ட் கன்வேயன்ஸை மறுக்க முடியாது: பாம்பே உயர்நீதிமன்றம்