படுக்கையறை வாஸ்து: கட்டில் வைக்கும் திசை முதல் படுக்கை அறை டிசைன் வரைக்குமான பயனுள்ள வாஸ்து குறிப்புகள்

சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் கூட அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும், சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல தகவல்களையும் வாஸ்து சாஸ்திரம் இங்கே கூறுகிறது. மேலும், இவ்வாறு அமைப்பதால் வாஸ்து முறைப்படி படுக்கையறையில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து தம்பதியரிடையே நெருக்கத்தைக் கூட்ட வழிவகுக்கப்படுகிறது.

நாம் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றுவர்கள் பலரை நம் வாழ்க்கையில் கடந்து வந்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின் மூலம் நம் வாழ்க்கையையும், வாழும் இடத்தையும் மேம்படுத்தலாம் என்றும், வாழ்க்கையில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறை ஆற்றலைத் தக்கவைக்க வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் கூறுவர். வாஸ்து சாஸ்திர விதிகளை உறுதியாக நம்பாதவர்கள் கூட வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடு, அந்த இடம் முழுவதையும் சுற்றி ஏற்படும் நன்மைகளை புரிந்துகொண்ட பிறகு, வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற முனைகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும் மிக முக்கியமாக தம்பதியர்கள் இடையே உறவுகள் சீரடைய உதவியாக உள்ளது. வாஸ்து முறைப்பபடி சரியான திசையில் படுக்கையும், சரியான தூங்கும் திசையும் அமைப்பதன் மூலம் ஒருவர் நேர்மறை ஆற்றலை உணர முடியும். இதனால் படுக்கையறையை வடிவமைக்கும்போது படுக்கையின் திசை, அறைக்கு அடிக்கக்கூடிய பெயின்டின் வண்ணம் ஆகியவை வாஸ்து முறைப்படி அமைக்கபட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். அத்துடன், வாஸ்து விதிகளை பின்பற்றி தூங்கும் திசையை நிர்ணயிக்க வேண்டும்.

Table of Contents

வீட்டில் நமது தனிப்பட்ட விஷயங்களுக்கான மிக முக்கியமான அறையாகவே படுக்கையறை உள்ளது. அந்த இடத்தை அமைதி, ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய இடமாக வாஸ்து மூலம் எவ்வாறு மாற்றுவது என்று பார்க்கலாம்.

 

 

“வாஸ்து சாஸ்திரம் என்பது இந்திய கட்டிடக் கலையின் ஓர் அங்கமான பழமைமிக்க பிரபஞ்ச விஞ்ஞானம் ஆகும். மேலும், இது ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கானச் சூழலை உருவாக்க உதவுகிறது. இது ஒரு சீரான சமநிலை வாழ்க்கை உருவாக்குவதை உறுதி செய்வது பற்றியதாகும்” என்று வாஸ்து ஆலோசகரும், வாஸ்து சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை எழுதியவருமான மும்பையைச் சேர்ந்த நிதின் பர்மர் கூறுகிறார்.

பழமை மிக்க வாஸ்து சாஸ்திர விதிகளின்படி தூங்குவதற்கு ஏற்ற வாஸ்து திசையாக தெற்கு திசையே உள்ளது. அதாவது, நீங்கள் தூங்கும்போது உங்கள் தலை தெற்கு திசையை நோக்கியவாரும், கால்பகுதி வடக்கு திசையை நோக்கியவாரும் இருக்க வேண்டும். வாஸ்து முறைப்படி தூங்கும் நிலைகளுக்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு முழுமையான படுக்கையறையை வடிவமைப்பதற்கான ஒரு முழு வழிகாட்டுதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: பென்ட்ஹவுஸ்கள் பற்றிய முழு விவரம்

 

வாஸ்துப்படி கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து முறைப்படி வீட்டில் படுக்கையைறையை தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறந்தது. மேலும், தூங்கும்போது தலை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறும், கால்கள் வடக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியவாறும் படுக்கை அமைப்பது வாஸ்துபடி, சிறந்தது.

வாஸ்து முறைப்படி மாஸ்டர் படுக்கையறையில் கட்டில் வைக்கபட்டுள்ள இடம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது குடும்ப ஆரோக்கியத்துக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் அடிப்படையாக உள்ளது. வாஸ்து முறைப்படி, மாஸ்டர் படுக்கையறையில் உறங்க ஏதுவான திசை தெற்கு அல்லது மேற்கு ஆகும். தெற்கு அல்லது மேற்கு திசையில் உள்ள சுவருக்கு எதிராக கட்டில் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கால் பகுதி வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கும்.

வாஸ்து முறைப்படி விருந்தினர் அறையில் படுக்கையை தூங்கும்போது தலை மேற்கு திசையை நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். மேலும், மரத்தால் ஆன படுக்கை / கட்டில்தான் சிறந்தது. மெட்டல் படுக்கைகள் / கட்டில்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். மேலும், இரண்டு தனித்தனி மெத்தைகளில் உறங்காமல் ஒரே மெத்தையில் உறங்குவது தம்பதியர் இடையே நெருக்கத்தைக் கூட்டும்.

படுக்கையறையின் மூலையில் படுக்கையை அமைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில், இது நேர்மறை ஆற்றலை அறை முழுவதும் பரவாமல் தடுக்கிறது. வாஸ்து முறைப்படி படுக்கை அறையில் படுக்கையை சுவற்றின் மையப் பகுதியில் அமைக்கலாம். இவ்வாறு அமைக்கும்போது அறையைச் சுற்றிலும் போதுமான இடம் இருக்கும்.

bedroom vastu

Pexels

 

தம்பதியருக்கான படுக்கையறை வாஸ்து சாஸ்திரம் மற்றும் தூங்கும் திசைக்கான குறிப்புகள்

தம்பதிகள் வீட்டின் உரிமையாளராக இருந்தால், வாஸ்து முறைப்படி அவர்கள் தென்மேற்கு திசையில் அமைக்கபட்ட படுக்கையறையில் உறங்கலாம். புதுமணத் தம்பதியராக இருந்தால் வாஸ்து முறைப்படி அவர்கள் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை அறையைத் தேர்ந்தெடுக்கலாம். வாஸ்து விதிகளின் அடிப்படையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள படுக்கையறையை பயன்படுத்தக் கூடாது. இது, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

மாஸ்டர் படுக்கையறையில் படுக்கையின் நிலையானது வாஸ்து முறைப்படி தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்கலாம். ஆனால், இந்த இரண்டு திசைகளுக்கும் இடையில் அமைக்க கூடாது. ஏனெனில், இது உறவு நிலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும், சீரான உறவு நிலைக்கு கணவனது இடது பக்கமே மனைவி உறங்க வேண்டும். மேலும், படுக்கையறையின் வடகிழக்கு திசை அலங்கோலமாக இருக்கக் கூடாது. அறையின் மூலையில் உறங்குவதைத் தவிர்க்கலாம் ஏனெனில், இது அறையைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றல் பரவுவதை தடுக்கிறது. எனவே, கட்டில் வைக்கபடும் நிலை அக்கட்டிலின் இருபுறமும் போதுமான அளவு இடம் இருப்பதற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

படுக்கையறையில் ஷோ பீஸ் அல்லது கலைப் பொருட்களை வைக்க விரும்பினால், ஜோடி அல்லாத பொருட்கள், அதாவது ஒற்றை விலங்கு அல்லது ஒரே ஒரு பறவை போன்ற கலைப் பொருட்களை வைக்க வேண்டாம். அவற்றுக்கு பதிலாக ஜோடி புறாக்கள் அல்லது லஷ்மி தேவி நாராயணர் கடவுள் தம்பதிகள் போன்று ஜோடிகளாக உள்ள கலைப் பொருட்களை வைக்கலாம்.

படுக்கையறையில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், வாஸ்து முறைப்படி போர்க் காட்சிகள், அரக்கர்கள், ஆந்தைகள், பருந்துகள், கழுகுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மான்கள், அன்னப் பறவைகள், கிளிகள் ஆகியவை அடங்கிய படங்களை வைக்கலாம். மேலும், நல்ல நினைவுகளை நினைவூட்டும் வகையிலான படங்கள், குடும்பத்துடன் உல்லாசப் பயணங்களில் எடுத்த படங்கள், நினைவுப் பரிசுப் பொருட்கள், நிக்-நாக்ஸ் ஆகியவற்றை வைப்பதன் மூலம் அந்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதாக அமையும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு தம்பதியர்கள் படுக்கையறையில் ஜோடியல்லாத தனித்து உள்ள கலைப் பொருட்களை வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக அன்பை வெளிப்படுத்தக்கூடிய விதமாக இரு இதயங்கள் இணைந்தவாறு உள்ள படங்கள், வாத்துகள், லவ் பேர்ட்ஸ், புறாக்கள், ராதாகிருஷ்ணன் படம் போன்றவற்றை வைக்கலாம். புதுமணத் தம்பதிகளின் படுக்கையறையில் மார்பிள் தரையை அமைப்பதை தவிர்க்கலாம்.

நல்ல உறக்கத்தின் முக்கியத்துவம்

மனித உடலுக்கு பல்வேறு காரணங்களால் நல்ல உறக்கம் தேவை. முதலில், நல்ல தூக்கம் மூலம் மூளையின் செயல்பாடும்,  மனநிலையின் லெவல்களும் மிகச் சிறப்பாக ஆகிறது. இதனால், ஒருவர் தனது தினசரி வேலைகளில் ஃபிரெஷ்ஷாகவும் ஆக்டிவாகவும்  செயலாற்ற முடிகிறது. இதன் மூலம், ஒருவரால் தனது வேலைகளில் நல்ல கவனம் செலுத்தி, உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்  முடிகிறது. மேலும், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. இதன் மூலம் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்கள் அண்டாதவாறு வைக்க உதவுகிறது. அத்துடன், இரவில் உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல்  எழுகிறீர்கள் என்றால், உங்கள் படுக்கை அறையை வடிவமைப்பை வாஸ்து வழிகாட்டுதல்கள்படி மாற்ற வேண்டியது அவசியம்.

வாஸ்துவும் கருத்தரித்தலும்

தம்பதியர்கள் வடகிழக்கு திசையை நோக்கிய படுக்கையறையில் உறங்கினால், வாஸ்து முறைப்படி அவர்கள் கருத்தரிப்பது கடினமாக இருக்கும் அல்லது தொடர்ந்து அதே அறையை பயன்படுத்தினால் கருச்சிதைவும் ஏற்படலாம். மேலும், பெண் கருவுற்ற பின் தம்பதியர்கள் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ள படுக்கையறையில் வசிக்கக் கூடாது என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த அறை வெப்பத்தை அதிகளவு ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

 

கட்டிலின் எந்தப் பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

கட்டிலில் ஒருவர் படுப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் பக்கத்தை வைத்தே அவரது ஆளுமையையும் குணாதிசயத்தையும் அறிந்துகொள்ள முடியும். கட்டிலின் வலப்புறத்தில் படுப்பவர்களை இடது பக்கத்தில் படுப்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஃபெங் சூய் முறையைப் பொறுத்தவரை, கட்டிலின் இடது பக்கத்தில் படுப்பதையே பரிந்துரைக்கிறது. இதன்மூலம் சொத்து, அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது அந்த வாஸ்து முறை.

 

சுவர் அருகே உறங்குதல்

ஒருவர் படுக்கையின் பக்கத்தை தேர்வு செய்வதும் கூட கட்டிலின் நிலை மற்றும் ஒருவரது ஆளுமையுடன் தொடர்புடையது ஆகும். கிளாஸ்ட்ரோபோபிக் போன்ற பய உணர்வு கொண்டவர்கள் சுவர் அருகே படுப்பதைத் தவிரக்கலாம். மாறாக, அவர்கள் ஜன்னல்களை ஒட்டி படுப்பது நல்லது.

 

படுக்கையறை வாஸ்து சாஸ்திரம்: வாஸ்துப்படி ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உகந்த படுக்கையறை திசை

Vastu tips for bedroom design

 

“பொதுவாக, படுக்கையறையை தென்மேற்கு திசையில் அமைத்தால் குடும்ப உறுப்பினர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் செல்வச் செழிப்பையும் அளித்து நீண்ட ஆயுளையும் அளிக்கிறது. வீட்டின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் படுக்கையறை அமைப்பதை தவிர்க்கலாம். தென் கிழக்கு திசையில் படுக்கையறை அமைப்பது வாஸ்து முறைப்படி தம்பதிகள் இடையே சண்டையை ஏற்படுத்தும். அதேபோல் வடகிழக்கில் படுக்கையறை அமைத்தால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வீட்டின் கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் குழந்தைகளுக்கான படுக்கையறை அமைப்பது சிறந்தது” என்று பர்மர் கூறுகிறார்.

மேலும், வடக்கு திசையில் படுக்கையறை அமைப்பது அனைவருக்கும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வேலை அல்லது வியாபார வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேபோல், கிழக்கு திசையில் உள்ள படுக்கையறையில் வசிக்கும் மாணவர்களுக்கு நல்ல புத்திகூர்மையையும் கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலையும் கொடுக்கிறது.

படுக்கையறையின் கட்டில் எப்போதும் செவ்வக வடிவில் அல்லது சதுர வடிவில் இருக்க வேண்டும். வட்ட வடிவம் மற்றும் ஓவல் வடிவ கட்டில்களை தவிர்க்கலாம். வாஸ்து முறைப்படி இரட்டை படுக்கை கட்டிலில் இரண்டு தனித்தனி மெத்தைகளுக்கு பதிலாக ஒரே மெத்தையை (டபுள் சைஸ்) பயன்படுத்த வேண்டும். மேலும், மரத்தாலான கட்டில் பயன்படுத்த வேண்டும்.

படுக்கையறையை எப்போதும் வீட்டின் மையப் பகுதியில் அமைக்கக் கூடாது. இப்பகுதி ஆற்றலின் மூலமான பிரம்மஸ்தானம் என்று கருதப்படுகிறது. இந்த மையப்பகுதி ஒரு நிலையான அதிர்வலையைக் கொண்டுள்ளது. இதனால் இங்கு படுக்கையறையை அமைத்தால் படுக்கையறையின் அடிப்படை தன்மையான ஓய்வு நிலைக்கு எதிராக இந்த அதிர்வெண் செயல்படும்.

தம்பதியரிடையே இணக்கமான உறவு ஏற்பட வாஸ்து முறைப்படி மனைவி, கணவனின் இடது பக்கம் உறங்க வேண்டும்.

இதையும் வாசிக்க: இந்திய வீடுகளின் படிப்பறையில் வைப்பதற்கான அலங்காரப் பொருட்கள் பற்றிய யோசனைகள்

 

படுக்கையறை வாஸ்து: வாஸ்துப்படி உறங்குவதற்கு உகந்த திசை

உறங்கும்போது கால் பகுதி இருக்க வேண்டிய திசை பயன்கள்
கிழக்கு நற்பெயரும் செல்வ வளமும்
மேற்கு நல்லிணக்கமும் ஆன்மிகமும்
வடக்கு அதிர்ஷ்டமும் ஐஸ்வரியமும்

 

வாஸ்து சாஸ்திரத்தின் பழமை வாய்ந்த விதிகளின் அடிப்படையில் தூங்குவதற்கு ஏற்ற வாஸ்து திசையாக தெற்கு திசையே கருதப்படுகிறது. அதாவது, உறங்கும்போது தலை தெற்கு திசையை நோக்கியபடியும், கால் வடக்கு திசையை நோக்கி படியும் இருக்க வேண்டும். வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி உறங்கும் நிலைகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டுதலுடன் கூடிய படுக்கை அறையை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திசையே நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறுவதற்கு ஏற்ற திசையாக கருதப்படுகிறது. மேலும், வடக்கு திசையில் கால் பகுதி இருக்குமாறு உறங்குவது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் வழங்கும்.

இதற்கு மாற்றாக, கால் பகுதி கிழக்கு திசையை நோக்கியவாறும் உறங்கலாம். இவ்வாறு உறங்குவதால் அங்கீகாரம் மற்றும் செல்வம் பெருகவும் உதவுகிறது. தலைப் பகுதி வடக்கு நோக்கியவாறு உறங்கும்போது அமைதியான நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாது.

கால் பகுதி தெற்கு திசையில் உள்ளவாறு படுத்து உறங்கக் கூடாது. இது ஆழ்ந்த தூக்த்தைக் கெடுக்கும். தெற்கு திசையானது மரணத்தின் கடவுளை குறிக்கும் ஆகையால், இந்த திசையில் படுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், இது பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.

வாஸ்து வழிகாட்டுதல்கள் என்பது பஞ்சபூதங்கள் அல்லது இயற்கையின் ஐந்து கூறுகளான நீர், நெருப்பு, பூமி, விண்வெளி மற்றும் காற்று மற்றும் ஒரு நபரின் ஒட்டுமொத்த இருப்பை உறுதி செய்வதற்கான நான்கு திசைகளுக்கு இடையிலான
தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டவை. நாம் தூங்கும் திசைக்கும் இது பொருந்தும் . வடக்குத் திசையைத்தவிர நாம் உறங்கும் ஒவ்வொரு திசையும் சில நேர்மறையான விளைவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது:

  • தெற்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: நிம்மதியான ஆழ்ந்த
    தூக்கம், மேம்பட்ட உற்பத்தித்திறன், சொகுசு மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதால் வர்த்தகம் அல்லது மற்ற எந்த ஒரு தொழிலிலும் உள்ளவர்களுக்கு இந்தத் திசை உகந்தது . இது இதய நோய் உண்டாவதன் அபாயத்தையும் குறைத்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.t
  • கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: தூங்குபோது
    தலைவைத்து படுக்க அடுத்ததாக ஒரு சிறந்த திசை
    கிழக்குத்திசையாகும். இந்தத் திசையில் தலை வைத்து படுக்க
    மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு
    பரிந்துரைக்கப்படுகிறது. கிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவது கவனக்குவியத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும். இது வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகளையும் ஈர்க்கிறது. இந்த கொள்கையின் அடிப்படையில் குழந்தைக்கான ஒரு அறையை நீங்கள் வடிவமைத்துக்கொள்ள முடியும்.
  • மேற்கு திசையில் தலை வைத்து தூங்குதல்: தெற்கு அல்லது கிழக்கு
    திசையில் தலை வைத்து உறங்க சாத்தியம் இல்லாதபோது, மேற்கு
    திசையை நோக்கி தலை வைத்து உறங்குவது நல்லது. புகழ், அங்கீகாரம் மற்றும் செல்வத்தைக் வழங்கி ஒரு தனிநபருக்குப் பயனளிக்கிறது.
  • அறையின் மூலைக்கு நேரெதிராக அல்லது மூலையின் மையத்தை
    நோக்கி தலை வைத்து தூங்குதல்: தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவது மூலையில் நேரதிரான திசையில் அமைந்த படுக்கையறைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி தூங்குவதும் சாதகமான மற்றும் சம நிலையான தூக்கத்தைத் தரும்.

 

Sleeping direction vastu

 

இதையும் வாசிக்க: வாஸ்து சாஸ்திர முறைப்படி எந்த திசையில் உறங்க வேண்டும்?

 

வாஸ்துப்படி கட்டில் நிலையும் படுக்கை அமைப்பதற்கான வழிமுறையும்

உங்களது கட்டிலில் ஹெட் ரெஸ்ட் அமைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். படுக்கையறை கட்டில் ஒழுங்கான வடிவில் இல்லாமல் இருந்தாலோ அல்லது வட்ட வடிவிலோ அல்லது ஓவல் வடிவிலோ இருந்தால், அந்தக் கட்டிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சதுரம் அல்லது செவ்வக வடிவ கட்டிலே உறங்குவதற்கு சிறந்தது.

படுக்கை விரிப்பானது பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஏனெனில், இது காதல் மற்றும் அதன் மீது உள்ள ஆர்வத்தை குறிப்பதாக உள்ளது.

மெத்தை விரிப்புகள் மற்றும் பெட் சீட்கள் பிங்க் வண்ணத்தில் இருந்தால் த்ரோவ்ஸ் மற்றும் டுவேட்டுகள் சிவப்பு நிறத்தில் பயன்படுத்தலாம்.

 

படுக்கையறை சீலிங் வாஸ்து

படுக்கையறையின் சீலிங் ஆனது பத்தடி உயரம் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருக்கக் கூடாது. ஏனெனில், அந்த அறைக்குள் நிலவும் காற்று சுழற்சியின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும். சீலிங் மீது அலங்காரத்திற்காக பொய்யான சீரற்ற சீலிங் டிசைன் அமைப்பது அல்லது கூர்மையான முக்கோண வடிவில் அலங்கார பொருட்கள் தொங்க விடுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், இது மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். சீலிங் ஆனது அறையின் மையப் பகுதியில் உயரமாகவும் மூலைப் பகுதியில் தாழ்வாகவும் இருப்பது நல்லது எனக் கருதப்படுகிறது. படுக்கையை பிரதிபலிக்கும் வகையில் சீலிங்கில் கண்ணாடியை வைப்பது கூடாது. சீலிங்கில் வெள்ளை நிறம் அல்லது வெளிர் நிறங்களில் பெயின்ட் செய்வது வாஸ்துப்படி நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும், மகிழ்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்கும். படுக்கை அறையில் ஸ்கை லைட் சீலிங் அமைப்பதை தவிர்க்கவும். இது அமைதியான தூக்கத்தை கெடுக்கிறது. இதற்கு பதிலாக அமைதி மற்றும் ஓய்வு தரும் விதமாக இருக்கும் விளக்குகளை பயன்படுத்தலாம்.

 

அட்டாச்டு பாத்ரூம் உடன் கூடிய படுக்கையறைக்கான வாஸ்து சாஸ்திரம்

இடத்தட்டுப்பாடு மற்றும் வசதிக்காக நவீன வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வீட்டுக் கழிவறை மற்றும் குளியலறைகளை  எப்பொழுதும் படுக்கையறையுடன் இணைத்து கட்டப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி பாத்ரூம் சரியான திசையில் இல்லை என்றால், அவை உடல் ரீதியாகவும் பணரீதியாகவும் பிரச்சனைகளை உருவாக்கும். வாஸ்து முறைப்படி, பாத்ரூம் படுக்கையறையுடன் இணைக்கப்படும்பொழுது, அந்தப் படுக்கையறை அல்லது மாஸ்டர் பெட்ரூம் அவ்வீட்டின் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது தெற்கு/மேற்கு திசையில் இருக்க வேண்டும். எப்பொழுதும் குளியலறையின் கதவுகள் மூடியபடி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், குளியலறைக் கதவுகள் திறந்திருக்கும்பொழுது படுக்கை அறையின் ஆரா எதிர்மறையாக ஆற்றலாக மாறலாம். மேலும், குளியலறை மற்றும் கழிவறையின் பக்கத்தில் படுக்கை இருக்கக் கூடாது. சின்ன வீடாக இருக்கும் பட்சத்தில் அதனை மாற்ற முடியவில்லையெனில் வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி படுக்கையின் நிலையை மாற்றி, அதாவது பெட்ரூமுடன் இணைக்கப்பட்டுள்ள பாத்ரூம் சுவற்றில் சாய்ந்தவாறு இல்லாமல் அமைக்கலாம். இதனால் எதிர்மறை ஆற்றலை தவிர்க்க முடியும். குளியல் அறையின் தரை படுக்கையறையின் தரை மட்டத்தை விட எப்பொழுதும் ஓர் அடி அல்லது இரண்டடி உயரமாக இருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: வாஸ்து முறைப்படி பாத்ரூம் மற்றும் கழிவறைக்கான திசை

 

படுக்கையறை வாஸ்து குறிப்புகள்

படுக்கையறை திசைகள்

வாஸ்து சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திசைகளின்படி, படுக்கை அறையை வடிவமைக்கும்போதும், கட்டிலுக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும், கீழ்தளத்தில் சமையலறையானது இந்த அறைக்கு நேர் கீழே இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஜன்னல்கள்

நீங்கள் தூங்கும்பொழுது ஒருபோதும் தலையின் பின்புறத்தில் ஜன்னல் கதவைத் திறந்து வைத்திருக்கக் கூடாது. படுக்கை அறைகளில் ஜன்னல்களை அமைக்க வடக்கு மற்றும் கிழக்குத் திசை பகுதிகள்தான் மிகவும் சிறப்பான உகந்த இடங்கள். தூங்கும் போது, தலைப்பகுதி நேரடியாக எந்த ஒரு ஜன்னலுக்கு எதிராகவும் இல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மரச் சாமான்கள்

படுக்கை அறையில் வாஸ்து விதிமுறைப்படி, கனமான பொருட்களை மேற்கு, தென்மேற்கு அல்லது தெற்கு திசையில் வைப்பது நல்லது.

ஃபர்னிச்சர்

படுக்கை அறை வாஸ்துப்படி, கனமான ஃபர்னிச்சர்களை மேற்கு, தென்மேற்கு அல்லது தெற்கு திசையில் வைப்பது நல்லது.

ட்ரெஸ்ஸிங் டேபிள்

வாஸ்து விதிகளின் அடிப்படையில் படுக்கையறையில் ட்ரெஸ்ஸிங் டேபிளை வைப்பதற்க்கான இடத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். வாஸ்துப்படி ஒருவர் உறங்கும்போது ட்ரெஸ்ஸிங் டேபிளின் கண்ணாடி அவரை பிரதிபலிக்காத வகையில் ட்ரெஸ்ஸிங் டேபிளை படுக்கைக்கு அடுத்து இருக்குமாறு வைக்க வேண்டும். ஒருவேளை படுக்கைக்கு எதிரில் டிரெஸ்ஸிங் டேபிள் இருந்தால் உறங்கும்போது அதன் கண்ணாடியை ஒரு துணி கொண்டு முடி வைக்கலாம். வாஸ்து முறைப்படி படுக்கையறை மேற்கில் இருந்தால் ட்ரெஸ்ஸிங் டேபிளை அந்த அறையின் வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு சுவரின் பக்கம் வைக்கலாம். ஒருவேளை படுக்கையறை வடக்கு நோக்கி இருந்தால் ட்ரெஸ்ஸிங் டேபிளை வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்கலாம். தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசை நோக்கியுள்ள சுவற்றை ஒட்டி ட்ரெஸ்ஸிங் டேபிளை ஒருபோதும் வைக்கக் கூடாது.

ஸ்டடி டேபிள்

படிப்பதற்கான டெஸ்க் அல்லது ஒர்க்ஸ்டேஷன் என்பது பணிபுரியும் நபரின் வடக்கு அல்லது கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க  வேண்டும். தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாஸ்து பரிந்துரைக்கும் திசையில் இருந்தால்தான்  படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுக

வாரம் ஒரு முறையாவது வீட்டின் தரை முழுவதும் கடல் உப்பு சேர்த்த நீரைக் கொண்டு துடைக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவும். வீட்டில் நேர்மறை சூழ்நிலையை ஏற்படுத்துவதில் இந்த முறை மிகவும் எளிமையானதும்,  படுக்கையறைக்கான சிறந்த வாஸ்து குறிப்பாகவும் கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை சேமித்து வைக்கும் தேவையற்ற பொருட்கள் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியம்.

பெட் பாக்ஸ்

தேவையற்றப் பொருட்களை கட்டில் அல்லது கட்டிலில் உள்ள பெட் பாக்ஸில் வைப்பதை தவிர்க்கவும். ஒருவேளை உங்கள் கட்டிலில் பெட் பாக்ஸ் அமைப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனுள் பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். உடைந்த கடிகாரங்கள், பொம்மைகள், பழைய பெட்ஷீட்டுகள் போன்ற பொருட்களை அங்கு ஒருபோதும் வைக்கக் கூடாது. வாஸ்துப்படி பெட் பாக்ஸில் எவ்வகையான பொருட்களை வைத்தாலும், அது நமது உறக்கத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மெத்தை வகை

படுக்கையறையில் இரட்டைக் கட்டில் பயன்படுத்தினாலும் ஒற்றை மெத்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தம்பதியர்கள் பயன்படுத்தும் கட்டிலில் ஒற்றை மெத்தையை பயன்படுத்த வேண்டும். மேலும், கட்டிலில் இரண்டுக்கும் அதிகமான தலையணைகளை வைக்கக் கூடாது.

பெட் கவர்

வாஸ்து முறைப்படி, மெத்தைக்கு ஏற்ற சரியான நிறத்தை பயன்படுத்துவது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இளஞ்சிவப்பு, வெளிர் ஊதா, வெளிர் பச்சை, வெள்ளை அல்லது பழுப்பு, பெய்ஜ் போன்ற நிறங்களில் பெட் ஷீட்டுகள் பயன்படுத்துவது ஒருவர் நன்கு ஓய்வெடுக்க உதவுகிறது. வாஸ்து முறைப்படி கருப்பு அல்லது நீல நிறங்களாலான பல கோண வடிவியல் அமைப்பு டிசைன்களில் பெட்ஷீட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தம்பதியர்கள் இளஞ்சிவப்பு, பீச் அல்லது நுட்பமான அலங்காரமான சிவப்பு நிற பெட் கவர்களை தேர்ந்தெடுக்கலாம்.

அலமாரி அமைப்பதற்கான இடமும் நிறங்களும்

மாஸ்டர் பெட்ரூமில் வார்ட்ரோப் அமைக்கும்போது அல்லது பெட்ரூமில் மற்ற சேமிப்பு அலமாரிகள் அமைக்கும்போது வாஸ்து பற்றிய குறிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் அலமாரியை அமைக்க விரும்பினால், அதனை தெற்கு அல்லது மேற்கு நோக்கிய சுவரில் வைக்க வேண்டும். வார்ட்ரோப் அமைப்பதற்கான வாஸ்து சாஸ்திரத்தில், குபேரனின் இருப்பிடமான வடக்கு நோக்கிய திசையிலேயே பணம் மற்றும் நகைகளை வைக்க வேண்டும். வார்ட்ரோப்பின் கதவுகள் ஒருபோதும் கழிவறைச் சுவர் அல்லது கழிவறை இருக்கை நோக்கியவாறு இருக்கக் கூடாது. அலமாரி அல்லது வார்ட்ரோப்புக்கு வெளிர் மஞ்சள், வெள்ளை, கிரீம், பெய்ஜ் அல்லது வெளிர் சாம்பல் நிறங்களை பயன்படுத்தலாம். எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய அடர் வண்ணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அலமாரி அல்லது மாஸ்டர் பெட்ரூம் வார்ட்ரோப்பை இரும்பு அல்லது மரத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். மார்பிள் பயன்படுத்தக் கூடாது. ஒற்றைக் கதவு வடிவமைப்புடன் கூடிய சதுரம் அல்லது செவ்வக வடிவிலான வாட்ரோப்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அலமாரி ஒழுங்கற்ற நிலையில் இருப்பதை தவிர்க்க துணிகளை சீராக அடுக்கி வைக்க வேண்டும். அத்துடன், பயன்படுத்தாத துணிகள், கிழிந்த துணிகள் போன்றவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். வடக்கு திசை நோக்கியபடி இருக்கும் அலமாரியின் கதவிற்கு முன் கேஸ் லாக்கர் அமைப்பை வைக்கலாம். நகைகளை மேற்கு அல்லது தெற்கு திசை நோக்கிய லாக்கரில் வைக்கலாம்.

அறையில் கட்டில் வைக்கும் இடம்

தெற்கு அல்லது மேற்கு நோக்கிய சுவற்றின் அருகில் கட்டிலை வைப்பது சிறந்ததாகும். அவ்வாறு அமைக்க முடியவில்லை எனில் சுவற்றுக்கும் கட்டிலுக்கும் இடையில் நான்கு இன்ச் இடைவெளி இருக்குமாறு வைக்கலாம். கட்டில் வைக்கப்படும் இடத்திற்கான வாஸ்துக் குறிப்பில் ஹெட் ரெஸ்ட்டுக்குப் பின்னால் ஜன்னல் அமைக்கப்படக் கூடாது. இது தூக்கத்தை கெடுக்கக் கூடியதாக இருக்கும். மாஸ்டர் பெட்ரூம் கதவிற்கு நேராக கட்டில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கான படுக்கையறை

வாஸ்து முறைப்படி, படுக்கையறையில் நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் வரவேற்கும் விதமாக குழந்தைகளின் அறையானது வீட்டின் வடக்கு திசை நோக்கியவாறும் அதன் கதவு கிழக்கு திசை நோக்கிவாறும் கட்டப்பட வேண்டும். படுக்கையறையின் கதவு கடிகார திசையில் திறக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கதவில் ஹாங்கிங் தொங்கவிடுவதை தவிர்க்கவும். இது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே எதிர்மறை ஆற்றலை வளர்த்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தக் கூடும். அறை வாயிலை நோக்கிய திசையில் கட்டிலை வைக்கக் கூடாது. ஆற்றல் ஓட்டத்தை தடுக்கக் கூடிய கூர்மையான பொருட்கள் குழந்தைகளின் படுக்கையறையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். வெற்றிடம் மற்றும் மர ஃபர்னிச்சர்கள் படுக்கையறையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஸ்டடி டேபிள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய திசையில் வைப்பது சிறந்தது. ஏனெனில், இது ஞாபக சக்தி மற்றும் கவனிப்புத் திறன் அதிகரிக்க உதவுகிறது. அதிர்ஷ்டத்தை வழங்கவும், ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கவும் அறையில் கிரிஸ்டல் பிரமிட் அல்லது டவரை வைக்கலாம். சதுரம் அல்லது செவ்வகத்தில் ஸ்டடி டேபிள் அமைப்பது சிறந்தது. குழந்தையின் அறையில் நல்ல அதிர்வினை ஏற்படுத்தும் விதமாக சூரியன் உதிக்கும் காட்சி, விநாயகர் படம் அல்லது சரஸ்வதி படம் போன்ற படங்களை அறையில் வைப்பது சிறந்தது என வாஸ்து பரிந்துரைக்கிறது. மேலும், குழந்தைகள் போட்டிகளில் வென்ற மெடல்கள், கோப்பைகள் போன்ற பரிசுப் பொருட்களையும் தெற்கு திசை நோக்கிய சுவற்றில் வைக்கலாம். குழந்தைகள் கட்டிலில் அமர்ந்து உண்ணுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு உண்ணுவதால் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஸ்டடி டேபிளுக்கு அடியில் ஷூக்கள் அல்லது செருப்புகள் விடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படிக்கும்போது கவனம் சிதறக் கூடும்.

படுக்கையறையில் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்

பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உடைந்த அலங்கார பொருட்கள் அல்லது மெஷின்கள் போன்றவற்றை படுக்கையறையில் வைக்கக் கூடாது. எலக்ட்ரானிக் பொருட்களை படுக்கைக்கு அருகில் அல்லது படுக்கையறையின் ஏதாவது ஓர் இடத்தில் வைக்கும்பொழுது வாஸ்து முறைப்படி அது தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மையை ஏற்படுத்தும். வீட்டின் அலங்கோல நிலை ஆற்றல் ஓட்டத்தை தடுத்து வீட்டில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும். படுக்கை அறையில் நீரூற்றுகள், மீன் தொட்டிகள் மற்றும் போர்க்காட்சி ஓவியங்கள், ஒற்றைப் பெண்ணின் படம் போன்றவற்றை வைப்பதை தவிர்க்கவும்.

இதையும் வாசிக்க: குறைந்த விலையில் உங்கள் வீட்டிற்கு உகந்த ஓவியங்கள்

அரோமாதெரபி

நறுமண சிகிச்சை எனப்படும் அரோமாதெரபி (Aromatherapy) உணர்வுகளின் மீது சக்தி வாய்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், படுக்கை அறையில் தம்பதியரிடையே நெருக்கத்தையும் காதல் சூழ்நிலையையும் கூட்டுகிறது. முழுமையாக மலர்ந்த புது மலர்களை அறையில் வைப்பதன் மூலம் அது நேர்மறை அதிர்வலைகளை அறை முழுவதும் பரப்பி சிறந்த மனநிலையை உருவாக்குகிறது.

மணம் மற்றும் நறுமணம் மிகவும் சக்தி வாய்ந்தது. நமது மனநிலையையும் உயிர்ப்புத் தன்மையும் மேம்படுத்துகிறது. எனவே, உங்கள் அறை நறுமணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க அரோமேட்டிக் மெழுகுவர்த்திகள், டிஃப்யூஸர்கள் அல்லது பாட்பவுர்ரி போன்றவற்றை வைக்கலாம். புத்துணர்ச்சி தரக்கூடிய மல்லிகை அல்லது லாவண்டர் வாசனை திரவியங்கள் / ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

தம்பதியர்களுக்கு ஏற்ற ஆலோசனை இது: உங்கள் படுக்கையறையில் தென்மேற்கு மூலையில் இதய வடிவிலான ரோஸ் குவார்ட்ஸை வைக்கலாம். இது உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று தேஷ்பாண்டே அவர்கள் கூறுகிறார்.

படுக்கையறையில் சாதனங்களை அப்புறப்படுத்துதல்

படுக்கையறையில் அமைதியைக் குலைக்கும் வகையில் எந்த சாதனங்களும் வைக்கக் கூடாது. எனவே தொலைக்காட்சியையும் அங்கு வைக்கக் கூடாது. கண்டிப்பாக படுக்கையறையில் தொலைக்காட்சி வேண்டும் எனில், உங்கள் படுக்கைக்கும் தொலைக்காட்சிக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி இருக்குமாறு வைக்க வேண்டும். முக்கியமாக டிவியின் திரையானது படுக்கைக்கு எதிரே படுக்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கக் கூடாது.

படுக்கையறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அல்லது குறைந்தபட்சம் தூரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் அதிக மின்னழுத்த தரக்கூடிய சாதனங்கள் ஆகும். அவற்றின் அதிர்வலைகள் கதிர்வீச்சை ஏற்படுத்தக் கூடியவை என்று பர்மர் அறிவுறுத்துகிறார்.

படுக்கையறை என்பது ஓய்வாக இருக்க க்கூடிய அறை என்பதால் அதனை ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாசிப்பது, எழுதுவது அல்லது இசை கேட்பது அல்லது எந்த விதமான பொழுதுபோக்காக இருந்தாலும் அதனை படுக்கையறையில் செய்யலாம். இது அவ்வறையில் ஆராவின் நேர்மறைத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது .அறை முழுவதும் நேர்மறை ஆற்றல் பரவும் விதமாக தினமும் அறைக் கதவு மற்றும் ஜன்னல்களை 15-ல் இருந்து 20 நிமிடங்கள் திறந்து வைக்க வேண்டும்.

இரவில் நல்ல தூக்கத்திற்கான வாஸ்து குறிப்புகள்

  • உறங்கும்போது தலை, அறைக் கதவை பார்த்த வகையில் படுத்து உறங்கக் கூடாது. இது கெட்ட கனவுகளை ஏற்படுத்தும்.
  • சீலிங் பீம்க்கு அடியில் கட்டில் போடப்பட்டிருந்தால், அது தூக்கத்தை கெடுக்கும்.
  • தென்கிழக்கு திசையில் தண்ணீர் ஜக் வைக்க வேண்டாம். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
  • அடர் வண்ணங்களில் உள்ள ஃபர்னிச்சர்களை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டாம்.
  • படுக்கையறையுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டாச்டு பாத்ரூம் கதவை இரவில் திறந்து வைக்க வேண்டாம்.

 

படுக்கையறை வாஸ்து நிறங்கள்

  • எர்த்டோன் வண்ணங்களான ஆல்மண்ட் நிறங்கள் படுக்கையறைச் சுவர்களுக்கு ஏற்ற நிறங்கள் ஆகும்.
  • கருப்பு அல்லது அடர் நீல நிறங்களில் பெட்ஷீட், திரைச்சீலைகள், கார்பெட்டுகள் ஆகியவற்றை குழந்தைகளின் படுக்கையறையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாஸ்து முறைப்படி இவை குழந்தைகளுக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தி உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கும்.
  • வாஸ்து மற்றும் ஃபெங் சுய்யில் கூறியுள்ளபடி படுக்கையறைக்கு நீல நிறம் சிறந்தது. உங்கள் படுக்கையறைக்கு நீல நிறத்துடன் கூடிய வண்ணங்களில் பெயின்ட் செய்வது அமைதிப்படுத்தும், ஆற்றலை ஊக்குவிக்கதாகவும் இருக்கும்.
  • பச்சை நிற பெயின்ட் பயன்படுத்துவது சமாதான மனநிலையை கொடுக்கும். வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரங்களைக் கொண்டு அலங்கரித்து அறையை முழுமைப்படுத்தலாம்.
  • தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாம்.
  • படுக்கையறையை அலங்கரிக்க பழுப்பு வண்ணம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதுவும் தம்பதிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் வாசிக்க: படுக்கையறைக்கு உகந்த வாஸ்து வண்ணங்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி

 

மாஸ்டர் பெட்ரூம் வாஸ்து: மாஸ்டர் பெட்ரூமில் யார் உறங்க வேண்டும்?

ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகாத உறுப்பினர்களை தவிர திருமணமான தம்பதிகள் மாஸ்டர் பெட்ரூமில் உறங்கலாம். அறையின் தோற்றத்தை அழகுபடுத்துவதற்காக செய்யப்படும் பல வடிவமைப்புகளை விட வழக்கமான படுக்கையறையே சிறந்தது.

 

Vastu for bedroom

Pexels

 

படுக்கையறை வாஸ்து குறிப்புகள்: வீட்டில் அமைக்கப்படும் அலுவலகம், புத்தக அலமாரிக்கான இடம்

வாஸ்து விதிகளின் ஒரு பகுதியாக புத்தக அலமாரிகள் அல்லது அலுவலக மேஜைகள் மேற்கு அல்லது தென்மேற்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். படுக்கையறைக்குள் ஒரு தொகுதியாக அல்லது போதுமான இடத்தை ஒரு பகுதியாக பிரித்து வேலை மற்றும் வாழ்க்கையை தனித்தனியே கொண்டு செல்வது நல்லது. வேலை செய்யும்போது மேசை இருக்கையின் திசையானது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கியவாறு இருக்க வேண்டும். செவ்வகம் அல்லது சதுர வடிவ மேஜையையே எப்போதும் வாஸ்து பரிந்துரைக்கிறது. உங்கள் வீட்டு அலுவலகம் போதுமான இட வசதியுடன், பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, போதுமான காற்றோட்டம், வெளிச்சம் உள்ளவையாக இருக்க வேண்டும். கட்டிலின் மீது அமர்ந்த நிலையில் வேலை செய்யக் கூடாது. ஒருவேளை உங்கள் அலுவலக அறையின் சுவரை வெள்ளை நிறத்தில் பெயின்ட் செய்ய விரும்பவில்லை எனில், உங்கள் டேபிளுக்கடியில்  ஏதேனும் ஒரு சிறிய வெள்ளை நிற பொருளை வைக்கலாம். வெள்ளை நிறம் அமைதி மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிறது.

தென்மேற்கு திசையை நோக்கிய படுக்கையறையில் பூமியை குறிக்கக் கூடிய பழுப்பு வண்ண திரைச்சீலைகளை தொங்கவிடலாம். பழுப்பு வண்ணம் மனதில் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

 

பால்கனியுடன் கூடிய படுக்கையறைக்கான வாஸ்து குறிப்புகள்

வாஸ்து முறைப்படி படுக்கையறையின் கிழக்கு அல்லது வடக்கு பகுதிகளில் பால்கனி அமைக்கலாம். வட்ட வடிவ பால்கனி வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறும் அமைத்தால் அது வீட்டில் வசிப்போருக்கு எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். கிழக்கு திசையும் மேற்கு திசையும் இணையக் கூடிய அச்சில் ஊஞ்சல் தொங்கவிடலாம். நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாக பால்கனியில் பல விளக்குகள் பொருத்தி நன்கு ஒளிரச் செய்யலாம். பால்கனியின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் சிறிய செடிகளை வளர்க்கலாம். பால்கனியில் வைக்கப்படும் கிரில் எப்போதும் துருப்பிடிக்காத வகையில் இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை பால்கனியில் வைத்து அங்கு நிலவும் ஆற்றல் ஓட்டத்தை தடுக்க வேண்டாம்.

 

படுக்கையறை விளக்குகளுக்கான வாஸ்து குறிப்புகள்

வாஸ்து முறைப்படி சூரிய வெளிச்சமானது அறையில் நிலவும் நேர்மறை ஆற்றலின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளில் சில மணி நேரங்களாவது சூரிய வெளிச்சம் படுக்கையறையில் விழும்படி படுக்கையறையை அமைக்க வேண்டும். ஃப்ளோரசென்ட் விளக்குகள் மற்றும் தலைக்கு மேலே தொங்கவிடப்படும் ஸ்பாட் லைட்டுகள் போன்றவை வேலை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும். டாஸ்க் லைட்டிங் / மேஜை விளக்குகள் அலுவலக அறையில் பொருத்துவது உங்களை வேலை செய்யும் மனநிலைக்கு தூண்டுகிறது. மேலும், படுக்கையறையில் வார்ம் லைட்டிங்குடன் கூடிய மூட் லைட்டிங் அமைப்பை பொருத்தலாம். மேலும், அதன் செறிவைக் குறைக்க சில டிம்மர்களை பயன்படுத்தலாம். இனிமையான காதலுடன் கூடிய சூழலை உருவாக்க வெளிச்சம், பிரதிபலிப்பு மற்றும் ஆடம்பரம் ஆகிய தன்மைகள் கொண்ட விளக்குகள் பயன்படுத்தலாம். பழுதடைந்த விளக்குகள் அல்லது பியூஸ் அடைந்த பல்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.

படுக்கை அறையில் விளக்கின் வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரவும் விதமாகவும் அல்லது மேல் நோக்கி இருக்கும் வண்ணமாகவும் அமைக்கலாம். முடிந்தால் லைட் ஃபிட்டிங்சை அறையின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் பொருத்தலாம். ஏனெனில் வடகிழக்கு திசையில் இருந்து வெளிச்சம் பரவுவது செல்வ செழிப்பைக் குறிக்கும்.

 

மூத்த குடிமக்களுக்கான படுக்கையறை வாஸ்து

மூத்த குடிமக்களுக்கான படுக்கையறையை டிசைன் செய்யும்பொழுது நிம்மதி தரும் நிறங்களான மஞ்சள், வெள்ளை, பச்சை அல்லது நீல நிறங்களில் பெயின்ட் செய்யலாம். வீட்டுத் தலைவரின் படுக்கையறையானது தென்மேற்கு அல்லது தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைந்த அறையை பயன்படுத்தலாம். கட்டிலின் தலைப் பகுதியானது கண்டிப்பாக கிழக்கு அல்லது தெற்கு திசை நோக்கி வண்ணம் இருக்க வேண்டும். புத்தகங்கள் வைக்கும் அலமாரி மேற்கு திசையில் இருக்க வேண்டும். வடமேற்கு மூலையில் படிப்பதற்கு, எழுதுவதற்கு, பின்னுவதற்கு, வரைவதற்கு போன்ற பொழுதுபோக்கு செயல்களை செய்வதற்காக மேஜை மற்றும் நாற்காலி வைக்கலாம். வடக்கு மற்றும் வடகிழக்கு திசைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் மருந்துகளை வைக்கலாம்.

 

விருந்தினர் படுக்கையறை வாஸ்து

வாஸ்து முறைப்படி விருந்தினர் படுக்கையறை வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். அறையின் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்டிலை அமைக்க வேண்டும். தெற்கு திசையே தூங்குவதற்கு ஏற்ற திசை. அதாவது தலைப் பகுதியானது தெற்கு திசை நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். கட்டிலுக்கு மேலே பீம் இல்லாதிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, விருந்தினர் தங்கி இருக்கும் அறையில் நல்ல அதிர்வலை ஆற்றலை உணரும் வகையில், அந்த அறையின் கப்போர்ட் தெற்கு அல்லது மேற்கு திசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அமைதியை ஊக்குவிக்கும் வகையில் விருந்தினர் அறையை வெளிர் நிறங்களான வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் பெயின்ட் செய்ய வேண்டும் என வாஸ்துவில் பரிந்துரைக்கப்படுகிறது. அடர் வண்ணங்களில் அறையைப் பெயின்ட் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது அறையை சிறிதாகவும், எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும். பாத்ரூம் கதவு ஒருபோதும் கட்டிலுக்கு எதிரே இருக்கக் கூடாது.

 

வாஸ்துப்படி படுக்கையறை டிசைன்: கண்ணாடி வைக்குமிடம்

படுக்கையறையில் கண்ணாடிகள் வைப்பது என்பது அந்த அறையில் நிலவும் ஆற்றல் படுக்கையைச் சுற்றிலும் நிலையில்லாமல் அங்கும் இங்கும் தாவிச் செல்லும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையானது அதில் வசிப்போருக்கு அமைதியின்மை மற்றும் கவலைகளை அதிகரிக்கச் செய்யும். முக்கியமாக படுக்கைக்கு எதிரே உள்ள சுவற்றில் கண்ணாடியை தொங்கவிடுவது கூடாது. ட்ரெஸ்ஸிங் டேபிளில் கண்ணாடி இருப்பதாக நினைத்துக் கொண்டு அதனை பொருத்தும் இடத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல மாஸ்டர் பெட்ரூமை வடிவமைக்கும்போது கண்ணாடி வார்ட்ரோப்புகள் வாஸ்து விதிகளின் அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

வாஸ்து முறைப்படி படுக்கைக்கு எதிரே கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒருவர் உறங்கும்போது அவரின் உடல் கண்ணாடியில் பிரதிபலிக்கப்படுவது துரதிஷ்டத்தை அளிக்கும். எனவே, படுக்கை அறையில் கட்டில் வைக்கப்படும் இடம் வாஸ்து விதிகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ட்ரெஸ்ஸிங் டேபிள் வடக்கு அல்லது கிழக்கு சுவற்றை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.

ஒருவேளை டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி படுக்கையை எதிர்நோக்கியபடி இருந்தால், கண்ணாடியை ஒரு துணி கொண்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் உறங்குபவரையும் கட்டிலையும் கண்ணாடி பிரதிபலிக்காது.

இதையும் வாசிக்க: படுக்கையறையை அலங்கரிப்பதற்கான 17 அற்புதமான யோசனைகள்

 

படுக்கையறை வாஸ்து: படுக்கையறையை எந்த வண்ணத்தில் பெயின்ட் செய்ய வேண்டும்?

பொதுவாகவே படுக்கையறைக்கு ஆஃப் ஒயிட், பேபி பிங்க் அல்லது கிரீம் நிறங்களில் பெயின்ட் செய்வது சிறந்தது. அடர் வண்ணங்களில் பெயின்ட் செய்வதை தவிர்க்கவும். புதிதாக திருமணமான தம்பதியர்களின் படுக்கை அறையை பிங்க், வெளிர் நீலம் அல்லது அமைதி தரக்கூடிய மஞ்சள் போன்ற நிறங்களைக் கொண்டு பெயின்ட் செய்வது சிறந்தது என்று வாஸ்து எடுத்துரைக்கிறது. குழந்தைகளின் படுக்கையறையில் பச்சை நிற பெயின்ட் பயன்படுத்தலாம் (இது வளர்ச்சியை குறிக்கிறது) அல்லது மஞ்சள் நிறம் பயன்படுத்தலாம் (இது மகிழ்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு துணை புரிகிறது).

 

Bedroom colours as per vastu

Pexels

இதையும் வாசிக்க: உங்கள் வீட்டுக்கு ஏற்ற சுவர் வண்ணங்களுக்கான யோசனைகள்

 

வாஸ்துப்படி படுக்கையறையில் வைக்க உகந்த செடிகள்

உங்கள் படுக்கையறையை பசுமையாக்க விரும்பினால், அதற்கான சிறந்த செடிகளை வாஸ்து இங்கே பரிந்துரைக்கிறது:

  • மணி பிளான்ட்: மணி பிளான்ட் செடியை படுக்கையறையின் கூர்மையான மூலைகளில் வைக்க வேண்டும். இது நமது ஆராவை சுத்தப்படுத்தி மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது. படுக்கையறைக்குள் இருந்தாலும் இந்தச் செடிக்கு மறைமுகமாக லேசான சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு வைக்க வேண்டும். வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் இந்தக் கொடியானது காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, இது வாடிவிடாமல் தொடர்ந்து வளர்வதற்கு தேவையான பாதுகாப்பு அளிப்பது அவசியம்.
  • மூங்கில் செடி: வாஸ்து சாஸ்திரத்திலும் ஃபெங் சூயிலும் மூங்கில் செடியானது மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செடியாக கருதப்படுகிறது. இந்தச் செடியை அறையின் எந்தப் பகுதியிலும் வைக்கலாம். இதற்கு ஓரளவு கண்காணிப்பு மட்டுமே போதுமானது. இருப்பினும் தென்கிழக்கு மூலை இந்தச் செடிக்கு மிகவும் ஏற்ற திசையாக கருதப்படுகிறது.
  • லில்லி செடி: மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக லில்லி செடி கருதப்படுகிறது. மேலும், லில்லி செடிகள் நேர்மறை ஆற்றலை தூண்டி கெட்ட கனவுகள் வராமல் தடுக்கின்றது.
  • லாவண்டர் செடி: அமைதியான மனநிலையை உணரும் விதமான மணம் கொண்ட லாவண்டர் செடியை வீட்டில் வளர்ப்பது மன அமைதியை ஊக்குவிக்கிறது. இச்செடியின் அருமையான நறுமணத்தை பெரும் விதமாக கட்டிலுக்கு அருகே உள்ள டேபிளில் வைக்கலாம்.

 

படுக்கையறை வாஸ்துவில் தோஷங்களுக்கான பரிகாரங்கள்

படுக்கையறை வாஸ்துவில் தோஷங்களுக்கான சில எளிமையான பரிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த தோஷங்களுக்கான பரிகாரங்கள் பற்றி எப்போதும் வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டபின் செய்வது சிறந்தது. வடகிழக்கு திசை நோக்கிய படுக்கையறையில் கடல் உப்பு நிறைந்த கிண்ணம் அல்லது கற்பூர வில்லைகளை வைக்க வேண்டும். கடல் உப்பு மற்றும் கற்பூர வில்லைகள் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது. அத்துடன், இது வாஸ்து குறைபாடுகளையும் போக்குகிறது. வடகிழக்கு திசை நோக்கிய படுக்கையறை சுவருக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பெயின்ட் செய்வது சிறந்தது. வடகிழக்கு திசையில் ஏதேனும் வாஸ்து தோஷங்கள் இருப்பின் அதனை நீக்க லாவண்டர் ரூம் ஸ்ப்ரே உதவுகிறது. வடமேற்கு திசை நோக்கிய படுக்கையறையில் வசிப்போருக்கு அடிக்கடி பண பிரச்சினைகளும் மன அழுத்தமும் ஏற்படும். வடமேற்கு மூலையில் சந்திர எந்திரத்தை வைப்பதன் மூலம் அங்குள்ள வாஸ்து தோஷங்களை நீக்க முடியும்.

வடமேற்குத் திசையில் படுக்கை அறை

ஒரு வடமேற்கு படுக்கையறை பெரும்பாலும் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் செல்வ இழப்புகளையும் மன அழுத்தத்தையும் கொண்டுவருகிறது. சந்திர யந்திரத்தை வடமேற்கு மூலையில் வைப்பது வாஸ்து தோஷங்களை சரிசெய்ய உதவும்.

தென்கிழக்குத் திசையில் படுக்கை அறை

தென்கிழக்குத் திசை அக்னி(தீ) குடியிருக்கும் திசையாகும். தென்கிழக்குத் திசையில் தூங்குவது, உயர் இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகக் காரணமாகும். ஆகவே தூங்கும் போது வாஸ்து வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்பது அவசியமாகும் மற்றும் தலைப்பகுதி கிழக்கு அல்லது தெற்குத் திசையில் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு படுக்கை அறை திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும். அதில் குடியிருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளையும் அது தோற்றுவிக்கும்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வாஸ்துப்படி படுக்கையறைக்கு எந்த வண்ணம் சிறந்தது?

உங்களது படுக்கையறைக்கு ஆஃப் ஒயிட், பேபி பிங்க் அல்லது கிரீம் நிறங்களில் பெயின்ட் செய்யலாம். படுக்கையறை ஒழுங்காக சீராக அடுக்கப்பட்டு இருக்க வேண்டும். எப்போதும் சுத்தமாகவும் தேவையற்ற பொருட்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

வாஸ்துப்படி தூங்குவதற்கு ஏற்ற சிறந்த திசை எது?

நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு வாஸ்துப்படி தெற்கு திசையே சிறந்த திசையாகும். அதாவது கால் பகுதியானது வடக்கு திசையை நோக்கியபடி இருக்க வேண்டும். இது பற்றிய மேலும் பல விவரங்கள் இக்கட்டுரையினுள் கொடுக்கப்பட்டுள்ளது.

வாஸ்துப்படி கட்டில் வைக்க ஏற்ற இடம் எது?

வாஸ்துபடி ஒருவர் உறங்கும்போது அவர் கால் பகுதி கிழக்கு அல்லது தெற்கு திசை நோக்கியபடி இருக்க வேண்டும். இந்த அமைப்பில் கட்டிலை வைக்க வேண்டும்.

வாஸ்துப்படி திரைச்சீலைகளுக்கு ஏற்ற நிறங்கள் எவை?

வாஸ்துப்படி, அடர் சிவப்பு மற்றும் கருப்பு நிற திரைச்சீலைகளை படுக்கையறையில் பயன்படுத்தக் கூடாது. மன அமைதியை ஊக்குவிக்கும் வெளிர் நிறங்களான வெள்ளை, கிரீம், வெளிர் பழுப்பு மற்றும் பச்சை, பிங்க் போன்ற நிறங்களில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம்.

வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை பெற தலையணை அடியில் என்ன பொருளை வைக்க வேண்டும்?

நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் பெற மயிலிறகை உறங்கச் செல்லும்போது தலையணைக்கு அடியில் வைக்கலாம். அமைதியான உறக்கத்தைப் பெற புனித நூல்களை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கலாம்.

எந்த திசையைப் பார்த்தபடி படுக்கை இருக்கவே கூடாது?

ஃபெங் சூய் முறைப்படி, ஒருவரது நீட்டிக் கிடக்கும் கால்களானது கதவை நோக்கியவாறு இருக்கும் வகையிலோ அல்லது அவ்வாறு கதவை நோக்கிய திசையிலோ படுக்கையை வைக்கவே கூடாது. உறவுங்குவதற்கு உரிய சிறந்த திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரமும் சரியாக வழிகாட்டுகிறது. ஒருவர் வடக்கு திசையைப் பார்த்தவாறு உறங்குவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

 

Was this article useful?
  • 😃 (2)
  • 😐 (2)
  • 😔 (0)

Recent Podcasts

  • ரியல் எஸ்டேட் பிரிவில் 2024 அக்ஷய திரிதியாவின் தாக்கம்
  • நிதியாண்டில் அஜ்மீரா ரியாலிட்டியின் வருவாய் 61% அதிகரித்து ரூ.708 கோடியாக உள்ளது.
  • கிரேட்டர் நொய்டா ஆணையம், வீடு வாங்குபவர்களுக்கான பதிவேடு பற்றி பில்டர்கள் விவாதிக்கின்றனர்
  • TCG ரியல் எஸ்டேட் அதன் குர்கான் திட்டத்திற்காக எஸ்பிஐ யிலிருந்து ரூ 714 கோடி நிதியைப் பெறுகிறது
  • கேரளா, சத்தீஸ்கரில் NBCC 450 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுகிறது
  • Rustomjee குழுமம் மும்பையின் பாந்த்ராவில் சொகுசு குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது