சொத்து வாங்குதலுக்கான 1% டிடிஎஸ் @ பிரிவு 194IA-ன்கீழ்


50 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள அசையாச்சொத்து வாங்குபவர் மூலதனத்திற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும்

அசையாச்சொத்து பரிவர்த்தனைகளில் கருப்புபணத்தின் பரவலான பயன்பாட்டை சரிபார்க்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் இந்தசட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சொத்தை வாங்குபவர் மூல தனத்திற்கு ஏற்றவாறு வரி செலுத்தப்படவேண்டும்.

 

இந்த வரிக்கு உட்படும் சொத்துக்கள்

வருமானவரி சட்டம் பிரிவு 194IA –ன் படி சொத்தின் மதிப்பு 50 லட்சம் அல்லதுஅதற்கு மேல் இருந்தால் சொத்து வாங்குபவர் மூலதொகையின் மதிப்பிலிருந்து  1 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். இந்த வரி குடியிருப்பு சொத்து, வணிக சொத்து மற்றும் நிலங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், இந்த வரியானது விவசாய நிலம் வாங்குவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

டிடிஎஸ் வரி எப்போது பிடிக்கப்படும் & எப்படி செலுத்த வேண்டும்

இந்த வரியானது ஆவணம் பெயர் மாற்றப்படும் போதோ அல்லது ஆவண மாற்றத்தின் முன்பு முன்தொகை வழங்கும்போதோ சொத்தை வாங்குபவரிடம் இருந்து பிடிக்கப்படும். வரி பிடிக்கப்பட்ட மாதத்தின் அடுத்த மாத இறுதி நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த டிடிஎஸ் வரிப்பணத்தை சொத்து வாங்குபவர் மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும். டிடிஎஸ் வரி செலுத்த மற்றும் பிற விவரங்களை வழங்க நீங்கள் செலுத்துச்சீட்டை (சலான்) உள்ளடக்கிய  26QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு வேலை ஒன்றுக்கு மேற்பட்ட வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் இருந்தால் அதற்கு ஏற்றவாறு தனித்தனியாக முறையாக 26QB படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

 

டிடிஎஸ் வரி செலுத்த தேவையான விவரங்கள்

இந்த வரி செலுத்துவதும் அதற்கு தேவையான விவரங்களை வழங்குவதும் சொத்து வாங்குபவரின் வேலையாகும். படிவத்தை பூர்த்தி செய்வதற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் வரிசெலுத்துதல் தொடர்பான விவரங்களை பின்வரும் லிங்கில் காணலாம்.

(http://www.incometaxindia.gov.in/Pages/tds-sale-of-immovable-property.aspx)

பொதுவாக டி.டி.எஸ் செலுத்த வேண்டிய ஒவ்வொருவரும் டேன்  நம்பர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அசையா சொத்து வாங்குபவர் டேன்  நம்பர் பெற்றிருக்க வேண்டிய கட்டாயமில்லை. படிவம் 26QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், முகவரி, பான்எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை வழங்க வேண்டும் .

மேலும் ஒப்பந்தத்தின் தேதி, சொத்தின் முழுமதிப்பு, பணம் செலுத்தும் தேதி, முதலியனவற்றை சேர்த்து சொத்தின் முழுமையான முகவரியையும் வழங்க வேண்டும். 26QB உள்ள விற்பனையாளரின் பான் எண் சரியான உள்ளதா என்று சொத்து வாங்குபவர் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் விற்பனையாளரால் பிடிக்கப்பட்டவரிக்கு கடன் பெற இயலாமல் போய்விடும்.

இந்த வரியை அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் மூலம் ஆன்லைன் வழியாகவோ அல்லது செலுத்து சீட்டு வைத்து இயல்பான முறையிலோ செலுத்தலாம். அந்த வங்கி பின்னர் வருமான வரி துறை இணைய தளத்தில் அந்த பரிவர்த்தனை விவரங்களை வழங்கும். டி.டி.எஸ் டெபாசிட் செய்யப்பட்டவுடன்,  சொத்து வாங்கியவர் டி.டி.எஸ் சான்றிதழை படிவம்எண் 16B ஆக வருமான வரித்துறையின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின்னர் அதை 15 நாட்களுக்குள் விற்பனையாளருக்கு வழங்க வேண்டும்.

 

குறைந்த விலக்கு அல்லது டி.டி.எஸ் வரியை முற்றிலும் நீக்குதல்

சில டி.டி.எஸ் விதிகள் பணம் பெறுபவர் நேரடியாக வருமான வரி அதிகாரிகளை அணுகி அவர்களிடம் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு சலுகைகள் வழங்குவதால் பணம் செலுத்துபவர்  குறைவான வரி விகிதத்தில் அல்லது வரி விகிதம் முழுமையாக கழிக்கவும் முடியும். அல்லது சில சந்தர்ப்பங்களில் பணம்

செலுத்துபவர் டி.டி.எஸ்-க்கு முழுமையான ஒன்றுமில்லாத வரி விகிதத்திற்கான ஒரு அறிவிப்பை வழங்க முடியும். எனினும், அசையாச் சொத்துகளில் டி.டி.எஸ்-க்கு  அத்தகைய விதி இல்லை. வாங்குபவர் மற்றும் விற்பனையாளரின் ஒவ்வொரு பிரிவையும் பொறுத்து, 50 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள அசையாசொத்து வாங்குபவர் மூலதனத்திற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும்.

(இப்பதிவின் ஆசிரியர் வரி மற்றும் வீட்டு நிதி நிபுணர்,இத்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Comments

comments