ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக பதிவுசெய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு ஜி.எஸ்.டி பொருந்துமா?


சரக்குகள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் தனது அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்த ஒரு நபரின் வரி பொறுப்பு என்ன? மத்திய அரசின் மசோதா மற்றும் சுங்கத் துறையால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் விளக்கங்கள், தெளிவுபடுத்துவதற்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டுமானத்தின்  கீழுள்ள கட்டடத்தை வாங்குபவர்களிடமிருந்து ,முந்தைய , இரட்டை வரிகளான , சேவை வரி மற்றும் வாட் (மதிப்பு சேர்க்கப்பட்ட வரி) ஆகியவைக்கு  பதிலாக சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), பெறப்படுகிறது , இருப்பினும், பில்டர், கட்டுமானத்தின் பொது பயன்படுத்தீய  பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படுகிறது .இது கட்டுமானத்தின் கீழுள்ள கட்டடத்தை பதிவுசெய்த நபர்களுக்கு சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்த வட்டி விகிதத்தைத் தவிர்ப்பதற்காக, முழு பணத்தை செலுத்துமாறு வாங்குபவர்களிடம் பில்டர்கள்  கேட்டதின் மூலம், நிலைமை மிகவும் சிக்கலானது. சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக, மத்திய அரசின் மசோதா மற்றும் சுங்க வாரியம் பல்வேறு காலக்கட்டங்களில் சுற்றறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தல்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி எப்போது பொருந்தும்?

பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடம், அல்லது அடுக்குமாடி குடியிருப்பு , கட்டிடம் முடிக்கப்படுவதற்கு முன்பாக விற்கப்படுகிறது, முழுமையாக  அல்லது பகுதியாக இருந்தாலும், முடிக்கப்படுவதற்கு முன்பே வாங்கப்படுகிறது, அத்தகைய கட்டிடங்களும் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது. எனவே, ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில்,ஒரு வீடு வாங்க  நீங்கள் பதிவு செய்தால் கூட, பில்டர் உங்களை ,வெறும் ஒரு சதவிகித முன் பணம் அல்லது ஒரு சிறியத் தொகையை முன்பணமாக கட்டிவிட்டு ,மீதி தொகையை வீட்டில் குடியேறும் பொது கட்டலாம் என்று கூறினாலும், நீங்கள் அந்த வீட்டின் முழு தொகைக்கும்   ஜிஎஸ்டி வரி செலுத்ததான் வேண்டும். மாறாக, முழு கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால், ஜிஎஸ்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஜிஎஸ்டி யின் கீழ் தற்போதுள்ள சட்டம், முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், இருந்ததைப் போலவே சேவை வரியின் கீழ்    உள்ளது.

 

 

ஜிஎஸ்டி அறிமுகப்படுவதற்கு முன்னர் பணத்தின் ஒரு பகுதியை செலுத்தும்போது என்ன நடக்கிறது?

ஜிஎஸ்டி அறிமுகப்படுவதற்கு முன்னர் நீங்கள் பணத்தின் ஒரு பகுதியை பில்டரிடம் செலுத்தியிருந்தால் நீங்கள் சேவை வரி 4.50 சதவிகிதம் மற்றும் உங்கள் மாநிலத்திற்கு பொருந்தும், வாட் வரியையும் சேர்த்து செலுத்திருக்கவேண்டும். எனினும், 4.50 சதவிகிதம் சேவை வரி விகிதம் அமைப்பின் திட்டத்தின் கீழ் இருந்தது, இதன் கீழ் கட்டுமானப்பணிகள் / டெவெலப்பர்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எந்த உள்ளீட்டுக் கடனையும் பெற  உரிமை இல்லை. எனவே, அனைத்து சேவை வரி மற்றும் வாட் வரியும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாக ஏற்றப்பட்டது அல்லது அவர்களிடமிருந்து வரிப்பணமாக கோரப்பட்டது . எனவே, ஜூலை 1,2017க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட , கட்டுமானத்தின் கீழுள்ள அடுக்குமாடிகுடியிருப்புகளுக்குறிய பணத்தின் ஒரு பகுதியை , ஜிஎஸ்டி அறிமுகப்படுவதற்கு முன்னர் செலுத்தியிருந்தால், அந்த தொகைக்குரிய சேவை வரி மற்றும் வாட் ஆகியவற்றை பில்டர் ஏற்கனவே மீட்டெடுத்திருப்பார்.ஜூலை 1, 2017 க்கு முன்னர் பணம் செலுத்தப்படாவிட்டாலும், பில்டர்  கட்டடத்திற்குரிய விலைப்பட்டியல் அல்லது அதன் கோரிக்கை,அதன் தொங்காய்க்கு ஏற்றாற்போல,முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ , ஏற்கனவே எழுப்பியிருப்பார், ஆனால் நீங்கள் அந்தத்தொகையின் ஒரு பங்கிற்குரிய , சேவை வரி மற்றும் வாட்டை செலுத்தியிருப்பீர்கள், ஏனெனில், 2011 வரி விதிப்பு விதிகளின் படி சேவை வரி அந்த தொகைக்கு பொருந்தும்,சேவை வரி இரண்டு முக்கிய நேரத்தில் விதிக்கப்படும் – பணம் செலுத்தும் தருணம் அல்லது விலைப்பட்டியல் வெளியிடும் தருணம்.

கட்டுமானத்தின் கீழுள்ள சொத்துக்களுக்கு  ஜிஎஸ்டி யின் விகிதம் 18 சதவீதம் ஆகும். இருப்பினும், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கின் மதிப்பு  கருத்தில் கொள்ளப்பட்டு ,அந்த நிலத்தின் வட்டியும் மாற்றப்படும். எனவே, அத்தகைய சந்தர்ப்பங்களில்,முழு ஒப்பந்தத்தின் மதிப்பில் , திறம்பட்ட ஜிஎஸ்டியின்  விகிதம் 12% ஆகும். கட்டுமானத்தின் கீழுள்ள சொத்துக்களுக்கு ஜிஎஸ்டி யின் 12 சதவீத விகிதம் அதிகமானதாக இருந்தாலும், பல காரணங்களால் நுகர்வோரின் செலவு தொகை குறைவாக இருக்கும் .இந்த காரணங்களில் முதலாவதாக , வாட் , சேவை வரி, நுழைவு வரி போன்ற பல வரிகளை இது மாற்றிவிடும். இரண்டாவதாக, இந்த வரிகளின் விளைவு மற்றும் பொருட்களின் மீதான அதிக வரி மற்றும் இதர சேவைகளுக்கான வரிகள் எல்லாம் விதிக்கப்படும்,ஏனென்றால்,ஜிஎஸ்டிக்கு   முன் சேவை வரி மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்ட திட்டத்தின் முந்தைய காலகட்டத்தில் ,பில்டரின் கட்டடத்திற்கு எந்தவொரு உள்ளீட்டுக் கடனும் கிடைக்கவில்லை, அதனால் அதிக வரி விதிக்கப்பட்டது. . 12 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பின் படி ,பில்டர்கள் /டெவெலப்பர்கள் உள்ளீட்டு வரி வரவுகளின் நன்மைகளைப் பெற முடியும், ஆதலால் தற்போதைய ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் நிகர தாக்கம் ஒருவேளை குறைவாக இருக்கும்.

நிலத்தின்  உரிமையாளர் ஈடுபடுத்தப்படாத சந்தர்ப்பங்களில், வேறுசில ஒப்பந்தக்காரர்களுக்கென சில கட்டுமான நடவடிக்கைகளை பில்டர்  கொடுக்கும்போது , ஜிஎஸ்டியின் விகிதம் 18 சதவிகிதம் விதிக்கப்படும் .

எனவே,   செலுத்தப்படாதத் தொகைக்கான சமன்பாட்டிற்காக, விலைப்பட்டியலும் இல்லாத பொது பில்டர் அந்த மீதித்தொகைக்கான 12 சதவிகிதம் ஜிஎஸ்டி யை வசூலிப்பார் . ஜிஎஸ்டின் விதிகள் படி, பில்டர் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் உள்ளீட்டு கடன் பெறும் நிலையில் , அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு உள்ளீட்டு கடன்களின் நலன்களைப் பெற்றுத்தர வேண்டும்.  

ஆகையால், ஜிஎஸ்டியின்  கீழ் பெறும் நன்மைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், முழு 12 சதவிகிதத்திற்கும் கட்டணத்தையும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோரிடம்   கேட்கக்கூடாது. இருப்பினும், ஒரு பில்டர் அவ்வாறு செய்தால், ஜிஎஸ்டி சட்டத்தின் எதிர்ப்பு லாபத்திற்கான விதியின் படி அத்தகைய பில்டர்களுக்கு எதிராக அதிகாரிகள் தண்டனை நடவடிக்கைகளை தொடங்க முடியும்.

 

ஜிஎஸ்டி செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், நிர்ணயித்த முழு  தொகையும் செலுத்தப்பட்டால் அல்லது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டுமானம் முடிவடைந்தால், என்னவாகும்?

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர்  முழு தொகையும் செலுத்தப்பட்திருந்தாலோ அல்லது விலைப்பட்டியல் எழுப்பப்பட்டு,  அதற்குரிய தொகை செலுத்தப்பட்திருந்தாலோ , நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தின் முழு மதிப்பில் சேவை வரி செலுத்தியிருப்பீர்கள் . அதனால் , கட்டுமானப்பணியானது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட தேதிக்குப் பின்னர்  (ஜூன் 30, 2017) முடிந்தாலும் கூட , நீங்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் எந்தவொரு வரியையும் கட்டத்தேவையில்லை, ஏனென்றால், முந்தைய சேவை வரி மற்றும் வாட் ஆகியவற்றை ஜிஎஸ்டி முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது .

(இதன் ஆசிரியர் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, வரி மற்றும் வீட்டு நிதி நிபுணர்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Comments

comments