வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்: உங்கள் வடக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து திட்டமும் குறிப்புகளும்

செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செலுத்துவதே வடக்கு திசை என்கிறது வாஸ்து. வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து பலன் முழுமையாக கிட்ட வேண்டுமெனில், அந்த வீடு முழுவதும் வாஸ்து முறைப்படி கட்டபட்டு, அங்குள்ள குறைபாடுகள் முழுவதுமாக நீக்கபட வேண்டும். வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்து வீடு கட்டுவதற்கான வாஸ்து வழிகாட்டியை இங்கே காணலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு திசைகளை பார்த்தவாறு கட்டப்படும் வீடுகள் மிகவும் அதிர்ஷ்டமானவை. எனினும், நேர்மறை ஆற்றல் உருவாதற்கு இந்த ஒரு காரணி மட்டும் போதாது. வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் நோக்கினால், வடக்கு பார்த்து கட்டப்படும் வீடுகள் மிகவும் பிரபலமடைந்திருக்க வேண்டும்.

Table of Contents

உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற வேண்டும் என நீங்கள் விரும்பினால், வடக்கு திசை பார்த்து நீங்கள் அமைக்கும் அனைத்து கட்டடங்களுக்கும், அதற்கென உள்ள சில வாஸ்துக் குறிப்புகளை அவசியம் பின்பற்ற வேண்டும். வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டில், வாஸ்து முறைப்படி வீட்டின் தலைவாசலான பிரதான கதவு வடக்கு திசையை பார்த்து அமைக்க வேண்டும். மேலும் தெற்கு, மேற்கு, தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளை பார்த்தபடி மாடிப்படிக்கட்டுகளை அமைத்தால் அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக அமையும்.

எனினும், வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டில் அதன் பலன்கள் முழுமையாக நிறைய வேண்டுமெனில், வாஸ்து முறைப்படி வீடு கட்டப்பட்டு அதன் குறைபாடுகள் முழுவதுமாக சரிசெய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரையில் வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து திட்டம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 

North facing house Vastu: Significance, tips and Vastu plan for your north facing home

 

வடக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்

North facing house Vastu: Significance, tips and Vastu plan for your north facing home

 

பிரதான கதவுக்கான வடக்கு பார்த்த வீடு வாஸ்து

வடக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து திட்டத்தில், பிரதான கதவு என்பது வடக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். அவ்வாறு வடக்கு திசையில் இருக்குமாறு அமைத்தாலும், அதை ஐந்தாவது அடி அல்லது பாதத்தில் அமைப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், மங்களாகரமானதாகவும் கருதப்படுகிறது, மேலும், அது செல்வத்தை ஈர்க்கும். ஏனெனில், வடக்கு திசையானது செல்வங்களின் அதிபதியான குபேரன் உடையது.

மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது பாதங்களாக முறையே முக்யா, பாலத், திதி ஆகிய பாதங்களும் அதிர்ஷ்டமானவையாக கருதப்படுகிறது. பிரதான கதவு வாஸ்து முறைப்படி மேற்கண்ட ஏதேனும் ஒரு பாதங்களில் பிரதான கதவை அமைப்பது செல்வத்தை தன்னகத்தே ஈர்க்கும் விதமாக அமையும்.

வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளுக்கு இடையே உள்ள தூரத்தை ஒன்பது சம பாகங்களாகப் பிரித்தால், அதில் வரும் ஐந்தாவது பாதத்தின் மேல் அமையும் வீடானது வாஸ்து முறைப்படி மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதுப்படுகிறது.

 

North facing house Vastu: Significance, tips and Vastu plan for your north facing home

 

வடக்கு பார்த்த வீடு நல்லதா?

ஏதோ ஒரு குறிப்பிட்ட திசை மட்டுமே நல்லது, மற்ற திசைகள் கெட்டது என்பது போன்ற கருத்து நம்மிடையே பரவலாக நிலவி வருகிறது, இது தவறானது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி, சில விதிகளை சரியாக கடைபிடித்தால் எல்லா திசைகளுமே நமக்கு நன்மை தருவனவாகும். உதாரணமாக, வீட்டின் பிரதான கதவை எந்த இடத்தில் அமைக்கிறோம் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மேலும் அந்த வீட்டில் அலங்கரிக்கபடும் ஃபர்னிச்சர்கள், அறைகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் நிறங்கள் மற்றும் அவ்வீட்டின் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்கள் போன்ற காரணங்களைக் கொண்டு அந்த வீடு நல்லதா அல்லது கெட்டதா என நிர்ணயிக்கலாம்.

வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த வீட்டை வடிவமைப்பது அங்கு குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் திசையில் அவ்வீட்டில் அனைத்தும் அமைப்பதால் அது செல்வத்தை ஈர்க்கும் இடமாக உள்ளது. குறிப்பாக நிதித் துறையில் இருப்பவர்கள் அல்லது சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த வீடு பல நன்மைகளை அளிக்கும். இந்த திசையானது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, வங்கி மற்றும் நிதித் துறையை சேர்ந்தவர்களான வணிகர்கள், முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள், வங்கியாளர்கள், கணக்காளர்கள் போன்றவர்களுக்கு வடக்கு பார்த்த வீடுகள் ஏற்றதாக இருக்கும். மேலும் அதிக பயணம் செய்பவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், சுகாதாரத் துறை, பிரின்டிங் மற்றும் பப்ளிஷிங் தொழிலில் இருப்பவர்களுக்கும் வடக்கு நோக்கிய வீடு நல்ல பலன் தருவதாக அமையும்.

அதேவேளையில், ஒரு சொத்து வாங்கும்பொழுதோ அல்லது வடக்கு பார்த்த வீடு வாங்கும் பொழுதோ அல்லது வடக்கு பார்த்த வீடு கட்டும்போதோ வடக்கு பார்த்த வீட்டை கட்டுவதற்கான வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக அவ்வீட்டில் அமைக்கபடும் அறைகள் மற்றும் அதன் எண்ணிக்கை மற்றும் கதவுகளின் அளவுகள் வாஸ்து விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும்.

 

வடக்கு பார்த்த வீடு வாஸ்து: படிக்கட்டுகள் அமைவிடம்

வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் வீட்டில் அறைகள் அமைப்பதிலும், பொருட்களை வைப்பதிலும் மாற்றங்கள் செய்யலாம். மேலும், இதற்கென உதவ சுருக்கமாக சிலக் குறிப்புகள் இங்கே…

  • வடக்கு பார்த்த படிக்கட்டுகள் அமைக்கக் கூடாது; அது பண நெருக்கடிக்களை ஏற்படுத்தும்.
  • படிக்கட்டுகளை தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு திசையை பார்த்தவாறு அமைக்கலாம்.
  • வடகிழக்கு திசையில் மாடிப்படிக்கட்டுகளை அமைக்கக் கூடாது. ஏனெனில், அதனால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • படிக்கட்டுகள் கடிகார திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: தெற்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து

 

வடக்கு பார்த்த வீடு: அப்படியென்றால் என்ன?

North facing house Vastu: Significance, tips and Vastu plan for your north facing home

வடக்கு பார்த்த மனை

 

ஒரு வீட்டின் பிரதான நுழைவாயில் வடக்கு திசை பார்த்து இருந்தால் அதனை வடக்கு பார்த்த வீடு என்று அழைக்கிறோம். பெரும்பாலான மக்கள் வடக்கு நோக்கிய சாலையில் அமைக்கப்படும் வீடுதான் வடக்கு பார்த்த வீடு என்று நினைக்கின்றனர். ஆனால், அது சரியல்ல. ஒரு வீடு எந்த திசையில் உள்ளது என்பதை அந்த வீட்டின் தலைவாசல் அமைந்துள்ள திசையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: கர் கா நக்‌ஷா தயாரிப்பது எப்படி?

 

வடக்குத் திசை நோக்கிய வீடு: ஒரு வீடு நோக்கியிருக்கும் திசையை அடையாளம் காணுவது

ஒரு வீடு நோக்கியிருக்கும் திசையை அறிந்து கொள்வது மிக முக்கியமான் ஒன்றாகும் ஏனென்றால், ஒரு சிறு அளவில் மூன்று அல்லது நான்கு டிகிரி மாற்றம் கூட 16 வாஸ்து பகுதிகளின் ஒட்டுமொத்த கணக்கீடுகளை மாற்றிவிடும். மற்றும் பிரச்சினைகளுக்கான மூல காரணத்தை அறிந்து கொள்வது கடினமாகிவிடும்.

ஒரு வீடு அமைந்திருக்கும் திசையை அடையாளம் காண, அந்த வீட்டின் பிரதான  வாயில் உங்கள் முதுகுப் புறமாக இருக்குமாறு வீட்டிற்கு வெளியே நின்றுகொள்ளுங்கள், இப்போது, ஒரு காம்பசை (திசை மானியை)  எடுத்து அதை உங்கள் கையில் வைத்து முன்புறமாக நெஞ்சுக்கு நேரே கிடை நிலையில்(ஹரிசாண்ட்டல்) வையுங்கள்

காம்பசிலுள்ள (திசை மானி) திசை காட்டும் ஊசியானது,  பூஜ்ய டிகிரி புள்ளியும் அந்த ஊசியின் வடக்கு முனையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கமையும் வரை  தடையின்றி அலைபாய்ந்து  நின்று வடக்கு காந்த விசைத் திசையை உறுதி செய்யும்.

 

வடக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து: இது அனைவருக்கும் உகந்ததா?

இல்லை. அது அங்கு வாழும் மக்களின் தேவைகளைப் பொறுத்து மாறும். மேலும் அது அவர்களின் தொழில் மற்றும் ராசியை பொறுத்தது.

வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த வீடு என்பது செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு உகந்த திசையில் இருப்பதால் அது நன்மை விளைவிப்பதாக கருதப்படுகிறது. வாஸ்து முறைப்படி ஒரு வீடானது வடக்கு பார்த்து கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தால், அவ்வீட்டில் குடியிருப்பவர்களுக்கு நல்ல வளத்தையும் செல்வத்தையும் அளிக்கும் இடமாக அது இருக்கும். இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, தொழில், ராசி போன்ற மற்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாஸ்து நிபுணர்களின் கருத்துப்படி, புதன் கிரகத்துடன் தொடர்புடைய வடக்கு பார்த்த வீடானது சொந்தமாக தொழில் செய்வோர் அல்லது நிதி சார்ந்தவற்றை தங்கள் தொழிலாக ஏற்று செய்வோருக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் வடக்கு பார்த்த வீடு பிரின்டிங் மற்றும் பப்ளிஷிங் துறையில் இருப்பவருக்கும் உகந்தது ஆகும்.

வடக்கு திசை நீருக்கு ஆதாரமாக இருப்பதால், ஊடகத்துறை மற்றும் பொழுதுபோக்குத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வளத்தை அளிக்கக் கூடியது.

வடக்கு நோக்கிய வீடுகளில் குடியிருப்பதால் சிறப்பாக அமையும் தொழில்கள்:

வணிகம்

அக்கவுன்டன்ட் அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் (CA)

வங்கிப் பணியாளர்

முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தை வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள்

தொடர்பு மற்றும் இ-சேவை வழங்குபவர்கள்

ஜோதிடம் மாற்றம் வாஸ்து

சுற்றுலா மற்றும் டிராவல் தொழில்

ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை துறைகள்

 

லிவிங் அறைக்கான வடக்கு பார்த்த வீடு வாஸ்து திட்டம்

வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள வீட்டின் லிவிங் அறையானது வடகிழக்கு திசையில் இருக்குமாறு வடிவமைக்கலாம். மற்றொரு வாய்ப்பாக லிவிங் அறையை வடமேற்கு மூலையில் இருக்குமாறும் வடிவமைக்கலாம். இருப்பினும், வீட்டில் ஃபர்னிச்சர்கள் வைக்கும் இடத்தை வாஸ்து சாஸ்திர விதிகளின்படி தீர்மானிப்பது மிகவும் மிகவும் முக்கியமானது. மேஜை, சோஃபா போன்றவற்றை மேற்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் இருக்குமாறு வைப்பது அவசியம்.

 

படுக்கையறைக்கான வடக்கு பார்த்த வீடு வாஸ்து திட்டம்

வடக்கு பார்த்த வீட்டில் மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் படுக்கையறை அமைப்பது சிறந்தது. இருப்பினும் வாஸ்துப்படி, வடக்கு பார்த்த பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள வீட்டின் மாஸ்டர் பெட்ரூமானது தென்மேற்கு பகுதியில் அமைக்கப்படுவது மேலும் சிறப்பானது.

 

சமையலறைக்கான வடக்கு பார்த்த வீடு வாஸ்து திட்டம்

சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில்தான் கட்ட வேண்டும். தெற்கு தியைசையும் சமையலறைக்காக தேர்ந்தெடுக்கலாம். அதேநேரத்தில், வடக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து பிளான் படி, வடகிழக்கு திசையில் சமையலறை கட்டுவதை தவிர்க்கலாம்.

 

Kitchen in north-facing property

Source: Pexels

 

வடக்கு நோக்கிய வீடுகளின் உணவு உண்ணும் அறைக்கான வாஸ்து

உணவு உண்ணும் போது கிழக்கு, மேற்கு அல்லது வடக்கே திசையை பார்த்து உண்ண வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. வாஸ்துப்படி வடக்கு நோக்கி அமைந்துள்ள வீடுகளில் உணவு உண்ணும் அறை மேற்கு திசையில் அமைந்திருக்குமாறு வடிவமைக்கப்பட வேண்டும்

 

வடக்கு பார்த்த வீடு: வாஸ்து சாஸ்திரக் குறிப்புகள்

வடதிசை நோக்கிய வீட்டில் சாய்வுகள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் வடக்கு பார்த்த வீட்டில், வடக்கிலிருந்து தெற்கில் ஏதேனும் சாய்வு (Slopes) அமையுமாறு திட்டம் இருந்தால், அதைத் தவிர்க்கலாம்.

அலங்கோலத்தை தவிர்ப்பீர்

வீட்டில் வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் குப்பைகள் மற்றும் குப்பைக் கூளங்கள் பயன்படுதுவதைத் தவிர்க்கலாம். இது உங்கள் நிதிநிலை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

Vastu and clean home

Shutterstock

வடக்கு பார்த்த வீட்டில் மரங்கள்

வடக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து திட்டத்தின்படி, வீட்டின் வடக்கு திசையில் மரங்கள் நடக்கூடாது.

புனிதப் பொருட்களை வைத்தல்

ஸ்வஸ்திக், ஓம், ஓவியங்கள் போன்ற மதச் சின்னங்கள் உள்ளிட்ட புனிதப் பொருட்கள் (holy items) அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியவாறு வைக்கக்கூடாது.

மின்சார சர்க்யூட் போர்டு

மின்சார சர்க்யூட் போர்ட் (Electricity circuit board) தென்கிழக்கு பகுதியில் இருக்குமாறு அமைக்க வேண்டும். ஏனெனில், அப்பொழுதுதான் வீடு முழுவதும் சமநிலை ஆற்றல் நிறைந்து காணப்படும்.

செப்டிக் டேங்க் அமைவிடம்

வடகிழக்கு திசையில் செப்டிக் டேங்க் (septic tanks) அமைப்பதைத் தவிர்க்கலாம்.

வடக்கு பார்த்த வீட்டில் பெட்ரூம்/கழிவறை

படுக்கையறைகள் (Bedrooms) மற்றும் கழிவறைகள் (Toilets) ஆகியவை வடகிழக்கு திசையில் அமைக்கக் கூடாது. படுக்கையறை வாஸ்து முறைப்படி, தென்மேற்கு திசையில் மாஸ்டர் பெட்ரூம் அமைக்கக் கூடாது.

வடக்கு பார்த்த வீட்டில் படிக்கும் அறை

வாஸ்து சாஸ்திரதின் படி, வீட்டில் படிக்கும் அறை (Study room) என்பது கிழக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் அமைக்கலாம். ஏனெனில், இந்த திசைகள் கல்விக்கான திசைகள் ஆகும். வடக்கு பார்த்த வீட்டில் படிக்கும் அறையை தென்கிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் ஒருபோதும் அமைக்கக் கூடாது. மாணவரின் முகம் படிக்கும்போது வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கியபடி இருக்குமாறு படிக்கும் மேஜை அமைக்கப்பட்ட வேண்டும்.

வீட்டில் படிக்கும் அறை கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கிய வண்ணம் அமைக்க வேண்டும். இதற்கடுத்து வடக்கு திசையில் அமைக்கலாம்.

வடக்கு பார்த்த வீட்டு அலுவலகம்

வடக்கு திசை என்பது செல்வ வளம் பெருக ஏதுவான திசையாகும். வீட்டில் அலுவலகம் அமைக்கும்போது வடக்கு பார்த்து அமைத்தால் பொருளாதார நிலை மேம்பட உதவும். உங்களது வேலை செய்யும் இடத்தை வீட்டின் வடக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். மேலும், உங்களுக்கு பின்னால் சுவர் இருக்குமாறு அவ்விடம் அமைவதை உறுதி செய்ய வேண்டும். தொழில் விருத்திக்கு வடக்கு திசையில் நீரூற்று அமைக்கலாம். மேலும், வடகிழக்கு திசையில் மேஜைகளை அலங்கோலமான நிலையில வைத்திருக்கக் கூடாது. வெற்றியை ஈர்க்க ஹை-பேக் (high-back) நாற்காலி மற்றும் மரமேஜைகளைப் பயன்படுத்தலாம்.

பூஜை அறை

பூஜை அறை (Pooja room) மற்றும் லிவிங் அறை (living room) ஆகியவை வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும். கிழக்கு மற்றும் மேற்கு திசைகளும் பூஜை அறை அமைக்க சிறந்த திசைக்களாகும். இந்தியக் கோயில்கள் பொதுவாகவே மேற்கு திசையை நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இது தெய்வ சிலைகளின் முகங்கள் கிழக்கு பார்த்தவாறு இருப்பதை உறுதி செய்கிறது.

விருந்தினர் அறை

விருந்தினர் அறை (Guest room) என்பது வடகிழக்கு திசையை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.

 

Vastu and guest bedroom

Pixabay

 

பாத்ரூம் மற்றும் செப்டிக் டேங்க்

வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்கள் பாத்ரூம் மற்றும் செப்டிக் டேங்க்குகள் உள்ள இடங்களில்தான் குவிக்கப்படுகிறது. எனவே, அவற்றின் அமைவிடம் மிகவும் முக்கியமானது. வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த வீட்டில் பாத்ரூம் அமைக்க சிறந்த இடம் என்பது தென்மேற்கில் தெற்கு திசை அல்லது வடமேற்கில் வடக்கு திசை ஆகும்.

தண்ணீர்த் தொட்டிகள்

தண்ணீர்த் தொட்டிகளை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் அமைக்கலாம்.

கேரேஜ்/கார் பார்க்கிங்

வடக்கு திசையில் கேரேஜ்/கார் பார்க்கிங் (Garage/car-parking) அமைப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில், இது மன அமைதியைக் கெடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களது கேரேஜை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்குமாறு திட்டமிடலாம்.

சுற்றுச்சுவர்

வாஸ்து முறைப்படி, வடக்கு பார்த்த வீட்டில் சுற்றுச்சுவர் (Boundary wall) கட்டும்பொழுது, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் சுவர் சற்று உயரம் குறைவாக இருக்குமாறு கட்ட வேண்டும்.

வாயில்

வீட்டின் வாயில் (Gate) கிழக்கில் பாதி திசை நோக்கியபடி அல்லது வடக்கில் பாதி திசையை நோக்கியபடி இருப்பது மிகவும் அவசியம். வடக்கு பார்த்த வீட்டில் உள்ள பிரதான கதவு சில்வர் அல்லது பச்சை நிறத்தில் இருக்கலாம்.

பால்கனி மாற்று மொட்டை மாடி

வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த வீட்டில் அமைக்கபடும் பெரிய பால்கனிகள் (Balcony) அல்லது மொட்டைமாடிகள் (terrace) வடக்கு திசையில்தான் கட்டாயம் இருக்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கில் பால்கனிகள் அமைப்பதை தவிர்க்கலாம் அல்லது அதற்கு மாற்றாக பால்கனி சுற்றிலும் கிரில்கள் அமைக்கலாம்.

விளக்குகள் பொருத்தப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த சுவர்கள் மூலம் நேர்மறை மற்றும் நல்ல ஆற்றல்கள் ஈரக்கப்படுகின்றன.

வடக்கு பார்த்த வீட்டில் நிலத்தின் மட்டம்

அனைத்துப் பகுதிகளும் அமைக்கப்படும் தளத்தின் மட்டம் கட்டாயம் குறைவாக இருக்க வேண்டும். இது அவ்வீட்டிற்கு நல்ல பலன்களைத் தரும். உதாரணமாக, நடுக்கூடம் அமைந்துள்ள தளத்தின் மட்டத்தை விட முன்பகுதியின் மட்டம் குறைவாக இருந்தால், அது உங்களுக்கு நல்ல முன்னேறத்தையும் புகழையும் தரும். அதுவே வடக்கு திசையில் அமைக்கப்படும் வீட்டின் மட்டம் அதிகமாக இருந்தால், அது மோசமான விளைவைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வடக்கு திசையில் உள்ள நிலத்தின் மட்டமும் அதிகமாக இருந்தால், அதுவும் மோசமான விளைவைத் தரும்.

வடக்கு பார்த்த வீட்டில் பாதுகாப்புப் பெட்டகம்

வடக்கு பார்த்த வீட்டில் பாதுகாப்பு பெட்டகத்தை (Safety locker) தெற்கில் வடக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். பாதுகாப்பு பெட்டகத்தின் கதவானது, வாஸ்து முறைப்படி செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு உகந்த திசையான வடக்கு திசையை நோக்கி திறக்குமாறு இருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் பாதுகாப்பு பெட்டகத்தை வைக்கக் கூடாது. இது, நஷ்டத்தை ஏற்படுத்தும்.

 

வடக்கு பார்த்த வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க சில குறிப்புகள்

வடக்கு பார்த்து அமைந்துள்ள சொத்தானது, வடகிழக்கு திசையை நோக்கி விரிவடைந்திருந்தால் அது மிகப் பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்கும். நல்ல முறையில் கட்டப்பட்ட வடக்கு பார்த்த வீட்டில் உள்ள பெண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தலைமைத்துவப் பண்பையும் அதிகரிக்கும். வடக்கு நோக்கி கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரியான விதத்தில் அமையாது. வேலை வாய்ப்புகளுக்கு குபேரன் சிலையை வடதிசையில் வைக்கலாம். துளசி செடியை வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றலானது நேர்மறை ஆற்றலாக மாறுகிறது.

காற்றில் ஆடக்கூடிய உலோக மணிகளை வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் தொங்கவிடுவதன் மூலமும் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கலாம். உலோக ஆமைகளை வடக்கு அல்லது வடமேற்கு திசைகளில் வைத்தால் நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் முக்கியமாக தொழில் முறை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும்.

வாஸ்து கலசத்தை வடகிழக்கில் வைத்தால் நேர்மறை ஆற்றல்கள் பெருகும். வீட்டில் நல்ல அதிர்வுகளை உருவாக்க கற்பூர உருண்டைகள் அல்லது நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்தலாம். மேலும், ஒருமுறை பயன்படுத்தியதும் அதனை மாற்ற வேண்டும். பெட்ரூமின் வடக்கு திசையில் யானை ஜோடிகளை வைத்தால் அன்பும் அதிர்ஷ்டமும் பெருகும்.

வடக்கு பார்த்த வீட்டில் தவிர்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

  • வடமேற்கு திசையில் பிரதான நுழைவாயிலை அமைக்க வேண்டாம்.
  • வடகிழக்கு மூலையில் கழிவறைகள், படுக்கையறைகள், சமையலறைகளை அமைக்கக் கூடாது. ஒருவேளை பாத்ரூம் வடக்கு திசையில் கட்டப்பட்டிருந்தால் வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி அதற்கு உண்டான தோஷ நிவர்த்திகளை செய்ய வேண்டும். வடக்கு திசையில் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கான எளிய வாஸ்து தோஷ பரிகாரமாக வாஸ்து செம்பு பட்டையை கதவின் மேல் பொருத்தலாம். கழிவறையின் உள்ளே ஒரு கிண்ணத்தில் உப்பை வைத்து ஒவ்வொரு வாரமும் அதை மாற்ற வேண்டும்.
  • தெற்கு அல்லது வடக்கு திசையில் கழிவுநீர் வெளியேறும் இடங்களை அமைக்கக் கூடாது.
  • வடக்கு திசை என்பதை தவிர்த்து மற்ற விஷயங்களில் நல்ல பலன்கள் உள்ளதா என்பதை பார்க்காமல் வடக்கு பார்த்த சொத்துகளை வாங்கக் கூடாது.
  • ஆறாவது பாதத்தில் கதவை அமைக்கக் கூடாது.
  • கார்டன் அல்லது நர்சரிகளை வடமேற்கு திசையில் அமைக்கக் கூடாது.
  • நிலத்தடி தொட்டியை வடமேற்கு திசையில் அமைக்கக் கூடாது.
  • வீட்டிற்கு சிவப்பு அல்லது மெரூன் நிற பெயின்ட் அடிக்கக் கூடாது. வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த வீட்டிற்கு வெள்ளை, நீலம், சந்தனம், கிரே அல்லது பச்சை நிறங்கள் சிறந்ததாகும்.
  • செப்டிக் டேங்க்கை வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசைகளில் அமைக்கக் கூடாது.
  • குடியிருப்பில் தெற்கு அல்லது தென்கிழக்கு பகுதிகளில் கண்ணாடிகளை அமைக்கக் கூடாது.
  • வடக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து திட்டத்தின் படி, கட்டிடம் கட்டும்போது கனமான பில்லர்களை வடகிழக்கு பகுதிகளில் அமைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு கட்டப்படும் பில்லர்களின் அமைவிடத்தால் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
  • வடக்கு பார்த்த வீட்டிற்கான சமையலறை வாஸ்து முறைப்படி, தென்கிழக்குப் பகுதியில் கட்டப்படும் சமையலறைக்கு கருப்பு நிற மார்பில் மேடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • வடக்கு பார்த்த அறைக்கு பச்சை நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் நிதி நெருக்கடிகளை சமாளிக்க, வடக்கு பார்த்த அறைகளில் நீல நிற திரைச்சீலைகளை பயன்படுத்தலாம்.
  • வடக்கு பார்த்த வீட்டின் முன்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிற பெயின்ட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • வடக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து திட்டத்தின்படி வெள்ளை மற்றும் நடுநிலை நிறங்களான கிரீம், காக்கி மற்றும் கிரே நிறங்களில் பெயின்ட் பண்ணுவது சிறந்ததாகும். நிலம் மற்றும் பச்சை நிற பெயின்டுகளும் சிறந்த தேர்வாக இருக்கும்.
  • வடக்கு பார்த்த வீட்டிற்கு அடர் நிறங்களான சிவப்பு மற்றும் மெரூன் நிற பெயின்டுகள் பயன்படுத்துவதை வாஸ்து சாஸ்திரம் ஒருபோதும் பரிசீலிப்பதில்லை.
  • வீட்டின் வெளிப்புறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் பெயின்டுகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் வாசிக்க: வாஸ்து சாஸ்திரத்தின் படியும் அறிவியல் ரீதியாகவும் தூங்குவதற்கு ஏதுவான திசை

 

வடக்கு பார்த்த மனைக்கான வாஸ்து

வாஸ்து முறைப்படி, வடக்கு நோக்கியபடி அமைந்திருக்கும் மனை என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வடக்கு பார்த்த வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் கட்டப்படும் சுற்றுச் சுவரை விட வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் கட்டப்படும் சுற்றுச் சுவர் மெலிதாகவும் சிறிதாகவும் இருக்க வேண்டும். வடக்கு பார்த்த வீட்டில் சாய்வானது தென்கிழக்கு திசையில் அமையக் கூடாது. அவ்வாறு அமைந்தால் அது நஷ்டத்தை ஏற்படுத்தும். வடக்கு அல்லது கிழக்கு திசையில் சாய்வு அமைவது மிகவும் சிறந்ததாகும். வீட்டு மனைப் பகுதியில் மேலும் ஏதேனும் நீட்டிக்க விரும்பினால் வடகிழக்கு திசையை நோக்கியவாறு நீட்டிக்கலாம். அது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் அளிக்கும். வாஸ்து முறைப்படி வீட்டினை மற்ற திசைகளில் நீட்டிப்பது அவ்வளவாக சிறந்ததல்ல.

இதையும் வாசிக்க: மேற்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து திட்டம்

 

வடக்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது?

கடகம், விருச்சிகம், மீன ராசியினருக்கு வடக்கு பார்த்த வீடு மிகவும் நல்லது.

சொந்தமாக தொழில் செய்பவர் அல்லது நிதித் துறைகளான அக்கவுன்டன்ட், சார்ட்டட் அக்கவுன்டன்ட், வங்கிப் பணியாளர்கள், முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் போன்றவர்களின் தொழில் வளர்ச்சிக்கு வடக்கு பார்த்த வீடு சிறந்தது. தொலைத்தொடர்பு மற்றும் இ-சேவை, ஜோதிடம் மற்றும் வாஸ்து, சுற்றுலா அல்லது மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் வடக்கு பார்த்த வீடு நல்லது.

இதையும் வாசிக்க: குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை வடிவமைப்பதற்கான வாஸ்து சாஸ்திரக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

 

வடக்கு பார்த்த வீடு வாஸ்துவும் வீட்டில் உள்ள பெண்களும்

வடக்கு பார்த்த வீட்டில் ஏற்படும் நன்மை, தீமைகள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அல்லது அக்குடும்பத்தின் செல்வ வளத்தையே முதலில் பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வடக்கு பார்த்த வீட்டில் வசிக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றியானது அவ்வீட்டின் வாஸ்துவை சார்ந்துள்ளது. எனவே, ஏதேனும் வாஸ்து தோஷங்கள் இருப்பின், அதை சரிசெய்ய வேண்டும்.

பின்வருவனவற்றைக் குறித்துக் கொள்ளவும்:

  • தென்கிழக்கு திசையானது வெள்ளி கிரகத்தின் வீடாகும். மேலும் இக்கிரகம் பெண்களுக்கு தொடர்புடையதாக இருப்பதால் தென்கிழக்கு திசை வாஸ்துவிற்கு ஏதுவாக இல்லாவிட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அல்லது பொதுவாகவே பெண்களுக்கு நல்ல நேரமாக இருக்காது.
  • வீட்டின் பிரதான  வாயிற் கதவு அல்லது படுக்கை அறைக் கதவு தென் கிழக்கு பகுதியை நோக்கி திறந்து இருந்தால் அந்தப் பகுதி வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • வடக்கு பகுதி நல்ல திறந்த வெளியாகவும், பரந்து விரிந்தும் இருந்தால் அல்லது அங்கு தண்ணீர்த் தொட்டி, போர்வெல் போன்ற நீர் ஆதாரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், அது பெண்களின் வளர்ச்சிக்கு ஏதுவானதாக கருதப்படுகிறது.
  • தென் கிழக்கு, வடமேற்கு அல்லது மேற்கு திசைகளில் ஏதேனும் சேதாரங்கள் ஏற்பட்டிருந்தால், அது உடல் நலப் பிரச்சினைகள் அல்லது தொழிலில் தோல்வியை ஏற்படுத்தக் கூடும்.

 

வடகிழக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து

வடக்கு மற்றும் கிழக்குப் பக்கங்களை நோக்கிய சாலையுடன் கூடிய எந்த ஒரு சொத்தும் வடகிழக்கு தளமாகக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி வடகிழக்கு பார்த்த வீடுகள் அல்லது குடியிருப்புகள் சிறந்ததாக கருதப்படுகிறது. வாஸ்து முறைப்படி, வடகிழக்கு பார்த்த வீட்டில் வசிப்பவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். வாஸ்து விதிகளின்படி, வடகிழக்கு திசை புதிய வாய்ப்புகளையும் புதுமைகளையும் கொண்டு வருவனவாக உள்ளன.

இதையும் வாசிக்க: கிழக்கு பார்த்த வீட்டிற்கான வாஸ்து

வடகிழக்கு பார்த்த வீட்டுக்கான வாஸ்து குறிப்புகள் சில இங்கே:

  • பிரதான நுழைவாயிலுக்கு எதிராக லிஃப்ட் மற்றும் மாடிப்படிகள் வடிவமைப்பதைத் தவிர்க்கலாம்.
  • வீட்டின் மற்ற கதவுகளை விட பிரதான கதவு பெரிதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தென்மேற்கு, மேற்கு அல்லது தெற்கு திசைகளில் மாஸ்டர் பெட்ரூமை அமைக்கலாம்.
  • வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் பெரிய ஜன்னல்கள் அமைப்பதை தவிர்க்கவும்.
  • வீட்டில் செல்வ வளம், வெற்றி மற்றும் அமைதியை நிலைநாட்ட, வாஸ்து முறைப்படி வடகிழக்கு மூலையில் நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்கலாம்.

 

வாஸ்து சாஸ்திரத்தில் பாதங்கள் (padas) முக்கியத்துவம் பெறுவது ஏன்?

வடக்கு திசையில் எந்தப் பாதமும் தோஷமானதாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாகவே வடக்கு பார்த்த வீடு நல்லது என கருதப்படுகிறது. இருப்பினும் வீட்டில் பிரதான கதவை வைக்கும்பொழுது அவ்வீட்டின் செல்வ செழிப்புக்காக பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளலாம்:

செல்வத்தை ஈர்க்க

ஒவ்வொரு பாதமும், நீங்கள் வீட்டிற்குள் எவ்வகையான ஆற்றலை அனுமதிக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. ஏற்கெனவே கூறியபடி ஐந்தாவது பாதம் மிகவும் அதிர்ஷ்டமானது. ஏனெனில் இது செல்வத்தின் அதிபதியான குபேரனின் இருப்பிடம் ஆகும். எனவே, வீட்டின் கதவை ஐந்தாவது பாதத்தில் வைத்தால் அது செல்வத்தை ஈர்க்கும்.

ஐந்தாவது பாதத்திற்கு மாற்று

ஒருவேளை ஐந்தாவது பாதம் சிறியது அல்லது வீட்டின் கதவிற்கு ஏற்றதாக இல்லையெனில், நீங்கள் ஒன்று முதல் நான்கு வரை உள்ள பாதங்களைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், ஐந்தாவது பாதத்தை விடக் கூடாது. ஒன்று முதல் ஐந்தாவது பாதத்தில் கதவினை வைக்க வாய்ப்பு இல்லையெனில், ஆறு முதல் ஒன்பது வரை உள்ள பாதத்தில் வைக்கலாம்.

கவனத்தில் கொள்க

ஒருவேளை பிரதானக் கதவு அல்லது நுழைவாயிலை முதல் பாதத்தில் வைக்க நேர்ந்தால், அது வடகிழக்கு மூலையை தொடாத வண்ணம் இருக்க வேண்டும். இந்த மூலையில் சிறிது இடத்தை விடுவது நல்லது. வீட்டின் வடக்கு நோக்கிய பிரதான நுழைவாயிலை ஆறாவது பாதத்தில் வடிவமைக்கக் கூடாது; அது சில உடல்நலப் பிரச்சினைகளை அளிக்கும்.

இதையும் வாசிக்க: வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கான சில வாஸ்துக் குறிப்புகள்

 

வடக்கு பார்த்த வீடு வயதானவர்களுக்கு உகந்ததா?

வீட்டின் குடும்பத் தலைவர் ஓய்வு பெற்ற பின் ஆன்மீக மற்றும் சமய பணிகளில் ஈடுபடுவாரானால் அவருக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு ஆகிய திசைகளை நோக்கியபடி உள்ள அறைகளை ஒதுக்கலாம். பொதுவாக வீட்டுத் தலைவருக்கு தென்மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கியபடியுள்ள அறைகள் சிறந்தது. ஆனால் மேலே கூறியுள்ளபடி அவர்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பின் அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

 

வடக்கு நோக்கிய வீடுகளின் தோட்டத்துக்கான வாஸ்து

வாஸ்து சாஸ்திர முறைப்படி தோட்டம் (Garden) என்பது வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக சிறிய செடிகளை வடக்கு திசையிலும், பழம் தரக்கூடிய மரங்களை கிழக்கு திசையிலும் நடுவது சிறந்ததாகும். மேலும், வீட்டின் வடக்கு திசையில் பெரிய மரங்கள் நடக் கூடாது; ஏனெனில், அதன் நிழலால் வீடு மறைக்கப்படும். தோட்டத்திற்கான வாஸ்து முறைப்படி, வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஊஞ்சல் கட்டி ஆடலாம். தோட்டத்திற்கு செல்லும் வழியில் இருபுறமும் மல்லிகை பந்தல் அமைத்து அலங்கரிக்கலாம்; இது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வடக்கு திசையில் சிலைகள் அல்லது கற்களால் ஆன தோட்டங்களை அமைக்கக் கூடாது. ஆனால், நீரூற்றுகளை வடக்கு திசையில் வைக்கலாம். இது செல்வத்தை ஈர்க்கக் கூடியதாகும்.

 

வடக்கு பார்த்த வீட்டிற்கு உகந்த செடிகள்

வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த வீட்டிற்கு பின்வரும் செடிகளை நடுவதன் மூலம் அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்க முடியும். அனைத்து செடிகளும் சூரிய ஒளியில் நேரடியாக படாமல் இருக்குமாறு வைக்கப்பட வேண்டும். நல்ல வெளிச்சம் உள்ள இடங்களில் இருக்குமாறு அதனை வைக்க வேண்டும். பின்வரும் செடிகளை நீங்கள் வடக்கு பார்த்த ஜன்னல் அல்லது பால்கனியின் முன்வைத்து வளர்க்கலாம்.

  • அக்லோனெமா
  • அரௌகாரியா
  • பெகோனியா ரெக்ஸ்
  • ப்ரோமிலியாட்ஸ்
  • குளோரோஃபிட்டம்
  • டிஃபென்பாச்சியா, லியோபார்ட் லில்லி என்றும் அழைக்கப்படுகிறது
  • ஃபெர்ன்கள்
  • ஹெட்ரா

மேலும் வீட்டின் வடக்கு பகுதியில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்க மிகவும் உதவும். வடக்கு திசையில் மாமரம், வாழை மரம் அல்லது எலுமிச்சை செடிகளை நடுவதை தவிர்க்கவும். வடக்கு பார்த்த பால்கனியில் மங்களகரமாக கருதப்படும் துளசி செடி மற்றும் கீரை, புதினா, பாரஸ்லி செடிகளை வளர்க்கலாம்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வடக்கு பார்த்த வீடுகள் பிரபலமாக இருப்பது ஏன்?

வடக்கு பார்த்த வீடுகள் அதிர்ஷ்டமானதாகும். ஏனெனில் இது செல்வத்தின் அதிபதியான குபேரனின் திசையாகும்.

வடக்கு பார்த்த வீடுகளுக்கு எந்தெந்த நிறங்கள் சிறந்தவையாக இருக்கும்?

லேசானதாகவும், புத்துணர்வு தரக்கூடியதாகவும் உள்ள வெள்ளை, கிரீம், காக்கி, சாம்பல், பச்சை மற்றும் நீல நிறங்கள் சிறந்தவை.

வடக்கு பார்த்த வீட்டில் பெயர் பலகை எந்தப் பொருளில் செய்துவைக்க வேண்டும்?

வடக்கு பார்த்த வீட்டின் பிரதான கதவில் உலோகப் பெயர் பலகை வைப்பது சிறந்தது.

வாஸ்து முறைப்படி வடக்கு பார்த்த சுவரில் எந்தெந்த ஓவியங்களை வைப்பது சிறந்தது?

வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் நீர் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஏற்ற திசை என்பதால், வீட்டில் இந்த திசைகளில் நீல நிறம் அல்லது நீர் தொடர்பான ஓவியங்களை மாட்டலாம். வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் கண்ணுக்கு குளிர்ச்சியான வகையில் உள்ள நாட்காட்டிகளையும் மாட்டலாம்.

வடக்கு நோக்கி பார்த்தவாறு சமையல் செய்யலாமா?

சமையலறையில் வடக்கு நோக்கி பார்த்தவாறு நீங்கள் சமையல் செய்யலாம் இருப்பினும், சமையல் செய்யும் போது கிழக்குத் திசையில் பார்த்து செய்வது மிகச்சிறந்தது

Was this article useful?
  • ? (3)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?